கதையாசிரியர் தொகுப்பு: என்.ஸ்ரீராம்

5 கதைகள் கிடைத்துள்ளன.

கருட வித்தை

 

 அகாலத்தில் வந்து யாரோ வெளிநடைக் கதவைத் தட்டும் ஓசை கேட்டது. தோட்டத்து வீட்டின் ஆசாரத்துத் திண்ணையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த நான் திடுக்கிட்டுக் கண்விழித்தேன். தோக்குருவிகள் ஊடுருவி முகட்டுவளையோரம் சடசடத்தபடி குறுக்கும் நெடுக்குமாகப் பறந்துகொண்டிருந்தன. மேல்விட்டத்தில் ஊர்ந்த பல்லி கணிக் கணிரென சகுனித்தது. அதற்குள் கதவு மீண்டும் தட்டப்பட்டது. நான் உள்ளுக்குள் பயந்துபோனேன். அவசரமாக எழுந்து காவி வேட்டியை இறுக்கிக் கட்டினேன். நடையை நோக்கிச் சென்றேன். ஒற்றை மாடவிளக்கு ஒளியில், சுவரில் அசைந்த என் நிழல் கூடவே வந்தது.


உடுக்கை விரல்

 

 தூரத்தில் பழநிமலைப் படிக்கட்டுகளும் உச்சிக்கோபுரமும் மின்சார விளக்கு ஒளியில் ஷொலிப்பது, படம் விரித்து நுனிவாலில் எழுந்து நிற்கும் நாகப்பாம்புபோல எனக்குத் தெரிந்தது. வடக்கு முகமாகப் பாய்ந்து வரும் சண்முக நதியின் நற்றாற்று மணல்திட்டில், நான் தென்கிழக்குத் திசை நோக்கி சம்மணமிட்டு அமர்ந்து இருந்தேன். ”முருகா… அறுபடை நாதா… நான் ஆடுற கடைசிக் கூத்து இது. இருவத்தி ஆறு நாளு நடத்துற கூத்தை, இன்னிக்கு ஒரு ராத்திரியிலேயே உன்னைச் சாட்சியா வெச்சு ஆடப்போறேன். நான் உண்மையான கூத்துக்காரனா இருந்தா,


தேர்த்தச்சர்

 

 கீழ்வானில் வெள்ளிமீன் முளைத்து மேலெழுந்திருந்தது. பின்பனிக்காலத்துக் குளிரில் உடல் நடுங்கியது. நான் பச்சை நிறப் போர்வையை இழுத்துப் போத்தியபடி வெள்ளியம்பாளைத்து வீதியில் நுழைந்தேன். தலைச்சும்மாட்டுக்கு மேல் ஈர்க்குமார்கட்டு கனத்தது. கைத்தடியை நிலத்தில் ஊன்றும்போது எழும் ஓசையைத் தவிர, ஊர் நிசப்தமாகக் கிடந்தது. சத்தமிடத் தொடங்கினேன். ”ஈய்க்கிமாரு ஆத்தோவ்… ஈய்க்கிமாரு…” – சத்தமாகக் குரலிட்டபடி எல்லா வீதிகளிலும் நுழைந்து வெளியேறினேன். ஈர்க்குமார் கட்டு தலைச்சும்மாட்டில் இருந்து இறக்காமலே கனத்தது. யாரும் ஓர் ஈர்க்குமார்கூட வாங்கவில்லை. களைத்துப்போனேன். ”பித்தாசாரிக்குக் கலியாணம்…


கல் சிலம்பம்

 

 செல்லீயக் கோனார் கூட்டாற்று முனைக்கு வந்து சேர்ந்தபோது எங்கும் மூடுபனி கவிழ்ந்துகிடந்தது. விடிவதற்கு இன்னும் வெகுநேரம் இருந்தது. நீரோட்டத்தின் சலசலப்பு, கூடிவருவது போல கேட்டது. மேற்கில் இருந்து கெண்டைக்கால் அளவு நீரோடு வரும் உப்பாறு, தெற்கில் இருந்து இடுப்பு அளவு நீரோடு வரும் அமராவதியுடன் கலக்கும் கூடுதுறை இது. இவர் கைத்தடியை ஈரமண்ணில் ஊன்றிவிட்டு, ஆற்று நீரில் கால் வைத்தார். நீர் குளிர்ந்துகிடந்தது. சிப்பிலி மீன்கள் கலைந்து ஓடின. நீரை அள்ளி முகத்தில் அடித்தார். உள் ஒடுங்கிய


மசை

 

 கார்மழைக்காலம்… மழையற்றுப் போனதால் வறட்சியின் கொடூரம் எங்கும் வெயிலோடு தகித்தது. இவன், நடந்தே ஊரைவிட்டு வெகுதூரம் வந்திருந்தான். செருப்புக் காலில் புழுதி மேலெழும்பியபடி இருந்தது. இருமருங் கிலும் ஆவாரஞ் செடிகள் பூத்திருந்தன. அதன் மஞ்சள் பூங் கொத்தை கருந்தும்பிகள் வட்டமடிக்கும் ரீங்கரிப்பு மெல்லிசாய் கேட்டது. எதிரில் ஆள் அரவமே இல்லை. குறுங்காட்டு வெளிகள் ஏகாந்தமாய்க் கிடந்தன. இவன் நடந்தபடியே இருந்தான். தொலைதூரத்தில் திடீரென கதுவேலி கூட்டம் கெக்கலித்தது. அதனைத் தொடர்ந்து ஆட்களின் சீழ்க்கை ஒலியும் கேக்கைச் சப்தமும்