கதையாசிரியர் தொகுப்பு: உஷா

2 கதைகள் கிடைத்துள்ளன.

புதிதாக ஒருவன்!

 

 விடிந்து கண் விழித்தபோது , “அப்பாடா…’ என்று இருந்தது அருணுக்கு. இன்று வெள்ளிக்கிழமை. இந்த ஒரு நாளைக் கல்லூரியில் கழித்து விட்டால் போதும். முழுதாக இரண்டு நாட்கள் விடுமுறை. யப்பா, எவ்வளவு செய்யலாம் இந்த இரண்டு நாட்களில்? முதலில், இப்படி காலை ஆறரை மணிக்கு எழுந்திருக்க வேண்டாம். அவசரக் குளியல் இல்லை. அப்பாவுக்கு பயந்து, இட்லிகளை விழுங்க வேண்டியதில்லை. கல்லூரி பஸ் பிடிக்க ஓட வேண்டாம். திறந்தவெளிச் சிறைச்சாலை போன்ற அந்த கட்டடங்களையும், மைதானத்தையும், வகுப்பறைகளையும் நினைத்தாலே,


பொதி மரம்

 

 ‘கடினமான செயலில் முயற்சியோடு உழைக்கும் எவரும் தன்மானத்தை இழப்பதில்லை..’ & பெர்னாட்ஷா சொன்னதுதான் நளினியின் நினவுகளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. கூடவே கண்ணீரும் தளும்பிக் கொண்டே இருந்தது. திவாகருடன் இனிமேல் வாழமுடியுமா என்ற கேள்வியின் தாங்கமுடியாத கனம் தன் நெஞ்சில் ஒவ்வொரு கணமும் வலியை ஏற்றிக்கொண்டே போவதை உணர்ந்தாள். எதில் குறைந்துவிட்டாள் அவள்? கல்யாணமான இந்த நான்கு வருடங்களில் தேகம் இன்னும் வெற்றிலைக்கொடி போல தளதளப்பாக வனப்புடன் தான் இருக்கிறது. முகத்தின் ரம்மியமும் குறையவில்லை. அலுவலகத்தில் அடுத்தகட்ட பதவி