Facebook ரெக்வெஸ்ட்
“Prashanth added you as a friend in facebook, click to confirm”.
பீப் என்ற சத்தத்துடன் தனது பிரவ்சரில் வந்த நோடிபிகேஷனை பார்த்த இந்துஜா வியந்தாள். அந்த லேனோவோ மானிடரின் வலது ஓரம் நேரத்தினை 3:00AM என்று காட்டியது.
‘இந்நேரத்துக்கு யார் ரெக்வெஸ்ட் அனுப்புராங்க..?? யார் இந்த பிரஷாந்த்?’ குழப்பத்தோடு அந்த பெயரின் மீது கிளிக் செய்தாள். ரிலையன்ஸ் நெட்கனெக்டின் அசுர வேகத்தில் அவன் பிரோபில் அடுத்த மூன்று நொடிகளில் முழுவதும் லோட் ஆனது. பளிச்சென்ற சிரித்த முகத்துடன் அவன் புகைப்படம் தெரிந்தது. PRASHANTH VASUDEVAN
முகம் மட்டுமே தெரிகின்ற ப்ரோபைல் பிக்சர். ஒரு கூலிங் கிளாஸ் அணிந்திருந்தான். எங்கயோ பார்த்த முகம் தான் என்று இந்துவின் சிறுமூளை சத்தியம் செய்தது. ‘அட, மியூச்சுவல் பிரண்ட் லிஸ்டில் உதய் இருக்கிறான்’ சட்டென்று பிடிபட்டது, ‘இவன் நம் காலேஜ் தானே, உதயோடு அடிக்கடி பார்த்திருக்கிறோமே..’ RESPOND TO FRIEND REQUESTஐ கிளிக் செய்து அந்த ரெக்வெஸ்டை ஏற்றுகொண்டாள். இதற்கு மேலும் FBயிலே இருந்தாள் அவ்வுளவுதான் என்று நினைத்தது லாக் அவுட் செய்தாள்.
கணிப்பொறியை ஷட் டவுன் செய்துவிட்டு கட்டிலில் வந்து படுத்தாள், அருகே அவள் ரூமி ப்ரீத்தி இன்னும் தூங்காமல் வெகு சுவாரஸ்யமாய் செல்போனில் பேசிக்கொண்டிருந்தாள்.
“ம்ம்… அப்புறம்..”
“….”
“அந்த யெல்லோ டாப்ஸ் ல நெஜமா நான் அழகா இருந்தேனா..”
“…….”
“போடா.. நீ பொய் சொல்ற..”
“…..”
“சரி நீ சொல்லு.. அந்த யெல்லோ டாப்ஸ் ல நான் எப்படி இருந்தேன்..”
‘ஐயோ ராமா..’ இந்துஜா தலையில் அடித்துகொண்டாள் ‘இந்த மாதிரி பொண்ணுங்க கூட ஏன் என்ன கூட்டு சேர வைக்கிற..’. சற்று நேரத்திற்கு பின் அந்த ஜோடி புறாக்களின் காதல் வசனங்களை கேட்கமுடியாமல் காதில் இயர்போன்களை மாட்டிகொண்டாள். தனது ஐபோனை அன்லாக் செய்து இளையராஜா ப்ளேலிஸ்டை ஓடவிட்டாள். மெலிதான குரலில் SPB பனிவிழும் மலர்வனத்தினை வர்ணிக்க, இந்து கண்களை மூடி அந்த இசையில் மூழ்கினாள்.
முழுதாய் இரண்டு நிமிடம் கூட ஆகவில்லை, அதற்குள்ளாக சலிப்பு தட்டியது. ஐபோனின் சென்டர் பட்டனை தட்டி விட்டு பாடலை நிறுத்தினாள், பின் சற்று நேரம் டெம்பிள் ரன் ஆடினாள். அதுவும் சலித்துபோக மீண்டும் FBக்குள் குதித்தாள். ஹோம்ஸ்கிரீனில் பத்து நோடிபிகேஷன்கள். அத்தனையும் கிரிமினல் கேஸ் ரேக்வேச்டுகள். கடைசியாக ஒரு UNREAD CHAT செய்தி.
“HAI INDHUJA.. HOW ARE YOU..” சற்று நேரத்திற்கு முன்பு ரெக்வெஸ்ட் அனுப்பிய பிரஷாந்த தான் அது. பெயரின் பக்கத்தில் பச்சை புள்ளி மிளிர்ந்தது, ‘சரி இவனிடம் கொஞ்சம் மொக்கைபோடலாம்’
‘HEI.. PRASHANTH.. 🙂 :)’ சென்ட் பட்டனை தட்டிவிட்டு பொறுத்திருந்தாள். அடுத்த நொடியே பதில் வந்தது.
‘என்னை நியாபகம் இருக்கா..’
‘ஆங்.. ஆமா.. உன்னை உதய் கூட பார்த்துருக்கேன் நினைக்கிறன்…’
‘எஸ்.. உதய் கிளாஸ்மேட் தான். நெய்வேலி..
இந்துவிற்கு சட்டென்று நினைவிற்கு வந்தது. ‘அட அவனேதான். நான்காவது செம் முடிந்து டிரெயினில் ஊருக்கு போகும்பொழுது உதய் இவனை இன்ட்ரோ செய்துவைத்தான்… எப்பா சரியான அறுவை..’ மனதில் நினைதுகொண்டிருக்க அடுத்த மெசெஜ் வந்தது.
‘வேலையெல்லாம் எப்படி போகுது.. நீ TCS தானே இந்து..’
‘ஆமா… TCSதான். உனக்கு எப்படி போகுது..’
‘வேலையா.. நான் தான் உயிரோடவே இல்லையே, எனக்கு யாரு வேலை குடுப்பாங்க..’
ஒன்றும் விளங்காமல் இந்து அந்த செல்போன் திரையே பார்த்துகொண்டிருந்தாள்.. ‘இவன்.. இவன்.. அந்த அக்சிடண்டில்..’ அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் உறைந்து போய் படுத்திருந்தாள்.
***
“ஹஹஹா… மச்சி செம கலாய் டா.. ராத்திரி புல்லா தூங்காம கடந்துருப்பா.. எப்பிடி நம்ம பிளான்” நந்தா டீயை உறிஞ்சிக்கொண்டே ஏதோ பெரிதாய் ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கிய பெருமிதத்தில் பேசினான்.
“ஆமா மச்சி.. உடனே ஆப்லைன் போயிட்டா ல. அலன்டு போயிருப்பா அந்த பொண்ணு..” அவனோடு சுதி சேர்ந்து கொண்டான் ராகேஷ். இருவரும் ஆறு மணி ஷிப்டில் இருப்பவர்கள். கண்களில் தூக்கம் கொஞ்சம் எட்டி பார்த்துகொண்டிருந்தது.
“டேய் யார பத்தி பேசரிங்க.. எந்த பொண்ணு.. என்ன ஆச்சு..” அவர்கள் உரையாடலை அருகில் இருந்து கவனித்துகொண்டிருந்த உதய் கடுப்பாக கேட்டான். பின்னே, அவனுக்கு ஒரு வார்த்தையாவது புரிந்தால் தானே.
“நீ சொல்லு டா..” ராகேஷை பார்த்து நந்தா சொன்னான்.
“இல்லை மச்சி.. நீயே சொல்லு..” குறும்பாக ராகேஷ் கூற உதய் இன்னும் சூடானான்.
“டேய் எவனாவது சொல்லி தொலைங்க டா..”
“சரி நானே சொல்றேன்..” உதயின் தோளில் கையை போட்டுகொண்டான் நந்தா, “அது ஒன்னு இல்லை மச்சி. உன் பிரண்ட் ஒரு பொண்ண நேத்து FB ல செம்மையா கலாச்சிட்டோம்.”
“உங்களுக்கு வேற வேலையே இல்லை டா.. என்னத்த பண்ணி தொலச்சிங்க..”
“நம்ம காலேஜ் ஒரு பையன் ஒரு டிரைன் ஆக்சிடென்ட்ல செத்துட்டான் ல.” நந்தா சொல்லிமுடிப்பதற்குள் ராகேஷ் புகுந்துகொண்டான்.
“பிரஷாந்த் டா..”
“ஆமாம் அவனுக்கென்ன இப்போ..”
“அவன் போட்டோ போட்டு ஒரு பிரோபைல் கிரியேட் பண்ணி உன் பிரண்ட் ஒரு பொண்ணுக்கு ரெக்வெஸ்ட் குடுத்தோம். அவ உடனே அக்செப்ட் பண்ணிகிட்டா.. கொஞ்சம் நேரம் சேட் பண்ணா மச்சி.. அப்புறம் தான் நியாபகம் வந்திருக்கும் போல.. உடனே ஆள் எஸ்கேப்.. செமையா பயந்துட்டா போல..”
“லூசு பசங்களா..” உதய் நிஜமாலுமே கோபமானான். “எதுல வேலயாடறது னு இல்ல..?”
“டே இவன் ஏன்டா டென்ஷன் ஆகுறான்.. சும்மா தாண்டா.. நாங்க வேணா இப்போவே சாரி னு மெசேஜ் அனுபிடுறோம்..”
“எதையோ பண்ணுங்க.. ஆமா எந்த பொண்ணு ?”
“அதாண்டா உங்க ஊர்கார பொண்ணு.. கம்பியூட்டர் சயின்ஸ் டிபார்ட்மென்ட் இந்துஜா..”
அதுவரை கோபப் பார்வை வீசிகொண்டிருந்த உதய் சட்டென நிலை குலைந்தான். “டேய் இந்துஜா வா?”
“ஆமா மச்சி.. பொண்ணு அலறிட்டா..”
“டேய்…” உதய் அவர்களை நடுங்கும் கண்களோடு பார்த்தான். “அந்த டிரெயின் ஆக்சிடென்ட்ல செத்துப்போனது இந்துஜாவும் தாண்டா..”
ஒரு நொடி இதய துடிப்பு தப்பி, முகம் வெளிறி போய் அமர்ந்திருந்த நந்தாவையும் ராகேஷையும் பார்த்து விழுந்த விழுந்த சிரித்த இந்துஜா, அடுத்த நொடி காற்றோடு கரைந்து போனாள்…
– ஆகஸ்ட் 2013
I like this story so much
superb