பாட்டி சொல்லைத் தட்டாதே!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 24, 2026
பார்வையிட்டோர்: 2,665 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(பழைய கதை, புதிய பாடல்)

வயது முதிர்ந்த பாட்டியாம்
வாழ்ந்து வந்த ஊரிலே
வயிறு பசித்த வாலிபன்
வந்து நின்றான் வாசல்முன்!

அம்மா பசியும் வாட்டுது.,
ஆளைக் கொல்லும் முன்னர்நீ
சும்மா எலுமிச்சை அளவிலே
சோறு தந்து காத்திடு!

எத்தனை காசு வேண்டும்சொல்?!
எண்ணி உனக்குத் தருகிறேன்!
அன்னம் இடுடென் றவன்
இணையடிகள்பணிந்தனனன்!

ஆசை மிக்க பாட்டியாம்
அவனை ஏய்க்க எண்ணியே
காசைக் கேட்டு வாங்கிப்பின்
கையால் ஒற்றை உருண்டையாய்

சாதம் உருட்டி இலையிலே
சாப்பிடென்று வைத்தனள்
மீத மிருந்த சாததை
மேசை மீது வைத்தனள்!

அன்னம் தன்னைப் பார்த்தவன்
அவளும் செய்த செய்கையால்
கன்னம் வழியும் நீருடன்
கவலை கொண்டான் அதிகமாய்!

அந்த ஊரில் நீதியை
அன்பு கொண்டு காத்திடும்
நல்ல மதிப்பு பெற்றவர்
நாடு போற்றும் ராமராம்.

மரியாதை ராமன் என்றன்று
மதிக்கப்பெற்ற மனிதரோ
வயதில் மிகவும் இளையவர்
மதியில் மேன்மை உள்ளவர்.

வாடிப் பசித்த வறியவன்
வந்து நின்றான் வாசல்முன்
பாட்டி தன்னை ஏய்த்ததை
பழைய கதையைச் சொல்லியே
காட்ட வேண்டும் நீதியை
என்று கதறி அழுதனன்.

நீதி மன்றம் அழைத்ததால்
நேரில் வந்தாள் பாட்டியும்
எலுமிச்சை அளவு சாதமே
என்னி டத்தில் கேட்டதால்

மிச்ச மிருந்த சாதத்தை
கேட்ட அளவில் தந்தஎன்
செயலில் தவறில்லை என
சொல்ல நமது ராமனோ

கூர்ந்து எண்ணி வழக்கினை
ஆய்வு செய்து நோக்கினான்
தேர்ந்த கெட்டிக் காரிபோல்
தீது செய்த பாட்டிக்கு

சிறந்த தீர்ப்பு வழங்கிட
சிந்தை தன்னை உன்னினான்.
இறந்து போகும் நிலையிலே
இருந்த அந்த வறியவன்
மகிழ்ந்து உண்ண உணவினை
மரியாதை ராமன் தந்துபின்

பாட்டி உனது செய்கையில்
காட்ட வில்லை நியாயத்தை
என்று சொல்ல பாட்டியும்
எனக்கு விளக்கு என்றனள்!

பசித்து வந்த மனிதனோ
பசியைப் போக்க வேண்டியே
எலுமிச்சை அளவிலே
ஈயச் சொன்னான் அன்னத்தை!

உருட்டி நீயும் இலையிலே
உண்ண வைத்த உணவிலே
உள்ள சோறின் அளவிலே
ஒற்றைப் பருக்கை கூடநீ

எலுமிச்சை அளவில் இல்லையே
ஏய்த்து விட்டாய் அவனையே
பாட்டி சொல்லைத் தட்டாமல்
பரிமாற வேண்டும் சோறினை
ஊட்ட வைத்த பருக்கைகள்
எலுமிச்சை அளவு இருக்கட்டும்!”

என்று சொல்ல பாட்டியும்
கெடுவான் கேடு நினைப்பான்
என்பதனை உணர்ந்தனள்
மன்னிக்கும்படி வேண்டினள்!

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். கதைகள்: வளர்கவி வெளியிட்ட நால்கள் -…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *