கடவுள் அவதாரம் கனகம்மா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 4, 2026
பார்வையிட்டோர்: 20 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு கிழவி இருக்கிறாள். கிழவி என்றால் சாதாரண கிழவி அல்ல; படு கிழவி என்றே சொல்லலாம். கனகம்மா என்பது தான் அவளது பெயர். 

இந்தப் பாட்டி, தான் ஒரு பெரிய கைராசிக்காரி என்பது போலவும் உலகத்தில் நடப்பதெல்லாம் ஏற் கனவே தான் அறிந்த சங்கதிதான் என்பது போலவும் காட்டிக்கொள்வாள். அதாவது சுருக்கமாகச் சொல் வதாக இருந்தால், தான் ஒரு கடவுள் அவதாரம் அல் லது கடவுளின் அந்தரங்கக்காரியதரிசி என்பது அந்த அம்மாளின் எண்ணம். 

கனகம்மாவின் கணவர் கார்த்திகேசு மண்டை யைப் போட்டுப் பத்தாண்டுகள் கழிந்துவிட்டன. அவள் வசிக்கும் காணியில் ஏராளமான தென்னை, தோடை, மா முதலிய மரங்களும் உண்டு. பல ஆண்டு களாகப் பலன் தராது வீணே நிற்கும் தென்னைகளையும் சாப்பிட உதவாத புளித் தோடைகளையும் பட்டுப் போன இரண்டு மா மரங்களையும் “அவை அப்பு நட் டவை” என்றும் (அப்பு என்பது கனகம்மாவின் காலஞ்சென்ற கணவனையே!) தினமும் காய்த்துக் கொட்டும் தென்னைகளையும் இனிப்பான பழங்கள் தரும் தோடை மா மரங்களையும் “நான் நட்டவை’ என்றும் தனது கைராசி பற்றி வருவோர் போவோ ரிடம் எல்லாம் அளந்து கொட்டுவதில் நமது கனகம் மாப் பாட்டிக்கு எல்லையில்லா மகிழ்ச்சி! 

கனகம்மாப் பாட்டிக்கு ஐந்து பிள்ளைகளும் ஏராளமான பேரக் குழந்தைகளும் உண்டு. இந்த ஐந்து பிள்ளைகளில் இரண்டு பெண்களுக்கு வாய்த்த கணவன்மார் பெரிய குடிகாரர்கள். அந்தக் குடும்பத் திலே எப்போது பார்த்தாலும் அடி பிடி சண்டைதான்! அப்பொழுதெல்லாம் கனகம்மா தனது மக்கள் மருமக் கள் பேரப்பிள்ளைகளுக்கெல்லாம் பின்வருமாறு சொல் வாள்: 

“நான் சொல்லச் சொல்ல, கொப்பு இந்த மாப்பிள்ளைகள் தான் வேண்டுமென்று ஒற்றைக்காலில் நிண்டார். இப்ப என்ரை பிள்ளைகள் படுகின்ற பாட்டை யாரிடம் சொல்லி அழுவது? என்ரை மற்றப் பிள்ளைகளுக்கு என்ரை மேற்பார்வையில்தான் கலியா ணம் நடந்தது. அதிலை யாராவது ஒரு குறை சொல்ல முடியுமா? 

கார்த்திகேசு – அதாவது கனகம்மாப் பாட்டி யின் கணவன் இருந்திருந்தால் தென்னை, தோடை மா மரங்கள் நட்ட சங்கதிகளையும் குடிகாரக் கணவன் மார் வந்துசேர்ந்த வரலாறு பற்றியும் விவாதித்து முடி வுக்கு வரலாமென்றால், அவர்தான் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டனவே! அவர் இறக்குமுன் கனகம்மா இப்படி ஒன்றும் சொன்னதாகத் தெரிய வில்லை என்று கார்த்திகேசுவின் காலத்தில் வாழ்ந்த வர்கள் சொல்லுகிறார்கள். 

கனகம்மாவின் கைராசிக்குச் சில எடுத்துக் காட்டுகள் பார்த்தோம். இனி நடக்கப்போவதை முன்பே அறிந்துகொள்ளும் அவளது கடவுள் தன் மைக்குச் சில எடுத்துக்காட்டுகள்: 

அந்த வட்டாரத்திலே யாராவது இறந்ததாக அறிந்தவுடன் கனகம்மாப் பாட்டி இது நடக்கு மென்று எனக்கு எப்போதோ தெரியும். சென்ற நாலைந்து நாட்களாக நான் பொல்லாத கனவுகள் கண்டேன். வெள்ளைக் குதிரையிலை ஆள் சவாரி செய் வதாகவும் கனவு கண்டேன் ” என்று ஆரம்பித்து விடுவாள். 

இதுபோலவே, யாருக்காவது திருமணம் நிச்சயமானாலும், யாராவது ‘பெரியபிள்ளை’ யானாலும், யாராவது பயணத்திலிருந்து வந்தாலும், யாருடைய கடிதமாவது வந்தாலும் உடனே கனகம்மாப் பாட்டி இது தனக்கு ஏற்கனவே கனவுமூலமோ, கண்துடிப்பு மூலமோ, காக்கை அழுததன் மூலமோ தெரிந்துவிட்ட சங்கதியே என்று சாதித்துவிடுவாள். 

பாவம்! இந்தப் பாட்டி ஏனோ தெரியவில்லை தனது தீர்க்கதரிசனத்தைச் சம்பவங்கள் நடைபெறு முன்பே ஒரு நாளேனும் சொல்லக்காணோம்; நடை பெற்ற பின்புதான் சொல்லித் தொலைக்கிறாள்! 

சிலருக்கு இந்தப் பாட்டி சொல்லுவதெல்லாம் வெறும் பொய்-ஏமாற்றுவேலை என்று நன்றாகத் தெரி யும். இருந்தாலும் “பாவம்! வயதுபோன கிழவி சொல்லுவதைச் சொல்லிவிட்டுப் போகட்டும்” என்று வயதிற்கும் அநுபவத்திற்கும் மதிப்புக்கொடுத்துப் பேசாமல் இருந்துவிடுவார்கள். இதையே கிழவி தவறு தலாகப் புரிந்துகொண்டு, தான் சொல்லுவதை எல் லாம் ‘சரி’ என்று எல்லாரும் உணருகிறார்கள் என் றும், அதனால்தான் தனக்கு ஒருவித எதிர்ப்பும் கிளம்பு வதில்லை என்றும், தான் உண்மையிலேயே ஒரு ‘கட. வுள் அவதாரம்’தான் என்றும் எண்ணிக்கொண்டு, முன்னிலும் பார்க்கத் தனது ‘கடவுள் தன்மை’யை இன்னும் அதிகமாகவும் தீவிரமாகவும் காட்டிக்கொண்டிருக்கிறாள். 

“என்ன தம்பி செய்துகொண்டிருக்கிறாய்?” 

நிமிர்ந்து பார்த்தேன் வேறுயாருமல்ல, நமது மதிப்பிற்குரிய கனகம்மாப் பாட்டியே வந்துகொண்டி ருக்கிறாள். 

”ஓ… நீங்களா? வாருங்கள். நான் ஆராய்ச்சிக் கட்டுரையொன்று எழுதிக்கொண்டிருக்கிறேன்.’ 

“எனக்கு நல்லாய்த் தெரியும். நீ ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதிப் பெயரும் புகழும் பெறுவாய் என்று! நீ பிறந்தபோதே இதை அப்புவுக்குச் சொல்லி யிருக்கிறேன். பொய் என்றால் கேட்டுத்தான் பாரேன். ஓ……மறந்துவிட்டேனே! அப்புதான் காலமாகி விட்டாரே!” 

– கொழும்புப் பெண் (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: செப் 1965, கலைச்செல்வி பதிப்பகம், சுன்னாகம்.

பொ.சண்முகநாதன் எழுத்தாளர் பொ.சண்முகநாதன் (போனாச்சானா) இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளரும், நகைச்சுவை இலக்கிய முன்னோடிகளில் ஒருவரும் ஆவார். 'போனாச்சானா' என்ற பெயரிலும் எழுதியுள்ளார். வீரகேசரி' மூலம் 1961ல் எழுத்துலகில் நுழைந்த நகைச்சுவை எழுத்தாளர் திரு.பொ.சண்முகநாதன் அவர்கள் ஏனைய ஈழத்துப் பத்திரிகைகளான 'ஈழநாடு', 'கலைச்செல்வி', 'கலைவாணி, 'சங்கப்பலகை', 'சுதந்திரன்', 'செய்தி', 'தமிழ்முரசு', தினகரன்', 'புதினம்', 'விடுதலைப் பரணி, விவேகி', 'ராதா' ஆகியவைகளிலும் எழுதியுள்ளார். இவர் நகைச் சுவைக்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *