உண்மை சொன்னால் நேசிப்பாயா?
கதையாசிரியர்: சஹானா குமரன்
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: July 20, 2026
பார்வையிட்டோர்: 374

ஷா ஆலாமில் ராஜ துன் உடா அரச நூலகத்தின் மூன்றாம் தளம் அன்று வழக்கத்தை விட அமைதியாக இருந்தது. ஜன்னல் வழியே தெரிந்த சுல்தான் சலாஹுதீன் அப்துல் அஜிஸ் ஷா மசூதியின் நீல நிறக் கோபுரம், அந்த மாலை நேரத்து நெருப்பு பூக்களின் தயவால் ஜொலித்துக் கொண்டிருந்தது.
புத்தக அடுக்குகளுக்கு நடுவே, ‘மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு’ புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்தான் விஷ்வா. அப்போதுதான் அவளைப் பார்த்தான். ஜன்னலோர மேசையில் அமர்ந்து ஏதோ ஒரு நாவலை வாசித்துக் கொண்டிருந்தாள். அவளது அசைவுகளில் ஒரு பேரழகு இருந்தது. செதுக்கியது போன்ற அவளது உதடுகள் ஏதோ ஒரு ரகசியத்தை உள்ளே புதைத்து வைத்திருப்பது போல மெலிதாக மூடியிருந்தன. அந்தப் புத்தகத்தின் வரிகளை வாசிக்கும்போது, அவளது காந்தக் கண்கள் இமைக்கும் விதம்… விஷ்வாவை அப்படியே சிலையாக்கியது.
கடவுளே! யார் இவள்? ஷா ஆலம் முழுக்க எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறேன், ஆனால் இவளிடம் இருக்கும் இந்தத் தனித்துவம் என்னை என்னவோ செய்கிறதே. அவளது அந்த மெல்லிய உதடுகளும், ஆழமான கண்களும் ஏதோ ஒரு கவிதை பேசுவது போல இருக்கிறது. என் இருபத்தைந்து வருட வாழ்க்கையில் இப்படி ஒரு ஈர்ப்பை நான் உணர்ந்ததே இல்லை. இவள் வெறும் அழகி இல்லை… என் தேவதை! அவள் புத்தகத்தை மூடிவிட்டு எழும்போது, அவளது கையில் இருந்த மெட்ரிக் கார்டு தவறி கீழே விழுந்தது. விஷ்வா பதற்றத்துடன் அதை ஓடிச் சென்று எடுத்தான். கார்டில் ‘நிலா’ எம்.எஸ்.யூ கோலேஜ் என்று பொறிக்கப்பட்டிருந்தது. என்ன ஒரு அழகான பெயர்? நிலா! ஓ மை நிலா! என மனதுக்குள்ளே முனு முனுத்தான் விஷ்வா. கார்டில் இருக்கும் அவளது முகமோ தற்பொழுது இருப்பதை விட அழகு கம்மிதான்.
“எக்ஸ்கியூஸ் மீ, உங்களோட கார்டு,” என்றான் விஷ்வா, தன் இதயத் துடிப்பு அவளுக்கே கேட்டுவிடுமோ என்ற பயத்துடன். அவள் அந்த காந்தக் கண்ணில் ஈட்டி வைத்திருப்பால் போலும், அவளின் அந்த பார்வை இவனின் இதையத்தை கிழித்துக் கொண்டு சென்றது, அவளின் உதடிலிருந்து வரும் அந்த புன்னகை அவனை நிலைகுலையச் செய்தது. அவன் மனம் அவளின் இதழ் அழகா இல்லை கண் அழகா என போட்டி
போடுக்கொண்டிருந்த தருணத்தில் அவனின் கையிலிருந்த கார்டு “ஓ, தேங்க்ஸ்” என்று சொல்லி பிடுங்கப்பட்டது. அவளது குரல் சற்றே கரகரப்பாக இருந்தாலும், விஷ்வாவின் காதுகளில் அது ஒரு மெலோடி பாடலாகவே ஒலித்தது. விஷ்வா மெல்லமாக அவளிடன் கடலை வருக்கத் தொடங்கினான். “ ஹாய்! நான் விஷ்வா. நீங்க எம்.எஸ்.யூ மாணவரா, உங்க பேரு ?” என்று அவளின் பெயர் தெரிந்தும் தெரியாதது போல கேள்வி எழுப்பினான். “ஹாய்! நான் நிலா, ஆமா! அங்க செகண்ட் இயர் டிகிரீ செய்றேன். நீங்க ?” என்றாள் நிலா. “நான் மலாயா பல்கலைகழகத்தில வரலாறு கொர்ஸ் படிக்கிறேன். இங்க என்னோட பாடம் தொடர்பா ஒரு புத்தகம் எடுக்க வந்தே” என்றான். ஓ சரி.. சரி.. என கூறிவிட்டு கண்ணிமைக்கும் நொடியில் மறைந்தாள் நிலா. “ஹையா! பொய்டாலே, ஒரு போன் நம்பர் கூட வாங்காம பொய்டோமே, என்ன விஷ்வா நீ! ” என தன்னை தானே திட்டிக் கொண்டான்.
நாட்கள் நகர்ந்தாலும் அவன் நீலவை தேடும் பணி ஓயவில்லை. ஒரு நாள் அவன் நிலாவை எதிர்பாரவிதமாக அவன் வீட்டு அருகில் உள்ள ஒரு மாமாக் உணவகத்தில் சந்தித்தான். அவளை பார்த்தவுடன் விஷ்வாவுக்கு ஒரே ஆனந்தம். “ஹாய், நீலா நீங்க எங்க இங்க?” என வினவினான். “ஓ ஹாய், விஷ்வா? நான் சாப்பாடு வாங்க வந்தேன்” என நிலாவும் அதற்கு எதிரொலித்தாள். அவர்களின் இந்த நட்பு தொடர ஆரம்பித்தது. இம்முறை விஷவாவும் நிலாவும் அழைபேசி எண்களை மாற்றிக் கொண்டனர். அதன் பிறகு, அவர்களின் சந்திப்புகள் தொடர்ந்தன. நூலகத்தில் ஆரம்பித்த நட்பு, மெதுவாக ‘செக்சன் 7’ உணவகங்களில் தேநீர் அருந்துவதும், லேக்பார்க் பூங்காவில் உலா வருவதுமாக மாறியது.
நிலா ரொம்பவும் மென்மையானவள். ஆனால், அதே சமயம் தன்னைச் சுற்றி ஒரு கண்ணுக்குத் தெரியாத சுவரை எழுப்பி வைத்திருந்தாள். விஷ்வா அவளிடம் நெருங்க நினைக்கும் போதெல்லாம், அவள் சற்றே விலகி நின்று கொள்வாள். ஒரு நாள் மாலை, ஐசிடி பூங்கா விளக்குகளின் வெளிச்சத்தில் இருவரும் நடந்து கொண்டிருந்தனர். வண்ண விளக்குகளின் ஒளி நிலாவின் முகத்தில் பட்டு, அவளை இன்னும் தேவதையாகக் காட்டியது. “நிலா, நீ ஏன் எப்பவுமே உன்னைப் பத்தி அதிகமா பேச மாட்டேங்குற? உன்னோட குடும்பம், உன்னோட வேலை எதுவுமே எனக்குத் தெரியாது,” என்றான் விஷ்வா. நிலா அந்த வண்ண விளக்குகளையே வெறித்துப் பார்த்தாள். “சில கதைகள் மூடியே இருந்தாத்தான் விஷ்வா அழகு. திறந்து பார்த்தா, அங்கே வெறும் கண்ணீரும் வலியும்தான் இருக்கும். இந்த உலகம் எதையுமே சீக்கிரம் ஏதுக்காது ,” என்று குதர்க்கமாக பேசினாள்.“விஷ்வா… நீ என்மேல வச்சிருக்கற அன்பு எவ்வளவு தூய்மையானதுன்னு எனக்குத் தெரியும். ஆனா, இந்த நிலாவோட நிஜம் உனக்குத் தெரிஞ்சா நீ என்னைத் தாங்குவியா? உன்னைப் போல ஒரு நல்லவனை ஏமாத்துவது போல எனக்கு அடிக்கடி தோன்றுகிறது, அதே சமயம் உன்னை இழக்கவும் எனக்கு தைரியம் இல்லை. இந்தத் தவிப்பு என்னை வாழும்போதே கொல்லுதே!” என அவள் மனம் எனும் யுத்த பூமியில் போரிட்டுக் கொண்டிருந்தது. சரி.. நிலா நீ ஏன் ஒருமாறியா இருக்க? தப்பா கேடுட்டேன். என்ன மன்னிச்சிரு என நிலாவுக்கு ஆறுதல் கூறிக்கொண்டான். “என்னவாக இருக்கும்? ஏன் நம்ப நிலா பத்தி கேக்குறப்பயெல்லா அவ இப்டி சொல்றா? இதெல அப்படி என்னதான் இருக்கு?” அவனின் மனத்திற்குள் போராட்டம் நடத்த தொடங்கினான்.
நாட்கள் நகர, விஷ்வாவால் தன் காதலை இனிமேலும் நெஞ்சுக்குள் பூட்டி வைக்க முடியவில்லை. நிலா இல்லாமல் தன் வாழ்க்கை முழுமையடையாது என்பதை அவன் தீர்க்கமாக நம்பினான். மறுவாரம், அதே ஷா ஆலம் நூலகத்தின் அருகில் உள்ள ஒரு காபி ஷாப்பில் இருவரும் அமர்ந்திருந்தனர். விஷ்வா நிலாவின் அருகே வந்து அவளின் அந்த பஞ்சு போன்ற கைகளை மெதுவாகப் பற்றினான். அவளது கைகள் லேசாக நடுங்கின; முகத்தில் ஒரு பதற்றம். தன் முழு அன்பையும் கண்களில் தேக்கி “நிலா… நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன். ஐ லவ் யூ நிலா! என் வாழ்க்கை முழுக்க நீ என் கூடவே வரணும்னு ஆசைப்படுறேன். ப்ளீஸ், என் காதலை அக்செப்ட் பண்ணிக்கோ,” என்றான் விஷ்வா. நிலா அதிர்ந்து போனாள். அவளது கைகளை சட்டென்று பின்னுக்கு இழுத்துக் கொண்டாள். அவளது இதழ்கள் நடுங்கின, கண்களில் கண்ணீர் முட்டியது. “இல்ல விஷ்வா… இது முடியாது. இது தப்பு! நீ நினைக்கிற மாதிரி நான் இல்லை. என்னை உனக்கு செட் ஆகாது, என்னை விட்டுடு,” என்று கூறிவிட்டு,காபியைக் கூட குடிக்காமல் அழுதுகொண்டே அங்கிருந்து ஓடினாள். விஷ்வா திகைத்துப் போனான். ‘ஏன் இவ்வளவு தயக்கம்? அவளோட கண்ணுல என் மேல காதல் தெளிவாகத் தெரிஞ்சுச்சே, பின் ஏன் இந்த மறுப்பு?’ என அவனுக்குள் பல கேள்விகள் குடைந்தெடுத்தன. அவளை இப்படியே விட அவனுக்கு மனமில்லை. அதனால் விஷ்வா அவளது ரகசியத்தை அறிய அவளை பின் தொடர்ந்து அவளின் வீட்டைத் தேடிச் சென்றான். “அப்படி என்ன இரகசியம்? அவளின் கண்களின் காதல் வெளிப்பட்டு ஏ சொல்லல? யாருக்காக இத செய்ரா? யாராவது அவள மெரட்டிருப்பங்களோ? இல்ல நிலாவுக்கு உண்மையாவெ நம்பள புடிக்கிலையோ? இன்னகி ரெண்டுல ஒருகை பாத்தே ஆகனு!”என அவளை பின்தொடர்ந்தான்.
ஷா ஆலம் நகரின் ஒதுக்குப்புறமான ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நிலா வசித்து வருகிறாள். விஷ்வா அவளை பின் தொடர்ந்து அவளது வீட்டின் வாசலுக்குச் சென்று கதவைத் தட்டப் போனான். கதவு சற்றே திறந்திருந்தது. உள்ளே நிலா தன் தோழியிடம் அழுதுகொண்டு பேசுவது கேட்டது. “அவன் என்னிடம் காதலைச் சொல்லிட்டான்டி… எனக்கு அவனை ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா, என்னால எப்படி அவனோட காதலை ஏத்துக்க முடியும்? என நிலா தனது தோழியிடம் பேசிக் கொண்டிருப்பதை கேட்ட விஷ்வாவுக்கு மனத்திற்குள் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவள் எதிர்நோக்கும் பிரச்சணைதான் என்ன? என்பதை தெரிந்துக் கொள்ள இன்னும் ஆர்வமாக இருந்தது. நான் பிறப்பால ஒரு ஆண்… ஒரு திருநங்கை என்ற உண்மை தெரிஞ்சா அவன் தாங்குவானா?” என்று நிலா கதறி அழுதாள். வாசலில் நின்றுக் கொண்டிருந்த விஷ்வாவின் காதுகளுக்கு இந்த வார்த்தைகள் கேட்டவுடன் அவன் அதிர்ந்து போனான்; விஷ்வாவுக்குத் தலை சுற்றியது. ‘நிலா… ஒரு திருநங்கையா?!’ அவனது மூளை வேலை செய்வதை நிறுத்தியது. அவளது அந்த அழகான உதடுகள், காந்தக் கண்கள், மென்மையான குணம்… எல்லாமே ஒரு ஆணின் மறுவடிவமா? அவனால் அதை நம்பவே முடியவில்லை.
‘என்ன இது? விதியே என் கூட விளையாடுதா? நான் உயிருக்குயிரா காதலிச்ச என் நிலா ஒரு திருநங்கையா? என் குடும்பம், என் பிரண்ட்ஸ் எல்லாரும் என்ன நினைப்பாங்க? மலேசியால இந்தச் சமூகம் எங்களை வாழ விடுமா? ஆனா… நிலா என்கிட்ட காட்டுன அன்பு? அவளோட தூய்மையான குணம்? அதுல எந்தப் பொய்யும் இல்லையே. உடலால் அவள் பெண்ணாகப் பிறக்காவிட்டாலும், உள்ளத்தால் அவள் நூறு சதவீதம் பெண்தானே. நான் காதலித்தது அவளது உடம்பையா, இல்லை அவளது ஆன்மாவையா?’
விஷ்வா சில நிமிடங்கள் மௌனமாக நின்றான். அவனது குழப்பங்கள் நீங்கி, மனதில் ஒரு தெளிவு பிறந்தது. அவனது காதல், சமூகத்தின் பயங்களை விடப் பெரியதாக உருவெடுத்தது. மெதுவாகக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றான். விஷ்வாவைப் பார்த்ததும் நிலா பயந்து நடுங்கி, தன் முகத்தை மூடிக்கொண்டாள். “விஷ்வா… நீ… நீ போயிடு… என்னை மன்னிச்சிடு,” என்று கத்தினாள். விஷ்வா மெதுவாக அவளருகே சென்றான். அவளது கைகளைத் தன் முகத்திலிருந்து விலக்கினான். அவளது கலங்கிய கண்களை நேராகப் பார்த்தான்.”நிலா… நீ யாருன்னு எனக்கு இப்போ தெரிஞ்சு போச்சு. ஆனா, அதுனால என் காதல் மாறாது. நான் நேசிச்சது உன்னோட உடம்பை இல்ல நிலா, உன் அன்பை. நீ திருநங்கையா இருந்தா எனக்கென்ன? நீ என் நிலா… அவ்ளோதான். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இதை எதிர்கொள்வோம்,” என்றான் உறுதியான குரலில். நிலா நம்ப முடியாமல் விஷ்வாவைப் பார்த்தாள். அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. ஆனால், இந்த முறை அது வலியின் கண்ணீர் அல்ல, பேரன்பின் கண்ணீர்.
– சஹானா த/பெ குமரன், பேராசிரியர்: முனைவர் முனீஸ்வரன் குமார், சுலுத்தான் இதுரீசு பல்கலைக்கழகம், மலேஷியா.
தொடர்புள்ள சிறுகதைகள்
காதலா? கருணையா?
பிரித்திகா மோகன்காந்தி
July 14, 2026
மாயவலை
ஆலமர் செல்வன்
July 5, 2026
காதலின் உயிர் மீட்டல்…
இளையவேணி கிருஷ்ணா
July 5, 2026