சங்கர்லால் வந்துவிட்டார்!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 11, 2026
பார்வையிட்டோர்: 104 
வாசிப்பு நேரம்: 14 நிமிடங்கள்

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 36-40 | அத்தியாயம் 41-45 | அத்தியாயம் 46-50

41

அம்பிகா லாட்ஜின் உரிமையாளர், எவரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வாயிற்படியைப் பார்த்தபடியே உள் பக்கமாக ஓர் அறையில் உட்கார்ந்திருந்தார். 

அப்போது – 

வெளியே ஒரு கார் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கியவர் தில்லைநாயகத்தின் எஸ்டேட் நிர்வாகி அண்ணாமலை! அவர் காரிலிருந்து இறங்கியதும் காரோட்டியிடம் ஏதோ சொன்னார். கார் போய்விட்டது. 

அவர் ஓட்டலுக்குள் புகுந்து நேராக ஓட்டல்காரர் உட்கார்ந்திருந்த அறைக்குச் சென்றார். அவர் உள்ளே வந்ததும் ஓட்டல்காரர் அவரைப் பார்த்து மெல்லச் சிரித்தார். ‘உட்காருங்கள் அண்ணாமலை” என்று சொல்லிவிட்டு எழுந்து வந்து வாயிற்படியில் கட்டியிருந்த திரையை இழுத்து மூடினார். பிறகு திரும்பிப் போய் அண்ணாமலைக்கு எதிரில் உட்கார்ந்தார். 

“உங்கள் ஆள் இப்போது தான் வந்தான், உடனே புறப்பட்டு வந்தேன்!” என்றார் எஸ்டேட் நிர்வாகி. 

ஓட்டல்காரர் சிரித்துக் கொண்டே, “முதலில் என்ன சாப்பிடுகிறீர்கள்?” என்று கேட்டார்.

“ஒன்றும் வேண்டாம்! வெறும் காப்பி மட்டும் கொண்டுவரச் செல்லுங்கள்!” என்றார் எஸ்டேட் நிர்வாகி, 

ஓட்டல்காரர் மேசை விளிம்பில் இருந்த பொத்தானை அமுக்கினார். பரிமாறுபவன் ஒருவன் ஓடிவந்தான். 

“இரண்டு கோப்பை காப்பி கொண்டுவந்து வைத்து விட்டுப் போ!” என்றார் ஓட்டல்காரர். அவன் இரண்டே நிமிடங்களில் காப்பி கொண்டு வந்தான். அவனிடம் ஓட்டல்காரர் சொன்னார் : “நீ போகலாம். இன்னும் அரை மணிநேரத்துக்கு என்னை எவரும் பார்க்க முடியாது! எவரையும் இந்த அறைக்குள் அனுப்பாதே!” என்று கட்டளை போட்டார். 

அவன், “சரி ஐயா” என்று சொல்லிவிட்டு வெளியே போனான். 

அண்ணாமவை ஓட்டல்காரரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். இருவரும் சிறிது நேரம் பேசவில்லை. 

பரிமாறுபவன் காப்பிக் கோப்பைகளைக் கொண்டு வந்து இருவர் முன்னும் வைத்துவிட்டுப் போய்விட்டான். போகும் போது, இலேசாக விலகியிருந்த திரையைச் சரியாக இழுத்து அவன் மறைத்துவிட்டுச் சென்றான். 

அண்ணாமலை காபியைப் பருகிவிட்டுப் பேசினார்: “வயிரவேல், நீண்ட நாட்களுக்குப் பின் நாம் சந்திக்கிறோம் இல்லையா?” 

ஓட்டல்காரர் வயிரவேல் தலையை மேலும் கீழுமாக அசைத்தார் மெல்ல “ஆமாம் அண்ணாமலை, நீ இப்போது பெரிய ஆளாகிவிட்டாய்! இந்த ஓட்டல் பக்கம் வருவதேயில்லை” என்றார் அவர். 

“இப்போது இருக்கும் அலுவல் தொல்லைகளில் எங்கேயும் போக முடியவில்லை!” என்றார் எஸ்டேட் நிர்வாகி. 

“உன்னுடைய அலுவல் தொந்தரவிலிருந்து உனக்கு விடுதலை கொடுக்கவே நான் வரவழைத்தேன்!” என்றார் ஓட்டல்காரர். 

எஸ்டேட் நிர்வாகி வியப்புடன் பார்த்தார். 

வயிரவேல் காப்பியைக் குடித்து விட்டுச் சொன்னார் : “ஏன் அப்படி விழிப்புடன் பார்க்கிறாய்? நீ எதைப் பற்றி மும்முரமாக இருக்கிறாய் என்று எனக்குத் தெரியும்?” 

அண்ணாமலை ஒன்றும் சொல்லவில்லை. அவர் வயிரவேலை வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். 

வயிரவேல், தொடர்ந்து சொன்னார், “நான் சொல்லுவதைக் கவனமாகக் கேட்டுக் கொள். சவரிமுத்து சிறையிலிருந்து தப்பிவிட்டான். அவன் சிறையிலிருந்து வெளியே வந்து பல நாட்கள் ஆகியும், இன்னும் அவன் பிடிபடவில்லை. அவன் வெளியே வந்துவிட்டதால், எப்படியும் அந்தப் புதையலைக் கிளப்பிவிடுவான்!” 

எஸ்டேட் நிர்வாகி கேட்டார் : “எந்தப் புதையலைச் சொல்லுகிறாய்?” 

வயிரவேல் சிரித்தார். அவர் சிரிப்புக்கிடையே, “எந்தப் புதையலை? நீ எந்தப் புதையலைத் தேடுகிறாயோ, அதைத்தான் நானும் சொல்லுகிறேன். சவரிமுத்து கோயிலில் கொள்ளையடித்த புதையலைத்தான் சொல்லுகிறேன். புதையலை வைத்திருக்கும் இடத்தை இப்போது சவரிமுத்து மறந்து விட்டதால் தவிக்கிறான். புதையல் இருக்கும் இடத்தைப் பற்றிய ஒரு சுடிதம் அவன் கையைவிட்டுப் போய்விட்டது!” என்றார். 

“எங்கே போய்விட்டது?” என்று கேட்டார் எஸ்டேட் நிர்வாகி. 

“எனக்கு எப்படித் தெரியும்? எங்கேயோ எப்படியோ மறைந்து விட்டது! ஆனால், அந்தக் கடிதத்தில் பாதிக் கடிதத்தை, வேண்டுமானால் உனக்காக நான் ஒருவரிடமிருந்து வாங்கித் தருகிறேன்!” 

எஸ்டேட் நிர்வாகி உடனே கேட்டார்; “யார் அந்த 

ஒருவர்?” 

வயிரவேல் சிரித்துக் கொண்டே சொன்னார் : “அதைச் சொல்ல முடியாது! எவராக இருந்தால் உனக்கென்ன? அந்தப் பாதிக் கடிதத்தை என்னால் வாங்கித் தர முடியும்!” 

“எப்போது?” என்று கேட்டார் எஸ்டேட் நிர்வாகி. 

“இன்னும் ஒன்றிரண்டு நாட்களுக்குள்! ஆனால், அந்தப் பாதிக் கடிதத்தின் விலையையும் முதலிலேயே கொடுத்து விட வேண்டும்!” 

“மற்றொரு பாதிக் கடிதம் எங்கேயிருக்கிறது?”

“தெரியாது! நம்மிடம் இருப்பதைப் பற்றிப் பேசுவோம். இல்லாததைப் பற்றி நாம் பேசுவதில் பயன் என்ன?” 

“அந்த மனிதனைப் பார்க்க முடியுமா?” 

“முடியாது அண்ணாமலை! அவன் என்னைத் தவிர வேறு எவரையும் நம்பமாட்டேன் என்கிறான், அவனை ஏமாற்றவும் முடியாது!” 

“பாதிக் கடிதத்துக்கு என்ன விலை கேட்கிறான்?”

“ஓர் இலட்ச ரூபாய்!” 

“என்ன?” என்று வியப்புடன் கேட்டார் அண்ணாமலை. ‘காது கேட்கவில்லையா? ஓர் இலட்சம் ரூபாய் வேண்டும்!” என்றார் வயிரவேல் அழுத்தம் திருத்தமாக! 

“புதையலின் மதிப்பே ஓர் இலட்சம் இருக்காதே!” என்றார் எஸ்டேட் நிர்வாகி. 

“புதையலின் மதிப்புப் பல இலட்ச ரூபாய்கள் என்பது நாடறிந்த இரகசியம். என்னை ஏமாற்ற நினைத்தால் உன்னையே நீ ஏமாற்றிக் கொள்கிறாய் என்றுதான் பொருள். மற்றொரு பாதிக் கடிதமும் கிடைத்துவிட்டால், புதையலின் பாதியைக் கேட்டிருப்பேன். கடிதத்தின் பாதியை வைத்திருக்கும் நான் சொல்லும் மனிதன் சாதாரணப் பேர்வழி அல்ல!” என்றான் வயிரவேல். 

எஸ்டேட் நிர்வாகி சிறிது நேரம் சிந்தனை செய்தார். பிறகு “கடிதம் உன் கைக்கு வந்ததும் சொல்லி அனுப்பு!” என்றார். 

“முன் பணம் வேண்டும்!” 

“எவ்வளவு?” 

“ஐம்பதினாயிரமாவது வேண்டும்!” 

“அது முடியாது! பத்தாயிரம் ரூபாய் தருகிறேன். கடிதம் வந்ததும் சொல்லியனுப்பு. மீதிப் பணத்தை கொடுத்து விட்டுக் கடிதத்தைப் பெற்றுக் கொள்கிறேன்!” என்று சொல்லிவிட்டு எஸ்டேட் நிர்வாகி கையிலிருந்த தோல் பையை எடுத்தார். நூறு ரூபாய்க் கட்டு ஒன்றை எடுத்து மேசை மேல் போட்டார். 

வயிரவேல் அதை எடுத்து நோட்டுகளை விரல்களால் தள்ளிப் பார்த்தார். பிறகு அதை அப்படியே எடுத்து மூலையிலிருந்த இரும்புப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டினார். 

எஸ்டேட் நிர்வாகி எழுந்து கொண்டார். கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே, “கார் வந்து விட்டிருக்கும். நான் வருகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டார். 

அவரை வழியனுப்ப வாயில் வரையில் வந்த வயிரவேல், “எதற்காகக் காரை அனுப்பிவிட்டாய்? இங்கேயே ஒரு பக்கமாக நிறுத்தி வைக்கச் சொல்லுவதுதானே?” என்றார். 

“இப்போதெல்லாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. கார் நிற்பதை எனக்குத் தெரிந்த எவராவது பார்த்தால், நான் இங்கே இருப்பது தெரிந்து விடும் இல்லையா? இன்னும் சில நாட்களுக்கு நான் மற்றவர்கள் சுண்ணில்படாமல் இருப்பது நல்லது. ஆகையால் தான் காரை அனுப்பிவிட்டேன். அரைமணி நேரம் கழித்து மீண்டும் கொண்டு வரச் சொன்னேன்!” என்றார் அண்ணாமலை, 

அப்போதுதான் அவருடைய கார் தெருத் திருப்பத்தில் வந்து கொண்டிருந்தது. அவரைப் பார்த்ததும் காரோட்டி வேகமாகக் காரைக் கொண்டு வந்து நிறுத்தினான். 

எஸ்டேட் நிர்வாகி காரில் ஏறி உட்கார்ந்தார். கார் புறப்பட்டுப் பறந்தது. 

ஓட்டல்காரர் வயிரவேல் கையை அசைத்து அவருக்கு விடை கொடுத்தனுப்பினார். அவருடைய உதடுகள் விரிந்து சிரித்தன. ஆனால் அவர் மனம் அதே நேரத்தில் எண்ணியது; “திருட்டுப் பயல்! உன்னை நம்புவதைவிட ஒரு முதலையை நம்பி, தூங்கும் போது அதைப் பக்கத்தில் படுக்கவைத்துக் கொள்ளலாம்!” 

அவர் திரும்பி உள்ளே சென்றார். 

42 

வழக்கறிஞர் தாண்டவன் சென்னை எழும்பூர் புகைவண்டி நிலையத்தில் நின்றிருந்தார். அவருடைய மனைவி திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் இரண்டாம் வகுப்புப் பெண்கள் பெட்டியில் உட்கார்ந்திருந்தாள். 

அவளுக்குத் துக்கம் துக்கமாக வந்தது. “நான் போனதும் எல்லாவற்றையும் ஒரேயடியாக மறந்து விட்டுப் பேசாமல் இருந்துவிடாதீர்கள். வேறு வீடு கிடைத்ததும் கடிதம் போடுங்கள். உடனே புறப்பட்டு வந்துவிடுகிறேன்” என்றாள். 

அவள் அந்த வீட்டில் இனி இருக்க முடியாது என்று பிடிவாதம் பிடித்து, வேறு வீடு கிடைக்கும் வரையில் மதுரையிலிருக்கும் தனது பிறந்த வீட்டுக்குப் போய் வருவதாகச் சொல்லிவிட்டாள். வழக்கறிஞர் இத்தனை நாட்கள் ஏதோ சாக்குப் போக்குச் சொல்லி நாட்களைத் தள்ளிக் கொண்டு வந்தார். ஆனால்- 

சங்கர்லால் இரண்டாம் முறையாக தமது இல்லத்துக்கு வந்துவிட்டுப் போன பிறகு மனத்தை மாற்றிக் கொண்டார். 

மீண்டும் ஒரு முறை தன் மனைவி ஊருக்குப் போக வேண்டும் என்று சொல்லமாட்டாளா என்று எண்ணினார். அவள், வீட்டை மாற்றும் வரையில் மதுரைக்குப் போய் வருவதாகச் சொன்னதும், உடனே வண்டி ஏற்றிலிட்டார். 

வண்டி புறப்படும் நேரமாகிவிட்டது. வழக்கறிஞர் சொன்னார் : ‘கவலைப்படாதே! இன்னும் ஒரு வாரத்திற்குள் எப்படியும் வேறு வீடு பிடித்து விடுவேன். உடனே உனக்குக் கடிதம் போடுகிறேன்!” 

அவள் சரி என்று தலையை மேலும் கீழும் ஆட்டினாள். கார்டு விசில் அடித்துப் பச்சை விளக்கைக் காட்டினார். திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் தனது நீண்ட பயணத்தை எண்ணி மூச்சுவிடுவதைப் போல் பெருத்த சத்தத்துடன் புறப்பட்டது. 

புகைவண்டியின் கடைசிப் பெட்டி மறையும் வரையில் பிளாட்பாரத்திலேயே நின்றிருந்துவிட்டு வெளியே வந்தார் வழக்கறிஞர். வாடகைக் கார் ஒன்றைப் பிடித்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார். 

அவர் விளக்குகளை அணைத்து விட்டு, சிந்தனை செய்தபடியே சாய்வு நாற்காலியில் சாய்ந்தார். 

நேரம்தான் ஓடிக் கொண்டிருந்தது. அவருக்கு தூக்கம் வரவில்லை. ஒன்றிரண்டு சன்னல்களை மட்டும் திறந்து விட்டு, மற்றச் சன்னல்கள் எல்லாவற்றையும் மூடிவிட்டார். திறந்திருந்த சன்னல்களைக் கூடத் திரையை இழுத்து மூடிவிட்டார். 

அவருடைய சிந்தனைக்கு ஒரு முடிவே ஏற்படவில்லை. இரவு மணி – பதினொன்று. 

நேரம் அவரைக் கேட்டுக் கொண்டா ஓடுகிறது? எவரையுமே அது கேட்காமல் ஓடிக் கொண்டிருக்கிறது! நேரத்துடன்தான் மனிதன் போட்டியிட வேண்டியிருக்கிறது. 

வழக்கறிஞருக்கு ஏதோ ஐயம் வந்துவிட்டது. பின்னால் ஏதோ சத்தம் கேட்டு ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் எழுந்தார், மீண்டும் – 

அதே சத்தம்! 

வழக்கறிஞர் விளக்கைப் போடாமலே எழுந்தார். மெல்ல மேசையின் பக்கம் சென்றார். மேசை அறைக்குள்தான் அவருடைய மின் பொறி விளக்கு இருந்தது. அவர் ஓசை செய்யாமல் மேசை அறையைத் திறந்து மின் பொறி விளக்கை எடுத்தார். மேசை அறையை மூடாமல் அப்படியே விட்டு விட்டு, புறக் கடைப் பக்கம் சென்றார். புறக் கடைக் கதவு சாத்தியிருந்தது. அவருக்குத் தாழிட்டது கவனம் வரவில்லை. மின் பொறி விளக்கை அடித்துப் பார்த்தார். தாழ் போடப்பட்டிருந்தது. 

கடிதம் எங்கிருந்து வந்தது? 

அவர் சிந்தனை செய்த படியே திரும்பினார். மீண்டும் அதே சத்தம்! அவர் திரும்பிப் பார்த்தார். 

புறக்கடைக் கதவுக்குப் பக்கத்தில் சிறிது தொலைவில் இருந்த சன்னல் கதவு சரியாகச் சாத்தப்படாமல் இருந்தது. அது சன்னல் ஓரமாக வைக்கப்பட்டிருந்த தகர காற்றில் ஆடியபோது. டப்பாவின் மீது பட்டுச் சத்தம் எழுந்தது! 

வழக்கறிஞர் தனக்குத் தானே சிரித்துக் கொண்டார். அச்சம் என்பது தன்னால் வருவதில்லை. ஏதாவது ஐயம் எழும்போது தான் அச்சம் தோன்றுகிறது என்று முடிவு கட்டினார் அவர். அந்தச் சன்னலை இழுத்துச் சரியாக மூடிவிட்டு, முன் பக்கம் வந்தார். தெருக் கதவை தாழிட்டிருக்கிறோமோ என்று பார்த்துவிட்டுக் கூடத்தில் வந்து நின்றார். அவர் மனமெல்லாம் அந்தப் புதையலின் மீதே அடித்துக் கொண்டது. 

ஆமாம், புதையல்தான்! 

சங்கர்லால் பொய் சொல்லியிருக்க மாட்டார் என்று எண்ணியது அவர் மனம், எப்படியும் அந்தப் புதையலைக் கிளப்பிவிட வேண்டும் என்று எண்ணினார், அவர் புதையவைக் கிளப்பும் சந்தர்ப்பத்தில் எவராவது அதே புதையலைத் தேடி வருவார்களோ என்ற ஐயம் வந்தது அவருக்கு. அத்துடன் அச்சமும் தோன்றியிருந்தது. புதையலில் அக்றையுள்ளவன், வழக்கறிஞரின் போக்கைக் கண்டு கொண்டதும், வழக்கறிஞரின் உயிருக்கு உலை வைத்துவிட்டால் என்ன ஆவது!. 

அவர் வெகு நேரம் தயங்கிவிட்டு, பின் கட்டிற்குச் சென்றார். சிறிய இரும்புத்துண்டு ஒன்றைக் கொண்டு வந்தார். கூடத்தில் சில இடங்களில் முதலில் தட்டிப் பார்த்தார். பிறகு, கூடத்தின் விளக்கை அணைத்து விட்டு, தூங்கும் அறைப் பக்கம் சென்றார். இருட்டில் அவர் நடந்த போது, இழுத்து விடப்பட்ட மேசை அறைமீது மோதிக் கொண்டு கீழே விழுந்தார். 

தடால் என்ற சத்தம்! 

மேசை அறை கீழே விழுந்தது. அதிலிருந்த காகிதங்களும் புத்தகங்களும் இறைந்துவிட்டன. நல்ல வேளையாக மின்பொறி விளக்கை அவர் மேசை மேல் வைத்திருந்தார். 

வழக்கறிஞர் இருட்டில் அப்படியே சிறிது நேரம் உட்கார்ந்து கொண்டிருந்தார். பிறகு மெல்ல எழுந்தார். அவர் மனம் எண்ணியது: நம் வீட்டிலேயே நமக்கு இருக்குமிடம் இருட்டில் தெரியவில்லையே இருட்டு வேளைகளில், பிறர் வீட்டில் திருடப் போகும் கொள்ளைக்காரர்கள் எப்படிச் சந்தடியின்றி எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து வேண்டியதை மட்டும் எடுத்துச் செல்லுகிறார்கள்?” 

அவர் மேசை அறையை எடுத்து மாட்டி விட்டுக் கீழே இறைந்து கிடந்த காகிதங்களையும் புத்தகங்களையும், வாரிப் போட்டார். பிறகு – 

தூங்கும் அறைக்குச் சென்றார். 

அங்கே, நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு, சன்னலின் மேல் பக்கம் கையிலிருந்த இரும்புத் துண்டினால் தட்டிப் பார்த்தார். 

அந்த இடத்தில் சத்தம் வேறு விதமாகக் கேட்பது போல் இருந்தது. கொஞ்சம் தள்ளிச் சுவரில் தட்டினார். ஏதோ தகர டப்பாவின் மேல் தட்டுவதைப் போல் கேட்டது. அந்த இடத்தில் சுவரை இடித்துத் தள்ளினார். கூர்மையான அந்த இரும்புத் துண்டு சுவரைப் பெயர்த்துத் தள்ளியது. 

சிறிது நேரத்தில், பழைய தகர டப்பா ஒன்று தெரிந்தது. வேர்வை கொட்ட, சுவரைப் பெயர்த்துத் தள்ளி, அந்த டப்பாவை வெளியே இழுத்தார். அது துருப்பிடித்துப் போயிருந்தது! 

கீழே இறங்கினார் வழக்கறிஞர். அவர் அந்த டப்பாவைத் திறக்க முயன்றார். அவசரத்தில், இலேசில் அதைத் திறக்க முடிகிறதா? 

இரும்புத் துண்டினால் தட்டி அதன் மூடியைக் கழற்றினார். உள்ளே –

கண்ணைப் பறிக்கும் நகைகள் நிறைந்திருந்தன! அவற்றுடன் கொஞ்சம் மண்ணும் கலந்திருப்பதைப் போல் இருந்தது! 

வழக்கறிஞர் சின்னப் பிள்ளையைப் போல் குதித்தார். அவரால் நம்பவே முடியவில்லை! 

சங்கர்லால் சொன்னது எவ்வளவு உண்மை!

அவர் சிறிது நேரம் இப்படியும் அப்படியும் ஓடினார். பிறகு தொலைபேசியை எடுத்தார். அவருடைய கைகளும் கால்களும் நடுங்கின. அவர் தொலைபேசியை எடுத்த போது, அது நழுவிக் கீழே விழுந்து விட்டது. மீண்டும் குனிந்து அதை எடுத்தார். 

வழக்கறிஞர் தாண்டவன் தொலைபேசியின் டயலைத் திருப்பினார். சங்கர்லாலின் முல்லைவனத் தோட்ட பங்களாவுக்கு எண்ணைத் திருப்பிவீட்டுக் காத்திருந்தார். தொலைபேசியின் மறு முனையில் மணியடிக்கும் ஓசை கேட்டது. சிறிது நேரம் கழித்துத் தொலைபேசி எடுக்கப்படும் ஓசையும் அதைத் தொடர்ந்து “ஹலோ” என்ற ஓசையும் கேட்டது. 

“யாரது? சங்கர்லாலா?”

“ஆமாம்” 

“தாண்டவன் பேசுகிறேன். மிக்க அவசரம் சங்கர்லால்” 

“மிக்க அவசரம் இல்லாவிட்டால் இந்த நேரத்தில் நீங்கள் என்னை அழைக்க மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். என்ன நடந்தது?” 

“நீங்கள் சொன்னது உண்மைதான்! முதலில் ஏதோ விளையாட்டாகச் சொல்லுகிறீர்களோ என்று கூட எண்ணினேன். அப்புறம் தான் அது உண்மை என்று தோன்றியது!” 

“நீங்கள் புதையலைப் பற்றிச் சொல்லுகிறீர்களா?” “ஆமாம் சங்கர்லால்!” 

“அதைப் பற்றித் தொலைபேசியில் ஒன்றும் சொல்லாதீர்கள். இதோ புறப்பட்டு விட்டேன். இன்னும் சில நிமிடங்களில் அங்கே வந்துவிடுகிறேன்!” என்று சொல்லிவிட்டுச் சங்கர்லால் தொலைபேசியை வைத்து விட்டார். 

வழக்கறிஞர் தாண்டவன் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு சிந்தனை செய்தபடியே இப்படியும் அப்படியும் கூடத்தில் சிந்தனையோடு உலாவிக் கொண்டிருந்தார். 

43 

சிறிது நேரம் கழித்து வெளியே கார் வரும் ஓசை கேட்டது. வழக்கறிஞர் சன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். அந்தக் கார் நிற்கவில்லை. அவர் வீட்டைத் தாண்டிப் போய் விட்டது. அவர் ஏமாற்றத்துடன் திரும்பி வந்து கூடத்தில் பின்னால் கைகளைக் கட்டியபடி உலவ ஆரம்பித்தார். 

இரண்டு நிமிடங்களுக்குப் பின் வெளிக் கதவைத் தட்டும் ஓசை கேட்டது. 

வழக்கறிஞர் ஓடிப் போய்ச் சன்னல் பக்கமாகப் பார்த்தார். வெளியே, சங்கர்லாலும், உதவிப் போலீஸ் கமிஷனர் வகாபும் நின்றிருந்தார்கள், 

வழக்கறிஞர் கதவைத் திறந்தார். 

இருவரும் உள்ளே வந்தார்கள். அவர்கள் உள்ளே வந்ததும் வழக்கறிஞர் சங்கர்லாலைப் பார்த்தார். “காரில் வந்தீர்களா? காரை எங்கே லிட்டீர்கள்!” என்று கேட்டார். 

“நான்கைந்து வீடுகளுக்கு அப்பால் தள்ளி நிறுத்தினோம். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் காரை உங்கள் வீட்டின் முன் நிறுத்துவது சரியல்ல. அக்கறையுள்ள சிவர் உங்கள் வீட்டைச் கவனிக்கக்கூடும்” என்றார் சங்கர்லால். 

வழக்கறிஞர் புரிந்து கொண்டார். அவர் சன்னல் வழியாகப் பார்த்த போது வேகமாகச் சென்ற கார் சங்கர்லாலின் கார்தான்; வேண்டுமென்றே தான் அவர் அதைக் கொஞ்ச தூரம் தள்ளி அப்படி நிறுத்தியிருக்கிறார். 

வழக்கறிஞர் வெளிக்கதவைச் சாத்திவிட்டு, “என்னுடன் வாருங்கள் சங்கர்லால்” என்று சொல்லிவிட்டு, தூங்கும் அறைக்கு அழைத்துச் சென்றார். 

தூங்கும் அறையின் விளக்கைப் போட்டார். அங்கே அவர் வைத்துவிட்டு வந்திருந்த டப்பா அப்படியே கிடந்தது. 

சங்கர்லாலிடம் அதைக் காட்டினார் வழக்கறிஞர்.

சங்கர்லால் அந்த டப்பாவை எடுத்தார். அதில் மண்ணுடன் கலந்த நகைகள் நிரம்பிக் கிடந்தன. அவற்றை அப்படியே கீழே கொட்டினார். எல்லா நகைகளையும் ஒரு முறை பார்த்தார். 

உதவி போலீஸ் கமிஷனர் வகாப் வியப்புடன் பார்த்தார்,

சங்கர்லால் அமைதியுடன் எல்லா நகைகளையும் எடுத்துப் பார்த்தார். பிறகு அவற்றில் ஒன்றை உதலிப் போலீஸ் கமிஷனர் வகாபிடம் எடுத்துக் கொடுத்தார். 

“திருட்டுப் பயல்! அந்தச் சவரிமுத்து நகைகளை எங்கே ஒளித்து வைத்திருக்கிறான் பார்த்தீர்களா!” என்றார் வகாப், 

“அவசரப்படாமல் பாருங்கள் வகாப்! முதலில் அவை கோயில் நகைகள் இல்லை! இரண்டாவதாக அவை தங்க நகைகள் தாமா என்று பாருங்கள். மூன்றாவதாக, அவற்றில் பதிப்பிக்கப்பட்டிருக்கும் சுற்கள். உண்மையான விலை உயர்ந்த வைரங்கள் தாமா என்று நீங்கள் பாருங்கள்!” என்றார் சங்கர்லால். 

வகாப் விழிப்புடன் பார்த்தார். சிறிது நேரம் கழித்து “மன்னிச்சு வேண்டும் சங்கர்லால்! இவை அல்ல கோயில் நகைகள்! கோயிலில் கொள்ளை போனவை விலை மதிக்க முடியாத விலை உயர்ந்த வைர நகைகள்! இவை போலி நகைகள், பித்தளையால் செய்யப்பட்டு மெருகிடப்பட்டவை. கற்கள், சாதாரணக் கண்ணாடிக் கற்கள்!” என்றார். 

வழக்கறிஞர்-

விழித்தார்! 

அவர் கண்டெடுத்த புதையல் பயனற்றதாக அல்லவா போய்விட்டது! புதையலில் பங்கு பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் புதையலைக் கண்டுபிடிக்கவில்லை. பிள்ளை குட்டி எதுவும் இல்லாமல் புதுமணத் தம்பதிகள் போல் கணவனும் மனைவியுமாக இரண்டே பேர்கள் கொண்டது அவரது குடும்பம். அவருக்குப் போதிய பணமிருந்தது அவரிடம். சங்கர்லாலுக்கு உதவி செய்து, தான் செய்யும் அந்த உதவியின் மூலம் தன்னுடைய பெயர் பத்திரிகையில் வெளிவராதா என்று எண்ணினார் அவர். இந்த வழக்கில் அவர் ஏதாவது மருமங்களைக் கண்டு பிடித்தால், சங்கர்லால் அவரை அரசினரது வழக்கறிஞராகச் செய்து விடவும் முடியும். இந்த இந்த இரண்டே காரணங்களுக்காகத்தாம் அவர் புதையலைத் தேடும் பணியில் ஈடுபட்டார். ஆனால் – 

இப்படி ஓர் ஏமாற்றம் காத்திருக்கும் என்று அவர் சிறிதும் எண்ணவில்லை! 

சங்கர்லால் வழக்கறிஞரைப் பார்த்தார். “தாண்டவன்! நீங்கள் புதையலைக் கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்பதற்காகத்தான் அன்று இந்த வீட்டில் புதையல் இருக்கக் கூடும் என்று நான் சொன்னேன். நான் நினைத்தபடியே நடந்தது. ஆனால் உண்மையான புதையல் இதுவல்ல! இருந்தாலும், இதை இருந்த இடத்திலேயே வைத்து விடுங்கள். மீண்டும் சுவரில் சுண்ணாம்பு பூசிவிட்டு, ஒருவாரம் வெளியே எங்கேயாவது போய்த் தங்கியிருங்கள்!” என்றார். 

‘உண்மையான புதையல் எங்கே இருக்கிறது சங்கர்லால்?”” என்று ஆவலுடன் கேட்டார் வழக்கறிஞர். 

“உறுதியாக ஒன்றும் இப்போது சொல்லுவதற்கில்லை. ஆனால், ஒன்று! இந்த வீட்டில் உண்மையான புதையல் இல்லை!” என்றார் சங்கர்லால், 

“உங்கள் செய்கை எனக்குப் புரியவில்லை!” என்றார் வழக்கறிஞர். 

“பின்னால் எல்லாம் தன்னால் புரிந்துவிடும். உங்கள் மனைவி எங்கே? உங்கள் மனைவியை ஊருக்கு அனுப்பி விட்டீர்களா?” 

“ஆமாம்!” 

“அப்படியானால் நீங்களும் ஊருக்குப் போய் வாருங்கள்! உங்களுக்கும் ஓய்வு வேண்டாமா? நீங்கள் உங்கள் மனைவியை அழைத்து வருவதற்குள் இங்கே எல்லாத் தொல்லைகளும் தீர்ந்துவிடும்!” என்றார் சங்கர்லால், 

பிறகு ” எப்போது உங்களுக்குப் புதையல் இருக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது?” என்றார். 

“சீரிய சிந்தனைக்குப்பின், சங்கர்லால் விளையாட்டாகச் சொல்லுவது கூட உண்மையாக இருக்கும் என்று எனக்குப் பட்டது. அதன் பிறகுதான் புதையலைப் பற்றியே எண்ணமிட ஆரம்பித்தேன்!” என்றார் வழக்கறிஞர். 

“உங்கள் உதவிக்கு மிக்க நன்றி. இந்த வழக்கு முடிந்ததும், அரசினரிடமிருந்து உங்களுக்குக் கொஞ்சம் பணம் வாங்கித் தருகிறேன். தற்காலிகமாக வீட்டை நீங்கள் காலி செய்து கொடுப்பதற்கு நஷ்ட ஈடாக அமையும் அந்தப் பணம்!” என்றார் சங்கர்லால், 

வழக்கறிஞர் சிரித்துக் கொண்டே, “பணம் பெரிதல்ல சங்கர்லால், என்னால் உங்களுக்கு உதவி செய்ய முடிகிறதே என்பது தான் என்னுடைய மகிழ்ச்சி!” என்றார். 

சங்கர்லால் சிரித்துக் கொண்டே சொன்னார்: “தாண்டவன் நீங்கள் நினைப்பதைப் போல், பணம் பெரிதல்ல என்று எல்லாருமே எண்ணினால், எனக்கும் வகாபுக்கும் இந்த உலகத்தில் வேலை இல்லாமல் போய்விடும்! ஏமாற்றுபவர்கள் இல்லாவிட்டால் வழக்கறிஞர்கள் எதற்கு?” 

இப்படி அவர் சொல்லிலிட்டு வகாபுடன் வெளியே வந்தார். இருவரும் காரை நோக்கி நடந்தார்கள். 

வழக்கறிஞர் புதையலை இருந்த இடத்திலேயே புதைத்து விட்டு, புறக்கடையில் அவர் தயாராக வைத்திருந்த சுண்ணாம்பைக் கொண்டு வந்து பூசிவிட்டார். 

பெயர்ந்த இடம் தெரியாமல் மறைக்கப்பட்டது அந்த இடம்! 

மறுநாள் வழக்கறிஞர், வீட்டைப் பூட்டிக் கொண்டு ஊருக்குப் போய் விட்டார்! 

44

சங்கர்லால் மாணிக்கத்திடம் கேட்டார் : “என்ன மாணிக்கம்? அம்பிகா லாட்ஜ் முதலாளியை மீண்டும் எப்போது பார்க்கப் போகிறாய் நீ?” 

“இன்று போகிறேன் அண்ணா! இப்போதே புறப்படுகிறேன்!” என்றான் மாணிக்கம். 

“கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்துகொள். அம்பிகா லாட்ஜ் முதலாளியை முழுக்க முழுக்க நம்பிவிடாதே!” என்றார். சங்கர்லால், 

“இது கூடவா எனக்குத் தெரியாது!” என்றான் மாணிக்கம் பிறகு அவன் போய்விட்டான். 

சுமார் அரை மணி நேரம் கழித்து மாணிக்கத்தின் கார் வேகமாக விரைந்து சென்றது. 

கார் புறப்படும் போது மாணிக்கத்தை வழியனுப்ப வந்த கயல்விழி, கார் மறையும் வரையில் வெளியே நின்றிருந்தாள்! 

மாணிக்கம் வழக்கம் போல் வேகமாகக் காரைச் செலுத்தினான். 

அம்பிகா லாட்ஜ் இருந்த தெருவை அடைந்ததும், தெருவின் திருப்பத்திலேயே சிறிது தொலைவில் காரை நிறுத்திவிட்டு, மெல்ல நடந்து சென்றான், 

ஓட்டலுக்குள் நுழைந்ததும், ஓட்டல்காரர் எங்கிருந்து தான் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாரோ? அவர் ஓடோடியும் வந்து அவனைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றார். 

மாணிக்கம் அந்த அறையை ஒரு முறை பார்த்தான் பிறகு – ஓட்டல்காரரைப் பார்த்தான். 

“என்ன சாப்பிடுகிறாய்?” என்று கேட்டார் ஓட்டல்காரர். “சாப்பிட வரவில்லை நான், தொழிலில் இறங்குவோம்! பணம் தயாராக இருக்கிறதா?” என்று கேட்டான் மாணிக்கம். 

அம்பிகா ஓட்டல் உரிமையாளர் மாணிக்கத்தை உற்றுப் பார்த்தார். சிறிது நேரம் வரையில் அவனை அப்படியே பார்த்திருந்து விட்டு எழுந்தார். இரும்புப் பெட்டியைத் திறந்து ஐயாயிரம் ரூபாய்க்கு நூறு ரூபாய்களாக எடுத்துப் போட்டார். 

மாணிக்கம் அந்த நோட்டுகளை அப்படியே அள்ளிக் கால் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான், 

ஓட்டல்காரர் அவன் முன் வந்து உட்கார்ந்தார். மாணிக்கம் எழுந்தான். அவன் சட்டைப் பையிலிருந்து ஒரு கவரை எடுத்து மேசை மேல் போட்டான். 

ஓட்டல்காரர் அந்தக் கவரை எடுத்தார். அது ஒட்டப்பட்டிருந்தது. அதன்மேல் ஒன்றும் எழுதப்படவில்லை. அவர் கவரைத் தூக்கிப் பார்த்தார். பிறகு, “உட்கார்! ஏன் எழுந்து கொண்டாய்? அவசரமா?” என்றார். 

“ஏன்? அதில் கடிதம் இருக்கிறதா இல்லையா என்று உங்களுக்கு ஐயம் வந்துவிட்டதா? நான் இருக்கும்போதே கவரை உடைத்துப் பார்த்து விடுங்கள். நான் எப்போதும் எவரையும் ஏமாற்றியதில்லை. என்னை ஏமாற்றப் பார்ப்பவர்களை நான் சும்மா விடுவதில்லை!” என்று சொல்லிவிட்டு மாணிக்கம் உட்கார்ந்தான். 

ஓட்டல்காரருக்குப் பேரழகியின் நினைவு வந்தது. இந்தச் சின்னப்பயல் தன்னை எப்படியெல்லாம் மிரட்டிவிட்டான் என்று எண்ணிய போது அவருக்குக் கொதிப்பு வரவில்லை, சிரிப்புத் தான் வந்தது. அவர் சிரித்துக் கொண்டே கடிதத்தை உடைத்துப் பார்த்தார். சுவரில் பாதிக் கடிதம் இருந்தது. அதைப் படித்தார். 

“அதை ஏன் படிக்கிறீர்கள்? உங்களுக்கு எதுவுமே புரியாது! மீதிப் பாதிக் கடிதமும், கிடைத்தால் தான் பயன்படும். 

நான் வருகிறேன், நாளை மாலை தான் வரும்போது, மீதித் தொகையை எடுத்து வையுங்கள்!” என்று சொல்லிக் கொண்டே எழுந்தான் மாணிக்கம். 

ஓட்டல்காரர் அந்தக் கடிதத்தை இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டினார். அவர் அவனைத் தொடர்ந்து வந்து வழி அனுப்புவதற்குள் மாணிக்கம் விரைவாக வெளியே வந்தான். 

“சாலையின் இரு பக்கங்களிலும் அவன் பார்த்துவிட்டு, காரை நோக்கி நடந்தான். காரில் ஏறியதும் அவனுக்குச் சிரிப்பு வந்தது. பாதிக் கடிதத்தை ஓட்டல்காரரின் கையில் கொடுத்தது. பட்டாசுக் கடையில் தீ வைத்ததைப் போன்ற நிகழ்ச்சிதான் என்பதை அவன் அறிவான். அது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. அடுத்தபடியாகச் சங்கர்லால் என்ன செய்வார் என்று சிந்தனை செய்து பார்த்தான்; அவனுக்கு ஒன்றும் சரியாகத் தோன்றவில்லை. காரைக் கிளப்பினான். 

போகும் போது அவன் தேனீ ஓட்டலின் பக்கமாகக் ஓட்டினான். தங்கத்துரையைப் பார்த்து விட்டு வரும்படி சங்கர்லால் சொல்லியிருந்தது அவன் நினைவுக்கு வந்தது. 

தங்கத்துரை தூங்கிக் கொண்டிருந்தார். மாணிக்கம் கதவைத் தட்டியதும், தூக்கக் கலக்கத்துடனே எழுந்து வந்து கதவைத் திறந்தார் அவர். 

“என்ன தூங்கிக் கொண்டிருந்தீர்களா?” என்று கேட்டுக் கொண்டே நாற்காலியில் உட்கார்ந்தான் மாணிக்கம். 

“வேலை ஒன்றும் இல்லாத போது தன்னால் தூக்கம் வருகிறது. இப்போது தூங்கிவிட்டால் இரவுப் பொழுது தூக்கம் இல்லாவிட்டாலும் சமாளித்துவிடலாம்!” என்றார் தங்கத்துரை. 

“முகத்தைக் கழுவிக் கொண்டு புறப்படுங்கள். அண்ணன் உங்களை அழைத்து வரச் சொன்னார்கள்” என்றான் மாணிக்கம்!

“தொலைபேசியில் அழைப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நேரம் தான் ஓடிக்கொண்டிருந்தது. அப்படியே தூங்கிவிட்டேன்!” என்று சொல்லிக் கொண்டே தங்கத்துரை குளிக்கும் அறைக்குச் சென்றார். முகத்தை அலம்பிக் கொண்டு, நீல வண்ணக் கால் சட்டையும், கறுப்பு நடையன்களும் அணிந்து கொண்டு புறப்பட்டார். 

காரில் மாணிக்கமும் தங்கத்துரையும் முல்லைவனத் தோட்ட பங்களாவை நோக்கிச் சென்றார்கள். 

45

இருட்டி விட்டது.

இருண்டதுமே மனிதன் அச்சம் கொள்ளுவதில்லை. நேரம் செல்ல செல்லத்தான் மனிதன் தூங்க வேண்டுமே என்று துன்பம் கொள்கிறான். அவன் தூங்க வேண்டாம் என்று எண்ணினாலும் தூக்கம் அவனைச் சும்மாவிடுவதில்லை. ஆகையால், வீட்டிற்குள் பதுங்கிவிடுகிறான். ஆனால் – 

மற்றவர்கள் நிம்மதியாகத் தூங்கும் அந்த வேளையில் தமது வேலைகளை சாதித்துக் கொள்ளும் மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள்தாம் மற்றவர்களை ஏமாற்ற வேண்டும் என்று எண்ணுபவர்கள். தாம் என்ன செய்கிறோம் என்பது மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று எண்ணுபவர்கள். இப்படிப்பட்டவர்களில் ஒருவர் எஸ்டேட் மானேஜர்! 

அவர் கோட்டானைப் போல் விழித்துக் கொண்டு காரில் உட்கார்ந்திருந்தார். காரின் பின் சீட்டில் அவரைத் தவிர வேறு எவரும் இல்லை. முன் சீட்டில் காரோட்டியைத் தவிர வேறு எவரும் இல்லை. கார் ஓடிக் கொண்டிருந்தது. 

எஸ்டேட் மானேஜர் அண்ணாமலையின் முகத்தில் உறுதி பாய்ந்தது. 

கார் சுடர்மணியின் இல்லத்திற்குச் சிறிது தொலைவில் நின்றது. 

காரோட்டியைப் பார்த்துத் தலையை ஆட்டினார் எஸ்டேட் மானேஜர், உடனே காரோட்டி விளக்குகளை அணைத்துவிட்டுக் கீழே இறங்கினான். மெல்ல நடந்து சுடர்மணியின் வீட்டை நோக்கி நடந்தான். சில நிமிடங்கள் கழித்து அவன் சுடர்மணியுடன் காரை நோக்கி நடந்து வந்தான். 

சுடர்மணி காருக்கு அருகில் வந்ததும், காரோட்டி இரண்டாவது கதவைத் திறந்தான். சுடர்மணி வியப்புடன் பார்த்தான். உள்ளே உட்கார்ந்திருந்த எஸ்டேட் மானேஜர், “உள்ளே ஏறி உட்காரு சுடர்மணி. உனக்கு நிறைய வேலை இருக்கிறது. நாம் இன்று பல இடங்களுக்குப் போக வேண்டும்” என்றார். 

சுடர்மணி தயங்கிக் கொண்டே ஏறி உட்கார்ந்தான். 

கார் கிளம்பியது. கார் கிளம்பிச் சிறிது தூரம் ஓடியதும், எஸ்டேட் மானேஜர் சொன்னார்: சுடர்மணி! உன்னைப் போல் ஓர் அதிர்ஷ்டக்காரனை நான் பார்த்ததில்லை!” 

சுடர்மணி ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தான். 

எஸ்டேட் மானேஜர் மேலும் சொன்னார்; நீ விரைவில் பெரும் பணக்காரனாக ஆகப் போகிறாய்! புதையல் இருக்குமிடத்தைப் பற்றிய சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன. உன் தந்தை எழுதிய கடிதத்தின் இரு பகுதிகளும் கிடைத்து விட்டன. அவற்றை ஒன்று சேர்த்துப் படித்துப் பார்த்தேன். இருக்குமிடம் எது என்பது தெரிந்துவிட்டது. ஆனாலும் அதை உன் உதவியில்லாமல் எடுக்க இயலாது. வீடுதான் எது என்பது தெளிவாகத் தெரியவில்லை. வழக்கறிஞரின் வீடாகத் தான் இருக்க வேண்டும் என்று எண்ணினாய். வழக்கறிஞர் தாண்டவன் ஊருக்குப் போய்விட்டார். நீ இப்போது தாராளமாக அந்த வீட்டுக்குப் போய்ப் புதையலைக் கிளப்பலாம். புதையலைச் கிளப்பியதும் மின்பொறி விளக்கால் சைகை காட்டு, உடனே நான் வருகிறேன்!” 

சுடர்மணி ஒன்றும் பேசாமல் சிந்தனையில் ஆழ்ந்தான், 

கார் வழக்கறிஞரின் வீட்டுக்குச் சிறிது தொலைவில் நின்றது. எஸ்டேட் மானேஜர் அவன் காதோடு காதாக ஏதோ சொல்லிவிட்டு, மின்பொறி விளக்கை அவனிடம் கொடுத்தார். அத்துடன் கூர்மையான ஓர் இரும்புத் துண்டையும் அவனிடம் கொடுத்தார். 

சுடர்மணி அதை வாங்கிய போது அவன் கைகள் ஏனோ நடுங்கின. 

உண்மையாகவே இந்தத் தடவைப் புதையலைக் கிளப்பப் போகிறோம் என்ற அச்சத்தினாலோ என்னமோ தெரியவில்லை. 

அவன் மெல்ல நடந்தான். வழக்கறிஞரின் வீட்டின் பின் பக்கம் சென்றான். புறக்கடையின் பக்கமாக இருந்த குழாயைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறினான். ஒரு சில நிமிடங்களில் மாடி மேல் குதித்தான், மாடியிலிருந்து அவன் கீழே சென்ற போது ஒரே இருட்டாக இருந்தது. 

அவன் கூடத்தில் சென்ற போது கூட விளக்கைப் போடவில்லை. மெல்ல நகர்ந்து சென்று தூங்கும் அறையை அடைந்தான். தூங்கும் அறையின் கதவுகள் மூடியிருந்தன. 

சுடர்மணி சுதவுகளைத் தள்ளினான். இரு சுதவுகளும் திறந்து கொண்டன. 

சதவுக்குப் பக்கத்தில் சுவரில் மின்சார விளக்குப் பொத்தான் இருக்குமிடத்தை அறிந்தவன் போல் கொஞ்சம் கூடத் தடுமாறாமல் விளக்கைப் போட்டான். 

அந்த அறையில் பளிச்சென்று விளக்கு வெளிச்சம் பரவியது. உள்ளே –

கட்டிலின் மீது சாய்ந்து வசதியாகப் படுத்துக் கொண்டு மெல்லச் சிரித்தபடி பார்த்தான் சவரிமுத்து! 

சுடர்மணி கண்களை உருட்டிப் பார்த்தான். அவனால் நம்பவே முடியவில்லை. அவன் எதிரே படுத்திருந்தவன் சவரி முத்தேதான்! 

சவரிமுத்து சுடர்மணியைக் கண்டதும் வியப்படைந்தவனைப் போல் காணப்படலில்லை. இப்படி அப்படி அவன் அசையலில்லை. அவன் உதடுகள் மட்டும் அசைந்தன. 

“சுடர்மணி வியப்படையாதே! வந்த வேலை ஆகட்டும்!” என்றான் அவன். 

சவரிமுத்து சிரித்துக் கொண்டே சுடர்மணியைப் பார்த்தான். “சுடர்மணி! என்னை ஏமாற்றிவிடலாம் என்று நீயும் எஸ்டேட் மானேஜரும் திட்டமிட்டிருந்தால், அது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போது உணர்ந்து கொள்ளுங்கள்! இப்போது நீ கூச்சல் போட்டால் இதே இடத்தில் உன்னைத் தொலைத்து விடுவேன். புதையலைக் கிளப்ப நீ வந்திருக்கிறாய். எந்த இடத்தில் புதையல் இருக்கிறதோ, அந்த இடத்தைப் பெயர்த்து புதையலைக் கிளப்பு. வீணாக நேரத்தை ஓட்டாதே!” என்றான். 

சுடர்மணி சொன்னான்; “புதையல் இருக்குமிடத்தை நான் காட்டுவதாகச் சொன்னதும், வேறு ஏதோ ஒரு வீட்டை அல்லவா நீ காண்பித்தாய்? நீ என்னை ஏமாற்றிவிட்டாய் என்பது இப்போது தான் புரிகிறது. முன்பு நீ என்னை ஏமாற்றிவிட்டு, இப்போது எனக்கு முன் இந்த இடத்தில் வந்து உட்கார்ந்திருக்கிறாய். உன் செய்கை வேடிக்கையாகத்தான் இருக்கிறது. நீயே புதையலை எடுத்துக் கொண்டு ஓடிவிடுவது தானே?” 

“கடர்மணி! உன் தந்தையும் நானும் நகைகளை மறைத்து வைக்க ஒரு வழி செய்தோம். உன் தந்தை இறந்து விட்டார். இப்போது, உன் தந்தைக்குப் பின் புதையலில் பாதியை உனக்குத் தருவதென்று முடிவு கட்டிவிட்டேன். புதையலை வெளியே எடு. இருவரும் இங்கேயே பங்கு போட்டுக் கொண்டு பறந்துவிடலாம்!” என்றான் சவரிமுத்து. 

சுடர்மணிக்கு வியப்பாக இருந்தது. ஒரு பக்கம் எஸ்டேட் மானேஜர், மற்றொரு பக்கம் சவரிமுத்து! 

சவரிமுத்துவை நம்புவதில் பயனில்லை என்று எண்ணினான் சுடர்மணி. சிறையிலிருந்து தப்பி வந்திருக்கும் ஒரு கைதியை நம்புவதா? போலீஸ் துரத்திக் கொண்டிருக்கும் இந்த மனிதனைப் போசில் அல்லவா பிடித்துத் தர வேண்டும்? ஆனால், சுடர்மணி ஒன்றும் சொல்லவில்லை. ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டு, அதன் மேல் ஏறி நின்று சன்னலின் மேல் சுவரைப் பெயர்க்க ஆரம்பித்தான், 

சுண்ணாம்பும் சிமெண்டும் எளிதில் பெயர்ந்து விழுந்தன.

சவரிமுத்து கட்டிலின் மீது உட்கார்ந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தான், 

சிறிது நேரத்தில், தகர டப்பா தெரித்தது. 

புதையலைக் கண்டதும் சுடர்மணியின் உடல் அச்சத்தால் நடுங்கியது. உடல் வேர்த்தது. கையிலிருந்த இரும்புத் துண்டைக் கீழே போட்டு விட்டு, அந்தத் தகர டப்பாவைக் கீழே இறக்கினான்.

சவரிமுத்து எழுந்து நின்றான். “சுடர்மணி! அதைத் திறக்காதே! இப்படித் தூர வந்து நில். நானே திறக்கிறேன்” என்றான். 

சுடர்மணி கொஞ்சம் தள்ளி நின்றான். சவரிமுத்து புதையலைத் திறந்து பார்க்க நகர்ந்தான், 

அப்போது – 

“நில்! எவரும் அந்த டப்பாவைத் திறந்து பார்க்சுப் போவதில்லை!” 

குரல் ஒன்று அதிர்ந்தது. சவரிமுத்துவும் சுடர்மணியும் திரும்பிப் பார்த்தார்கள். 

எஸ்டேட் மானேஜர் சிங்கத்தைப் போல் நின்றிருந்தார் வாயிற்படியின் அருகில், அவருக்கு முன், நீட்டிய துப்பாக்கிகளுடன் இரண்டு முரடர்கள் வாயிற்படியில் இரு பக்கங்களிலும் நின்றிருந்தார்கள். 

சுடர்மணியின் உடல் முழுவதும் அப்படியே ஆடியது! 

“சுடர்மணி புதையலை எடுத்ததும் மின்பொறி விளக்கினால் சைகை காட்டும்படி சொன்னேன் அல்லவா? எவ்வளவு நேரம் நான் வெளியே காத்திருப்பது? நீயும் சவரிமுத்துவும் புதையலை தட்டிக் கொண்டு போய்விடலாம் என்று திட்டமிட்டு விட்டீர்களா? உங்கள் திட்டம் பாழாகிவிட்டது. இப்போது நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். 

புதையலை நீங்கள் இருவரும் எடுத்துப் போகப் போவதில்லை. உங்கள் இருவரையும் கொண்டு போய் ஓர் ஆற்றில் தள்ளிவிடப் போகிறேன். எப்படிப்பட்ட ஆறு தெரியுமா? நீர்ச்சுழல்கள் நிறைந்த ஆறு. அந்த  ஆற்றிலே, உங்கள் இடுப்பில் ஒரு பெரிய பாறாங்கல்லைக் கட்டி தள்ளிவிடப் போகிறேன். நீங்கள் இருவரும் இறந்த பிறகுகூட மேலே வரமுடியாது!” என்றார் எஸ்டேட் மானேஜர். 

சுடர்மணி விழிப்புடன் பார்த்தான். இப்படித்தான் தன் வாழ்வு முடியும் என்று அவன் அறிந்திருந்தால், புதையல் இருக்கும் பக்கம் தலையைக் கூட வைத்துப் படுத்திருக்கமாட்டான். குறுக்கு வழியில் பணம் திரட்டுபவர்கள் எப்போதுமே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் போக வேண்டும் என்பதை அவன் இதுவரை அறியவில்லை! ஆனால் – 

சவரிமுத்து எஸ்டேட் மானேஜரின் மிரட்டலுக்கு அஞ்சவில்லை! அவன் சிரித்துக் கொண்டே, “ஐயா! ஒரு வேண்டுகோள்!” என்றான். 

“என்ன?” என்றார் எஸ்டேட் மானேஜர். 

“உங்களுடைய திறமைக்கும் புத்திசாலித் தனத்துக்கும் என் பாராட்டுகள்! திறமை இல்லாவிட்டால் எஸ்டேட் மானேஜராக நீங்கள் எப்படி இருக்க முடியும்! நான் கோயிலிலிருந்து கொண்டு வந்த இந்த நகைகளை விற்று என்னென்னமோ செய்ய வேண்டும் என்று கோட்டை கட்டினேன். அதற்காக நான் ஓலமிடப் போவதில்லை. நான் போகுமுன், சுடைசி முறையாக இந்த நகைகளை ஒரு தடவை பார்க்க அனுமதி வேண்டும்!” 

எஸ்டேட் மானேஜரின் முகத்தில் மென்சிரிப்புப் படர்ந்தது. சாகப் போகிறவனின் கடைசி ஆவலை நிறைவேற்றி வைப்பதால் ஒன்றும் கெட்டு விடப் போவதில்லை என்று எண்ணினார். அவருக்கே அந்த நகைகளை உடனே பார்க்க வேண்டும் போல் தோன்றியது. 

“சவரிமுத்து! சரியாக மூன்று நிமிடங்கள் தருகிறேன் நகைகளைத் திறந்து பார்த்துவிட்டுப் புறப்படு!” என்றார் எஸ்டேட் மானேஜர். 

சவரிமுத்து ஓர் அடி முன்னால் சென்றான். எதிரே கிடந்த தகர டப்பாவைத் திறந்தான் உள்ளேயிருந்த நகைகளை அப்படியே தரையில் கீழே கொட்டினான். 

கல்லும் மணலும் கலந்து நகைகளும் விழுந்தன. 

எஸ்டேட் மானேஜரின் முகத்திலும் சுடர்மணியின் முகத்திலும் வியப்புத் தோன்றியது. எவ்வளவு நகைகள் என்று எண்ணினார்கள் அவர்கள் இருவரும்! 

சவரிமுத்து கீழே குனிந்து அந்த நகைகளை எடுத்தான். ஒவ்வொன்றாகப் பார்த்தான். அவற்றைத் துணியில் துடைத்து விளக்கின் ஒளியில் பார்த்துவிட்டு, நிமிர்ந்து நின்று சிரித்தான், அவனுடைய சிரிப்பொலி இந்த வீட்டையே தூக்கிக் கொண்டு போகும் போல் இருந்தது! 

“என்ன சவரிமுத்து! ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டார் எஸ்டேட் மானேஜர். 

“உன்னைப் போன்ற ஒரு முட்டாளை நான் பார்த்ததே இல்லை. இந்த நகைகளை சரியாகப் பார். நான் கொல்லத்துக்காரனிடம் கொடுத்த நகைகள் இவையல்ல! இங்கே கிடப்பவை அவ்வளவும் போலி நகைகள்!” என்று சொல்லிவிட்டு அந்தத் தெரு முழுவதுமே கேட்கும்படி உரக்கச் சிரித்தான் சவரிமுத்து, 

எஸ்டேட் மானேஜரின் முகம் சுருங்கிவிட்டது. அவர் ஓடிவந்து கீழே கிடந்த நகைகளைப் பார்த்தார். எவ்வளவோ வைர நகைகளைப் பார்த்துப் பழக்கப்பட்ட அவருடைய கண்கள், எளிதில் அந்த நகைகளின் தரத்தைக் கண்டுபிடித்து விட்டன! 

“உன்னுடைய வேலையா?” என்று சவரிமுத்தைப் பார்த்ததும் கேட்டார் எஸ்டேட் மானேஜர். 

சவரிமுத்து சிரித்தான். 

“புதையலைக் கிளப்ப வேண்டும் என்ற ஒரே எண்ணம் உன் மண்டையில் தலை தூக்கி நிற்பதால், எதையும் சிந்தித்துப் பார்க்கும் தன்மையே போய்விட்டதா என்ன? உண்மைப் புதையலை நான் கிளப்பிவிட்டுப் போலி நகைகளைக் கொண்டு வந்து வைத்தால், இந்த இடத்தில் நான் ஏன் காத்து நிற்க வேண்டும்? நன்றாகச் சிந்தித்துப் பார்! உண்மையான புதையல் இங்கே இல்லை என்பது தெளிவாகி விட்டது!” என்றார். 

“உண்மையான புதையல் எங்கே இருக்கிறது?” என்று கேட்டார் எஸ்டேட் மானேஜர். 

“அதை எப்படி நான் அவ்வளவு எளிதில் சொல்ல முடியும்? நாம் இருவரும் ஒரு முடிவுக்கு வரலாம். புதையலைக் கண்டுபிடிக்க நான் சொல்லும் வழியைக் கடைப் பிடித்தால் எளிதில் எல்லாம் முடிந்து விடும். நாம் புதையலைக் கண்டு பிடிக்கும் வரையில் சுடர்மணியை வெளியே விடக் கூடாது!” என்றான் சவரிமுத்து, 

“சுடர்மணியை தான் கவனித்துக் கொள்கிறேன். புதையலைக் கிளப்பும் வரையில் அவனை வெளியே விடவில்லை!” என்றார் எஸ்டேட் மானேஜர். 

*புதையலைக் கிளப்பியதும், அதில் பாதியை என்னிடம் கொடுத்துவிட வேண்டும்” என்றான் சவரிமுத்து. 

“அது தெரிந்தது தானே? நகைகளுக்குப் பதிலாகப் பணமாக வேண்டுமானாலும் தருகிறேன்!” என்றார் எஸ்டேட் மானேஜர், 

சவரிமுத்து சிரித்தான். அவன் சொன்னான், “அண்ணாமலை! என்னை நீ ஏமாற்ற முடியாது! அதைக் கடைசி வரையில் நினைலில் வைத்துக் கொள்!” 

எஸ்டேட் மானேஜர் பேசாமல் நின்றார். 

“நான் சொல்லுவதைக் கேட்டுக் கொள்! இந்த இடத்தை எப்படிக் கண்டுபிடித்தாய் என்று நான் சொல்லட்டுமா? கொல்லத்துக்காரன் எனக்கு எழுதிய கடிதம் எப்படியோ உன்னிடம் கிடைத்திருக்கிறது. அந்தக் கடிதம் முழுதும் கிடைத்திருக்காது. முதல் பாதியும், அதன் பின்னால் மற்றொரு பாதியும் கிடைத்திருக்கும். இரண்டையும் வைத்துக் கொண்டு, இந்தப் போலி நகைகளைக் கண்டுபிடித்தாய்! அந்தக் கடிதம் மட்டும் இருந்தால் பயனில்லை!” என்றான் சவரிமுத்து. 

“வேறு என்ன வேண்டும்?” என்று கேட்டார் எஸ்டேட் மானேஜர், 

சவரிமுத்து மெல்ல நடந்து எஸ்டேட் மானேஜரின் பக்கத்தில் சென்றான். “இப்படித் தனியாக வா!” என்று சொல்லி அவரை அழைத்துச் சென்றான். கூடத்திற்கு வந்ததும், “படம் வேண்டுமே?” என்றான். 

“என்ன படம்“ என்றார் எஸ்டேட் மானேஜர், 

“கையால் வரைந்த இயற்கைக் காட்சியைக் கொண்ட படம் அது. கடிதத்தைக் கொடுத்தவனையே படத்தையும் கொடுக்கும்படி கேள்!” என்றான். 

“எஸ்டேட் மானேஜர் சிறிது நேரம் சிந்தனை செய்தார். பிறகு, “கடிதத்தை நான் யாரிடமிருந்து வாங்கினேன் என்பது கூடத் தெரியுமா?” என்று கேட்டார்.” 

“எனக்கு ஒன்றும் தெரியாது! ஆனால் ஒன்று மட்டும் உறுதி. கடிதம் இல்லாமல் புதையலைக் கிளப்ப இவ்வளவு திட்டமாக நீ இறங்க மாட்டாய் என்பது தெரியும். படத்தை எப்படிக் கொண்டுவரப் போகிறாய் என்பது எனக்குத் தெரியாது!” என்று சொல்லிவிட்டு வெளியே நடந்தான் சவரிமுத்து. 

அவன் பின்னாலேயே சென்றார் எஸ்டேட் மானேஜர். ‘சவரிமுத்து! மீண்டும் உன்னை எப்படிச் சந்திப்பது?” என்று கேட்டார். 

“என்னைத் தேட வேண்டாம். நானே நாளைக்கோ அல்லது இன்னும் இரண்டு நாட்கள் கழித்தோ வந்து சந்திக்கிறேன். அதற்குள் படம் கிடைக்கிறதா என்று முயற்சி செய்து எப்படியாவது அதைக் கொண்டு வந்து விடு!” என்று சொல்லிவிட்டு இருட்டில் நடந்து சென்று மறைந்து விட்டான் சவரிமுத்து. 

சிறிது நேரத்தில், எஸ்டேட் மானேஜரும் அவருடைய ஆட்களும் சுடர்மணியை அழைத்துக் கொண்டு வழக்கறிஞரின் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். 

மற்றவர்கள் காரை நோக்கி நடந்ததும், எஸ்டேட் மானேஜர் மட்டும் பின்னால் நின்று. விளக்குகள் அணைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதைப் பார்த்துவிட்டு, வீட்டையும் பூட்டிக் கொண்டு நடந்நதார். 

அவருடைய கண்கள் –

எல்லாப் பக்கங்களிலும் கவனித்துக் கொண்டேயிருந்தன. ஆனால், அவருடைய கண்களுக்கும் தெரியாமல் ஓர் உருவம் இருட்டில் மறைந்து ஒரு மூலையில் நின்றிருந்தது! எஸ்டேட் மானேஜர் காரை நோக்கி நடந்ததும், அந்த உருவம் இருளின் நிழலிலேயே பதுங்கிப் பதுங்கி வேறு பக்கமாக ஓடி மறைந்தது! 

அந்த உருவம் –

– தொடரும்…

– சங்கர்லால் வந்துவிட்டார்! (மர்ம நாவல்), சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *