வாழ்தலும் வரலாற்றில் வாழ்தலும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 6, 2026
பார்வையிட்டோர்: 56 
 
 

நம்ம எத்தனை நாள் வாழ்கிறோம் என்பது முக்கியம் இல்ல இந்த சரித்திரம் நம்ம பேரை சொல்லணும்

சீர் புறம் என்ற ஒரு சின்ன நகரம் இருந்தது அதில் மோகன் என்ற ஒரு சகோதரன் இருந்தான் நல்ல வசதிகள் உடைய ஒருவன் ஒருநாள் மோகன் செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தான். அருகில் அவன் மகன் அமர்ந்திருந்தான். மோகன் செய்தித்தாளை தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தான் அவன் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது

“உடனே அவன் மகன் என்ன நடந்தது ஏன் அப்பா அழுவுறீங்க என்று கேட்டான்”

அதற்கு மோகன் இது ஆனந்த கண்ணீர் பா என்னுடன் படித்த என் நண்பன் இன்றைக்கு இந்த செய்தித்தாளில் வந்திருக்கிறான். அவன் சிறு வயதில் நடிப்பில் மிகவும் ஆர்வம் உடையவனாக இருப்பான் மற்றும் பிச்சை எடுப்பவர்களுக்கும் அனாதை குழந்தைகளுக்கும் உணவு வாங்கி கொடுப்பான் இரண்டு பேரும் பள்ளி வரை ஒன்றாக படித்தோம் கல்லூரி படிப்பின் போது பிரிந்து விட்டோம். அவன் கல்லூரி முடித்துவிட்டு ஒரு children’s trust (NGO) வைத்து விட்டான்.

நான் படித்த படிப்பிற்கு வேலை பார்க்க ஆரம்பித்து விட்டேன் அவன் முழு நேரமாக அந்த trust ல் வேலை செய்வான் நேரம் கிடைக்கும்போது சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை தேடுவான் சில நேரங்களில் அனைத்து வேலைகளையும் தள்ளி வைத்துவிட்டு முழு நேரமும் நடிக்கும் வாய்ப்பை தேடுவான். சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறான்.

ஆனால் இன்றைக்கு உலகமே பார்க்கும் வகையில் கதாநாயகனாக நடித்திருக்கிறான் இன்றைக்கு செய்தித்தாளிலும் வந்திருக்கிறான். அவன் நடிப்பிற்கு தேசிய விருது பெற்றிருக்கிறான் எனக்கு இன்றைக்கு பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது பா இன்றைக்கு அவன் சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறான் நீயும் ஒன்று கற்றுக்கொள்.

“நம்ம எத்தனை நாள் வாழ்கிறோம் என்பது முக்கியம் இல்ல இந்த சரித்திரம் நம்ம பேரை சொல்லணும்” அது போல வாழனும் என்றான்.

– எழு (சிறுகதைகள்), மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com, மின்னூலாக்கம் – ஐஸ்வர்யா லெனின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *