எதிர்ப்பும் எதிர்பார்ப்பும்

எதிர்த்து வாழு!
ஒருவரையும் ஒருபோதும் எதிர்பார்த்து வாழாதே!
பட்டாலும் என்ற ஒரு சிறிய கிராமம் இருந்தது அது மிகவும் அழகான ஒரு கிராமம் அந்த கிராமத்தில் ஊர் தலைவர், எல்லா முறையும் ஒருவர் மட்டுமே நிற்பார் அவரை எதிர்த்து யாரும் போட்டியிட மாட்டார்கள், அவர் பெயர் காந்தா ராமன்.
ஊர் மக்கள் அனைவரையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டிருந்தார் அந்த கிராமத்தில் தேர்தல் காலம் நெருங்கத் தொடங்கினது மக்கள் யாரும் போட்டி போட முன்வரவில்லை மிகவும் அஞ்சினார்கள். அரசியல் ஆர்வம் உடையவர்கள் கூட இவருக்கு பயந்து இவருக்கு கீழே உள்ள பதவிகளுக்கு மட்டும் வார்டு நம்பர், பகுதி கவுன்சிலர் போன்ற பதவிகளுக்கு மட்டும் போட்டி போட்டு நின்றனர் யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு நிற்கவில்லை.
இந்த கவுன்சிலர், வார்டு நம்பர் பதவிக்கு கூட இவரை எதிர்பார்த்து வாழும் ஊர் மக்கள் மட்டும் தான் நின்றார்கள் தேர்தலில் மற்ற யாரும் நிற்கவில்லை.
சிறிது நாள் கழித்து ஊரில் ஒரு சின்ன சலசலப்பு என்னவென்றால் அதே கிராமத்தில் சஞ்சய் என்ற ஒரு வாலிபன் இளங்கலை பட்டம் படித்து முடித்தவன். அந்த வாலிபன் தலைவர் பதவிக்கு எதிர்த்து போட்டியிட போவதாக சலசலப்பு, பிறகு அதுவே உண்மையாக மாறியது இப்பொழுது காந்தா ராமனுக்கு ஒரே ஆச்சரியம் மற்றும் ஒரே கோபம்.
காந்தா ராமன் நேரடியாக சஞ்சய் வீட்டிற்கே சென்று பேசிப் பார்த்தார். சஞ்சய் விட்டுக் கொடுக்கவே இல்லை நான் எதிர்த்து நின்றே தீருவேன் என்று பிடிவாதமாக இருந்தான் காந்தாராமன் தம்பி நீ என்னை எதிர்தே நில் என்று சொல்லிவிட்டு சென்றான். ஆனால், தன் மனதில் சின்ன தம்பி இவனுக்கு என்ன தெரியப்போகுது இவன் எப்படி என்னை எதிர்த்து ஜெயிக்க முடியும் என்று நினைத்துக் கொண்டே போனான்.
தேர்தல் நடந்தது தேர்தல் முடிவுகள் வந்தது அதிசயமாக சஞ்சய் அமோக வெற்றி பெற்றான் காந்த ராமனுக்கு ஒரே குழப்பம் ஒரே எரிச்சல் யாரிடமும் பேசாமல் தன் வீட்டிற்கே சென்று விட்டார். பதவியேற்பு நிகழ்ச்சி வந்தது சஞ்சய் ஊர் மக்கள் முன்னால் பதவி ஏற்றுக்கொண்டான் சிறிது நேரம் மக்களுடன் மைக்கில் பேசினான். நன்றி என்னை தேர்ந்தெடுத்ததற்கு நான் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்
எதிர்த்து வாழ வேண்டும் ஒருவனையும் எதிர்பார்த்து வாழக் கூடாது இந்த வார்டு நம்பர், கவுன்சிலர் எல்லாம் ஒருவரை எதிர்பார்த்து போட்டியிட்டார்கள் அது தவறு எப்பொழுதும் “எதிர்த்து வாழ வேண்டும் ஒருவரையும் எதிர்பார்த்து வாழக் கூடாது” என்று சொல்லி அடுத்த வேலையை பார்க்க தொடங்கினான்.
– எழு (சிறுகதைகள்), மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com, மின்னூலாக்கம் – ஐஸ்வர்யா லெனின்.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: March 6, 2026
பார்வையிட்டோர்: 53