ஆணியும் ஏணியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 6, 2026
பார்வையிட்டோர்: 53 
 
 

நமக்கு ஏற்படும் தோல்வியை ஆணியாய் நினைத்தால் உருத்தும் ஏணியாய் நினைத்தால் உயர்த்தும்.

சஞ்சனா என்ற ஒரு மகள் இருந்தால் அவள் சதுரங்க போட்டி விளையாடும் ஆர்வமுடைய ஒரு மகள். அவள் பள்ளியில் ஒரு நாள் சதுரங்க போட்டி நடைபெற்றது

அதில் அவள் பங்கு பெற்று விளையாடத் தொடங்கினால் முதல் சுற்று முடிந்தது அதில் சஞ்சனா படுதோல்வியை சந்தித்தால் அவளுக்கு ஒரே மன உளைச்சல் அடுத்து என்ன செய்வது என்று அவளுக்கு தெரியவில்லை.

இன்னொரு முறை விளையாட ஒரு வாய்ப்பு இருக்கிறது ஆனால் அந்த சுற்று நாளை நடைபெறும், இவள் அதிலும் தோற்றுவிட்டால் கால் இறுதி போட்டிக்கு முன்னேற வாய்ப்பு கிடையாது என்று தன் மனதில் அந்த தோல்வியையே நினைத்துக்கொண்டு தன் வீட்டிற்கு சென்றாள்.

அதையே நினைத்து அவள் சோகமாக இருந்தாள். இவள் சோகமாக இருப்பதை அவள் தந்தை பார்த்து ஏன் என்ன ஆனது, ஏன் சோகமாய் இருக்கிறாய் என்று கேட்டார்.

அதற்கு இவள் நடந்தவற்றை எல்லாம் கூறி தன் மனக்கஷ்டத்தை தன் தந்தையிடம் பகிர்ந்து கொண்டாள். அதற்கு அவள் தந்தை சஞ்சனாவை ஊக்கப்படுத்தி, என்னுடன் நீ சதுரங்க போட்டி விளையாட வா என்று அழைத்தார்.

அவள் அரை மனதுடன் தன் தந்தையுடன் விளையாட சம்மதித்தாள்

அவள் தன் தந்தைக்கு இந்த சதுரங்கப் போட்டி பெரிய அளவில் விளையாட தெரியாது ஏதோ ஒரு அளவிற்கு விளையாடுவார் என்று எண்ணி விளையாட தொடங்கினாள்.

தந்தை அவளைப் பார்த்து நீ என்னுடன் இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடு தோற்றாலும் பரவாயில்லை தொடர்ந்து விளையாடு இன்றைக்குள் எத்தனை போட்டி நீ என்னுடன் விளையாடி தோற்றாலும் பரவாயில்லை கண்டிப்பாக உன்னால் ஜெயிக்க முடியும் அதற்குப் பிறகு நான் உனக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்கப் போகிறேன் என்று கூறினார்.

அவள் சரி என்று தன் தகப்பனுடன் விளையாட தொடங்கினாள்.

முதல் போட்டியில் தோற்று விட்டாள் இரண்டாவது போட்டியில் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்று எண்ணி விளையாட தொடங்கினாள் அதிலும் தோற்றுவிட்டாள் மூன்றாவது போட்டி தொடங்கினது சஞ்சனா தன் மனதில் இவர் இந்த அளவிற்கு எப்படி விளையாடுகிறார் இவர் இந்த அளவில் விளையாட மாட்டாரே என்று எண்ணி சற்று குழம்பி ஒரு தீர்மானம் எடுத்தால் இந்த முறை கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்று எண்ணி விளையாடினாள் அதிலும் தோல்வி

நாலாவது முறை விளையாடும் போது சஞ்சனா தன் மனதில் தோன்றிய புதிய திறன்களை வைத்து விளையாடத் தொடங்கினாள் அதிலும் தோல்வி ஐந்தாவது முறையும் தோல்வி ஆராவது முறையும் தோல்வி ஒவ்வொரு தோல்வியும் நினைத்து நினைத்து இந்த முறை ஜெயிக்க வேண்டும் என்று எண்ணி ஏழாவது முறை வென்று விட்டாள்.

தன் தந்தை அவளைப் பார்த்து இன்னும் ஒரு முறை விளையாடலாம் வா என்று அழைத்தார் அதிலும் வெற்றி பெற்றாள்.

அதன் பிறகு தந்தை சஞ்சனாவை பார்த்து நான் என் வாலிப வயதில் இந்த போட்டியில் ஆர்வம் உடையவனாக சுற்றி திரிந்தேன் கடுமையாக விளையாடுவேன் இந்த சதுரங்கப் போட்டியில் நான் கடுமையாக விளையாடி மாநில அளவில் சதுரங்க விளையாட்டு வீரனாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். மாநில விளையாட்டு வீரனாகவும் மாறினேன் என்றார்.

சஞ்சனாவுக்கு ஒரே ஆச்சரியம் ஏனென்றால் ஒரு மாநில விளையாட்டு வீரனையே நான் தோற்கடித்து விட்டேன் என்று,

தந்தை சஞ்சனாவை பார்த்து நீ பள்ளியை விட்டு வந்தவுடன் மன கஷ்டமாக இருப்பதை பார்த்துவிட்டு உனக்கு நான் ஆறுதல் சொல்லிவிட்டு போயிருக்க முடியும் ஆனால் ஏன் இவ்வளவு முறை விளையாட வைத்தேன் தெரியுமா?

நீ உனக்கு ஏற்பட்ட தோல்வியை நீ ஆணியாக நினைத்தால் உருத்தி கொண்டே இருக்கும் ஆனால் ஏணியாக நினைத்தால் உயர்த்தும். நீ என்னுடன் இத்தனை முறை தோற்றும் அந்த தோல்வியை ஆணியாக எண்ணாமல் ஏணியாக எண்ணியதால் தான் உன்னால் ஜெயிக்க முடிந்தது உயரவும் முடிந்தது மாநில அளவில் விளையாடிய என்னையே உன்னால் ஜெயிக்க முடிகிறது நாளைக்கு நடக்கும் போட்டியில் நீ கண்டிப்பாக ஜெயிப்பாய் போ என்றார்.

சஞ்சனா சரி என்று சொல்லி தனக்குள் ஒரு நம்பிக்கையை வரவைத்து கொண்டால் நாளைக்கு தன்னால் கண்டிப்பாக ஜெயிக்க முடியும் என்று எண்ணி சென்றாள் ஒருவேளை தோற்றாலும் பரவாயில்லை முயற்சித்தால் அடுத்த போட்டி வைத்தால் அதில் கண்டிப்பாக என்னால் ஜெயிக்க முடியும் என்று எண்ணினால்.

அடுத்த நாள் வந்தது போட்டி தொடங்கியது சஞ்சனா சுலபமாக ஜெயித்தால் அதன் பிறகு அடுத்தடுத்து ஒவ்வொரு படியாக ஜெயித்து இறுதிப்போட்டியையும் வென்று விட்டால். பிறகு அந்த மகிழ்ச்சியான செய்தியை தன் தகப்பனிடம் கூறினாள்.

அதற்கு அவள் தந்தை நான் சொன்னதை ஞாபகம் வைத்துக் கொள் உனக்கு ஏற்பட்ட தோல்வியை நீ ஆணியாக நினைத்தால் உன்னை உறுத்தும் ஆனால் ஏணியாக நினைத்தால் உன்னை உயர்த்தும். ஏற்படும் தோல்வியை ஏணியாக நினைத்து மேலே சென்று கொண்டே இரு வெற்றி உன்னை தேடி வந்து கொண்டே இருக்கும் என்று தன் மகளுக்கு சொல்லிக் கொடுத்தார்.

– எழு (சிறுகதைகள்), மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com, மின்னூலாக்கம் – ஐஸ்வர்யா லெனின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *