ஏமாந்தவனும் ஏமாற்றுபவனும்

உலகம் ஏமாந்தவன் சொன்னால் கேட்காது ஏமாற்றுபவன் சொன்னால் கேட்கும்.
சுரேஷ்குமார் என்ற ஒரு வாலிபன் ஒரு சிறிய கார் (showroom) காட்சியரையில் வேலை செய்து கொண்டிருந்தான். நேர்மையான ஒரு மகன் சிறிது காலம் அந்த கார் காட்சியரையில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனுக்கு தான் வேலை செய்யும் அந்த கார் கம்பெனியின் மேல், உத்தியோகத்திற்கு செல்ல வேண்டும் என்று ஓர் ஆசை இருந்தது. அதற்கான முயற்சிகளையும் அவன் எடுத்துக் கொண்டுதான் இருந்தான்.
ஒரு நாள் அவன் கம்பெனியில் வேலை பார்த்த வீரப்பன் என்பவர் சுரேஷை பார்த்து மேல் உத்தியோகத்திற்கு செல்லும் முயற்சியை எடுப்பதை நான் பார்த்து கொண்டிருக்கிறேன். நீ எனக்கு ஒரு மூன்று லட்சம் கொடு இதே கம்பெனியில் உன்னை விற்பனை நிர்வாகியாக (sales executive) மாற்றுகிறேன் என்றார்.
அதற்கு சுரேஷ் வீரப்பனிடம் உங்களால் அந்த அளவிற்கு என்னை எப்படி மாற்ற முடியும் என்று கேட்டான். அதற்கு வீரப்பன் அது உனக்கு எதற்கு உனக்கு இந்த பதவி வேண்டும் என்றால் நான் கேட்பதை கொடு. உன்னை நான் விற்பனை நிர்வாகியாக மாற்றுகிறேன் என்றான்.
அதற்கு சுரேஷ் சரி நீங்கள் ஆக வேண்டிய காரியங்களை பாருங்கள் நான் இரண்டு வாரத்திற்குள் பணம் தருகிறேன் என்றான் இரண்டு வாரம் கழித்து சுரேஷ் கடன் வாங்கி வீரப்பனுக்கு மூன்று லட்சம் கொடுத்தான் வீரப்பன், சில நாட்கள் காத்திரு நான் கண்டிப்பாக அந்த பதிவை வாங்கி கொடுக்கிறேன் என்றான்.
ஆனால் அந்த பதவி சுரேஷுக்கு கிடைக்கவே இல்லை. வீரப்பனிடம் போய் கேட்டான் அதற்கு அவன் சில காலம் பொறு என்று கோபமாக சொன்னான் சுரேஷ் மிகவும் பயந்துவிட்டான்.
மறுநாள் வீரப்பன் வேலைக்கு வரவில்லை அதன் பிறகு அவன் தொடர்ந்து வேலைக்கு வரவில்லை சுரேஷ் தொடர்பு கொண்டாலும் பதில் வரவில்லை தொலைபேசி எண்ணும் வேலை செய்யவில்லை சுரேஷ் பெரிய ஏமாற்றத்தை சந்தித்தான். பின்பு தான் வாங்கின கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைக்கத் தொடங்கினான் அப்படியே நாட்கள் சென்றது ஒரு நாள் சுரேஷ் தன் நண்பன் ரவி என்பவனை எதிர்பார்க்காத விதமாக ஒரு டீ கடையில் சந்தித்தான். இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டார்கள், சுரேஷை ரவியை பார்த்து இப்பொழுது நீ எங்கே வேலை செய்கிறாய் என்று கேட்டான் அதற்கு ரவி நானும் ஒரு கார் ஷோரூம் கம்பெனியில் தான் வேலை செய்கிறேன் எனக்கு என் கம்பெனி தலைவரின் உதவியாளர் சில காலத்தில் விற்பனை மேலாளர் பதவி வாங்கித் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார் என்றான்.
உடனே சுரேஷ் ஆச்சரியம் பட்டு, பணம் ஏதாவது கேட்டார்களா என்று கேட்டான் அதற்கு ரவி ஆமாம் ஐந்து லட்சம் கேட்டார்கள் இவ்வளவு பெரிய பதவிக்கு பணம் எல்லாம் ஒரு விஷயமா என்றான். உடனே சுரேஷ் நான் அந்த உதவியாளரை பார்க்க முடியுமா என்று கேட்டான் ரவி சரி வா என்று அழைத்துக் கொண்டு போய் காண்பித்தான் சுரேஷ் அது வீரப்பனாக இருக்குமோ என்று ஆர்வத்துடன் சென்றான். ஆனால் அது வீரப்பன் இல்லை வேறு ஒருவர்.
சுரேஷ் ரவியிடம் நானும் இப்படித்தான் கொடுத்து ஏமாந்து விட்டேன் நீயும் அப்படி செய்து ஏமாந்து விடாதே என்றான். அதற்கு ரவி கோபம் கொண்டு உனக்கு பொறாமை என்று சொல்லிவிட்டு சென்று விட்டான். ரவி 5 லட்சம் கடன் வாங்கி தன்னிடம் உள்ள பொருட்களை அடமானம் வைத்து பணத்தை அந்த உரிமையாளரிடம் கொடுத்து விட்டான் அந்த உதவியாளர் ரவியை பார்த்து அடுத்த வாரம் உனக்கு வேண்டிய அந்த பணி வரும் என்று சொல்லிவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு சென்று விட்டான்.
மறுநாளிலிருந்து அந்த உதவியாளர் வரவே இல்லை ரவிக்கு ஒரே படபடப்பு தொடர்பு கொள்ளவும் முடியவில்லை ரவி சென்று அந்த கார் கம்பெனி தலைவரிடம் உங்கள் உதவியாளர் ஏன் வரவே இல்லை என்றான். அதற்கு அந்த தலைவர் அவன் என் உதவியாளர் இல்லை ரவி, அவன் என் வீட்டு வேலைக்காரன் சும்மா உதவிக்கு இருக்கட்டும் என்று நான் என்னுடன் வைத்துக் கொண்டிருந்தேன் அவன் கடந்த வாரம் என்னிடம் வந்து நான் வெளியூருக்கு செல்கிறேன் என் சம்பளத்தை கொடுங்கள் என்று சொல்லி சம்பளத்தை பெற்றுக்கொண்டு சென்று விட்டான். நான் கொடுத்த கைபேசியை தான் அவன் உபயோகப்படுத்திக் கொண்டு இருந்தான். போகும்போது அந்த கைபேசியையும் கொடுத்துவிட்டு சென்று விட்டான். ஏன் என்ன ஆனது என்று சொல்லி அந்த கம்பெனி முதலாளி கேட்டார், ரவி அதற்கு எதுவும் சொல்லாமல் மனம் பாரம் தாங்க முடியாமல் யாரிடமும் சொல்லவும் முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை முயற்சி செய்து தற்கொலையும் செய்து கொண்டான்.
இந்த மரண செய்தியை சுரேஷ் கேள்விப்பட்டு கவலையுடன் மரணத்திற்கு வந்தான் சுற்றி இருப்பவர்களை என்ன எப்படி இது நடந்தது என்று சுரேஷ் கேட்டான். சுரேஷிடம், ரவிக்கு கடன் கொடுத்த இருவர்களும் அடகு வியாபாரியும் தனியாக வந்து, மூன்று வாரத்துக்கு முன்பு ரவி இவ்வளவு அடகு வைத்தான் இவ்வளவு கடன் வாங்கினான் இதற்கு நடுவில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இப்பொழுது தற்கொலை செய்து கொண்டான் என்றார்கள். அதைக் கேட்டு சுரேஷ் ஓரமாய் போய் அமர்ந்து தன் மனதில் “உலகம் ஏமாந்தவன் சொன்னால் கேட்காது ஏமாற்றுபவன் சொன்னால் கேட்கும்” நான் எவ்வளவோ சொன்னேனே லஞ்சம் யாருக்கும் கொடுத்து இப்படிப்பட்ட பதவி வாங்காதே ஏமாற்றுபவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்று என் பேச்சை அவன் கேட்காமல் இப்பொழுது தற்கொலை செய்து கொண்டானே என்று மன வருத்தத்துடன் சோகமாக இருந்தான்.
– எழு (சிறுகதைகள்), மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com, மின்னூலாக்கம் – ஐஸ்வர்யா லெனின்.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: March 6, 2026
பார்வையிட்டோர்: 50