காலமாற்றம்

ஒரு நாள் உன்னை நம்பாத மக்கள் அவர்கள் உங்களை எவ்வாறு சந்திக்கிறார்கள் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கும்.
ஒரு மனிதன் ஒரு கிராமத்தை நோக்கி தன் சொகுசு காரில் செல்கிறான்.
இப்பொழுது அந்த ஊர் கிராம மக்களுக்கு ஒரே ஆச்சரியம்
யார் இது. இந்த ஊரில் சொகுசு காரா? என்று.
நான்கு வருடத்துக்கு முன்பு அந்த கிராமத்தில் ஒரு வாலிபன் வசித்து வந்தான். அவன் அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளை. அவன் நன்றாக படித்து பள்ளி படிப்பு கல்லூரி படிப்பை முடித்தான். இப்பொழுது, அடுத்து அவன் என்ன செய்ய போகிறான் என்று வழக்கம் போல் எல்லாரும் கேட்க தொடங்கினார்கள். அந்த வாலிபனுக்கு, தான் ஒரு நடிகனாக வேண்டும் என்று ஒரு கனவு. அவன் பள்ளி பருவத்தில் கலைநிகழ்ச்சியில் நன்றாக நடித்து முதலிடம் பிடிப்பான். இப்பொழுது அவன் ஊர் மக்கள் அவனை பார்த்து கேட்கிறார்கள், என்ன செய்ய போகிறாய் என்று அதற்கு அவன் நான் சினிமா துறைக்கு முயற்சி செய்ய போகிறேன் நான் நடிகனாக போகிறேன் என்றான். ஊர் மக்கள் ஒரே சிரிப்பு ஒரே கேளி கிண்டல் அந்த வாலிபனுக்கு மிகவும் அவமானம் ஆகிவிட்டது. யாரும் தன்னை நம்பவில்லை என்று மனவருத்தமும் உண்டானது.பிறகு அவன் ஒரு தீர்மானம் எடுத்தான். இந்த ஊரில் இருந்தால் நம்மை கேளி, கிண்டல் மட்டும்தான் செய்வார்கள் யாரும் நம்மை ஊக்கப் படுத்த மாட்டார்கள் என்று எண்ணி, தன் தாய், தந்தையிடம் நான் படித்த படிப்பிற்கு சென்னையில் வேலை செய்ய போகிறேன் என்று கூறி விட்டு சென்னைக்கு வந்துவிட்டான். சென்னைக்கு வந்து, தான் படித்த படிப்பிற்குக்கான ஒரு சிறிய கம்பனியில் வேலைக்கு சேர்ந்தான். கூடவே சினிமா வாய்பையும் தேடி அலந்தான் அவ்வளவு சீக்கிரம் எந்த ஒரு சினிமா நபர்களிடமும் நெருங்க கூட முடியவில்லை. அநேக கஷ்டங்கள், பல சினிமா இயக்குனர்களின் அலுவலகத்திற்கு சென்று தான் பள்ளி பருவத்தில் நடித்த கானொலிகளை காண்பித்து இருக்கிறான். பெரியதாக யாரும் மதிக்கவில்லை. பல இயக்குனர்களின் உதவி இயக்குனர்களிடம் அறிமுகமாகி நன்றாக பழகி வாய்ப்புகளை கேட்டுக்கொண்டிருந்தான். ஒரு நாள் ஒரு பிரம்மாண்ட இயக்குனரின் உதவி இயக்குனர் அழைத்து இருந்தார். அடுத்த படம் எடுக்க தயாராகி விட்டார்கள். அந்த உதவி இயக்குனர் இவனை பார்த்து அடுத்த வாரம் தணிக்கை நடைபெறும், வந்து நடித்து காண்பித்து விட்டு போ. தேர்ந்தெடுத்தால் உன்னை அழைப்பார்கள் என்றார்.
அடுத்த வாரம் வந்தது. அந்த இயக்குனரின் அலுவலகத்தில் ஒரே கூட்டமாக இருந்தது. அந்த கூட்டத்தில் ஓர் புறா ஒன்று இறகில் அடிபட்டு கீழே விழுந்துகிடந்தது. அவன் போய் அந்த புறாவை எடுத்து மருந்து தடவி அந்த புறாவை பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டான். இப்பொழுது இயக்குனர் வருகிறார். இந்த வாலிபனை மட்டும் அழைத்து நீ தான் நான் நினைத்து கதாபாத்திரத்தின் சரியான ஆள் என்றார். அனைவருக்கும் ஓர் ஆச்சரியம். என்ன இது தணிக்கை நடக்கவே இல்லை அதுக்குள்ளவே எப்படி இந்த வாலிபனை தேர்ந்தெடுத்தார் என்று நினைத்தார்கள். உடனே இயக்குனர் என் படத்துக்கு துணை நடிகனாக ஒரு புறாக்களை பராமரிக்கும் கதாபாத்திரம் தேவைப்பட்டது. நான் மறைமுகமாக தணிக்கை வைத்தேன் ஒரு காயப்பட்ட புறாவை வைத்து, யாரும் அதை கண்டு கொள்ள கூட இல்லை. இந்த வாலிபன் மட்டும் தான் நான் மறைமுகமாக வைத்த தனிக்கையில் வெற்றி பெற்றான் என்றார். இப்பொழுது படம் எடுக்கப்பட்டு படம் வெளியானது அந்த படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு குறிப்பாக அந்த வாலிபன் நடித்த கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு. அந்த வெற்றியுடன் அவன் தன் கிராமத்திற்கு சொகுசு காரில் சென்றான். அவன் காரைத் திறந்து வெளியே வருகிறான் அனைவருக்கும் ஆச்சரியம் எல்லோரும் பிரமித்து பார்த்தார்கள் “ஒரு நாள் உன்னை நம்பாத மக்கள் அவர்கள் உங்களை எவ்வாறு சந்திக்கிறார்கள் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கும்”
– எழு (சிறுகதைகள்), மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com, மின்னூலாக்கம் – ஐஸ்வர்யா லெனின்.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: March 4, 2026
பார்வையிட்டோர்: 80