கஷ்டமும் கவலையும்

கஷ்டப்படுங்கள் கவலைகள் தீரும் கவலையாக இருக்காதீர்கள் ஒருபோதும் கஷ்டங்கள் தீராது.
ஒரு நகரத்தில் ஓர் பெரிய விளையாட்டு மைதானம் இருந்தது. அருகில் ஒரு விளையாட்டு அரங்கமும் இருந்தது. அங்கு ஒரு பயிற்சியாளர் இருந்தார் அவர் பெயர் நீலவேணி. அந்த பயிற்சியாளருக்கு ஒரு 50 வயது இருக்கும். ஒரு நாள் அந்த விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு மாணவர்களுக்கான விளையாட்டு கழக கூட்டம் நடந்தது. அப்பொழுது அங்கே நீலவேணியை ஊக்க பேச்சுக்காக அழைத்து இருந்தார்கள். அவர்களும் சென்றிருந்தார்கள். இப்பொழுது அவர்களுடைய நேரம் வந்தது. அவர்களும் மேடையில் சென்று பேச தொடங்கினார்கள். நீலவேணி பிள்ளைகளை பார்த்து, எத்தனை பேர் விளையாட்டில் தோற்று போனால் கவலை படுவீர்கள் என்று கேட்டார்கள்.
சில பேர் கைகளை உயர்த்தினார்கள். உடனே அவர்கள் கைகளை இரக்க சொல்லி தன் உரையை தொடங்கினார்.என் பயிர்ச்சி பயனத்தில் நான் இரண்டு மாணவர்களைபற்றி மட்டும் உங்களிடம் பேச விரும்புகிறேன்.ஒருவன் பெயர் யோகேஷ்
மற்றொருவன் பெயர் : பிரவீன்
இருவருக்கும் நான் சமமாகத்தான் பயிற்சி கொடுத்தேன். இரண்டு பேருக்கு தடைகளப் போட்டி பயிற்சி கொடுத்தேன். அதில் இரண்டு பேரும் தொடர்ந்து 4 முறை தோற்று கொண்டே இருந்தார்கள். அதன் பிறகு தடைகளை போட்டிக்கு யோகேஷ் மட்டும்தான் வந்து இருந்தான். பிரவீன் வரவில்லை யோகேஷை பார்த்து ஏன் பிரவீன் வரவில்லை என்று கேட்டேன். அதற்கு யோகேஷ், அவன் கவலையாகவே இருக்கிறான். பயிற்ச்சிக்கு கூட வர மறுக்கிறான் என்றான். சரி நீ வா என்று யோகேஷை அழைத்து சென்றேன். ஆனால் 5தாவது போட்டியிலும் அவன் தோற்று போனான். இப்பொழுது எனக்கே சலிப்பு வந்துவிட்டது நானும் தீவிரமாக பயிற்சி கொடுப்பதை நிறுத்தி விட்டேன். பிரவீனும் கவலையோடே எதோ ஒரு மூட்டை தூக்கும் வேலைக்கு சென்று விட்டான். சிறிது நாட்கள் சென்றது. யோகேஷ் விடாமல் பயிற்சி செய்து கொண்டே இருந்தான். ஒரு மாவட்ட போட்டி வந்தது அதில் யோகேஷ் பங்கு பெற்றான். நான் எதிர்பார்க்கவே இல்லை. யோகேஷ் அந்த போட்டியில் வெற்றி பெற்றான். அதன் பிறகு மிகவும் கஷ்டப்பட்டு பயிற்சி பெற்று, படி படியாக மேலே மேலே ஜெயிக்க தொடங்கினான். யோகேஷ் இப்பொழுது அவன் விளையாட்டு ஒதுக்கீட்டில் அரசு வேலை செய்கிறான் ஆனால் பிரவீன் இன்னும் மூட்டைத் தூக்கிக் கொண்டு கஷ்டப்படுகிறான். இதிலிருந்து நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் “கஷ்டப்படுங்கள் கவலைகள் தீரும் கவலையாகவே இருக்காதீர்கள் ஒருபோதும் கஷ்டங்கள் தீராது” என்றார் நீவேணி.
– எழு (சிறுகதைகள்), மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com, மின்னூலாக்கம் – ஐஸ்வர்யா லெனின்.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: March 4, 2026
பார்வையிட்டோர்: 78