சுயநலமும் பொதுநலமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 4, 2026
பார்வையிட்டோர்: 61 
 
 

நம்ம எத்தனை நாள் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல நம்மால் எத்தனை பேர் வாழறாங்க என்பதுதான் முக்கியம்.

ஒரு ஊரில் ஒரு சிறிய குடும்பம் வசித்து வந்தது அந்த குடும்பத்தில் தாய் தகப்பன் பிள்ளைகள் மற்றும் ஒரு பாட்டி இருந்து வந்தார்கள். தினமும் அந்த பாட்டி தன் பேரனை பள்ளிக்கு அழைத்து செல்வாள் தினமும் பள்ளிக்கு செல்லும் போது தன் பேரனுக்கு ஒவ்வொரு கதை சொல்வது வழக்கம். போகும் வழியில் ஒரு சிலை ஒன்று இருந்தது பேரன் பாட்டியை பார்த்து, இந்த சிலை இங்கே வர காரணம் என்ன பாட்டி என்று கேட்டான். அதற்கு அந்தப் பாட்டி தன் பேரனிடம் இந்த ஊரில் இருட்டையர்கள் இருந்தார்கள் அவர்கள் பெயர் அரசு,முரசு. அரசு தன்னை பற்றி மட்டுமே யோசிப்பான் முரசு மற்றவர்களை பற்றி மட்டுமே யோசிப்பான். அப்பொழுது இந்த ஊரில் வாழ்வதற்கே அஞ்சுவார்கள் ஏனென்றால், சுற்றி ஒரே காடாக இருக்கும்.

அரசு முரசு இருவரும் படித்து முடித்தார்கள். முரசு வேலைக்கு செல்ல தொடங்கினான் உடனே தான் நினைத்தபடி சேவை செய்யவும் ஆரம்பித்தான் உணவு இல்லாதவர்களுக்கு உணவு கொடுப்பது, போன்ற வசதிகளை செய்து வந்தான். அரசு முரசு இவர்களின் தாய்க்கு உப்பு நோய் இருந்தது இவர்கள் படிக்கும் போதே தாய் மரித்து விட்டால். அதே உப்பு நோய் அரசுக்கும் முரசுக்கும் தொடர்ந்து இருந்தது அந்த உப்பு நோய் சில நாட்கள் செல்ல செல்ல தன் வேலையை காட்டத் தொடங்கியது அரசு தன் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் தன் உடம்பிற்கு மருத்துவமனையில் செலவு செய்ய தொடங்கினான். முரசு தான் சம்பாதித்த பணத்தை தன் உடம்பை கூட பார்த்துக் கொள்ளாமல் தன் மக்களுக்கு செலவு செய்தான். பலபேர் பசியை ஆற்றி இருக்கிறான். ஒரு சில பேருக்கு படிக்க வைக்க பணம் கொடுத்து உதவ இருக்கிறான். பாட்டி தன் பேரனை பார்த்து ஒரு முக்கியமான விஷயம் உன் அப்பா நன்றாக சம்பாதிக்கிறார் என்றால் அதற்கு காரணம் முரசு தான்.படிப்பு செலவுக்கு நிறைய பணம் கொடுத்து உதவி இருக்கிறார் என்று பாட்டி தன் பேரனுக்கு சொன்னார்.

பிறகு சிறிது நாள் கழித்து முரசு உடம்பு முடியாமல் இறந்து விட்டான்.

ஆனால் அரசு மருந்து மாத்திரை மூலம் சில நாட்கள் உயிரோடு இருந்தான் பிறகு அவனும் மரித்துவிட்டான். ஆனால் இந்த ஊருக்கே உதவி செய்து ஊரையே மாற்றிய முரசுவின் மரணம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் நன்றாக வாழ்ததைவிட அவனால் நன்றாக வாழ்ந்தவர்கள் தான் அதிகம். எனவே, இந்த ஊர் மக்கள் முரசுக்கு ஒரு சிலை வைத்து விட்டார்கள். பேரன் தன் பாட்டியைப் பார்த்து அருமையான கதை பாட்டி என்று பேரன்பாட்டியை பார்த்து சொன்னான் அதற்கு பாட்டி கதை அல்ல நிஜம். நம்ம எத்தனை நாள் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல நம்மால் எத்தனை பேர் வாழறாங்க என்பதுதான் முக்கியம்.

– எழு (சிறுகதைகள்), மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com, மின்னூலாக்கம் – ஐஸ்வர்யா லெனின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *