வாய்ப்புகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 4, 2026
பார்வையிட்டோர்: 54 
 
 

வாய்ப்புக்கள் உங்கள் கதவை தட்டவில்லை என்றால் அவைகளை தட்டும் படியான கதவை நீங்களே உருவாக்குங்கள்

ஒரு பனிமலை தேசம் இருந்தது அந்த பனிமலையில் ஒரு எட்டு நாய்கள் இருந்தது. அந்த பனிமலை சதுரமாக இருக்கும் ஒரே ஒரு இடத்தில் மட்டும் சிறிதளவு பள்ளம் இருக்கும். அந்த பள்ளத்தில் தான் தண்ணீர் சுரக்கும் அந்த எட்டு நாய்களில் ஒரே ஒரு நாய் மட்டும்தான் அந்த பள்ளத்தில் சுரக்கும் தண்ணீரை குடிக்கும் மற்ற நாய்களை குடிக்கவும் விடாது கிட்ட நெருங்கவும் விடாது.

ஒரு நாய் மட்டும் தனியாகவே அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கும் மற்ற ஆறு நாய்களும், அந்த ஒரு நாய் தண்ணீர் குடிப்பதை பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும். இது சில நாட்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தது.

அந்த ஆறு நாய்களும் பொறாமையுடனும், தாகத்துடனும் பார்த்துக் கொண்டிருக்கும். தனியாகவே இருக்கும் அந்த ஒரு நாய் இந்த ஆறு நாய்களும் ஏமாந்த நாய்கள் என்று நினைத்துக் கொண்டு ஒரு ஓரமாக இருக்கும்.

ஒரு நாள் தனியாகவே இருந்த அந்த நாய் ஒரு தீர்மானம் எடுத்தது தண்ணீர் குடிப்பதற்கு நாமே ஒரு வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று அது ஒரு பனிமலை என்றதால் தரைகள் கண்ணாடி போல் இருக்கும்.

அந்த நாய் தன் இரண்டு காலைகளை பயன்படுத்தி குதித்துக் கொண்டிருந்தது. மற்ற ஆறு நாயும் அந்த தண்ணீர் குடிக்கும் அந்த ஒரு நாயும் இந்த நாயை வேடிக்கையாக பார்த்தது.

அனைத்து நாய்களும் என்ன ஆகிவிட்டது இந்த நாய்க்கு என்று குழம்பிப் பார்த்தது. சிறிது நேரம் கழித்து அந்த நாய் குதித்த இடத்தில் ஒரு விரிசல் ஏற்பட்டது விடாமல் குதித்து குதித்து அங்கே ஒரு பள்ளத்தை உருவாக்கியது.

பிறகு அங்கேயும் தண்ணீர் சுரக்க ஆரம்பித்து பார்த்த ஆறு நாய்கலும் அங்கே சென்று தாகத்தை தீர்த்தன. வாய்ப்புகள் நமக்கு ஒருவர் தருவார் என்று காத்திருப்பதை விட நாமே ஒரு வாய்ப்பை உருவாக்குவது சிறந்த முயற்சி.

– எழு (சிறுகதைகள்), மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com, மின்னூலாக்கம் – ஐஸ்வர்யா லெனின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *