ஊர்க்காவலன்

தடைகளை தட்டிக் கழிப்பதை விட தகர்த்து போடுவது தான் புத்திசாலித்தனம்.
கண்மணிப்பூர் என்ற ஒரு கிராமம் இருந்தது அந்த கிராமம் மலைப்பிரதேசம் மாலை நேரங்களில் சாலையில் காற்றுடன் மழை பெய்தால் மரங்கள் சாலையில் விழுவது வழக்கம் அனைவரும் அதை தகர்க்க எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் வேறு வழியாக சென்று விடுவார்கள்.
ஒருநாள் அந்த பகுதி தலைவர் திருமூர்த்தி இதைத்தொடர்ந்து பார்த்து கொண்டு இருந்தார் சாலையில் மரம் விழுந்த சில நாள் கழித்து அவர் அந்த சாலையை சுத்தம் செய்வார். ஒருநாள் அவர் ஒரு தீர்மானம் எடுத்தார் இந்த ஊரில் தடைகளை தகர்க்கும் ஒரு வாலிபனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று, தனது பல நாள் கனவை ஒரு தீர்மானமாக எடுத்தார்.
மரம் விழுந்த அந்த சாலையை சுத்தம் செய்து விட்டு அவர் நினைத்தபடி ஒரு வீர வாலிபனை தேர்ந்தெடுத்து அந்த ஊர் காவலன் என்று அறிவிக்க வேண்டும் என்றார்.
ஆனால் அதை யாருக்கும் தெரியப்படுத்தாமல் திருமூர்த்தி செயல்பட தொடங்கினார்.
திருமூர்த்தி தன் வேலைக்காரனை அழைத்து மக்கள் நடக்கிற பாதையில் ஒரு பாரையை வைக்க சொன்னார் அந்த வேலைக்காரன் அப்படியே செய்தான். திருமூர்த்தி இப்பொழுது பார்க்க தொடங்கினார் அந்த கல்லை யார் தகர்த்துப் போடுகிறார்கள் என்று, சில நாட்களுக்கு பிறகு பார்த்தால் அந்த கல் அங்கே தான் இருந்தது.
ஏழு நாள் கழித்து வந்து பார்த்தால் அந்த கல் அங்கே தான் இருந்தது, யாரும் அதை தகர்த்து போடவில்லை அனைவரும் அதை தாண்டி தான் செல்கிறார்கள் சிலரால் அந்த கல்லை தகர்க்க முடியும் என்று தெரிந்தும் அதை பண்ணாமல் போனார்கள்.
ஒரு பத்து நாள் சென்றது ஒரு நாள் ஒரு வாலிபன் வந்து பார்த்து என்ன இந்த கல் சாலையில் செல்பவர்களுக்கு தடையாக இருக்கிறதே என்று எண்ணி அந்த பாறையை தகர்த்து வீழ்த்தினான். பிறகு அந்த வாலிபனுக்கு ஒரு ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது.
அந்தப் பாறைக்கு கீழே ஒரு பெட்டி இருந்தது அந்தப் பெட்டியை திறந்து பார்த்தால் அதில் ஒரு காகிதம் இருந்தது அந்த காகிதத்தை பிரித்து படித்தால்,
வாழ்த்துக்கள் இந்த ஊர் காவலனே என்று எழுதி இருந்தது. பிறகு ஒரு விலாசம் இருந்தது அங்கே வா என்று எழுதி இருந்தது.
பிறகு அந்த வாலிபன் அந்த விலாசத்திற்கு சென்று பார்த்தல் ஒரு பெட்டி இருந்தது அந்த பெட்டியை திறந்து பார்த்தால் தங்க கட்டிகள் இருந்தது.
அந்த வாலிபனுக்கு ஒரே மகிழ்ச்சி, உடனே அந்த இடத்துக்கு திருமூர்த்தி வந்து வாழ்த்துக்கள், தடைகளை தகர்க்கும் நாயகனே என்று நடந்தவற்றை எல்லாம் கூறி அவனுக்கு ஒரு காவலன் என்ற பொறுப்பை கொடுத்தார்.
– எழு (சிறுகதைகள்), மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com, மின்னூலாக்கம் – ஐஸ்வர்யா லெனின்.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: March 4, 2026
பார்வையிட்டோர்: 63