பொன் விளையும் பூமி
கதையாசிரியர்: ராஜராஜ சோழன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 16, 2025
பார்வையிட்டோர்: 154

பெருமாள் அதிகாலையில் தூக்கம் கலைந்து எழுந்து விட்டான். பெரிய நிசப்தம் நிலவியது. சரி வெளியே சென்று தேநீர் குடிக்கலாம் என்று கடைகளை தேடினான். ஒரே ஒரு கடை மஞ்சள் ஒளியைக் கொண்டு வரவேற்றது. திறந்த கடைகளின் சாலைகள் மழை பெய்தது போல் நனைந்து இருந்தது. யாரோ ஒரு பெண் இசைக்கலைஞர்கள் இசைப்பது போல் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தவாறே வாசலை பெருக்கிக் கொண்டிருந்தாள். கேட்ட பாடலாக இருந்தது. அவன் வேறு பாடலை முணுமுணுத்துக் கொண்டே சென்றான்.பால் கொதித்து கொண்டு இருந்தது. சரியான பதத்தில் இருந்தது என்பதை அதன் மணம் சொன்னது. அவனுக்கு முன்பே மூன்று நான்கு பேர்கள் காத்து கொண்டு இருந்தனர் தேநீருக்காக. எல்லோரும் அரை தூக்கத்தில் இருந்தனர். தினமும் வருவார்கள் போல. அவனுக்கு ஒரு டவரா செட்டில் தேநீர் வந்தது. அதன் திடம் மணம் குணம் அந்த நாளை இனிதாக தொடங்கி வைத்தது. தேநீரை குடித்துக் கொண்டே அருமையாக இருக்கிறது என்றான் மாஸ்டரைப் பார்த்து. மாஸ்டர் சிரித்துக் கொண்டார்.
செய்தித்தாளை பார்த்தான் ஒன்றும் பெரிதாக செய்தி இல்லை. புது பட அறிவிப்புகள் ரிலீஸ்கள் பல வண்ணங்களில் இருந்தது.
அந்த காலையிலும் பூக்காரப் பெண் மஞ்சள் பூசி குளித்து குங்குமம் மஞ்சளும் இட்டு அம்மன் போன்று இருந்தாள். அவள் கை விரல்கள் பூக்களை கோர்த்து கொண்டு இருந்தது.
என்ன செய்யலாம் என்று அந்த கிராம கடை வீதியை சுற்றி வந்தான். சூரியன் மெல்ல மெல்ல ஒளி வீசுவது போல் ஆட்கள் மெல்ல மெல்ல வந்து சேர்ந்தார்கள். எல்லா கடைகளும் திறக்கப்பட்டு விட்டது. சில கடைகளில் வானொலி ஓசை கேட்டது. பேருந்துகள் பாதி கூட்டத்துடன் வந்து விட்டு சென்றது. இன்று விடுமுறை நாள் போல் இருந்தது. அப்படியே ஒரு இடத்தில் அமர்ந்து கிராமத்து காட்சியை பார்த்து கொண்டு இருந்தான். சிலர் வேகமாக அலுவலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
மீரா அழைத்தாள்.
எங்கு இருக்கீங்க.
தேநீர் குடிக்க வந்தேன்.
உடனே வீட்டுக்கு வாங்க
என்ன வலி வந்து விட்டதா. அதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கே. அதெல்லாம் ஒன்றும் இல்லை.
இது வேற. வாங்க.
மீரா எப்போதும் எது இருந்தாலும் சின்ன விசயத்திற்கே பெரிய படையை கிளப்புவா பதட்ட படுவா.
நாம தான் பதட்ட படமா இருக்கனும் என்று எண்ணி கொண்டான்.
வீட்டிற்குள் சென்றவுடன் வீடே அமைதியாக இருந்தது. அவள் அக்கா அண்ணன் குழந்தைகள் தூங்கி கொண்டு இருந்தனர். பெண்கள் சமையல் வேலையில் மும்முரமாக இருந்தனர். சாம்பாரின் மணம் வீசியது. வெண் பொங்கலின் நெய் வாசனை பசியைக் கிளப்பியது. மீரா தேநீருடன் வந்தாள்.
எப்போதும் மஞ்சள் பூசி அவள் முகத்தையும் அதில் உருளும் கண்களை பார்த்து கொண்டு இருப்பான். இப்போது அவள் முகம் பூசினார் போல மிளிர்கிறது. அவள் வயிற்றையும் சேர்த்து பார்க்க தொடங்கி விட்டான். தனிமையில் அவள் வயிற்றில் காதை வைத்து கேட்பான் குழந்தையின் இதய ஓசையை . அப்போது எல்லாம் அவள் வெக்கத்தில் சிவந்து போய் விடுவாள். கைகளில் வலையல்களின் ஒளிகள் அவள் இல்லாத நேரத்திலும் ஒளித்து கொண்டே இருக்கிறது.
அவளையே பார்த்து கொண்டு இருந்தேன்.
பார்த்தது போதும்
சீக்கரம் குடிங்க என்றாள்
என்ன பிரச்சனை.
எங்க அக்கா வீட்டுல அந்த புதுசா வர போற பேப்பர் கம்பனி பக்கத்துல இடம் வாங்குவதற்கு முடிவாகி முன்பணம் மூன்று மாதத்திற்கு முன்பே கொடுத்து விட்டார்கள். அதற்கு நாளை மறுநாள் பத்திர பதிவு.
சரி என்ன பணம் வேணுமா.
பணம் ரெடி பண்ணிட்டா. அந்த இடம் வரதனோடது.
யார் வரதன்.
அதான் சலூன் வைத்திருக்கிறாரே.
சரி தெரியலை.
நேற்று வரதன் அந்த இடத்த விக்கல என்று முன்பணத்த திருப்பி கொடுக்க வந்துட்டார்.
ஏன்னு கேட்டா. இப்ப அந்த இடம் விலை அதிகமா ஆய்ட்டது.
எனக்கு வேண்டும் என்கிறார்.
அந்த புரோக்கர் மற்றும் ஜாம்பர் வைத்திருக்கிறாரே சிந்து அப்பா எல்லாம் சேர்ந்து தான் அவனை குழப்புகிறார்கள்.
பத்தாததுக்கு கவுன்ஸ்லர் குமார் கட்ட பஞ்சாயத்து பண்ணுறார்.
சரி இப்ப நான் என்ன பண்ணனும்.
அங்க போய் பாருங்க சண்ட வரபோவுது.
நான் போனா தான் சண்ட வரும்.
பரவா இல்ல போய் பாருங்க.
அவன் என்னடா இது காலைலே பஞ்சாய்த்தா என்று எண்ணினான்.
கவுன்ஸ்லர் கடைக்கு சென்றான். எல்லோரும் பேசி கொண்டு இருந்தனர். சிலர் நின்று இருந்தனர் சிலர் உட்கார்ந்து இருந்தனர்.
கவுன்ஸ்லர் டிரைவர் அண்ணே பேசிட்டு இருக்காங்க வெய்ட் பண்ணுங்க என்றான். அப்போது அவன் மாமா அழைத்தார் எங்க இருக்க என்றார்.
மீரா ஊர்ல இருக்கேன்.
என்ன மாப்புல வாரம் வாரம் ஓடிடுர.
நாளைக்கு வந்து விடுவேன்.
சரி மீரா எப்படி இருக்கா. நல்லா இருக்கா.
மீரா அண்ணன் வந்து கூப்பிட்டார். நான் உள்ளே சென்றேன்.
கவுன்ஸ்லர் ஏற்கனவே சொன்னதை திருப்பி திருப்பி சொன்னார்.
அவன் அவரிடம் நேராகவே கேட்டான். உங்களுக்கு அந்த இடம் வேணுமா சொல்லுங்க என்றான்.
கவுன்ஸ்லர் அதை எதிர் பார்க்க வில்லை.
எனக்கு வேண்டாம் ஆனால் வரதன் ஒரு மொடை என்று என்னை வாங்கிக்க சொல்லுறான்.
அந்த காச நாங்க கொடுக்கறோம். எங்களுக்கு வாங்கிக் கொடுங்க.
முதன் முதலாக இடம் வாங்குறாங்க அதில் தடை வந்தா அவங்களால தாங்கிக்க முடியாது. வருத்தப்படுவாங்க. நாம தான் உதவி செய்யனும்.
உங்களுக்கு என்ன பிரச்சனையா. உங்களுக்கு ஆசையா இருக்கா வாங்கறதுக்கு.
இல்ல இல்ல
அப்ப நாங்க அவரிடம் பேசிக்கிறோம்.
அவன் வரதனிடம் தனியே பேசினான்.
உங்களுக்கு என்ன பிரச்சனை சொல்லுங்க
பணம் கூடுதலாக வேண்டுமா
சிவ சிவ . எனக்கு நான் பேசன காச கொடுத்தா போதும் சார்.
அப்பறம் ஏன் குழப்புரீங்க.
எல்லோரும் மெரட்டு ராங்க கொன்னுடுவேன்னுறாங். என்ன செய்றது. இந்த ஊர்ல தான் பொழப்பு.
வெறு எங்கே செல்வது என்று அழுதார்.
சார் அழாதீங்க. நான் பார்த்து கொள்கிறேன். எஸ்ஐ எங்க ஊர் காரு தான். உங்க முன்னாடியே பேசுறேன். பயப்படாதீங்க.
எஸ்ஐயிடம் எல்லா விபரத்தையும் கூறினான்.
நீங்க ஒரு கம்பளைன்டு கொடுங்க என்று எஸ்ஐ கூறினார்.
வரதனுக்கு இப்போது கொஞ்சம் பயம் குறைந்தது.
அவன் கவுன்ஸ்லரிடம் பேசினான்.
சார் அவர் இப்போது எங்களுக்கு இடத்தை விற்பதற்கு முழு சம்மதம் தெரிவித்தார் என்றான்.
எதையோ தொலைத்து விட்டது போல் உணர்ந்தார்.
நாளை மறு நாள் பத்திர பதிவு. நீங்களும் வந்துடுங்க. எல்லோருக்கும் பார்மாலிட்டிஸ் செய்து விடலாம். பாதுகாப்புக்கு
எஸ்ஐ இன்ஸ்பெக்டர அழைத்து வருகிறேன் என்று உறுதி கூறியுள்ளார். நீங்க தான் சார் எல்லாத்தையும் நல்ல படியா முடித்து கொடுக்க வேண்டும்.
கவுன்ஸ்லர் பெரிதாக சிரித்தார்.
எல்லொருக்கும் மகிழ்ச்சி.
மீரா அவன் கைகளை பிடித்துக் கொண்டாள். மெத்தை போன்ற அவள் வயிறு செல்லமாக இடித்தது.