தீ…வண்டி…!
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 24, 2025
பார்வையிட்டோர்: 142
(சிறுவர் பாடல்)

கட்டுக் கட்டாய் தீப்பெட்டி
காலியான தீப்பெட்டி
எட்டுபத்து எனச்சேர்த்து
எடுத்து வச்ச தீப்பெட்டி!
ஒன்றின் பின்பு ஒன்றாக
ஒழுங்காய் செருகித் தொடராக
இன்று இங்கே நான்செய்த
இன்பம் கொடுக்கும் தீவண்டி!
தண்ட வாளம் கிடையாது
தடைகள் ஏதும் வாராது
என்றும் புகையைக் கக்காமல்
இழுத்துச் செல்லும் தீவண்டி!
சிவப்பு பச்சை வண்ணங்களோ
செவியைப் பிளக்கும் சப்தங்களோ
தடுப்புச் சைகை விளக்குகளோ
தடங்கல் செய்ய முடியாது
எங்கும் நின்று தான்போகும்
ஏறிக் கொள்ள அதுகூறும்
சங்குச் சக்கர வட்டம்போல்
சமர்த்தாய் வளைந்து தானோடும்
ஓட்டும் நானே உங்களுக்கு
உதவி செய்யக் காத்திருக்கேன்
கேட்டு, தேநீர் வடை பஜ்ஜி
கேட்டதும் கொண்டு கொடுக்கின்றேன்
பயணக் காசு கிடையாது
பட்சணக் காசும் கிடையாது
விசனம் ஏதும் தாராத
வேகம் போகும் தீவண்டி
தீபா வளிக்குக் கூடுதலாய்
பெட்டிகள் சேர்க்க வாய்ப்புண்டு
மத்தாப்புக்கள் வருவதனால்
மலைப்பு ஏதும் இருக்காது!
ஒன்று சேர்ந்து பயணிப்போம்
உலகின் அழகை நேசிப்போம்
என்றும் இந்த வண்டியினை
இதயம் வைத்துப் பூசிப்போம்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
