பாராட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 17, 2025
பார்வையிட்டோர்: 671 
 
 

ஆதுல் அடுத்த வாரம் கோயிலில் பாட்டு பாட போகிறாள் ஆதி என்றாள் கார்த்திகா. ஆதி செல்போனில் ஏதோ ரீல்ஸ் பார்த்துக் கொண்டு இருந்தான். கார்த்திகா சற்று வேகமாக மீண்டும் சொன்னாள். அவன் கொஞ்சம் சமாளித்து கொண்டு காது கேட்கிறது. ஏன் கத்துற என்றான். அவள் நான் என்ன சொன்னேன் சொல்லு என்றாள். பாப்பாவுக்கு பாட்டு கிளாஸ் இருக்கு அது தானே. நான் போய் அழைத்து கொண்டு வர வேண்டும். இது தினமும் நடக்கிறது தானே என்றான்.

அந்த செல்லை கொஞ்சம் வச்சிட்டு நான் சொல்லரத கவனி என்று கத்தினாள். அவன் செல்லை கீழே வைத்து விட்டான். என்ன சொல்லு என்று ஏரிச்சலுடன் அவளை பார்த்தான். அவளுக்கு ஏதோ வேலை போல. அவள் முகத்தில் வேர்வை துளிகள் ஓடிக் கொண்டு இருந்தது. அதற்கு இடையில் இந்த செய்தியை அவனிடம் கடத்த முடியாமல் தவித்தாள்.

அடுத்த வாரம் சனிக்கிழமை ஆதுல் நம்ம பிள்ளையார் கோயிலில் அவங்க பாட்டு கிளாஸ் பிள்ளைகளுடன் சேர்ந்து பாட்டு பாட போகிறாள். என்ன நிகழ்ச்சி. ஞாயிற்று கிழமை கோயில் கும்பாபிஷேகம். அதான் முதல் நாள் மாலை இசை நிகழ்ச்சி. சரி பார்த்துக்கலாம்.

அன்று மாலை எப்போதும் போல வந்து கிளம்பி சென்றாலே நிகழ்ச்சிக்கு சரியாக இருக்கும். இந்த முன் அறிவிப்பு நம்மை விழிப்பு கொள்ள செய்து விடுகிறது. இந்த நிகழ்ச்சி பற்றி எப்போது எல்லாம் நினைவுக்கு வருகிறதோ அப்போது எல்லாம் வேறு எந்த வேலையும் வந்து விட கூடாது என்ற ஒரு நெருடல் வந்து விடுகிறது என்று எண்ணினான். அந்த வாரம் முழுவதும் கோயிலில் ஏதோ ஒரு வேலை நடந்து கொண்டே இருந்தது. கோயிலின் வாரியை சுத்தம் செய்தார்கள்.

சனிக்கிழமை காலையிலேயே கோயில் கலை கட்டிவிட்டது. கும்பாபிஷேகத்திற்கான பூசை மற்றும் அக்னி குண்டங்கள் தயாராக இருந்தது. கோயிலுக்கு எதிரே பெரிய ஆலமரம். தன்னுடைய கிளையை காலூன்றி வாரி ஓரமாக காவல் காத்தது. ஒரு சில பூக்கடைகளுக்கு நிழல் தந்தது. அவன் வரும் வழியில் ஒரு விபத்து. ஒரு நொடியில் எல்லாம் முடிந்தது. மெடிக்கல் காலேஜ் சாலையின் நடுவே தடுப்புகள் உண்டு. ஒவ்வொரு பேருந்து நிறுத்தம் அல்லது தெருவுக்கும் வழி உள்ளது. ஒரு சிலர் நேராகவே பார்த்தார்கள். ஒருவர் டாட்டா இன்டிகாவில் அவனுக்கு எதிர் திசையில் வந்தவர் இன்டிக்கேட்டரை போட்டுக் கொண்டு சாலையை கடந்து தெருவுக்குள் செல்ல முயன்றார். வானத்திலிருந்து ஏதோ வந்து விழுந்தது போன்ற பெரிய சத்தம். என்னவென்று கவனிப்பதற்குள் டாட்டா இன்டிக்கா பின்புறம் அதாவது சரியாக பாதி அப்பளம் போன்று நசுங்கியது. எல்லோரும் ஓடினார்கள். சாலையின் இருபுறமும். டாட்டா இன்டிக்காவில் இருவர் வந்தனர். நல்ல வேளை சீட் பெல்ட் அணிந்து முன் இருக்கையில் அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு சிறு காயம் கூட இல்லை. வெளியே இறங்கி விட்டனர். புருஷன் பொண்டாட்டி ஒரு சிலருக்கு தெரிந்தவர்கள் தான். எல்லோரும் விசாரித்தனர். காருக்கு இன்ஸ்யூரன்ஸ் இருக்கு என்றார். அவர்களுக்கு அதிர்ச்சி மட்டும் தான்.

சாலையின் அந்த பக்கத்தின் டாஸ்மாக் போர்டை இடித்து கொண்டு அம்பாசிடர் நின்றது. டிரைவர்க்கு நல்ல அடி காலில் . உயிருக்கு ஆபத்து இல்லை. அவரை காட்டுமிருகம் போன்று இருந்த அம்பாசிடர் காத்தது. யாரோ உடனே அழைத்ததில் ஆம்புலன்ஸ் வந்து அழைத்து சென்று விட்டது. சாலை மெல்ல இயல்புக்கு சென்றது.

அவனை கார்த்திகா அழைத்தாள் விபத்தை பற்றி கூறினான். உங்களுக்கு ஒன்றும் இல்லையே என்று நடுங்கினாள். நாங்கள் முன்னே செல்கிறோம் நீங்கள் மெதுவாக வாருங்கள் என்றாள்.

அவன் கோயிலுக்குள் வருவதற்குள், கிடைக்கும் இடத்தில் எல்லாம் வண்டிகள் அணிவகுத்து நின்றன. கோயிலுக்கு பின் புறம் பெரிய அரச மரம். பூஜைகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. மக்கள் பக்தியுடன் கும்பிட்டுக் கொண்டு இருந்தனர். நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. குழந்தைகள் கூட்டமாக பாடிக் கொண்டு இருந்தனர். பட்டும் அவனை பார்த்து கொண்டே பாடினாள். பாட்டு பாடும் குழந்தைகளின் பெற்றோர்கள் படம் எடுத்து கொண்டு இருந்தனர். கார்த்திகா உட்காந்து பாருங்க என்று அவனுக்கு சைகை காட்டினாள். பட்டுவை பார்த்து சிரித்தபடியே தாளம் போட்டாள். சிறிய எளிமையான மண்டபம்.

ஒரு சிறுமி மட்டும் ஓரமாக நின்று கொண்டு இருந்தாள். ஒவ்வொரு பாட்டாக குழந்தைகள் போட்டி போட்டு பாடினார்கள். நிகழ்ச்சி முடியும் போது சிறுமிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார்கள். அவள் தனியாக பாட தொடங்கினாள். அவள் பாட்டும் தனித்து இருந்தது. ஒரு சிலர் கண்டு கொண்டனர். எதுவும் கிடைக்க வில்லையே என்று ஏமாற்றத்தில் இருந்தவனுக்கு சக்கரை பொங்கல் கிடைத்தது போன்று இருந்தது. அவளுடைய பாட்டு. கை தட்டினார்கள். யாரும் பெரிதாக பாராட்ட வில்லை. அவனுக்கு சிறுமியை பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் தயங்கினான். கார்த்திகா அந்த சிறுமியை அழைத்து கைகுலுக்கி பாராட்டினாள். சிறுமி கூச்சத்தில் சிரித்தாள். உன்னோட பெயரு. சுபஸ்ரீ .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *