கண்ணை நம்பாதே!






பதின்ம பருவம் என்பது, எது உண்மை? எது பொய்?! என்றே உணர முடியாத, பகுத்தறிய முடியாத பருவம். கண்ணைப் பறிக்கிற எல்லாவற்றையும் நம்பத்தோன்றுகிற வயது அது!
கவர்ச்சி வேறு., காதல் வேறு என்ற பாகுபாட்டை அறியாத பருவம். சில விஷயங்களை அறிவுறுத்தலாம்! சில விஷயங்களைப் பட்டுத் தெரிஞ்ச்சுக்கட்டும் விட்டுவிடலாம்., ஆனால், மனசு கேட்பதில்லை! பட்டுத் தெரிய வாழ்க்கை அற்பத் தின்பண்டமல்ல! அரிய பொக்கிஷம்.
எப்படிப் புரிய வைப்பது?
‘பச்சைப் பசேலென்றிருக்கும் பாவற்காயுமல்ல.
பக்கமெல்லாம் முள்ளிருக்கும் பலாக்காயுமல்ல.
உள்ளே வெளுத்திருக்கும் தேங்காயுமல்ல.
உருக்கினால் நெய்வடியும் வெண்ணையுமல்ல…’
இப்படி ஒரு விடுகதை ஆமணக்கைச் சொல்லச் சொல்வதுண்டு!
அப்படித்தான் பதின்மபருவ காதலும்!
பார்த்தால் அரைத்து உருட்டிய சந்தனம் போலிருக்கும். மணம் அள்ளும். ஆனால், அது சந்தனமல்ல, பலாப் பழம்தான்!. பலாவை அத்தனை முள்ளிருக்க உள்ளீடாய் கடவுள் ஏன் வைத்திருக்கிறான்? காரணம் இல்லமலில்லை! காதல் ஒரு வகையில் அப்படித்தான். பலாவால்..என்ன நம்மை?
பிரஷர் போகும்கறான்… பித்தம் போகும்கறான். தேனில் குழைத்துத் தின்னுங்க என்கிறான். ஆனால், ஒருத்தர் கூட ‘பலாச்சுளையாக இருக்கும்’. ‘சந்தன உருட்டாகத் தோன்றும்’. பழத்தின் உள்ளே வெளுத்திருக்கிற ஒட்டிய ஒன்றுக்குப் பெயரும் ‘கள்ளன்!’ என்று ஏன் கற்றுத் தருவதில்லை?!
காதலிலும் கள்ளன் பலாச்சுளைக்குள் ஒளிந்திருக்கிறது வெள்ளையாய்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |