கதையாசிரியர்:
தின/வார இதழ்: கணையாழி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 5, 2025
பார்வையிட்டோர்: 2,010 
 
 

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பைப்பைத் திறந்ததும் புஸ்ஸென்று காற்றுத்தான் வந்தது. நித்திரைப்பாயில் எழுப்பி, கௌரி சொன்னது சரி. தண்ணியில்லை….விடியற்காலையிலேயே தண்ணியில்லை. எதிர்பாராத பிரச்சினை. சிவத்திற்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.பயமாயும் இருந்தது. 

தகரத் தொட்டிக்குள் பார்த்தான். கிட்டத்தட்டக் கால்வாசிக்குங் கீழே. யாருக்குத் தெரியும்? தெரிந்திருந்தால் ராத்திரியே முழுக்க நிரப்பி வைத்திருக்கலாம். ரேடியோவில் தண்ணீர் வெட்டுப்பற்றி ஏதாவது சொன்னார்களோ தெரிய வில்லை. எங்காவது எதிர்பாராமல் குழாய்கள் வெடித்து மிருக்கலாம். 

இன்னும் பல்லுத் தீட்டவில்லை; முகங்கழுவவில்லை; இரண்டு பேருங் குளிக்க வேண்டும். இவ்வளவு தண்ணீருடன் என்ன செய்வது? – குளிக்கிறதைத்தான் பிறகு பார்த்துக் கொள்ளலா மென்றாலும் – கக்கூஸ்? 

பக்கத்து வீட்டில் வெறும் வாளிச்சத்தங்கள் கேட்டன என்ன செய்யப் போகிறார்கள்? குழந்தைகள் இருக்கிற வீடு – யமகண்டமாய்த் தானிருக்கும். கிராமங்களைப் போலில்லை; பட்டினங்களைப் போலில்லை; இது நகரம், மாந கரம். ‘ஒண்டுக் கிருக்கக்’ கூட த்தண்ணீர் வேண்டியிருக் கிறது. இனி எப்போது வருமோ? இன்றைக்கு முழுவதும் என்ன செய்வது? இதைவிட வேறெங்கு கிடைக்கும் தண்ணீர்? 

பைப்பைத் திறந்தபடியே விட்டான். வந்தவுடனேயே நிரம்பத் தொடங்கட்டும். பல்லைத் தீட்டத் தொடங்கினான். 

திடீரெனப்பட்டது- 

சத்திவேலுடைய வழி சிலவேளை உதவக்கூடும். திருகோணமலை வீட்டில் எப்போதுஞ் சரி வந்திருக்கிறது. இது, கொழும்பு. இந்த ஊரில், இந்த இடத்தில் வருமோ தெரியாது. என்றாலும் தெண்டித்துப் பார்க்கலாம்…. 

வெளியே வந்து கௌரியைக் கூப்பிட்டான். “சத்தி வேலின்ர வேலையைச் செய்து பாப்பம்….” 

அவள் திரும்பிப்போய், ஒரு சிறிய சிவப்பு பிளாஸ்ரிக் குழாயுடன் வந்தாள். நாலடி நீளம். பைப்பின் வாய்க்குள் சரியாகப் பொருந்தக் கூடியது. 

“நல்ல காலமிருந்தா. இது சரி வரும்….” கௌரி இதைப் பைப்பில் சொருகினாள்.

வாயிலிருந்த பிரஷை எடுத்துவிட்டு, நுரையைத் துப்பினான். “வடிவாப் பிடிச்சுக் கொள்ளும்…” குளிக்கிற பேணியால் தண்ணீரை மெல்ல அள்ளி, குழரியின் மற்ற முனைக்குள் பத்திரமாக ஊற்றினான். 

ஒரு பேணி தண்ணீர் ஊற்றியதும், குழாய் நிரம்பியது. பிறகு மெள்ள மெள்ள மட்டம் உள்ளே இறங்கியது. 

“ஒழுக விடாதேயும்…” என்றான் மீண்டும் கொஞ்சங் கிள்ளி – நிரப்பும்வரை ஊற்றினான். இப்போது, மட்டம் குறையாமல் நின்றது. ஒரு அரை நிமிஷம் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

இருந்தாற்போல அவன் “சரி!” என்றான். கௌரி டக்கென்று குழாயைப் பிடுங்கினாள். பைப்பிலிருந்து ‘டுர்ர்’ நென்று தண்ணீர் ஒழுகியது கொஞ்சமாக ஆனால் ஒழுங்காக மெல்லியதாரை. 

“சரியா?….” என்று அவள் மகிழ்ச்சியுடன் கேட்கும் போதே அது நின்றுவிட்டது. 

“ம்ஹும்….” என்றான். 

“இன்னொருக்காப் பாப்பம்” 

“நீங்களே பிடியுங்கோ….” என்றாள் கௌரி.

ஐந்தாவது தடவைக்குப் பிறகு அவன் சொன்னான்.

“இது இங்க சரிவராது போலயிருக்கு” 

”ம்ம்…. நானும் போக வேணும். அங்கை அடுப்பு மூட்டினபடி.” 

“உள்ளதோட சமாளிக்க வேண்டியது தான் சிவம், மீண்டும் பிரஷை எடுத்து வாயில் வைத்தான். 


சக்திவேல். இரண்டு வருஷம் கூட நின்றவன். இந்தியாவுக்குப் போனால் வாத்தியாரைப் பார்க்கலாமென்று சொன்னவன் பிறகு ஊருக்குப் போய் ஒன்றரை வருஷமா கிறது இந்தியரவுக்குப் போனது போகாததுந் தெரிய்ரிது. தோட்டத்து விலாசத்துக்குப் போட்ட தபால்களுக்கு மறு மொழி இல்லாததால், அந்தக் குடும்பமே இந்தியாவின் ஒரு மூலையில், ஏதோ ஒரு ஊருக்குப் போய்ச் சேர்ந்திருக்கும் என்றுதான். படுகிறது. இனி மேல் அவனைக் காணக்கூட முடியாது என்று எண்ணுவதாலேயே கூடுகிற அந்தரம். 

சின்னதுரை அண்ணை அவனை மஸ்கேலியாவிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தபோது, பன்னிரண்டு வயது என்று சொன்னார். ஆளைப்பார்த்தால் ஒன்பதுக்கு மிஞ்சி மதிக்க முடியாது போலிருந்தது. ஒரு காக்கிக் கட்டைக் களுசானும் சிவப்புச்சேட்டும் போட்டு, ஒற்றைக் கையைக் களுசான் பொக்கற்றுக்குள் விட்டுக்கொண்டு, மற்றக் கையில் ஒரு சின்ன தகர. சூட்கேஸைப் பிடித்தப்படி, பிரயாணக் களைப்பே தெரியாதவன் போல நின்றான் சத்திவேலு. 

தன்னைப்பார்க்க வந்துநின்ற வீட்டு ஆட்களையெல் லாம், புருவங்களை வளைத்து உதட்டைப் பிதுக்கி ஒரு பெரிய ஆள்போல, சிரியாமல் பார்த்தான். தன் வீட்டு ஞாபகமாக மூளையை விட்டு நிற்கிறானா என்று பட்டதும் பாவமாக இருந்தது. 

“என்ன பேர் மேனை, உனக்கு?”- அம்மா கேட்டாள்.

சின்னத்துரை அண்ணையை முந்திக் கொண்டு மறு மொழி சொன்னான். 

“அவங்களிரண்டு பேரையும்போல, இவனும் அழுது கிழுது குழப்படி பண்ணுவானோ?” 

‘அவங்க’ ளென்று ஐயா சொன்னது, ரங்கனையும் செல்லத்துரையையும். சின்னத்துரை அண்ணைதான் வீட்டில் கை உதவிக்கு ஒரு பெடிபெட்டை தேவை என்று கூட்டிக் கொண்டு வந்தார். 

“முட்டுப்பட்ட குடும்பம்…இரண்டு பேரையுங் கூட்டிக்கொண்டு போகச் சொல்லி அவங்கள் கரைச்சல் படுத்தினாங்கள், ஆளுக்காள் உதவியாயுமிருக்கும். ஒருத்தன் வீட்டு வேலைக்கும் மற்றவன் தோட்ட வேலைக்கும் நிக்கட்டும்….”

ஒருத்தனுக்கு மற்றவன். சித்தப்பன். கிட்டத்தட்ட ஒரே வயது. இவனிலும் பெரிய பெடியன்களாக இருந்தார்கள். 

ஆனால் சின்னத்துரை அண்ணை அந்தப்பக்கம் போனதுதான் தாமதம், இரண்டு பேரும் வாசற்படியிலேயே குந்திக்கொண்டு அழத் தொடங்கினார்கள். 

“நாங்க வீட்டுக்குப் போகப் போறோம் அய்யா….” 

ஒரு நாள் முழுக்க அவன்களைப்பிராக் காட்டிய வேலை.

அடுத்த நாள் கார்த்திகை விளக்கீடு. மத்தியானத் துப்பிறகு விளக்கீட்டு அமளிகளில் அவர்கள் அழுகையைக் கொஞ்சம் மறந்தார்கள் என்று பட்டது பொழுது பட்டதும் வீடு வாசலெல்லாம் வரிசையாக ஏற்றி வைத்த சுட்டி விளக் குகள் சந்தோஷத்தை கொடுத்திருக்க வேண்டும். கிணற் றடிக்கு ஒன்று மாட்டடிக்கு ஒன்று, படலையடிக்கு. ஒன்று பனங் பாத்திக்கு ஒன்று – என்று சுருட்டி வைத்திருந்த பந்தங்களை எடுத்து கொண்டு புறப்பட்ட போது, தாங்களுங் கொழுத்துவதாக இரண்டு பேரும் வந்தார்கள். ஆட்களை உசார்ப் படுத்துவதற்காக ஒரு பந்தத்தைக் கொடுக்கலா மென்று சிவம் நினைத்தான். 

பிறந்ததுக்கு கிணற்றையே கண்டிராமல் வளர்ந்தவன் களை, இருட்டினாற்பிறகு யாழ்ப்பாணத்தின் பாதாளக் கிணற் றடிக்கு அனுப்புவது முட்டாள்தனம். பனம் பாத்தியடிக்கு அனுப்புவதிலும் பிரச்சினை இருந்தது. 

“தெரியாத்தனமா உழக்கிக் போடுவன்கள்….” 

படலையடிப் பந்தத்தைக் கொடுத்து, அதை எப்படிக் கொழுத்திக் குத்துவது என்றுஞ் சொல்லிக் காட்டி அனுப்பினான். 

கொஞ்ச நேரத்தில் திரும்பிவந்து, சந்தோஷமாக, “கொளுத்தியாச்சுங்க….” என்றார்கள். 

கால் மணித்தியாலங் கூடி ஆகியிராது. முன் வீட்டி லிருந்து பொன்னரம்மான் ஓடிவந்தார். 

“எடேய் தம்பி. இதென்ன வே?ை ஆரடா, மடலை யடியிலை பந்தங்கொளுத்தினது?” 

“ஏன் அம்மான் என்ன சங்கதி” ஓடிப்போய்ப் பார்த்த போது, படலை வேலி பற்றி எரிந்து கொண்டிருந்தது. 

காவோலை. ஆனால் நல்ல காலம்- மழைக் காலமாயிருந்து, ஓலைகளுங் கொஞ்சம் ஈரமாயிருந்ததான்- நெருப்பு அவ்வளவு பரவவில்லை. ஒரு ஐந்தடி பத்தடி பரவுவதற்குள் எல்லோருமாகத் தண்ணி அள்ளி ஊற்றி, நூர்க்க முடிந்தது. 

ரங்கனையும் செல்லத்துரையையும் ஒருவரும் ஒன்றும் சொல்லா விட்டாலுங்கூட, இந்தச் சம்பவம் அவன்களைப் பாதித்திருக்க வேண்டும் அந்த உற்சாகம் போக, அழுகை மீண்டது. அடுத்த நாள் பின்னேரம், பயணஞ் சொல்லிக் கோண்டு பெடியளையும் பாத்திட்டுப்போக வந்த சின்னத் துரை அண்ணை, அவன்களையும் கூட்டிக்கொண்டே போனார்; 


“இவன் அவன் களைப்போல இல்லை’ குஞ்சியப்பு….படிச் சவன், நல்ல உசாரான பெடியன்….” என்றார் சின்னதுரை அண்ணை. 

சக்திவேலு, உசாராகத்தானிருந்தான். வலு சுறு சுறுப்பு. வேலை சுத்தம். 

அவனைக் கடைக்கு அனுப்புவது மட்டும் ஆபத்தான வேலையாயிருந்தது. தெருவிலிருந்த ‘பயலுக’ ளுடன் ஒரு நாளும் ஒத்து வரவில்லை. 

கிழமைக்கு ஒரு தரம், ‘கே. கே. செல்லழுத்து, இராசாத்தோட்டம், மஸ்கேலியா. என்று புளியங்கொட்டை எழுத்தில் விலாச மெழுதி வீட்டுக்குத் தபால் போடுவான். கே. கே. செல்லமுத்துக்கு முன்னால் ‘திரு’ போடு’ என்று சிவம் சொல்லிக் கொடுத்தான். வருகிற பதில் ‘கடிதங் களுடன் உடுப்புகள், சீப்புக்கண்ணாடி, பழைய சீவரபிளேட் டுகள், போளைகள், வெட்டியெடுத்த வாத்தியார்: படங்கள்- அவனுடைய தகரப்பெட்டிக்குள் இருந்தன. 

வீட்டுக்கோடியில் ஒரு தோட்டஞ் செய்தான் ஒரு கொடித்தோடை நெட்டு, இரண்டு மூன்று சோயா அவரைக் கொடிகள்,- கொஞ்சச் செவ்வந்தி என்று ஒரு பாத்திக்குள். அடுப்படித் தண்ணீர் ஓடுகிற வாய்க்கால் கரையில் முளிைத் திருந்த எலுமிச்சங்கன்று ஒன்று இவற்றுடன் பிறகு சேர்ந்து கொண்டது. கடைக்குப்.. போய் வருகிறபோது வழியில் பச்சையாகச், சந்திக்கிற தடிகண்டெல்லாம் இந்தப் பாத் தியில் இடம் பெறும். முக்கால்வாசி முளைக்காது. 

தெருவிலிருந்து சண்டைகள் செடிகள் இவற்றைவிட இன்னொன்றையும் அவன் கொண்டு வந்தான். ஒரு நாய்க் குட்டி பந்து போலிருந்தது கறுப்பும் வெள்ளையுமாய்ச் சடை. நீலக்கண்கள். குருடாயிருக்குமோ, என்று பட்டது. ஆனால் அப்படியில்லை. பேக்கரிக்கு முன்னால் கத்திக்கொண்டு கிடந்ததாகச் சொன்னான். 

இதன் பிறகு தேர்ட்ட வேலையின் பாதிநேரத்தை நாய்க்குட்டி எடுத்துக் கொண்டது. இரண்டு மொழிந்தால், வாசலடியில் போய்க் குந்தியிருந்து, அன்றன்றைய பேப் பர்களை எடுத்து வைத்து சினிமா விளம்பரப் பக்கத்தைப் பாதிநேரம், தெருவைப் பாதிநேரம் பார்த்துக் கொண்டிருக்கிற வேலை. 

“எடேய், நீ…. படிச்ச நீ பேப்பரை வாசிச்சுப்பாரன்? உதேன், உப்பிடிப் படத்தைமாத்திரம் வைச்சுப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” என்கிற மாதிரி யாராவது ஏதுஞ் சொல்லுமட்டும் 

தோட்டத்துப் பள்ளியில் ஐந்தாவது வகுப்புப் படித்துப் பாஸ் பண்ணியிருந்தாலும், தமில் மட்டும் தான் ஓரளவு எழுதப் படிக்க வந்திருந்தது கணக்கில் மூன்றாம் வகுப்பு மட்டங்கூட இல்லை. இங்கிலீஷ் ஏபிஸிடி, கற்,றற் மற் இங்கிலீஷ் கொஞ்சம் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்து அதன் பிறகு ‘அதைச் சொல்லிக் கொடுக்கிற நேரம், கணக்குச் சொல்லிக் கொடுத்தாலும் அவனுக்குப் பிரயோசன மாயிருக்கும்’ என்று முடிவெடுக்கப்பட்டது நாலாம் வகுப்புக் கணக்குபுத்தகமொன்றும் சிலேற் பென்சிலும் வாங்கிக் கொடுத்து, 

“ஒவ்வொரு கணக்காகச் செய்து பார். விளங்காததைக் கேள்” என்று சிவம் சொன்னான். 

இதன் பிறகு இரவில் விளக்குப் போட்டதும், வாசலடியில் போய்க் குந்தும் போது புத்தகம் சிலேற்றையும் எடுத்துக் கொள்வான். ஒன்றிரண்டு கணக்குக் கேட்ட ஞாயகம். 

உஸ்ஸென்று பைப் சீறியது. தண்ணிவரப் போகுதோ? இன்னும் கொஞ்ச சீறலின் பிறகு தண்ணி வந்தது. தண்ணி தான்! 

சிவம் பரபரத்து எழுந்து, பேணியில் அதை ஏந்தினான். – கறளும் வரலாம். 

ஆனால் வரவில்லை. சுத்தமான தண்ணி. வழமை போல் வந்தது. 

பிரச்சனை தீர்ந்த ஆறுதல். எவ்வளவு சந்தோஷம். பைப்பை முழுக்கத் திறந்து விட்டான். ‘நின்றாலும்-‘ 

நேரம் போனாலும் குளிக்கத்தான் வேணும் என்றிருந்தது. 


சக்திவேல், நெடுகக் கணக்குப்புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு அதற்குள்ளே பார்த்தபடியே இருக்கிறான் என்று ஒரு நாள் சிவம் மெள்ளப் பின்பக்கமாகப் போய் எட்டிப்பார்த்தான். 

இடுப்பில் கையை வைத்தபடி, தலையைச் சாய்த்துக் கொண்டு, விரித்த புத்தகத்துக்கிடையில் வாத்தியார் நின்றார். 

வாத்தியாரைப் பார்ப்பதும், சைக்கிள் ஓடப் பழகு வதும் அவனுடைய இலட்சியங்கள். 

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணம் மலைக்குப்போன பிறகு, ஒரு நாள் செல்லமுத்து விடமிருந்து தபால் வந்தது. 

நாங்களெல்லோரும் இந்தியாவுக்குப் போக ஏற்பாடு செய்கிறோம். அது காரியமாக எல்லாரும் ஒரு தரம் கண்டிக்குப் போய் வர வேண்டியிருக்கிறது. சக்திவேலுவும் வரவேணும். அனுப்பினால், அந்த வேலையுடன் பொங்கலையும் முடித்துக் கொண்டு, இரண்டு கிழமைக்குள் திரும்பக் கொண்டு வந்து விடலாம். 

‘செல்ல முத்துவுக்குப் பைத்தியம்’ என்று ஏச முடிந்தது என்ன முட்டாள்தனம்? கிடைத்த இலங்கைப் பிரஜா உரிமையை உதறிவிட்டு முன்பின் காணாத ஊருக்குப் போய்விட எவனாவது யோசிப்பானா? – அதுவும் அதற்காக இத்தனை ஆயிரம் பேர் தவங்கிடக்கும் போது? 

இப்போது – இந்த இனக் கலவரம் முடிந்து – யோசிக் கையில், செல்ல முத்து செய்ததென்னவோ புத்திசாலித் தனமான காரியமாகத் தெரிகிறது. 

மகனைத் திரும்பக் கூட்டிக் கொண்டு வந்த ஆளிடங் கேட்டபோது 

“நமக்குப் பிரஜா உரிமை கிடைச்சு என்னாங்க பிரயோ ஜனம்? இங்க சொத்து சுகம் ஒண்ணுமில்லீங்களே. தோட்டத் திலேயும் இப்ப ஒழுங்கா வேலை கிடைக்குதில்லை….” 

“உங்களுக்கு இருக்க இடமில்லையெண்டா, யாழ்ப்பாணத்துக்கு வாங்கோ-குடியிருக்கிறதுக்கு இரண்டு பரப்புக் காணி தரலாம். அங்கை வடிவா வேலை செய்து பிழைச்சுங் கொள்ளலாம்….” 

செல்லமுத்து ஒரு கணம் நிதானித்தார். 

“அது சரிதாங்க… ஆனா, ஊரிலை நமக்கு உறவுக் காரங்க இருக்காங்க…. அங்க போய்ட்டா….” 

“ஊரா? இந்தியாவிலையா?….” 

“ஆமாங்க….” – ஏதோ ஒரு ஜில்லா பேரையும் ஊரையும் சொன்னார். 

“எப்பவாவது இந்தியாவுக்குப் போயிருக்றீங்களா?….” 

“இல்லீங்க… நா ஒரு நாளும் இது வரையிலை போனதில்லீங்க…”

“அப்ப -?” 

“நம்ம தாத்தா ஊருங்க, அது. தாத்தா அங்கேயிருந்து தான் கண்டிக்கு வந்தாரு. அப்புறம் நம்ம தகப்பன் இரண் தரம் போய்ப் பாத்துட்டு வந்திருக்காரு…” 

“உங்கட தகப்பன் உயிரோட இருக்கிறாரா?” 

“இல்லீங்க…. அவரு செத்து நாலஞ்சு வருஷமாயிட்டுது….”  

“எதுக்கும் நல்லா யோசிச்சு முடிவெடுங்கோ…. நீங்க எப்ப வாறதெண்டாலும் இடந்தரலாம்….” 

இந்தக் கதையின் பிறகு, சத்திவேல் அடிக்கடி, ‘இந்தியா’, ‘இந்தியா’ என்று பேசத் தொடங்கியிருந்தான்.

“இந்தியாவுக்குப் போனால் வாத்தியாரைப் பார்க்கலாம்” என்று அவன் சொன்னதாக சின்னத் தங்கச்சி சொன்னாள். 

சத்திவேலு ஊருக்குப் போய்விட்டு வந்தபோது, ஒரு கட்டு ‘பூஞ்சிடி’ கொண்டு வந்திருந்தான். டெய்லியாஸ், காணேஷன், பச்சை றோஸ் – என்று இன்னும் என்னென் னவோ. திருகோணமலையின் வெக்கையில் அந்த மலைநாட் டுத்தாவரங்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு நின்றன. தாங்க முடியாத கோடைகளில் அந்த ஊர்த் தண்ணீர்க் குழாய்களும் அடிக்கடி வரண்டு போய்விடும். 

இப்படியான ஒரு நாளில், தண்ணீர் ஒரு பிரச்சினையாகித் தத்தளித்த வேளையில் சத்திவேலு ஓடி வந்தான். 

“அண்ணே, அண்ணே…. இங்கே வந்து பாருங்களேன்!” 

சிவம் போய்ப் பார்த்தபோது, இந்த மாதிரி – பைப்பில் சொருகிய பிளாஸ்ரிக் குழாயிலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 

தண்ணீர் இல்லாத வேளைகளில் குழாயைச் செருகி. வாயால் அதை உறிஞ்சியதற்காக இரண்டு மூன்று தரம் ஏச்சுவாங்கியிருக்கிறான். 

இது எப்படி சாத்தியமாகும்? தெரு மெயின் லைனின் அடியில் நீர் மீந்து தேங்கியிருக்கலாமென்றும், இங்கு ஊற்றுகிற நீர் அதனுடன் போய்ச் சேர்கிற நேரத்தில் தொடர்பு அறாமல் இழுவையை உண்டாக்குவதால் அது உறிஞ்சப் உடலாமென்றும் சிவத்துக்குப்பட்டது. 

“சக்திவேலு, தண்ணிச் சத்தங்கேட்காம வாளியைத் தள்ளி வை…. அக்கம் பக்கத்து வீடுகளிலை கேட்டா யோசிப் வினம்….” என்று பெரிய தங்கச்சி சொன்னாள். 


எல்லாம் முடித்துக் கொண்டு சிவம் குளிக்கிறஅறைக் கதவைத் திறந்து வெளியே வந்தபோது, “நேரம்-ஏழு மணி, ஐந்து நிமிடம்” என்று ரேடியோ சொன்னது. 

கிட்டத்தட்ட முக்கால் மணித்தியாலத்துக்கு மேலை, இதுக்குள்ளை போயிருக்கு என்று உணர்ந்தான். இன்றைக்கும் ஏழரை மணி பஸ்ஸைப் பிடிக்க முடியாது போலிருந்தது. 

– கணையாழி, ஜூலை 1979.

– முளைகள் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: பிப்ரவரி 1982, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *