பொன்னை விரும்பும் பூமியிலே….!





நன்றாக நினைவிருக்கிறது…!அன்று அவனுக்குக் கல்யாணத்துக்குப்பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. ஒரு பெண் அவனுக்குப் பிடித்திருந்தது. ஆனால், அவன் அம்மா ஒற்றைக் காலில் நின்று அதை வேண்டாம் என்று மறுத்தாள்!

அவனுக்கு அதுதான் வேண்டுமென்று சொல்லி, தான் ஒற்றைக்காலில் உறுதியோடு நிற்கத் திராணியில்லாத நிலை.
அம்மா அந்தப் பெண் பாலக்காட்டுக்குப் பக்கம் என்பதால் மறுத்தாள்.
அவன் அம்மாவானவளுக்கு தன் வீட்டுக்காரர் சம்பாதித்த பத்துசெண்ட் நிலமும் வீடும் பாழாகிவிடக்கூடாது வேற கைக்குப் போய்விடக்கூடாது என்னும் பேராசை.
அவனுக்கோ பெண் அழகாய் இருப்பதால், அதன்மேல் ஒரு நப்பாசை!.
எங்கோ கல்யாணம் முடிந்து எல்லாம் முடிந்து வருஷம் ஐம்பதாச்சு!
அம்மாவோடு சேர்ந்து அவள்வீட்டுக்காரர் சம்பாதித்த நிலமும் வீடும் மட்டுமென்ன அவன் ஆசையும் தவிடு பொடியாகி நிராசையாச்சு!!
‘கேரள நாட்டிளம்பெண்களுடனே…!’ என்று பாடின பாரதி ஆசையை அனுமானித்தோமா… ?காணி நிலத்தைக் கைப்பற்றத்தான் அவனுக்குக் கைகொடுத்தோமா?
எல்லாக் கவிஞர்களின் கனவுகளும் தப்பான அனுமானங்களால்தானே தவிடு பொடியாகிறது! தரைமட்டமாகிறது.
பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதில்அல்ல..அவர்களின் ஆசைகளைக் கற்று வளர்ப்பில்தான் பெருமையிருக்கிறது…!
ஜெயசூர்யாவின் ஜிலபி மலையாளப் படம் பார்த்து ஞானொரு மலையாளி… மண்ணான ஜீவன்.. மண்ணிலான ஜீவன்எனும் பைபிள் வரிகள் மின்னும் பாடலுக்குத் பிரதிபலனாகத் தாரைதாரையாய்க் கண்ணீர் விட்ட அவன் தவிப்பை பெற்றவள் மட்டுமல்ல., கேரளப்பெண் என நிராகரிக்கப்பட்டவள் நெஞ்சும் உணராமலே காலம் ஒழிந்துபோனது.
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |