உஷ் காக்காவும் ஒய்யாரக் காக்காவும்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: October 22, 2024
பார்வையிட்டோர்: 8,632 
 
 

அன்று நிறைஞ்ச அமாவாசை. தர்ப்பணம் கொடுக்கத் தயாரானார் தட்சிணாமூர்த்தி. அப்பா அம்மாவுக்குப் பிதுர்க்கடன் செய்ய தலை வாழை இலையும் அன்று சமைத்த வடை பாயாசம் பச்சரிசி சாதம் அப்பளம் வாழைப்பழம் ஒன்றும் மறக்காமல் மேல் மாடிக்கு எடுத்துப் போய் கைப்பிடிச்சுவரில் தண்ணி ஊற்றிக் கழுவிச் சுத்தம் பண்ணி இலையில சாதமிட்டு ’கா… கா…!’ என்று கரைந்தார்.

ஊம்..! ஒரு காக்கா வர்லையே?! உள்ளம் ஒடிஞ்சு போயிட்டார். என்ன தப்பு தெரியலையே? காக்கா வந்து சாதம் எடுத்தாத்தான் வாத்தியாருக்குச் உணவு படைக்க முடியும் காணிக்கை கொடுத்து கவனித்துவிட்டு கையலம்பித் தான் சோறு சாப்பிடஉக்கார முடியும்?

மருந்துக் குக் கூட ஒரு காக்காவைக் காணோம்! மலைத்துப் போய் நிற்கையில் பக்கத்து மரத்திலிருந்து பறந்து வந்தது ஒரு காகம். காக்கான்னு மரியாதையில்லாம இனி சொல்லக் கூடாது! படைப்பை எடுக்க வந்திடுச்சு பாருங்கோ?!

‘எடுத்துக் கோ…! சாப்பிடு!.. சப்பிடு…! கெஞ்ச்சிக் கூத்தாடினார். ஆனால் அது ‘ஒரு பக்கம் பார்க்கிறா… ஒரு கண்ணைச் சாய்க்கிறா அவ உதட்டைக் கடிச்சுகிட்டு மெதுவாக சிரிக்கிறா சிரிக்கிறான்னு பாடுனா மாதிரி ஒருபக்கம் கண்ணைச் சாய்ச்சு பார்த்தது முகத்தை திருபிச்சு.. சாப்பாட்டை எடுக்கணூமே மூச்!

தட்சிணாமூர்த்தி தவிச்சுப் போயிட்டார். கண்னுல ஜலம்விட்டுட்டார். அதைப் பார்த்து இரங்கின அந்த ஒய்யாரக் காக்கா கரைந்து ஏதோ சொல்லிச்சு என்னன்னு புரியலை…! அங்க நின்ன அவர் மகன் தான் விவரம் சொன்னான்.

‘அப்பாவை அழைத்து,.. ‘அம்மா எத்தனை முறை எனக்குச் சோறூட்டும் போதெல்லாம் பின் வாசல்ல என்னை இடுப்புல வச்சுட்டு ‘சாப்பிடறயா இல்லே ‘உஷ் காக்காவுக்கு’ கொடுக்கஸ்ட்டுமான்னு சொல்லீட்டு, அதையும் கொடுக்காம வந்து நிக்கும் காக்காவை ‘உஷ் போ! னு சொல்லி துரத்திருக்கா?!ஏமாத்தியிருக்கா?!

உஷ்காக்கான்னு உண்ண வந்த காக்காவைத் துரத்திட்டு, இப்ப அமாவாசைக்கு மட்டும் ஒய்யாரமா வந்து உக்கார்ந்திருக்கற காக்கைக்கு ஓசாரம் ப்ண்ணினா அது உண்ணுமா?ன்னு கேட்டான்.

அவன் கேட்டானா இல்லை அந்த் ஒய்யாரக் காக்கை காலாலே நிலத்திலே கோலம்போட்டபடி சொல்லிச்சான்னு தெரியலை. தட்சிணாமூர்த்தி தப்பை உணர்ந்து கன்னத்தில் போட்டுக்கொள்ள காகம் அன்னத்தில் வாய் வைத்தது!

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *