ஸதாநந்த போதக சாமியார்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 7, 2025
பார்வையிட்டோர்: 633 
 
 

(1933ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4

ஏமிஜேசேதிரா, ராமாநுஜா! எதிராஜா!! 

நமது கதை ஆரம்பமான காலத்திற்குப் பல ஆண்களுக்கு முன்னர் சென்னையில் ரமணைய செட்டி யார் என்ற பெயருடைய கோமுட்டிச் செட்டியார் ஒருவர் இருந்தார். அவர் வெளியூர்களில் உற்பத்தியான பலவகைப் பட்ட பழங்களை மொத்தமாக ரயிலில் தருவித்து சில்லரை வியாபாரிகளுக்கு விற்பவர். அதிக பிரயாசையின்றி அந்த வர்த்தகத்தில் அவருக்கு நாள் ஒன்றுக்கு ஐம்பது ரூபாய்க்குக் குறையாமல் இலாபம் தேறும். அவ்வாறு பல வருஷ காலம் தொடர்ச்சிபாய் இலாபம் சம்பாதித்து, வட்டியின் மூலமாயும் அதை ஏராளமாகப் பெருக்கி சுமார் இரண்டு லக்ஷம் ரூபாய் வரையில் சேர்த்திருந்தார். அந்தக் காலத்தில் ‘பாங்கி’யில் பணம் போடும் வச தி ஏற்படவில்லையாகையால், அவர் சுமார் ஒரு லக்ஷம் ரூபாய் வரையில் கொடுத்து அரண்மனைக்காரத் தரு முதலிய இடங்களில் பல வீடுகளை வாங்கி, குடிக்கூலிக்கு, ட்டிருந்தார். மிகுதியிருந்த பணத்தை அவா தமது வீட்டில் ரூபாய்களாகவும், பவுன்களாகவும், நகைகளாகவும் இரும்புப் பெட்டியில் வைத்து பத்திரப்படுத்தி, பூமிக்குள் கட்டப் பட்டிருந்த ஒரு குடவறைக்குள் மேற்படி பெட்டியை மறைத்து வைத்திருந்தார். தரையின்மேல் ஓர் இரும்புக் தகடு போட்டு அறையின் வழி மூடப்பட்டிருந்தது. அதன் ஒரு தஓர் இரும்பு வளையத்தைப் பிடித்துத் தூக்கினால், உள்பக்கத்தில் இரும்புப் பெட்டியும், மனிதர் உள்ளே நின்று பெட்டியின் கதவுகளைத் திறப்பதற்குத் தேவையான இடவசதியும் இருந்தன. அவ்வாறு இரும்புப் பெட்டியோடு கூடிய குடவறையிருந்த அறை அவருடைய வீட்டின் நடுமத்தியில் பந்தோபஸ்தான பாகத்தில் இருந்தது. அந்த அறையின் கதவு கால் அடி கனமுடைய அழுத்தமான நூக்க மரப் பலகையினால் செய்யப்பட்டிருந்ததன்றி, கதவு, பெரிய சட்டி போன்ற பிரம்மாண்டமான பூட்டினால் பூட்டப்பட் டிருந்தது. 

செட்டியாருக்கு சுமார் நாற்பது வயதிருக்கலாம். அவரு டைய உடம்பு சாம்பல் பூத்த கருப்பாயிருக்கும். அவர் குள்ள மான வடிவ முடையவரா யிருந்தார். முன்பக்கத்தில் தொந்தி யும், பின்பக்கத்தில் இரண்டு பிரஷ்ட பாகங்களும் குண்டுப் பூசனிக்காய்கள்போல் வெகுதூரம் வெளிப்பட்டுப் பிதுங்கி நின்று, தத்தள தளதள வென்று குலுங்கிக் குலுங்கி ஆட்டம் போடும். மார்பு மடுவுபோல் குழிந்தும், இரண்டு புஜங்களும் கைகளும் அதன் கரைகள் போல் உயர்ந்தும் இருக்கும். அதுவன்றி முகமும் நேராய் நிற்காமல், ஒட்டகத்தின் முகம் போல் முன்னால் நீண்டிருக்கும். கண் விழிக ளிரண்டும் பயங்கரமாக வெளியில் பிதுங்கிப்போ யிருக்கும். அவர் மிக சாந்தமாகப் பேசும்போதுகூட, அவரது அடித்தொண்டைப் பேச்சும், பிதுங்கிய விழிகளும் எதிரிலிருப்போரை நடுங்கச் செய்யும். அவர் சிறிது கோபமாகப் பார்த்துப் பேச ஆரம் பித்தால், அவருடைய கண்விழிகளைச் சேர்ந்தாற் போல் இரண்டு நிமிஷ காலம் நாம் பார்த்திருக்க முடியாது. கண் வலியினால் சிவந்துபோயிருக்கும் சண்ணைப் பார்ப்பது எப்படி கதிரிலிருப்போருக்குக் கூச்சத்தையும், கண்ணீரையும் உண்டாக்குமோ, அதே நிலைமையை உண்டாக்கும். ஆகவே, எந்த வியாபாரியும் அவரிடம் அதிகமாய் வாக்குவாதம் செய் யவோ, பேரம் பேசவோ அஞ்சி, அவருடைய நோக்கத்தை அநுசரித்தே நடந்துகொண்டு போய்விடுவார்கள். 

அவருடைய மனைவியும், மனைவியைச் சேர்ந்த மனிதர் களும் நெற்றியில் கரிப்பொட்டு, சந்தனப் பூச்சு முதலிய மத சின்னங்களைத் தரித்தவர்கள். அவர்கள் கந்தசாமியைத் தெய்வமாக வணங்கினவர்கள் ரமணைய செட்டியார் சென்னையிலிருந்த பிரபல வர்த்தகர்களான கோமுட்டிச்செட் டியார்கள் நல்ல பக்திமான்களான வைஷ்ணவர்களா யிருந்த தைக் கண்டு, தாமும் அவர்களைப் போல் நடிக்கத் தொடங்கி நெற்றி முழுதிலும் பளிச்சென்று பெரிய நாமமிடும் வழக் கத்தை அநுசரித்ததன்றி சமய சந்தர்ப்பமின்றி ராமாநுஜா, எதிராஜா என்று குருநாம ஸ்மரணை செய்துகொண்டே இருப் பார். அவர் பழையகாலத்துக் கர்னாடகச் செட்டியார் நாகரிகத் தோடு சிறிதளவு இங்கிலீஷ் நாகரிகத்தையும் கலந்துகொண் டவர். அவர் இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் படிக்கவில்லையானா லும், பழக்கத்தில் பொட்லர் இங்கிலீஷ் சிறிதளவு கற்றுக் கொண்டிருந்தார். எப்படி யென்றால், அவரிடம் நேரில் பழங் கள் வாங்கும் பொருட்டு பல வெள்ளைக்கார தொரைஸானி கள் பொட்லர்கள் முதலியோர் வருவார்களாதலால், அவர்கள் இங்கிலீஷும் தமிழும் கலந்த மணிப்பிரவாள நடையில் பேசியதைக் கண்டு தாமும் அதே போலப் பேசக் கற்றுக் கொண்டார். ஈச் ஒண்ணணாஸ், மாடம் (Each one annas, Madam). புருட் வெரி டேஸ்ட், மாடம் (Fruit very taste, Madam), மாங்கோ ஸீஸன் கானேகான், மாடம் (Mango season gonay gone, Madam) என்று சண்டமாருதமாக செட்டியார் இங்கிலீஷைப் போட்டு கொறுக்கித் தள்ளிவிடுவார். மற்ற பெரும்பாலோரான செட்டிமார்கள் பணத் தை ஏராளமாக வைத்துக்கொண்டிருந்தாலும், தாமும் அநுபவி யாமல், பிறர் விஷயத்திலும் எச்சிற் கையால் காக்கை ஓட் டாமல் இருந்ததுபோ வின்றி நமது ரமணைய செட்டியார் ஒரு விஷயத்தில் வேறு மாதிரி நடந்துகொண்டார். பிறர் சம் பந்தப்பட்ட வரையில் அவர் பரமலோபியாக நடந்துகொண் டாரானாலும், தமது சொந்த சுகபோகங்கள் சம்பந்தப்பட்ட மட்டில் அவர் டம்பாச்சாரிக்கு அண்ணனாய் நடந்துகொண் டார். உதாரணமாக, அவருடைய சொந்த மனைவி மாம்பழம் வேண்டுமென்று கேட்டால், தமது கிடங்கில் அழுகிப் போய் விற்பனைக்கு அருகமற்றவையாகி குப்பைத் தொட்டிக்குப் போக வேண்டிய நிலைமையிலிருக்கும் பழங்களில் சிலவற்றைக் கொடுத்தனுப்புவார்; அவர் வைத்திருந்த தாசி தனக்குயி லுக்கு ஒவ்வொருநாளும் வந்த புதுதினிசு பழங்களில் முதல் தரமானவைகளாகப் பொறுக்கி ஒரு கூடை நிறையக் கொண்டு போய் நிவேதனமளிப்பார். அவர் சில விஷயங்களில் மிக கூர்மையான புத்தியோடு நடந்து கொண்டால், சில விஷயங் களில் அடியோடு ஏமாறிப் போவார். அவருடைய யாள் கட்டியும் உருண்டையுமாய் ஏராளமான நகைகளை அணிந்து கொண்டிருந்தாளானாலும், முகத்தில் இயற்கையான களையும் ஜ்வலிப்பும் இல்லையாதலால், அவ்வளவும் பிரேதத் திற்குச் செய்யப்பட்ட அலங்காரம் போலவே இருந்தது. நகைகளையும், பட்டாடைகளையும் விலக்கி, சாதாரண ஆடை யாபரணங்களில் பார்த்தால், செட்டியாரம்மாள் சாக்ஷாத் பஞ்சமச் சேறியிலிருந்து நேரில் அப்போதே வந்தவள்போ லிருப்பாள். ஆனால் அந்த அம்மாளுடைய ஆசாரமோ பிரமாதமானது, வீட்டில் பின்னாலுள்ள கக்கூசுக்கு பகலில் எப்போது போனாலும் தனது ஆடைகள் முழுதையும் அவிழ்த்து வைத்துவிட்டு, சுத்த நிர்வாணமாக போய்விட்டுத் திரும்பி வந்து ஸ்நானம் செய்து, பிறகு ஆடைகளை அணிந்து கொண்டு வீட்டிற்குள் நுழைவாள். அவளுக்கு மூன்று வய திலும், ஒரு வயதிலும் ஆண் குழந்தைகள் இரண்டு இருந் தன. ஆகவே செட்டியாருக்கு தம் மனையாட்டி கசந்து போகலே, அவர் மாதம் ஒன்றுக்கு 100 ரூபா கொடுத்து, தனக்குயில் என்ற முதல்தர தாசிப் பெண் ஒருத்தியைக் கொணர்ந்து, தமக்குச் சொந்தமான ஒரு பெரிய மெத்தை வீட்டில் வைத்துக்கொண் டிருந்தார். அவளுக்கு சமையல் முதலியன செய்து உபசரிக்க ஒரு வேலைக்காரியும், வெளிக் காரியங்களைச் செய்து கொடுக்க ஒரு போயியும் நியமிக்கப்பட் டிருந்தனர். அவருடைய வீட்டின் கதவு எப்போதும் மூடி, உள்புறம் தாளிடப்பெற்றிருந்தது. உள்புறத்தில் நடையில் போயி கையில் நூலை வைத்து மீன் பிடிக்கும் வலை பின்னிக் கொண்டே ஆஜராய்க் காத்திருந்தான். 

செட்டியாருடைய பழக்கடை வேலை பகல் பத்து மணிக் குள் தீர்ந்து போகுமாதலால், அவர் அதன்பிறகு தமது வீட் டிற்கு வந்து ஸ்நானபான அநுஷ்டான நியம நிஷ்டைகளை யும் போஜனத்தையும் முடித்துக்கொண்டு நான்கு மணிவரை யில் வீட்டில் இருப்பார். மணி சரியாக நான்கு அடிக்கை யில், அவருடைய மோட்டார் வண்டி ஆயத்தமாக வீதியில் வந்து நிற்கும். செட்டியார் தத்ரூபம் புது மணப்பிள்ளை போலவே தம்மை அலங்கரித்துக் கொண்டு போய் மோட் டாரில் உட்கார்ந்துக்கொண்டு சவாரி புறப்படுவார். பிறகு இரவு சரியாய் ஒன்பது மணிக்கே அவர் தமது சொந்த வீட் டிற்கு வந்து சேருவார். 

அதுபோல ஒரு நாள் பிற்பகல் நான்கு மணிக்குப் புறப் பட்ட செட்டியாருடைய மோட்டார் வண்டி பத்து நிமிஷங் களில், அவருடைய தாசி தனக்குயிலின் ஜாகைக்கு முன் னால் போய் நின்றது. வண்டியோட்டி ரத்னவேலு என் னும் யௌவனப் புருஷன் உடனே இறங்கி வந்து கதவைத் திறந்துவிட, செட்டியார் “ராமாநுஜா” என்று குரு நாமஸ்மரணம் செய்தபடி கீழே இறங்கி, தமது சோட்டாத் தடியை ஊன்றி, தொந்தியையும், பிரஷ்டபாகங்களையும் அப் புறம் இப்புறம் ஆட்டியாட்டிக் கோணங்கி நடை நடந்து, தாசி வீட்டின் முன்வாசற் கதவண்டை போய் சோட்டாத்தடி யால் கதவை மெதுவாய் ரண்டு மூன்றுதரம் லொட்டு லொட்டென்று தட்டி,உஹு உஹு என்று கனைத்து அடித் தொண்டையால் பேசத் தொடங்கி, ” அரே, எவுர்றா அக் கடா? அரே போய்” என்றழைக்க, உள்ளே சிறிது தூரத்தில் இருந்த போயி,”ஆஜர், தேவரா,” என்று கூறித் தனது உடைகளை சரிப்படுத்திக்கொள்ள, உடனே செட்டியார் பொறுமையின்றி மறுபடி பலமாய்த் தட்டி, “அரேய், தலுபு, “அரேய்,தலுபு, ஜல்தி, எந்த ஸேபுரா! முண்டா கொடகா,” என்று அதட்டினார். 

உடனே போயி, “ஒச்சே, ஒச்சே, ஒஸ்துன்னானு தேவரா” என்று கூறிக்கொண்டு கதவைத் திறந்துவிட்டு “தண்டாலு ஸ்வாமி’ என்று கூறி வணக்கமாய் அஞ்சலி செய்து, கைகளைக் கட்டிக்கொண்டு ஒரு பக்கமாய் ஒதுங்கி நிற்க, செட்டியார், “மஞ்சீதி, அரே ஸோலிகாடு, பண் ட்லோ, ஒக கம்பலோ பண்டலு உன்னாய், திஸுகுரா” என்று உத்தரவு கொடுத்தபடி ஸொகுஸாக மேலும் நடக்க, போய, “புத்தி, புத்தி,” என்று கூறிக்கொண்டே வீதியிலிருந்த வண்டிக்கி ஓடி, உள் பக்கத்தில் இருந்த பழக்கூடை ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தான். 

தொப்பைச் செட்டியார் அடிக்கடி, ராமாநுஜா “எதிராஜா ர என்று உரக்கக் கூறுவதும், இடையிடையில் வேண்டுமென்றே அடித்தொண்டையால் கனைத்துக் குரல் கொடுப்பதுமாய் ஆடி ஆடி அசைந்து தொந்தியை இடது கையால் தடவிக்கொண்டே முதல் கட்டுத் தாழ்வாரத்தைக் கடந்து எதிரிலிருந்த படிக்கட்டின் வழியாய் ஏறி மேன் மாடம் போய்ச் சேர்ந்தார். அவருக்குப் பின்னால் பழக்கூடை யோடு தொடர்ந்து வந்த போயி, அதை, மேன்மாடக் கூடத் தில் போடப்பட்டிருந்த சோபனாலங்கிருதக் கட்டிலிற்குப் பக்கத்தில் வைத்துவிட்டு, ஒரு மூலையில் கெங்காளத்தில் ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்த ஜலத்தை ஒரு செம்பில் எடுத்து செட்டியாருடைய கால்களிரண்டையும் அலம்பி விட, அவர் ராமாநுஜா” எதிராஜா என்று பல மாய்க் குரல் கொடுத்தபடி வெல்வெட்டு மெத்தைக் கட்டி லின்மேல் போய் ஸொகுஸாய் உட்கார்ந்துக்கொள்ள, உடனே போயி, கீழே இறங்கி அடிப்பாகத்திற்குப் போய்விட்டான். 

செட்டியார் இரண்டொரு நிமிஷம் அப்புறம் இப்புறம் கவனித்துப் பார்த்து ஆந்தைபோல் விழித்து, எவரும் வரா ததை உணர்ந்து, “ஹலோ, மை டியர் தனக்குயில், ஹியர் இஸ் ஸம் பிரஸன்ட் டு யூ ” (Hallo, my dear Dhanaquil here is some present to you) என்று இங்கிலீஷில் கூறி, செல்லக் கூப்பாடு போட்டார். அது தமிழில் “ஏ, என் அருமை தனக்குயில் இதோ உனக்குக் கொஞ்சம் சன்மா னம் வந்திருக்கிறது’ என்றாகிறது. 

அடுத்த நிமிஷம், டக் டிக்கென்று கால் மெட்டிகளும் கல் கல்லென்று பாதச் சிலம்புகளும் சப்தம் செய்கின்றன. பட்டுப்புடவை ஸரஸரவென்று உராயும் ஓசை யுண்டாகிறது. ரோஜாப் புஷ்பம், அத்தர், ஜவ்வாது முதலியவற்றின் ஒன்று கலந்த பரிமள கந்தம் குபீரென்று ஓடி வந்து அந்தக்கூடம், கட்டில், செட்டியாருடைய நாசித்துவாரங்கள் முதலியவற் றில் பூர்த்தியாக நிறைந்துகொண்டு, ” எச்சரிக்கை பராக், இந்திராணி வருகிறாள் ” என்று கட்டியங்கூறுகிறது. செட்டி யாருடைய முகம் ஆநந்தத்தினால் மலர்ந்து ஒன்றிற்கிரண்டு பங்ககலம் ஜல்லடைபோல் விரிகிறது. வாய் விரிந் காதுகள் வரையில் நீண்டு போகிறது. இருளில் பெரிய மின்னல் தோன்றி, அதைப் பிளப்பதுபோலவும், நடுவில் எலெக்ட்ரிக் வெளிச்சத்தினாலான ஒரு ஸ்திரீ ரூபம் தோன்றுவதுபோலவும் தகத்தகாயமாக மின்னிய ஸ்வர்ணச்சாயலைக்கொண்ட ஒரு யௌவன மடக்கொடி தனது கையில் பூஜைத்தட்டு, பனாரீஸ் பட்டு வஸ்திரம் முதலியவற்றை ஏந்தி, நாணிக்கோணி, மார் பை நெளித்து, மாறி மாறி இரண்டு பக்கத்து ஸ்தனமிதுனம் தன் தன் அருமை பெருமைகளைப்பற்றி ஓரத்தியாயம் ஊமை ஜாடைப் பிரஸங்கம் புரியும்படி காட்டிக்காட்டி ஒய்யார  நடை நடந்து, கீழே குனிந்து கட்டை விரல்களைப் பார்த்தபடி அன்னம்போல் ஊர்ந்துவந்து செட்டியாருடைய காலகளுக்கடியில் தட்டு முதலியவற்றை வைத்து, இரண்டு கைளையும் தாமரை மொட்டுபோல் அழகாகக் குவித்து, “வாங்க ஸாமி, தாஸனங்க” என்று கூறித் தனது அழகான பல் வரிசைகளை சொற்பமாய்த் திறந்து புன்னகை செய்ய, செட்டியார் அப்படியே இன்பசாகரத்தில் தோய்ந்துபோனார். சந்ே தோஷப் பெருக்கினால் விரிந்துபோன அவருடைய முகம் சுருங்காமல் சாசுவதமாகவே நிலைத்து நின்றுவிட்டது. 

அந்த தாசிப்பெண் தமிழ்ப்பாஷை பேசும் ஜாதியைச் சேர்ந்தவளாதலால், செட்டியார் அவளுடன் தெலுங்கில் பேசா மல் தமிழிலேயே பேசுவது வழக்கம். அவளுக்கு வயது பதினெட்டிற்குமேல் இருபதிற்குள்ளாகவே இருக்கும். உடம்பு கொடிபோல சிறிது நெட்டைப் பாங்கா யமைந் திருந்ததாயினும், இருக்கிறதோ இல்லையோ என்ற சந்தே கத்தை உண்டாக்கிய துவண்ட குறுகிய இடையைத் தவிர மற்ற அங்கங்களெல்லாம் பூசி விடப்பட்டதுபோல கரவு சரிவாயும் தளதளப்பாயும் செழுமையாயும் இருந்தன. தேர்த்தட்டுபோல மேல்பாகம் பருமனாயும், கீழ்ப்பாகம் சரி வாயும் அமைந்திருந்த அவளுடைய இடையோடு ஒட்டினாற் போலிருந்த நீல வெல்வெட் பாவாடை சென்று, தகத்தகாயமாய் மின்னிய ஜரிகைப் பேட்டிலும், மல்லிகை மொட்டுகள்போல் சுற்றிலும் தொங்கிய ஜரிகைக் குஞ்சங்களிலும் போய் முடிந்ததும், அதன்கீழ் பட்டைக் கொலுசு முதலிய ஆபரணங்கள் தந்தம்போலிருந்த கால்களை அழகுபடுத்தியதும், மேல்பாகத்தில் ஜரிகைப் புட்டாக்கள் நிறைந்த ரோஜா வர்ண தாவணியை இலேசாய்ப் போட்டு, இடையில் ஒட்டியாணம் அணிந்திருந்ததும், கட்டுக்கடங்கா மல் வளர்ந்து செழித்து நீண்டு கிடந்த அளகபாரத்தை பக்க வகிடு செய்து அடக்கிப் பின்னி தாழப்பூக் கிள்ளுகளை வைத்து அகலமாய்ப் பின்னி பின் முழங்கால் வரையில் தொங்கவிட்டிருந்ததும், தலையில் பெரிய ரோஜாப் புஷ்ப மொன்றைச் சொருகிக்கொண்டிருந்ததும், நெற்றியில் அகலமான ஜவ்வாதுப் பொட்டிட்டிருந்ததும், அந்த அற்புத அலங்காரத்தில் அவள் தனது கைகள், கால்கள், உடம்பு முத லிய அங்கங்களை, வில்வைத்த சக்கரங்களை (Spring wheels) அநாயாசமாயும், வேகமாயும், சுலபமாயும் இயக்குவதுபோல பொறித்தட்டும் காலத்தில் இயக்கித் தனது அலுவல்களைச் செய்ததும்,உலகத்தை மயக்கி வசீகரிக்க வந்த மோகனாவ தாரக் காட்சிகளாய் அமைந்திருந்தன. 

அவளுடைய உடம்பிலும், ஆடைகளிலும் கமகம் வென்று கமழ்ந்த மாதுரியமான மணம், அந்த மேன்மாடம் முழுதையும் நிரப்பி, காற்றின் மூலம் அண்டை வீடுகளுக்குள் ளெல்லாம் பிரவேசித்துக் கலகம் விளைத்தபடி இருந்தது. செட்டியார் பரம பாகவதோத்தமர் என்பதை அந்த வசீகர வஞ்சி உணர்ந்துகொண் டிருந்தாளாதலால், அவருக்குத் தகுந்தபடி அவள் நடந்து கொண்டாள். அவள் அவரை நமஸ் கரித்தவுடன், செட்டியார், அவள் கொண்டுவந்திருந்த பன் னீர்க் கூஜாவை எடுத்து அவள் மீது தலை முதல் கால்வரை யில் மெதுவாய்த் தெளித்து ‘ஓம் சுத்திரஸ்து’ என்று கூறி அவளுக்குப் புண்ணியாக வாசனம் செய்ய, அவள் அவரது பாதத்தண்டை உட்கார்ந்து, அப்போதும் ஈரமாயிருந்த அவருடைய பாதங்களிரண்டையும், பனாரீஸ் பட் டினால் மெதுவாகத் துடைத்து விட்டு, வாசனை னை கலந்த சந்தனத்தை எடுத்து பயபக்தி விநயத்தோடு கால்களில் பூசி விட்டு, தட்டில் இருந்த உதிரி ரோஜாப் புஷ்பங்களை எடுத்து பாதங்களின் மேல்பாகத்தில் போட்டுப் பூஜை செய்து, கைகளைக் குவித்துக் கொண்டு எழுந்து, செட்டியார் இருந்த கட்டிலைச் சுற்றி மூன்றுதரம் பிரதக்ஷணம் வந்து, முடிவாக இன்னொருதாம் கீழே மண்டியிட்டுப் பன்முறை குனிந்து குனிந்து நமஸ்கரித்து, கால்களை தொட்டுக் கண்களில் ஒற் றிக்கொண்டு, ஒரு புஷ்பத்தை எடுத்துத் தலையில் சூட்டிக் கொண்டு கைகட்டிக் குனிந்து பயபக்தி உருக்கத்தோடு கட்டிலுக்குப் பக்கமாக நெருங்கி நிற்க, அவள் செய்த பூஜையைக் கண்டு ஆனந்த பரவசமடைந்து மெய்ம்மறந்து அடிக்கடி, ‘ராமாநுஜா’ ‘எதிராஜா’ என்று கூறியவண்ணம் தேன் குடித்த நரிபோல் செட்டியார் உடகார்ந்திருக்க, பெண்மணி, வாசனைச் சந்தனத்தை எடுத்து செட்டி யாருடைய கழுத்து முதல் இடுப்பு வரையிலும், கைகளிலும் பூசிவிட்டு, தலையில் புஷ்பம் சூட்டிவிட்ட பின்னர், கூடையிலிருந்த பழங்களில் முக்கியமான சிலவற்றை எடுத்து பணிக்காக நறுக்கி, பரமஸாதுவாய் அவருக்குப் பக்கத்தில் நின்று, அவருடைய வாயில் போட்டபடி இருக்க, தொந் திச் செட்டியார் அடிக்கடி அடித்தொண்டையால் ஆட்டுக்கடா கனைப்பது போல் கனைத்து, “ராமாநுஜா,எதிராஜா, ஆகா, மஞ்சீதி, மஞ்சீதி,ஆனந்தம், பிரம்மாநந்தம், ராமாநுஜா, எதி ராஜா, அந்தா மீதயா” என்று இடையிடையில் கூறியபடி கனித்துண்டுகளை ஸ்வீகரித்தருள, கடைசியில் அவள் நீட்டிய பால் பாத்திரத்தைக் கையில் வாங்கிய செட்டியாருக்கு வைஷ்ணவ சம்பிரதாயம் நினைவிற்கு வந்துவிட்டது. 

வைஷ்ணவப் பிராம்மணர்கள் தண்ணீர் அருந்தும் போது இதர ஜாதியார் எவரேனும் எதிரில் இருந்தால், தமது மேல் வஸ்திரத்தை விரித்துத் தலைக்குமேல் போட்டு முகத்தை மறைத்துக்கொண்டு, அந்தத் திரைக்குள் ஜல பாத்திரத்தை வைத்துக்கொண்டு வாயில் பாத்திரம் படாமல் தூக்கி விட்டுக்கொள்வது வழக்கம், தொந்திச் செட்டியார் மற்ற செட்டியார்களுக் கெதிரில் அந்தப் பழக்கத்தை ஆடம்பரமாய் அநுஷ்டிப்பவராதலால் அந்த தாசிப் பெண் பார்க்க, தாம் பால் அருந்துவது நாமாநுஜ சம்பிரதாயத்திற்குப் பழுதானதென் றுணர்ந்து சுற்றுமுற்றும் பார்த்தார். அவரு டைய அங்கவஸ்திரத்தில் சந்தனம் படுமோ வென்றஞ்சி தாசிப்பெண், அதை எடுத்து தூரத்தில் கொண்டு போய் வைத்துவிட்டாளாதலால், செட்டியாருக்கு ஒரு யுக்தி தோன் றியது. அவளுடைய இடுப்புப் பாவாடையைச் சிறிதளவு உயர்த்தித் தமது முகத்தை அவள் பார்க்காமல் திரை போட்டுப் பாலை அருந்தினார். 

பிறகு தனக்குயில் அவருக்கு ஸொகுஸாய்த் தாம்பூல தாரணம் செய்துவிட, செட்டியார் அவளைத் தொடலாமோ கூடாதோ என்று மீனமேஷம் பார்ப்பவர்போல மெதுவாய் அவளுடைய முதுகுப் பக்கத்தில் கையைக் கொடுத்து, அணைக்க எத்தனித்தபடி, “ஆகா! சாலா மஞ்சிகுணம், அபரஞ்சி பங்காரு, My Darling, கண்ணாட்டி, ரொம்ப நாளியா நிக்கறே; கட்டில்மேலே ஏறி உக்காரு” என்று அனு மதி கொடுத்தருள, பெண்ணாள் மிக பதவிசாக ஏறி அவரது தொந்திக்குப் பக்கமாய் உட்கார, செட்டியார், கெட வாத்திய வித்வான் உமயாள்புரம் சுந்தரமையர் பானையை வயிற்றில் வைத்து அழுத்தி கும்காரம் சய்வது போல் அவளைப் 

அவளைப் பிடித்து தொந்தியின்மேல் சார்த்திக் கொண்டு, வாஞ்சையாக முதுகைத் தடவிக்கொடுத்து “ஆஹா, பரமஸாது, சாலாமஞ்சி மா திரி, அநுபவிஞ்சேவாரி பொகு பஸந்து, கண்ணாட்டி தனக்குயில் எனக்கு ரொம்பநாளா ஒரு ஸந்தேகம். ஒங்கிட்ட கேக்கலாமோ கூடாதோன்னு யோசனை பண்றேன்” என்றார். 

தனக்குயில்:- (மிக துடியாகவும் உத்சாகத்தோடும் கணீ ரென்று மறுமொழி கொடுத்தவளாய்) ஓ ! அவசியம் கேக்கலாம்; நீங்க எனக்கு ஸ்வாமிகள்; எதை வேணுமானாலும் கேக்கலாம்; என்ன வேணுமானாலும் செய்யலாம். 

செட்டியார்:- இரண்டு மூன்று தரம் கனைத்துக் கொண்டு) என்மேலே நீ ரொம்ப தாஸ்தி பிரியம் வச்சிருக் கியே, நீ எங்கிட்ட வந்து சேந்ததுக்குமின்னே, வேறே ஆசாமி யாருக்கிட்டனாச்சும் சம்சாரமா இந்தியா? 

தனக்குயில்:-அடாடா, ராமாநுஜா,எதிராஜா (காதுகளை மூடிக்கொண்டு) பாவம்,பாவம், இன்னமே தயவு பண்ணி ஸ்வாமிகள் இந்த மாதிரி கேக்கவாணாம்.நானு ஓங்க கிட்ட வந்தத்துக்குமின்னே, ஒரே ஒரு தப்பு நடந்துபோச்சு அதுனாலெதான் ஸ்வாமிகள் இப்படி கேக்கிறீங்க. 

செட்டியார்:- (சடக்கென்று முகமாறுபாடும் ஏக்கமும் கொண்டவராய்) ஓ ! அப்பிடியா, தப்பா நடந்து போச்சு ! அந்தத் தப்பு வருசக் கணக்குலே நடந்திச்சா? இல்லாமெப் போனா, நாளுக் கணக்கா ? ஆசாமி ஆரு? ஸ்ரீவைஷ்ணவாளா?’ இல்லாமெப்போனா, பாஷாண்டியா? 

தனக்:- (மறுபடி செவிகளை மூடிக்கொண்டு) அடாடா, கஷ்டம், கஷ்டம், ஸ்வாமிகள் எப்பிடி எப்பிடுயோ கேக்கறாங்களே. அந்த மாதிரி நினைப்பை யெல்லாம் எம்மனசிலே உண்டாக்கவாணாம். சுத்தமான மனசு அசுத்தமாப் போயிடும். அந்த மாதிரிப் பேச்சுப் பேசவாணாங்க. மொத மொதக் கண்ணாலே பாத்தது ஸ்வாமிகளைத்தான். அப்பவே, STID மனசுலே பிரியம் உண்டாயிப் போச்சு. வேதனை சோதனையாச்சு. சாப்பாடு வேப்பங்காயாச்சு. ராப்பாடு குதிரைக் கொம்பாப் போச்சு. ஒடம்பெல்லாம் நெருப்பா எரியுது. அந்த அவஸ்தையிலே எங்கம்மா ளோடெ உபத்திரவமும்கூடச் சேந்துது. ஹைகோர்ட் சர்ஜியாம் ஒரு பாப்பான். அதிலும் குறுக்குப் பூச்சுக்காரன். அவன்கிட்ட என்னெ உடனும்னு அவ துடிச்சா துடிச்சா அப்பிடித் துடிச்சா. சர்ஜியுமாச்சு தேஞ்சு போன தொடைப்பக் கட்டையுமாச்சுன்னு நானு சொல்லி எங்கம்மாளே ரொம்பத் திட்டிட்டேன். அப்ப நானு நெஜத் துலெ புத்தியறியவே இல்லீங்க. ஆனா பாக்கறத்துக்கு வயசு பதினாறுக்கு மேலே ஆனமாதிரி இந்தது. நானு அப்படி யெல்லாம் புடிவாதம் புடிச்சத்துனாலே எங்கம்மா என்னெ ஸ்வாமிகளிடம் அனுப்பிச்சா; இல்லாமெப் போனா, நானு இந்நேரம் அந்த சர்ஜிப் பாப்பானுக்குக் கூத்தியாளா இருக்கணும். 

செட்டியார்:-ஓ ! அப்பிடியா, (ராமாநுஜா நீ தயா) அந்த சர்ஜி ஐயரு ஓங்க ஊட்டுக்கு எப்பனாச்சும் வந்தாரா? ஓங்கிட்டப் பேசினாரா? 

தனக்:- அந்தப் பாப்பான் மூஞ்சி பத்தி எரிஞ்சுச்சு. நானு பெருத்த ரோஷக்காரீங்கறது இந்தப் பட்டணத்துக் கெல்லாம் தெரியுமே. எங்கிட்ட எந்த சீமை ராஜா வந்து பேசினாக்கூட, காலாலே எட்டி மூஞ்சிலே ரெண்டு ஒதை உட்டு கையிலே தாம்பூலமும் குடுத்தனுப்பற ருஸ்தூம் கப தூராச்சே நானு. அப்ப எந்தக் கொம்பந்தான் எங்கிட்ட வந்து என்ன பண்ண முடியும். நானு ஸ்வாமிகளிடத்துக்கு வந்து ஒரு மாசம் மூனே ண முக்கா நாளு களிச்சுத்தானே நெஜத்துலெ பெரிய மனுசி ஆனேன். 

செட்டி:- (முக மலர்ச்சியும் உள்ளப் பூரிப்பும் அடைந் தவராய் அவளை மேன்மேலும் தடவிக் கொடுத்து தொந்தியில் கெட வாத்தியம் வாசித்து) மஞ்சீதி, மஞ்சீதி, ராமாநுஜா, எதிராஜா,ம்,இன்னம் என்ன? 

தனக் :- என்னாயிசுலெ நானு ஸ்வாமிகளைத் தவிர வேறே எந்தப் புருசனையும் மனசாலெகூட நெனைச்ச தில்லெ. இன்னமே எப்பவும் இதே மாதிரித்தான் படி காண்டாப் பத்தினியா இருக்கப் போறேன். ஸ்வாமிகள் என்னை உட்டுட்டாக்கூட, நானு ஒடனே வெசத்தைத் துன்னுட்டு ஒங்க காலடீலெயே உயிரே உட்டுடுவேன். வேணா பரிச்சை பாக்கிறிங்களா. வெசங்கூட வாங்கித் தயாரா வச்சிருக்கேன். எடுத்தாரட்டுமா? 

செட்டி:- (ஆநந்த சாகரத்தில் கிடந்து மிதந்தவராய்) வாணாம்,வாணாம்,ஐயோ பாபம்,நீ விஷம் திங்கவா நானு ஒன்னை இங்கே கொண்டாந்து இவ்வளவு பிரியமா வச்சிருக் கறது. நானு எப்பவும் ஒன்னை உடவேமாட்டேன். எனக் குப் பின்னாலே ஒனக்கு சரியா ஒரு லெக்ஷ ரூபா எளுதி வைக்கப் போறேன். நீ கவலைப் படாதே கண்ணாட்டி. இப்ப நீ சொன்னத்துலெ முக்கியமான ஒரு சந்கேகந் தீந்துது. ஆனா, என்னைப் பத்தியே இன்னொரு முக்கியமான சந்தேகம் உண்டாகுது. 

தனக் :- அதெயுந்தான் சொல்லுங்களேன். கேக்கலாம்.  

செட்டி :- அது ஒரே சந்தேகந்தான். ஆனா, அதுலெ மூணு பிரிவு இருக்குது? 

தனக் :-ஸ்வாமிகள் ஏன் இப்பிடியெல்லாம் இல்லாத பொல்லாத சந்தேகத்தை பெல்லாம் மனசுக்குள்ளற ஒளிச்சு வச்சுக்கினு அவஸ்தைப் படணும். எல்லாம் நெல்லுக்குள்ளற அரிசி யிருக்கறாப்புலெ முடியப் போவுது. நீங்க சொல்லுங்க ; நானு எல்லாத்தியும் ஓடைக்கறேன். 

செட்டி :- நானு அதிய வயசான கிழவனா, சிறு புள் ளையா, நானு பாக்கறத்துக்கு அளவா இருக்கேனா, விகாரமா இருக்கேனா, ஒனக்கு எங்கிட்ட ஆசை உண்டாகுதா வெறுப் புண்டாகுதா, இந்த மூணு சந்தேகமும் தீந்துபோனா நிம்மதியாப் போவும். 

தனக்:-ஆஹா! ஸ்வாமிகளுக்கு என்னென்ன சந் தேகமெல்லாம் உண்டாவுதுங்கறேன். இதெல்லாம் வாணாம் உட்டுடுங்க. நாங்க தாசிங்கதான். ஆனா ஒரு மனிசருக்கு அடிமையானா, அவுங்க எப்பிடி இருக்காங்க, ஏதா இருக் காங்கன்னு நிமிந்துகூடப் பாக்க மாட்டோம். எங்க .சு ரையே அவுங்க கிட்ட ஒப்பிச்சுடுவோம். கடைசிவரையிலெயே உறுதியா இருந்திடுவோம். கட்டின புருஷரு இருக்கையிலெ திருட்டுத்தனமா இன்னொரு கையைப் பாக்கற அவிசாரில்லவா ஆளு வாட்டசாட்டமா இருக்காங்களான்னு தாரதம்மியம் பாத்து, உண்ட வூட்டுக்கு ரெண்டகம் பண்ணறது. நானு மத்தப் புருசரு எப்பிடி இருக்காங்கன்னு நிமிந்து பாத்தால்ல அந்தத் தொந்தரயெல்லாம். நானு ஸ்வாமிகளுக்கு அடியாளா அமுந்துட்டேன். வயசுப்புள்ளையும் நீங்கதான். மம்மதனும் ங்கதான், எம்மனசுலெ பொங்கற ஆசையெல்லாம் ஒங்கி ளுக்கே சொந்தம், நானு இப்ப எங்கெ இருங்கறாப்புகில நெகூெர்திருக்கேன் தெரியுன? கொக்கலோகத்திலெ மகா விஷ்ணுக்குப் பக்கத்துலெ குந்திக்கினு இருக்கறேன். வேறெ பேச்சில்லை. எம்மனசுலெ பொங்கற ஆநந்தத்தை யும் பிரியத்தையும் ஆராவது அளக்க முடியுங்கிறீங்களா? முடியவே முடியாதுங்க.இந்த ஒலகத்தையெல்லாம் ஒரு மரக் காலா வச்சு அளந்தா, ஒரு சுமாரு நூறு கோடி, ஆயிரங் கோடி மரக்காலுக்கு மேலெயே போவும். 

செட்டி :- அடேயப்பா! அவ்வளவு பிரியமா! தந்யோஸ்மி ! கிருதார்த்தனானேன். ராமாநுஜா,அந்தா நீதயா. சரி, ரொம்ப சந்தோஷமாச்சு. இன்னெக்கி நல்ல சக்விஷ யத்துலெ பொளுது போச்சு. ஈ தினம் ஸுதினமு நேர மாவுது ; கடல்கரைக்குப் போவலாமா? 

தனக்:- (சந்தோஷமாகத் துள்ளியெழுந்து சிரித்தபடி) ஓ அயாம் ரெடி, மை லார்ட் (Oh, I am ready, My Lord) அடியாள் தயாராய்க் காத்திருக்கிறேன். பிரபு சித்தம் என் சட்டம். 

செட்டி :– ஓ! My Dear கண்ணாட்டி! நீ இங்கிலீஷ்கூட ரொம்ப ஜோராப் பேசுறியே ! (உரத்த குரலில்) அடே போய். 

போயி : (மெத்தைப்படியில் இருந்தபடி) ஆஜர் தேவரா

செட்டி:- மோட்டார் தய்யார் ஜேய செப்பு.

போயி:- புத்தி. புத்தி. 

என்று மறுமொழி கூறியபடி போயி வீட்டிற்கு வெளி யில் போய்,திண்ணையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த மோட்டார் ஓட்டி ரத்னவேலுவைத் தட்டியெழுப்பி, செட் டியாருடைய உத்தரவைத் தெரிவிக்க, அவன் எழுந்துபோய் மோட்டார் வண்டியில் உட்கார்ந்துகொண்டு புறப்படத் தயாராயிருந்தான். 

சில நிமிஷங்களுக்குப் பிறகு செட்டியாரும், தாசிக் குயிலும் ஜிலு ஜிலென்று ஜரிகை ஆடைகளும், வைர ஆபரணங்களும் ஜ்வலிக்க வந்து மோட்டாரில் அமர்ந்தனர். செட்டியார் ஒரு காலை ஊன்றி, இன்னொரு காலை அதன்மேல் போட்டு, தமது உடம்பு முன் பக்கத்தில் குடைகவிழ்ந்து போ காதபடி தமது சோட்டாத்தடியை ஊன்றி, கைகளால் அதை அழுத்திப் பிடித்துக்கொண்டார். பெண்மணி, கல்யாணப் பெண் மணையின்மேல் உட்காருவதுபோல, முகம் உடம்பு முதலியவற்றைக் கீழேசாய்த்து இரண்டு கைகளையும் கோத்து அடக்கமாக மடிமீது வைத்துக்கொண்டு பரம ஸாதுடே வீற்றிருந்தாள். 

வண்டி சென்றபோது செட்டியார் மிகப் பெருமையாய் அப்புறம் இப்புறம் நோக்குவதும், தமது மார்பைப் பார்த்துக் கொள்வதும், வீதியில் போனவர்கள் தங்கள் இருவரையும் கவனித்து, அவ்வளவு அற்புதமான அழகுவாய்ந்த புதுச் சோபனப் பெண்ணைத் தாம் வைப்பாய் அடைந்ததைப்பற்றி, தமக்கு நற்சாக்ஷிப் பத்திரம் அளித்துவிட்டுப் போகிறார்களா இல்லையா என்பதை, அவர்களுடைய முகக்குறியால் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்போல கூர்மையான தமது விழிகளைத் திறந்து பாட்டைசாரிகளின் கண்கள் கலங்கும் படி செய்துகொண்டே இருக்க, அரை நாழிகை காலத்தில் மோட்டார் வண்டி கடற்கரையை அடைந்து, ஜன மாட்டம் இல்லாத ஒதுப்புரமான ஒரு பக்கத்தில், இரஸ்தாவின் ஒரு பக்கமாகக் கட்டப்பட்டிருந்த குறட்டின் ஓரமாகப் போய் நின்றது. 

வண்டியோட்டி விரைவாகக் கீழே இறங்கி ஒரு பக்கமாக வந்து கதவைத் திறந்துவிட, செட்டியார் ‘ராமாநுஜா,’ ‘எதி ராஜா’ என்ற சப்தங்களுடன் பகீரதப் பிரயத்தனம் செய்து தட்டித் தடுமாறிக் குறட்டின் மீதிறங்கி நின்று, தாசிப்பெண் ணுக்குக் கைலாகு கொடுத்து அவளை மிக பெருமையாக் இறக்கிவிடும் கருத்தோடு தமது கையை நீட்ட, அவள், “எனக்குத் தலை கொஞ்சம் கனமாயிருக்குது; கீளே எறங்கினா, அதியமா நீரு கோத்துக்கும்; நானு இப்பிடியே மறவாக் குந்திக்கினு இருக்கறேனுங்க. ஸ்வாமிகள் போயி உலாவிப் புட்டு வாங்க” என்று குழலும் யாழுமாய்க் கொஞ்சி மறு மொழி கொடுத்தாள். 

சிறிதும் எதிர்பார்க்காத அந்தப் பெரிய ஏமாற்றத்தி னால், செட்டியாருடைய முகம் உடனே சூம்பிப் போயிற்று. அவருடைய குதூகலம் இருந்த இடம் தெரியாதபடி பறந்து போயிற்று; ஆனாலும், அவளை வற்புறுத்தவும் அவர் விரும்ப வில்லை; “சரி; நீ யில்லாம நானு மா மாத்தரம் அலெயண்டை போறத்துலெ ஸுகமில்லெ; நானும் இப்பிடியே குறட்டு மேலெயே அப்பிடி இப்பிடி ரெண்டு மூணு தரம் சக்கர் அடிக்கறேன்” என்று கூறிவிட்டு சோட்டாத்தடியை மிக கம்பீரமாய் ஊன்றி, தமது தொந்தியைத் தடவுகிறதும், காக்கை முகத்தைத் திருப்புவதுபோல் அப்புறம் இப்புறம் தமது முகத்தைத் திருப்புவதும், ஏவ், ஏவ் என்று அடித் தாண்டை யிலிருந்து பலமாய் ஏப்பம் விடுவதுமாய், மூன்று குண்டுக்கற்களாலான வென்னீர் அடுப்பும் தவலையும் ஒன்றோ டொன்று முஷ்டியுத்தம் செய்து, முன்னும் பின்னும் கால் வாங்கி நடந்து போவதுபோல விசுக் விசுக்கென்று சுமார் ஐம்பது கஜதூரம் குறட்டிலேயே சென்றார். மோட்டார் வண்டியின் முன்பக்கத்தில் அதை ஓட்டும் ரத்னவேல் என்னும் யௌவனப் புருஷனும், பின் பக்கத் தில் தாசி இளநங்கையும் உட்கார்ந்திருந்தனர். 

அந்த யௌவனப் புருஷனுக்கு சுமார் இருபத்துநான்கு வயது நிரம்பி இருக்கலாம். பார்வைக்கு, அவனுடைய தேக அமைப்பும் அலங்காரமும் பெரிய சமஸ்தானாதிபதி யின் செல்வப் புதல்வன் என்ற எண்ணத்தை உண்டாக்கின. ஆனால் அவன் ஒரு குறவனுடைய இரவல்மகன். அவனுடைய பாட்டன் சிலவருஷ காலத்திற்குமுன் சென்னைக்குப் பக்கத்தி லுள்ள மாம்பலம் என்னும் ஊரில் பூனை, நரி முதலியவற்றைக் குத்தித் தின்றுகொண்டு திரிந்தே காலங்கழித்தவன். அவனுடைய மனைவி பாம்பை வைத்துக்கொண்டு வீடாகச் சென்று, காட்டிக்காட்டி பிச்சை வாங்கியும், எச்சில் இலைகளில் இருந்த ஆகாரத்தை உண்டும் பிழைத்தவள். அவர்களுடைய மகனான பூஞ்சோலைக் குறவன் எப்படி யோ இரண்டு கழுதைகளையும், இரண்டு மனைவிமார்களையும் சம்பாதித்துக்கொண்டு, வெளியூரிலிருந்து கருவேப்பிலை பறித்து கழுதைகளின்மேல் போட்டுக்கொண்டு ஒவ்வொரு நாளும் சென்னைக்கு வந்து இரண்டு ரூபாய்க்கு விற்பான், ஒன்றே கால் ரூபாயைச் செலவிட்டு மூன்று பேரும் குடித்து ட்டு ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொண்டே நடந்து நான்கு மயில் தூரத்திலுள்ள தங்கள் ஊருக்கு மாலை யில் போய்ச் சேருவார்கள். ஒவ்வொரு நாளும் தங்களுக்குக் கருவேப்பிலைக் கட்டுகள் கொண்டுவந்து கொடுத்த ஆளுக்கு நான்கணா கொடுத்துவிட்டு, மிகுதி எட்டணாவைத தங்கள் சாப்பாட்டுச் செலவுக்கு வைத்துக் கொள்வார்கள். அப்போது அவர்கள் நரித்தோல் பைகள் சுரைக்குடுக்கை, பாசிமணி அலங்காரங்கள் முதலிய வற்றோடு காணப்பட்டார்கள். அந்தக் குறவனுக்கு எப் படியோ லக்ஷ்மீ கடாக்ஷம் பிறந்துவிட்டது. சென்னையில் சுமார் ஐம்பது மார்க்கட்டுகள் வரையில் ஏற்பட்டுப் போயின. குறவன் திருத்தணியண்டை ஒருமலை முழுதும் கருவேப் பிலை வனமாகவே இருப்பதை அறிந்து, அதை வருஷக் குத் தகைக்கு எடுத்து, அங்கு ஆள்களை வைத்து ரயில் மார்க்க மாக தினம் ஒரு ‘வாகனம்’ (Waggon) கருவேப்பிலை சென் னைக்கு வரும்படி ஏற்பாடு செய்தான்; அதிகாலையில் அவன் தன்மனைவிகளோடு ரயில்ஸ்டேஷனுக்குப் பொவான். ஐம்பது மார்க்கட்டுகளிலும் சில்லரை வியாபாரம் செய்யும் கூடை காரிகள் நூற்றுக் கணக்கில் தயாராய்க் காத்திருப்பர். ஒவ்வொ ருத்தியும் ஒரு ரூபாய் முதல் அரை ரூபாய் வரையில் கையில் ரொக்கம் கொடுத்து சரக்கு முழுதையும் எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். சுமார் இரண்டு மணி சாவகாச் தத்திற்குள் பூஞ்சோலைக் குறவன் சுமார் ஐம்பது ரூபாய் பணத்தோடு வீடு திரும்புவான். அவனுடைய சகலமான செலவுகளும் நாள் ஒன்றுக்கு பத்து ரூபாய்க்குள்ளாகவே முடியும். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் மிச்சப்படத் தொடங்கியது. அந்த வியாபாரத்தில் அவனுக்குப் போட் டியே கிடையாது. கடைசியில் ஒவ்வொருவரும் வாங்குவது ஒரு தம்பிடிக் கருவேப்பிலையே. அந்த வியாபாரத்தை பூஞ் சோலைக் குறவன் சுமார் இருபது வருஷ காலமாய் ஏகபோக உரிமையோடு செய்து, இப்போது பூஞ்சோலை செட்டியா ராய் விளங்குகிறான். அவனுக்கு சுமார் இருபது கோபிகா ஸ்திரீகளும், சுமார் ஐம்பது குழந்தைகளும் ஏற்பட்டனர்;பத்து மெத்தை வீடுகளும் உண்டாகிவிட்டன. அவற்றிலிருந்து மாதம் ஒன்றுக்கு வரும் குடிக்கூலி மொத்தம் ரூபாய் ஆயி ரம். வெளி கிராமங்களில் ஏராளமான நிலம் வாங்கிவிட்ட டான். அவனும் அவனுடைய மனைவிகளும் கூத்திகளும் எவ்வளவு தான் குடித்தாலும், மாளாச் செல்வமாக வந்து குவிகிறது. பூஞ்சோலைக்குறவன் அதன் பின்னர் பிரபல ஓட்டர் ஆனான். அவன் இப்போது மோட்டார் வண்டியில், பெரிய தலைப் பாகை, ஸர்ஜ்கோட், கையில் தங்கச் சங்கிலியுள்ள மணிக்கட் டுக் கெடிகாரம்,கையில் தங்கக் காப்புகள், காதில் கடுக்கன் கள் முதலிய அலங்காரங்களோடு செல்கிறான். அதற்குமுன் இதர ஜாதியாரைக் கண்டால் ‘தாஸனம் ஸாமீ!’ என்று கூறி பயந்து நடுங்கி கைகளைக் கட்டிக்கொண்டு சாக்கடையோர மாக நின்றே பேசும் சுபாவமுடையவன் இப்போது வீட்டில் சாய்மான நாற்காளியில் கால்களை நீட்டிவிட்டுப் படுத்தபடி கணக்குத் தனிக்கை செய்கிறான். அவனுடைய குமாஸ்தாவான ஓர் ஐயர் காலடியில் நின்று, அவன் கோபிப்பதற்கு மறுமொழி கூற அஞ்சிப் பல்லைக் காட்டிக்கொண்டு பயந்து நடுங்கி உத்தி யோகத்தை ஜாக்கிரதையாகக் காப்பாற்றிக் கொள்ளுகிறார். ஐயர் இல்லாதபோது, பிறரிடம் பூஞ்சோலை செட்டி, “இன்னாங்கறேன் வரவர இந்தப் பாப்பான் கொளுத்துப் பூட்டாங்கறேன். மாசம் பொறந்து தேதி அஞ்சாவுது; இன் னம் கொடக்கூலி பாதிக்கிமேலே வசூலாவல்லெ; மொதத் தேதியானா, பாப்பான்’ ஆத்துக்குன்னா சோத்துக் கில்லெ, அம்மாளுக்குன்னா பொடவையில்லெ, புள்ளெக்கிப் பூணூல் கண்ணாலம் ஆவணும்னு’ என்னென்னமோ பித்தலாட்டமெல் லாம் பண்ணி ரூவாயெ அமுக்கிக்கினு பூட்றான். கொடக்கூலி எந்த அப்பன் பாட்டன் ஊட ட்டுப் பணங்கறது தெரியல்லே அந்தப் பாப்பார அறுதலுக்கு என்று மிக ஆடம்பரமாகப் பேசுகிறான். 

அந்த மகா புண்ணியவானுக்கும் ஒரு கூத்தியாளுக் கும் பிறந்தவன் ரத்னவேலு என்னும் சிறுவன். அவன் பெரியவனாகி மோட்டார் ஓட்டி வேலை கற்றுக்கொண்டு, தான் உயர்வான செட்டியார் ஜாதியைச் சேர்ந்தவன் என்று கூறி, தொந்தி ரமணைய செட்டியாரிடம் மோட்டார் வேலை யில் அமர்ந்திருந்தான். பையன் மாநிறமாயிருந்தாலும் கட்டு மஸ்தாக மொழு மொழுவென்றிருப்பான். முகமும் அழகா யும், களையோடு கூடியதாயும் இருக்கும். அவன் வஸில்க் ஷர்ட், வெள்ளைக்கடுக்கன்கள், தங்கக் காப்பு, தங்கச் சங்கிலி, மணிக்கட்டு கெடிகாரம், மோதிரங்கள் முதலிய அலங்காரங்களோ டிருப்பான். பிறருடன் பேசும்போதும், அவன் இடும்பாகவும், பெரிய மனித தோரணையாகவும் பேசுவான். செட்டியாருக்கெதிரில் அவன், தனக்குயில் இருந்த திக்கிலேயே திரும்ப மாட்டான். அவர் தூரப்போய் விட்டால், பின்பக்கம் திரும்பாமலும், ஒரு கையை வாயின் மேல் வைத்து உதடுகள் அசைவது தெரியாமல் மறைத்துக் கொண்டும் மெதுவாகப் பேசுவான். பெண்ணரசி கீழே குனிந்தபடியே அவனுக்கு மறுமொழி கொடுப்பாள். 

நாம் மேலே குறித்த தினத்தன்று செட்டியார் இறங்கிக் குறட்டோடு சுமார் ஐம்பது கஜதூரம் ஜோராய் நடந்து போனாரல்லவா; அப்போது மோட்டார் வண்டியில், அடியில் வருமாறு சம்பாஷணை நடக்கத் தொடங்கியது:- 

ரத்னவேல்:-(மிக உருக்கமான தழுதழுத்த குரலில் பசத் தொடங்கி) கண்ணூ, ன்னம் எத்தினி நாளைக்கி நீ என்னெ இப்பிடி உசிரோடெ கொல்லப்போறே ? ஒம் பைத்தியத்துலெ நானு வெகு சீக்கிரத்துலெ கத்தியாலெ குத்திக்கினு சாவத்தான் போறேன். நானு சொம்மா செத் டுவேன்னு பாத்துக்கிடாதெ.மின்னாலெ ஒன்னெக் குத்திப் போட்டுட்டு அப்பாலே நானும் அப்பிடியே சேஞ்சுக்கப் போறேன். 

தனக் -(இளக்கமான பார்வையாய் அவனைப் பார்த்து நெடுமூச்செறிந்து) எனக்கும் அப்பிடியேதான் இருக்குது ராஜா. இந்தப் பித்துக்கொள்ளிச் செட்டி எப்ப பாத்தாலும் எளவுகுடுத்த மணியமா இருக்கறான். ஊட்டுலெயா அந்தப் போயி காவக் காத்துக்கினே கெடக்கறான்; ; நானும் என் னென்னமோ தந்தரம் பண்ணிப் பாக்கறேன்; சமயம் வாய்க் கல்லே, இருக்கட்டும்; நானு ரொம்ப சீக்கிரத்துலெ னாச்சும் தோது பண்ணி ஒன்னை அளெச்சிக்கறேன்; கொஞ் சூண்டு பொறுத்துக்கொ ராஜா. 

ரத்னவேல் : என்ன ராஜாத்தி நீ எங்கிட்டவே ஜோக் உட்றியே. இந்தக் கிண்டிலெல்லாம் பண்ணாதெ தங்கம் ; எங்கே, மூஞ்சியெக் கொஞ்சம் நிமித்து, ராமாநு ஜன் திரும்பறத்துக்குள்ளற ரெண்டே ரெண்டு கல்கண்டு முத்தம் தந்துடு – என்று கூறியபடி அவன் தனது முகத்தைப் பின்புறம் சடக்கென்று திருப்ப, தாசிப்பெண் அவனுடைய உடம்பின் மறைவில் நகர்ந்து உட்கார்ந்து கொண்டு, தனது முகத்தை சரேலென்று நிமிர்த்தி முன்பக்கம் நீட்டினாள். இருவரது முகங்களும் ஒன்றுபட்டன. அந்த நிலைமையில் அவர்கள் இரண்டு நிமிஷகாலம் இருக்க, உடனே தனக்குயில், “அடே, அடே, உடு உடு, ராமாநுஜன் திரும்பிட்டான். பாத்தான்னாக் குடிகெட்டுப்போவும் ” என்று பதைப்போடு கூறித் தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றாள். 

உடனே ரத்னவேல் முன்பக்கம் திரும்பி தொந்திச் செட்டியார் என்ன செய்கிறார் என்று பார்த்து, அவர் தொப் பையைத் தடவிக்கொண்டே போய்க்கொண் டிருந்ததைக் கண்டு, மறுபடி சரேலென்று பின்புறம் திரும்பி, ”இந்தத் திருட்டுத்தனம்தான் வாணாங்கறேன்; பூசை வேளேலெ கரடியை உட்டு ஓட்டறாப்புலெ நல்ல சமயத்துலெ காரியத் தைக் கெடுத்துட்டியெ. நிமித்து தலையெ” என்று அன்பாக வற்புறுத்திக் கூறியபடி, தனது வலக்கரத்தை பின் பக்கம் விடுத்து அவளுடைய தாவணியைப் பிடித்து இழுக்கத் தொடங்கினான். 

அப்போது உண்மையிலேயே செட்டியார் திரும்பி வரத்தொடங்கி விட்டாராதலால், பெண்ணாள் துடியாய் அவ னுடைய கையைப் பிடித்துத் தள்ளி, “அடெ; வந்துட்டான் செட்டி. கம்மிண்டிரு. ஒண்ணும் சொல்லாதே. செட்டிக்கு பாம்புக்காது. நாம்ப பேசறத்தெக் கண்டுக்கிவான்.இந்தப் பக்கமே திரும்பாதே” என்று கூறி, முன்போல் ஒழுங்காய் உட்கார்ந்து கொண்டாள். குறவன், எதிரில் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த கந்தைத் துணிச் சுருணையைக் கையில் எடுத்துக்கொண்டு எதிர்ப்பக்கத்தை மறைத்துக் கொண் டிருந்த கண்ணாடி அடைப்பின் அழுக்கை மிக அக்கரையாகத் துடைப்பவன்போலப் பாசாங்கு பண்ணத் தொடங்கினான். 

உலகத்தில் பலர் இதுபோலவே நடந்து கொள்ளுகிறார். கள். தாம் மாத்திரமே புத்திசாலிகள் என்றும், அயலார் வயோதிகராகவோ, விகாரமான தோற்றமுடையவராகவோ, அல்லது, அசட்டுக் காரியங்களைச் செய்பவர் போலவோ தோன்றுவதிலிருந்து, அவர்கள் பிறருடைய சாமர்த்தியத்தையும், திருட்டெண்ணங்களையும் அறிந்துகொள்ளத் திறமை யற்றவர்கள் என்று கருதி, தங்களுக்குள் குறுப்பாகவும் திமிராகவும் பிறரை இளக்கரப்படுத்தியும் பேசிப்புரளிசெய்து கொண்டே யிருப்பது வழக்கம். எதிராளி வாயைத் திறக் காமலே இருந்து இவர்களுடைய இடுப்பை முறித்து, மகா விஷ்ணு பலிச்சக்கரவர்த்தியைப் பாதாளத்தில் அழுத்தியது போல், கர்வபங்கம் பண்ணும்போது, ” ஓகோ! நம்முடைய உண்மையான யோக்கியதை இவ்வளவுதானா, நம்முடைய தறுதலைப் பேச்செல்லாம் எதற்காயிற்று; மற்றவருக்கும் இவ்வளவு புத்திசாலித் தனம் இருக்கிறதா” என்று எண்ணிக் கண்ணீர் விடுத்தழுது கலங்குவது சாதாரணமாக நடக்கும் விஷயம். எறும்பும் தன் கையால் எண் சாண்” என்பதைப் பல பேதையர் உணர்கிறதே இல்லை. 

இதுபோலவே, இருபிறப்புக் குறவனும், தாசிப்பெண் ணும் கருதி, செட்டியாரை இளக்கரமாக நினைத்து, அவருக் குத் தெரியாதபடி தாம் மிக சாமர்த்தியமாகக் காரியத்தை நடத்துவதாக நினைத்துக் கொண்டிருந்தன ரானாலும், செட்டி யார் நிரம்பவும் கூர்மையான விவேகமுடையவராதலால், அவர் போய்க் கொண்டிருந்தபோது அடிக்கடி திரும்பிப் பார்த்து, இவர்கள் ஏதோ சம்சயமான காரியம் செய்ததாக சந்தேகங்கொண்டு, அதனாலேயே திரும்பி வந்தார். 

வந்தவர் சந்தேகத்திற்கு சிறிதும் இடங் கொடாமல் எவ்வி த முகமாறுபாடுமின்றி வண்டியண்டை நெருங்கிவந்து புன்னகை ததும்பிய முகத்தோடு தனக்குயிலை நோக்கினார். அவள் கீழே குனிந்தபடி தன் இடது கை விரல்களால் நெற்றிப் பூட்டுகளை அழுத்திவிட்டுக் கொண்டிருந்தாள். செட்டியார் அவளுக்கருகில் நெருங்கி, “தலைநோவு எப்பிடி இருக்குது? ஊட்டுக்குப் போவலாமா?” என்று அன்பொழுக வினவினார். 

அதைக் கேட்ட அந்தத் தளுக்கு சுந்தரி, ” ஸ்வாமிகள் போனத்துக்கு அப்பா) நோவு கொஞ்சம் படிமானந்தானுங்க;இன்னம் கொஞ்சநேரம் போனா முளுக்க குணமாயிடும். ஸ்வாமிகள் இன்னொருதரம் உலாவிட்டு வாங்க என்றாள். 

செட்டியார், ‘எவ்’ என்று ஒரு தரம் அடித்தொண்டை யால் ஏப்பம் விட்டு, மஞ்சீதி என்று கூறி, அவளுடைய அபிப்பிராயத்தை ஆமோதித்து, மறுபடி தடியை ஊன்றி மாம் ஸக் குன்றுகளைத் தூக்கமாட்டாதவராய் அரும்பாடுபட்டு அவைகளை மாறி மாறி முன்னும் பின்னுமாக நகர்த்தியபடி குதூகலமாக நடந்து செல்லலானார். அவ்வாறு செட்டியார் சுமார் ஐம்பது கஜதூரம் சென்றிருப்பார். உடனே குறவன் மறுபடி துவக்கிக் கொண்டவனாய், “ஒளிஞ்சான் சனியன். அவன் ஊட்டுக்குப் போவணும்னு திரியும் சொன்னா, புடி குடுக்காதே. இருட்டினப்பாலெ போவலாம்னு சொல்லிடு. எங்கே, மொவத்தைத் தூக்கு. நீ என்ன சொல்றே முடிலா? நானும் பொறுத்துப் பொறுத்துப் பாத் துட்டேன். நீ ஜோக்குப் பண்ணிக்கினே போறே. அது இன்னமேப் பலிக்காது. ஒண்ணு நம்ப இஷ்டம் நெறை வேறணும்; அல்லாட்டி, ஒன்னெக் குத்திப் போட்டுட்டு நானும் குத்திக்கினு சாவணும். ரெண்டுலெ ஒண்ணு முடிவு. என்ன சொல்றே ? (மறுபடி இரண்டு முகங்களும் ஒன்றாகச் சேருகின்றன) ஒன்னெ நானு உடமாட்டேன் ; செட்டி வந் என்ன பண்றானோ பண்ணட்டும் ; நீ எங்க ஊட்டுக்கு வந்துடு; ஒனக்குச் சோறுபோட எனக்கு தெறமை உண்டு; இருந்திருந்து ஆளெப்பாத்துப் புடிச்சியே; சுத்தப்பொத்தப் பூசினிக்கா கணக்கா இருக்கறான்; அவனெக் கட்டிக்கினு எப்பிடித்தான் மாரடிக்கிறியோ! ஒன்னோடெ அந்துசு இப்பிடிப் பட்டதுங்கறது இந்தப் பித்துக் கொள்ளிக் தெரியவாபோவுது; இருக்கட்டும், எனக்குள்ளற ஒரு சந்தே கம் உண்டாவுது; நானு ஒரு கேவி கேக்றேன்; நீ உள்ளத்தை உள்ளபடி சொல்லணும்; மறைச்சியோ பாத்துக்கொ; இந்தத் தொந்திச்செட்டி ஒங்கூட்டுக் கட்டுல்லே வந்து குந்திக்குனு என்ன பண்ணுறான்? ஒனக்குக் காலுதானே புடிச்சுவுட்றான்? அவனெக் கையாலெ தொடப் புடிக்குதா ஒனக்கு? அவன் முளியெப் பாக்கச்செயெ, நம்ப கண்ணுரெண்டும் கலங்கித் தெறிச்சுப்போவுதே; அவன் மொவத்தை நீ எப்பிடிப் பாக் கறே” என்றான். 

தனக் :- இதான் மின்னெப் பின்னெ யோசிக்காமெப் பேசற பேச்சு. பணம், சாப்பாடு, வீடு, வாச, கட்டிலு, மெத்தை, நவை நட்டு, மோட்டாரு, வேலைக்காரரு எல்லாம் செட்டியாரோடே ஒபயம். அதுலெ நமக்கென்ன கயிஷ்டம். அவனாலெ கடப்படாத சங்கதிக்கு அவனெ நாம்ப இன்ன பண்ணறது. அதுக்கு நீயாச்சுநானாச்சு; அதுனாலெ செட்டிக்கு ஒண்ணும் நயிஷ்டமே இல்லே; நானு ஒங்கூட்டுக்கு வந்தா, நீ சம்பாறிக்கற சம்பளம நம்ப வாசனை சோப்புச் செலவுக்குப் பத்துமா! அதுவு மில்லாமெ, நானு ஒனக்கே சொந்தமா வத்துட்டா, நமக்குள்ளற இம்பிட்டு மோகம் உண்டாவுமா! அப்பாலெ, நீ ஆரோ, நாரோன்னு போயிறும். நீ இன் னொரு கையெப் பாக்கக் களம்பிடுவே; எப்பவும் ஊராரு செ சாத்தெ அபகரிக்கறத்துலெதான் சொகம் அதியம்; அது தான் எப்பவும் தெகட்டாமெ நெலைச்சு நிக்கும் ; நானு எப் பவும் செட்டிக்கிட்டவே இருக்கணும்; நீயும் நானும் ரகஸிய த்துலெ ஸந்தோசமா நடந்துக்கணும்; அதுதான் மனசுக்கு ரொம்பசொகம்; எப்பவும் சொந்தமா வச்சுக்கறவங்களுக்கு, சாப்பாடு போட்டு பணத்தெக் கொட்டிக் காக்கற பாடு தான் மிஞ்சும்; நாம்ப இப்ப செய்யறதே சரியான வேலெ; நீ . அந்தப் பைத்திக்கார நெனெப்பெ யெல்லாம் உட்டுடு; குத்தறது, வெட்றதுங்கற பேச்செல்லாம் வாணாம்; நானு ஒன்னோடெ ஈஷ்டத்துக்கு ஒத்துக்கமாட் டன்னு சொன்னால்ல அந்தப்பயமுறுத்தல்லாம் வோணும்; நாந் தான் நீ இளுக்கற இளுப்புக்கெல்லாம் வாறேனே. சமயம் பாத்தல்ல, தோது பண்ணணும்-என்று கூற, இருவரது முகங்களும் மறுபடி ஒன்றாகச் சேருகின்றன. 

அப்போது செட்டியார் திரும்பிப் பார்த்து அப்படியே பிரமித்து ஒரு விநாடி நின்றபின் உரத்தகுரலில், “என்ன ரத்னவேல், அம்மா, என்ன சொல்றாங்கோ, தலைநோவுக்கு மருந்து கேக்கறாங்களா ? தலை நோவுக்கு மந்தரம் போட்றியா ? நானு இதோ வந்துட்டேன் ; வண்டியைத் திருப்பு ; ஊட்டுக்குப் போவலாம்” என்றார். 

உடனே வண்டியோட்டி திடுக்கிட்டு முன் பக்கம் திரும் பிக்கொண்டான். தாசிப்பெண் சரேலென்று தன் முகத் தைக் கீழே கவிழ்த்துக்கொண்டு, “செட்டி பாத்துட்டாப் புலெ இருக்குது; சாக்கிர்தெ.ரோட்டுப்புளுதி எங்கண் ணுலெ ளுந்துட்டுது. நானு ஊகச சொன்னே”ன்னு சொல்லு என்று உடனே அவனுக்கு ஒரு யுக்தி சொல்லிக் கொடுத்துவிட்டுக் கண்களைப் போட்டுத் தேய்த்து நன்றாகக் கசக்கிவிட்டுக் கொண்டு கண்களை மூடிக்கொள்வதும் திறந்து கொள்வதுமாகப் பாசாங்கு செய்தபடி இருக்க, செட்டியார் ஜாம் ஜாமென்று நடந்து வண்டியண்டை வந்து நின்று கொண்டு, தமது கண்களை பயங்கரமாக விழித்து மோட்டார் ஓட்டியின் முகத்தைக் கூர்ந்து பார்த்தபடி, “என்ன, ரத்ன வேல், அம்மாளுக்கு என்ன ஒணுமாம்? ஏதாச்சும் குடுத் தியா ?” என்றார். 

அவருடைய பயங்கரமான விழிகளைப் பார்க்க மாட்டாமல் குறவன் கூச்சமும் திகிலும் கொண்டு தடுமாறி, திடீருனு ஒரு சொயல் காத்தடிச்சிதுங்க. ரோட்டுப்புளுதி குபீருனு களம்பி அம்மா கண்ணுலெ உளுந்துட்டு துங்க. தலெநோவு அதியமாப் போச்சுன்னாங்க; மண்ணு உறுத்தலெப் பொறுக்க மாட்டாமெ கயிஷ்டப் பட்டு ஊதச்சொன்னாங்க. பிம்பக்கம் திரும்பி தூர இருந் தாப்புலே ஊதினேனுங்க. இப்ப கொஞ்சம் கொணர்தானுங்க” என்றான். 

அதைக் கேட்ட செட்டியார் தனக்குயிலின் பக்கம் திரும் யினார். அவள் தன் முகத்தை நிமிர்த்தாமல் கீழே குனிந்த படியே இருந்தாள். உடனே செட்டியார், “ஓ, அப்பிடியா ! நல்ல வேலெ சேஞ்செ! நானு இன்னொருதரம் சக்கர் அடிச் சுட்டு வர்றேன். மறுபடி சொயல் காத்தடிக்கப் போவுது. அம்மாளே பத்ரமாப் பாத்துக்கோ” என்று கூறிவிட்டு, மறு படி திரும்பி குசாலாக நடக்கலானார். அவர் சுமார் ஐம்பது கஜதூரம் சென்றவுடன், குறப்பையன் பின்பக்கம் திரும்பி, “நீ பலே ஆசாமி. செட்டி கேட்டத்துக்கு சவ்வாப்புக் குடு க்கமாட்டாமெ நானு முளிச்சிருப்பேன்; சொல்லிக் குடுத்த கதையெச் சொல்லி செட்டியெ ஒரு சணத்துலெ ஏமாத்தி புட்டேன். எம்பிட்டுச்சுருக்கா நீ செட்டிக்கிப் பட்டுக்குல்லா போட்ற வித்தையெ எனக்குக் காட்டிக் குடுத்தெ! நீ சொல் லிக் குடுக்காமெ இருந்தா, நானு பெப்பேன்னு முளிச்சிருக் கணும். செட்டி உள் ரந்தரத்தைக் கண்டுக்கினு இருப்பான். நல்ல வேளையாத் தப்பிச்சுக்கினம். நீயும் நானும் ஒண்ணாச் சேந்து இவனெ ஏமாத்தறத்துக்கு ஆரம்பிச்சா, இவானாலெ இன்ன பண்ண முடியும். ஒரு நிமிசத்துலே இவுனுக்கு நாம்ப பெரிய பட்டைநாமம் சாத்திப்புடலாம்” என்று கூறியபடி யே பின்புறம் திரும்பி, பெண்ணாளின் அற்புத அழகினால் வசீகரிக்கப்பட்டு மறுபடியும் கையைப் பின்னால் கொடுத்து அவளுடைய முகத்தைப் பிடித்துத் தூக்கித் தன் வேலையைக் துவக்கிக்கொண்டான். 

பாதி தூரம் சென்ற செட்டியார் சடக்கென்று திரும் பிப் பார்த்து பலமாகக் கனைத்துக்கொண்டு, இரண்டொரு தரம் ஏப்பம் விட்டு, “ஆகா! மோசம்! மோசம்! பாத பூஜை பண்ணற பத்தினியம்மா செய்யறது சரியான காரியந்தான். நாயைக் குளிப்பாட்டி நடுவூட்டுலே வச்சா, அது வாலையாட் டிக்கினே மலந்திங்கப் போவுமல்லவா! தேவிடியா எங்கெயும் தேவிடியாளாத்தான் இருப்பா, சொந்தப் பொண்டாட்டி எப்ப வும் சொந்தப் பொண்டாட்டிதான். பணத்தைக் கொட்டி புத்தியெ வெலைக்கி வாங்கினேன் ” என்று தமக்குத் தாமே பேசிக்கொண்டு கோபாவேசத்தோடு திரும்பி வரலான உடனே தனக்குயில் கீழே குனிந்திருந்தபடி தணிவான லில் பேசத் தொடங்கி, “செட்டி நல்லாப் பாத்துட்டாம் போலெ இருக்குது; ‘பூருச மரத்துலெ இருந்து முசுக் கட்டை எறும்பு பத்துப் பதினஞ்சு பொத்துனு எந்தலை யிலெ உளந்து மூஞ்சிலெயும் முதுகிலெயும் ஓடிச்சு,வாயாலெ ஊதி, கையாலே தட்டிவிட்டேன்னு சொல்லு” என்றாள். 

வண்டியண்டை வருவதற்குள், செட்டியார் தமது கோபாவேசத்தை அடக்கிக்கொண்டு சிரித்த முகத்தோடு மிக சாந்தமாக வந்து நின்று குறவனை நோக்கி, “மறுபடி தூசி கண்ணுலே உளுந்திச்சா? ஒங்கையி அம்மாளோடெ முதுவுப் பக்கத்துலெகூடப் போச்சே; அங்கேகூட தூசி உளுந்திச்சா?” என்று அடித்தொண்டையால் பேசினார். 

குறவன்:-இல்லெ எசமானே. இந்த மொறை தூசி உளல்லெ; வேறே ஒரு பெரிய கயிஷ்டம் உண்டாயிப் போச்சுதுங்க. 

செட்டியார்:- ஆ ! அப்பிடியா ! கயிஷ்டமா உண்டா யிப்போச்சு! என்ன கயிஷ்டம்பா அது? 

குறவன்:- மேலே பூருசமரத்துலே எலெய்ங்கள்ளெ எறும்புங்க கூண்டு கட்டி யிந்திச்சாங் காட்டியும். இருந் தாப்புலெ இருந்து பத்துப் பதினஞ்சு செழுப்பெறும்புங்க ஒரே கும்பலா அம்மா தலெமேலே உளுந்து மூஞ்சிலெயும் பின் பக்கத்துலெயும் தாறுமாறா ஓடிச்சுங்க. கொஞ்ச நேரத் துலே அம்மா தவிச்சுப்பூட்டாங்க. ஆவத்து சமயத்துலெ ஆராச்சும் பாவம்னு பாப்பாங்களா ; அந்த சமயத்துலே சீங்க ரொம்ப தூரத்துலெ இந்தீங்க; ஒங்களே அளெச்சி நீங்க வரமட் டும் காக்க முடியலெ. நானே சடக்குனு திரும்பி வாயாலே ஊதி, கையாலெ தட்டினேனுங்க. அம்மா ளோடெ கண்ணெப் பாருங்க. ரெண்டு கண்ணுங் கலங்கிப் போயிருக்குதுங்க. 

செட்டியார்:- மஞ்சீதி. சமயம் பாத்து நல்லா ஒபகாரம் பண்ணெ. ரத்னவேலு, நீ நல்ல பையன்; ஒனக்கு சம்பளம் இன்னொரு அஞ்சு ரூவா தாஸ்தி போட்டுக் குடுக்கப் போறேன்; நீ கொஞ்சம் கீளே எறங்கி இப்பிடி வா என்றார். 

ரத்னவேல் தன் சம்பளத்தை செட்டியார் உயர்த்தப் போவதாகச் சொன்னதைக் கேட்டு மிகுந்த களிப்படைந்த வனாய், அவருடைய கருத்தை அறிந்துக் கொள்ளாமல் கீழே இறங்கி வந்து வணக்க ஒடுத்தமாய் அவருக்குப் பின்னால் விலகி நின்றான். 

உடனே செட்டியார் மிக பிரியமாக தாசிப் பெண்ணைப் பார்த்து, “என்ன, இன்னைக்கி நாம்ப பொறப்பட்ட வேளை சரியாயில்லைப்போ லிருக்குதே. ஒனக்கு அபாயத்துக்குமேலே அபாயமா வருதே ; எங்கே, கண்ணைக் காட்டு கீளே எறங்கி இப்பிடி வெளிச்சத்துக்கு வா, நல்லாப் பாக்கலாம் என்று வாஞ்சையோடு அழைக்க, தாசிப்பெண் இரண்டு கைகளா லும் கண்களைப் பொற்றிக்கொண்டு கீழே இறங்கி அவ ரண்டை நெருங்கி வந்தாள். 

செட்டியார் உடனே அவளுடைய தலையை ரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு, இமைகளை விலக்கிக் கண் களை ஆராய்ச்சி செய்து பார்த்து, பெருத்த அபாயத்தைக் கண்டு நடுங்குகிறவர்போலத் தத்தளித்து, “அடாடா, கண்ணு ரெண்டும் ஒரே ரெத்த மயமா இருக்குதே; எறும்பு கடிச்சத் துலே ஒதடுங்ககூட வீங்கிப் போச்சே! இது பொல்லாத விஷ மாச்சே! இது நாயி கடி விஷத்தைவிடக் கெட்டதல்லவா. நம்ப கடையிலே இதுக்கு ஒரு மருந்து இருக்குது; அதெப் போட்டா ஒரே நிமிஷத்துலெ இந்த விஷம் வாங்கிப்போவும். நீங்க ரெண்டு பேரும் கால்மணி நேரம் இப்பிடியே நில்லுங்க; நானு இப்பிடியே கடைக்கிப் போயி, பத்து நிமிஷத் துலெ மருந்தோடே வர்றேன்” என்று கூறியபடி சடக் கென்று ஏறி மோட்டார் ஓட்டியின் ஆசனத்தில் உட்சார்ந்து கொண்டு கதவுகளை மூடி, வண்டியை ஓட்ட ஆயத்தப்படுத் தியபடி அவர்கள் இருவரையும் பார்த்து, “கண்ணாட்டி, இந்த எடத்துல தனியாக இருக்கறத்தெப் பத்தி பயப்படாதே! உன் ஒடம்புலெ இருக்கற நகைகள்ளாம் வைரமல்ல. லாம் ஜெர்மன் இமிடேஷன் சூது வைரங்கள். உன் மன உறுதியெப் பாத்து அப்பாலெ சீமைக்கமல நகைகள் வாங்க லாமின்னு நெனெச்சிருந்தேன். ஒட்டியாணம்கூட கில்ட்தான். இப்ப இருக்கும் நகைங்க எல்லாம் இருபத்தஞ்சு ரூவாகூடத் தாளாது; திருடன் கொண்டு போனாக்கூட ஒனக்கு அதிய நஷ்டமில்லெ ; இதுவரையிலே நானு ஒனக்காவ செலவு பண்ணது மொத்தமா ரூவா ஆயிரம் இருக்கும்; அதோடே நானு ஒனக்கு நிதநிதம் காலு புடிச்சு உட்டது பைசாவுக்குப் பைசா லாபம் தேறும். கொறப் பையன் ஒன்னைக் கட்டி முத்தங் குடுத்ததும், அவுனுக்கு வேலை போனதும் சரியாப் போச்சு. நானு நேரே ஒன் ஜாகைக்கிப் போயி போயியை யும் வேலைக்காரியையும் அனுப்பிச்சுட்டு,கதவைப் பூட்டிக்கினு நல்ல புத்தியோடெ ஊட்டுக்குப் போயிச் சேரப்போறேன், நீ வீணா அங்கே போயி அலையாதே. அப்பா ரத்னவேலு. இந்தப்பொண்ணு பாதபூஜை பண்ணறத்துலெ கெட்டிக்காரி; ஒனக்குப் பாதபூஜை பண்ண தாம்பாளம் கீம்பாள மெல்லாம் மின்னாலே வாங்கிக் குடுத்து, மோள தாளத்தோடெ ஒங்க ஊட்டுக்குக் கொண்டுபோ அப்பா. குட் பை, சாபியா Good-bye, chaffeur), குட் பை, மை டார்லிங் பாதபூஜை (Good-bye, my darling பாதபூஜை)” என்று கூறியபடி வண்டியை முடுக்கிவிட்டுக் கொண்டு விசையாகப் போய் மறைந்து விட்டார். 

வடிக்கட்டின பைத்தியக்காரர் போலிருந்த தொந்திச் செட்டியார் தாங்கள் மறைவாகச் செய்த காரியத்தைத் தெரி

(பக்கம் 129-176 வரை கிடைக்கவில்லை, உங்களிடம் இருந்தால் எங்களுடைய ஈமெயில் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்)

– தொடரும்…

– ஸதாநந்த போதக சாமியார் (நாவல்), முதற் பதிப்பு: செப்டம்பர் 1933, எம்.எஸ்.ராமுலு கம்பெனி, மதராஸ்.

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் வடுவூர் துரைசாமி ஐயங்கார் (1880-1942) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய வணிகக் கேளிக்கைப் படைப்புகளை எழுதிய முன்னோடிகளில் ஒருவர். திகம்பரச் சாமியார் என்னும் துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கியவர். 1942-ல் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் காலமானார். தமிழில் பிரிட்டிஷாரால் நவீன காவல்துறையும், நீதிமுறையும் உருவாக்கப்பட்டதை ஒட்டி குற்றங்களை காவலர் நவீன முறையில் துப்பறிவதன் மீது வாசகர்களின் ஆர்வம் உருவாகியது. தொடக்ககால தமிழ் பொதுவாசிப்பு எழுத்துக்கள் பெரும்பாலும் துப்பறியும் மர்மக் கதைகளாகவே அமைந்தன.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *