ஆட்கொள்ளி சிகரெட்




(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“என்னங்க, உங்களைத்தான். கொஞ்சம் இருமாமல் இருக்கிங்களா. ஆஸ்பத்திரியில் வந்து அதிலும் “அமைதி” என்ற அறிவிப்புப் பலகைக்குக் கீழ் உட்கார்ந்து கொண்டு, இப்படி சதா “லொள்ளு, லொள்ளு” என்று மூன்று நிமிஷத்துக்கு ஒரு தடவை முக்கிக்கிட்டு இறுமுறீங்களே. பெயருக்கு மட்டும் குறைச்சல் இல்ல. நிர்மல்குமாராம், நிர்மல்குமார். ஒரே இருமல் குமாராக மாற்றிவிட்டது இந்த இரக்கங்கெட்ட சிகரெட் பேய்.” “ஒரு வருஷமா? இரண்டு வருஷமா? என்றைக்கு உங்க சிகரெட் ஸ்டைலைப் பார்த்து நான் மயங்கினேனோ அன்றை யிலிருந்து இன்று வரை இறுமிக் கொண்டேதான் இருக்கிறீங்க. தாலி கட்டும் போதும் இறுமிக்கொண்டேதான் தாலி கெட்டினீங்க.”

“வீட்டில் ஒரே சிகரெட் புகை நாற்றம். வாங்குகிற சம்பளத்தில் பாதியை ஊதித்தொலைத்து விடுறீங்க. வீட்டில் ஒரே தரித்திரம். உங்களுக்கு முதல் சிகரெட் கொடுத்துப் பழக்கிவிட்டவன் முகத்தில் காறித் துப்பணும் போலிருக்கிறது.”
“இந்தப் பாழாய்ப் போகிற சிகரெட்டை விட்டு விடுங்க என்று சொன்னால் கேட்கிறீங்களா? சொல்புத்தியும் இல்லை , சுய புத்தியும் இல்லை .”
“ஆண்குழந்தை வேணும். அவனைப் படிக்க வைத்து ஐ.ஏ.எஸ். கலெக்ட்டராக்கி, எல்லோரும் என்னைப் பார்த்து “இது கலெக்டர் அப்பா” என்று சொல்ல வேண்டும் என்கிற ஆசைக்கு மட்டும் குறைச்சல் இல்லை .”
“என்ன பாவம் செய்தேனோ! இந்த சிகரெட் பேய் பிண நாற்றத்தால் பெட்ரூமில் தினமும் சண்டை போட்டால், பிறகு எப்படி பிள்ளைப் பிறக்கும்! எப்படியோ கடவுள் கண்ணைத் திறந்து, இந்த 12 வருடங்கழித்து, குழந்தை உண்டாகச் செய்து, இன்று நிறைக் கர்ப்பிணியாய் உட்கார்ந்திருக்கிறேன்” என்று கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, நிறைஞ் சனாவுக்கு வலிவரவும், நர்ஸ்மார் அவளை உள்ளே அழைத்துச்சென்றனர்.
இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் குழந்தை பிறந்துவிடும் என்று கேட்ட நிர்மல்குமார், குழந்தையை காஞ்சி மகிழலாம் என்ற சந்தோஷத்தில், ஓடிப்போய் வெளியே சென்று, எதிரே உள்ள பெட்டிக் கடையில், ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கி, உற்சாகமாகத் தொடர்ந்து புகைக்க ஆரம்பித்தார். நிர்மல் குமாருக்கு இறுமல் வந்தது. இறுமி இறுமி இரத்த வாந்தி எடுக்கவே. ஆம்புலன்சில் அவரை ஏற்றி, அருகிலுள்ள அடுத்த ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றனர்.
சரியாக ஒரு மணி நேரங்கழித்து நிறைஞ் சனாவுக்குப் பேறு காலமாகி, இரட்டைப் பிள்ளைகள் பிறந்து குவா குவா என்று அழுதன. இரண்டும் ஆண்குழந்தைகள். வெள்ளை வெளேர் என்று கொளு வாண்டும் தலா 3 கிலோ எடையில் பிறந்த கொளு என்று இரண்டும் தலா 3 கிலோ பார்த்த தாய், நாஸமாரைக் கூப்பிட்டு “பாவை உள்ளே வரச்சொல்லி, குழந்தை களைக் காட்டுங்கள். அவா அதிக சந்தோஷப்படுவார்” என்று சொன்னாள் நிறைஞ்சனா. நர்ஸ் வெளியே வந்து பார்த்தால் நிர்மல்குமார் அங்கே இல்லை.
அருகிலிருந்த ஆஸ்பத்திரியிலிருந்து உறவினர் கலர் ஓடி வந்து, நிறைஞ்சனா அருகில் சென்று. மெதுவாகத் தயங்கி தயங்கி சொன்னார்.
இறுமி இறுமி நிர்மல்குமார் நுரையீரல் இரண்டும் பசணம் பிடித்த ரொட்டி துண்டு போல் கெட்டு, உடைந்து இரத்தம் இரத்தமாக வாந்தி பண்ணி பத்து நிமிடத்துக்கு முன் பரிதாபமாய் இறந்து விட்டார் என்று சொல்லவும், ஓவென அலறினாள் நிறைஞ்சனா.
“கொடூர சிகரெட் என் அன்புக் கணவரைக் கொலை செய்து விட்டதே. இறைவன் தந்த உடம்பைப் பேணிக் காக்காமல் பேய்த்தனமாக நடந்து தன்னைத்தானே இப்படிக் கெடுத்துக் கொண்டாரே. இவ்வளவு படிப்பறிவு இருந்தும் ஒருவருடைய இதயக் கோவில் ஒன்று இறைவனுக்கும், மற்றொன்று தன் இல்லறத் தலைவிக்கு மட்டுமே என்கிற ஆறாவது அறிவு இல்லாமல் ஆட்கொல்லி சிகரெட்டுக்கு இருதயத்தை ஆலயமாகக் கொடுத்ததால், இன்று அழகிய இரட்டைக் குழந்தைகளை அள்ளி எடுத்து அணைத்துக் கொஞ்சி மகிழகொடுத்து வைக்காமல் போய்விட்டாரே.”
“மலடு என்ற மாபெரும் அவலச் சொல்லை மாற்றி மகிழ்ந்த மழலைச் செல்வத்தை மடியில் வைத்து, உச்சிமோந்து உள்ளம் துள்ளி மகிழும் உறவைக் காணாமல் உலகை விட்டே போய் விட்டாரே. ஐயோ, எப்போது இந்த ஆண்கள் ஆட்கொல்லி சிகரெட்டிலிருந்து மனம் திரும்புவார்கள்” என்று சொல்லி ஏங்கி அழவும், அருகிலுள்ள ஆலயக் கோபுரக் கடிகாரம் அதிகாலை 5 மணி அடித்து பைபிளில் 229ம் பக்கம் 1 கொரிந்தியர் புத்தகம் 3ம் அதகாரம் 17ம் வசனத்தை உலக மறியச் சொல்லி அமர்ந்தது.
“ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார். நீங்களே அந்த ஆலயம்.” (1 கொரி 3:17)
உடனே நிறைஞ்சனா தலையணைக்கருகில் கிடந்த மொபைல் போன் அழகிய பாடல் ஒன்று பாடிற்று.
“நீதியின் ஆயுதமாய் – அவயவம்
நேர்ந்து விட்டேன் உமக்கு
ஜோதி பரிசுத்தர் ஆலயமாகவே
சொந்தமாய் தந்தேன் எ
ந்தன் சரீரத்தை” – என்னை ஜீவ
(பெயர்கள் யாவும் கற்பனையே)
– சாம் குருபாதம் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2012, சாம் குருபாதம் பதிப்பகம், திருநெல்வேலி.