போர்க் கலை தெரிந்தோர் உண்டோ?
கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,607
“விறலியே, உன் நாட்டியக்கலை சிறந்தது என்பதை அறிந்தோம். ஆனால், உங்கள் நாட்டில் போர்க் கலை தெரிந்தோர் இருக்கின்றனரா? என்று அரசன் கேட்டார்,
அதற்கு விறலி , “கேளும் எங்க நாட்டிலே தினவெடுத்த தோளுடைய வீரர் பலர். அவர்கள் அடிபட்ட பாம்பு போல் சீறி எதிர்க்கும் ஆற்றலுடையோர். அவர்கள் மட்டுமா?
பொது இடத்தில் கட்டி தொங்கவிடப் பட்டிருக்கின்ற மணியில் காற்றானது மோதியடிக்க, அதனால் எழுகின்ற ஒலியைப் போர் ஒலி என்று, பூரித்துப் போருக்குப் புறப்படும் எங்கள் மன்னனும் இருக்கிறான்.
போதுமா?” என்றார் விறலி.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்
தொடர்புள்ள சிறுகதைகள்
அச்சம் தவிர்!
வளர்கவி
April 21, 2026
மூவர் செய்த மேஜிக்
இரா.கலைச்செல்வி
April 18, 2026
தேன்பாகு
கி.வா.ஜகந்நாதன்
April 16, 2026