அப்படிப் போடு – ஒரு பக்க கதை

0
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,443 
 
 

‘’கொட மிளகா பஜ்ஜி போடுன்னு ஒரு மாசமா சொல்லிட்டிருக்கேன்.

காதுல போட்டுக்க மாட்டேங்கறே’’ கண்ணுசாமியின் குரலில் ஏக்கம் கலந்த வருத்தம்.

‘யோவ், முந்தா நாள் போட்டேனே, போடப் போடத் தின்னு தீர்த்தியே, மறந்து போச்சா?’’ என்றாள் கல்யாணி.

‘ஏண்டி பொய் சொல்றே?’’

‘நான் எதுக்குப் பொய் சொல்லணும்? பத்து நாள் முந்தி, சுடச் சுடச் குழிப்பணியாரம் வேணும்னே, போட்டுத்தந்தேன். வயிறு முட்டத் தின்னே.

அடுத்த நாளே, ‘பணியாரம் கேட்டேனே, ஏன் போடலேன்னு கோவிச்சுக்கிட்டே. நல்லா போதை ஏத்திட்டு வந்து திங்கறே. தூங்கி முழிச்சா எல்லாம் மறந்து போயிடுது…!’’

முகம் சிவக்கச் சொன்னாள் கல்யாணி.

‘என்னை மன்னிச்சிடு புள்ளே’’ குழைவாகச் சொல்லிக் கொண்டே கல்யாணியின் கையைப் பற்றினான் கண்ணுச்சாமி.

குடிச்சிட்டு வந்து என்னைத் தொடுற வேலையை வெச்சுக்காதே. நான் கர்ப்பம் ஆயிட்டா, ‘எப்பத் தொட்டேன்’னு சந்தேகமா பார்ப்பே’

குடிசையின் ஒரு மூலையில் முடங்கிப்படுத்துக் கொண்டான் கண்ணுச்சாமி.

– ப.பரமசிவம் (8-9-10)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *