ஸதாநந்த போதக சாமியார்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 5, 2025
பார்வையிட்டோர்: 711 
 
 

(1933ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3

அர்த்த ராத்திரியில் அம்பாள் பிரஸன்னம்

கிருஷ்ண மூர்த்தி ஐயர் முதலியோர் இராஜபாட்டையில் கைலாசையரைச் சந்தித்ததற்கு முன்னால் கடுமை யான பசியினாலும், கொடூரமான வெயிலினாலும், காற்றின்மை யாலும், அதிகாலையிலிருந்து ஒரே நிலைமையில் முடங்கி உடகார்ந்தபடி குதிரை வண்டியில் பிரயாணம் செய்து சர்வாங்கமும் நொறுங்கி நோவடைய வந்தமையாலும், நாவறட்சிகொண்டு சோர்ந்து வாடித் துவண்டு வந்த காலத் தில், அவர்களுக்குக் கேவலம் கஞ்சி அகப்பட்டிருந்தால் கூட, அது தேவாமிருதம்போல் இனித்திருக்கு மென்பதை நாம் கூற வேண்டுவதில்லை. அதன் பிறகு அரை மணிக்குள் தமக்கு இராஜோபசாரத்தோடு முதல்தரமான அலங்கார போஜனம் கிடைக்கப்போகிற தென்பதை அவர்கள் கனவி லும் எதிர்பார்க்கவில்லை. ஒன்றை நினையாமுன் வந்தெய் தினும் எய்தும் ” என்ற அநுபவ தத்துவப்படி, கைலாசையர் தங்களை வற்புறுத்தி, அரண்மனைபோலிருந்த மாளிகைக்குள் அழைத்துச் சென்றதும், அங்கு மடாதிபதிகளின் தரிசனமும் அருள் வாக்கும் ஏற்பட்டதும், பிறகு தங்களை கைலாசையர் சன்னகாரை கண்ணாடிபோல் வழுவழுப்பாய்த் தேய்த்துவிடப் பெற்று மிக சுத்தமாயிருந்த ஒரு கூடத்திற்கு அழைத்துப் போய் உட்காரவைத்து, இரண்டு பரிசாரகர்களைத் தூண்டி, தலைவாழை இலைகள் போடச் செய்து,பழங்கள், பக்ஷணங்கள் சித்திரான்னங்கள், பாயஸம் முதலிய உள்பட சுமார் ஐம்பது வகைப் பக்குவ பதார்த்தங்களடங்கிய போஜனத்தை மழை போல் பொழியச் செய்ததும், கிருஷ்ணையர் முதலியோருக்குக் கனவுபோல் தோன்றினவேயன்றி உண்மைபோல் தோன்ற வில்லை. 

அவ்வாறு அவர்களுடைய போஜனம் நிறைவேறிய பிறகு, அவர்களுக்கு வாசனைச் சந்தனம் தாம்பூலம் முதலிய வற்றை வழங்கச்செய்த பின்னர், கைலாசையர், அவ்விடத்தி லேயே இருந்து இளைப்பாறும்படி அவர்களை விட்டுவிட்டு, அங்கிருந்து அடுத்த கட்டிற்குள் போய்ச் சேர்ந்தார். அது மன்மாடத்தின் மூன்றாவது கட்டென்பதையும், பண்ணையார் ராமாமிர்த ஐயரும் அவருடைய குடும்பத்தாரும் இருந்த இடம் என்பதையும் முன்னரே குறிப்பிட்டிருக்கிறோம். அந்தக் கட்டிற்குள் கைலாசையர் ஓசை செய்யாமல் பயபக்தி வணக்க வொடுக்கத்தோடு நுழைந்தார். அங்கிருந்த பெரிய கூடத்தில் அன்றைய பகலில் ஒரு சாஸ்திரிகள் பண்ணையாருக்கு ஹோமம் முதலிய சுத்திகரமான சடங்குகளை நடத்தி வைத்தா ராதலால், ஹோமம் செய்யப்பட்ட இடத்தில் கிடந்த சாம்பல், அக்ஷதைகள், சமித்துகள், தர்ப்பைப் புற்கள் ஆகியவற்றை ஒரு மாவிலைக் கொத்தினால் ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளித் தாம்பாளத்தில் எடுத்துக் கொண்டிருந்த பண்ணையாருடைய சம்சாரமாகிய எஜமானியம்மாள் கைலாசையர் வந்ததைக் கண்டு சரேலென்று எழுந்து நிற்க, உடனே கைலாசையர் பயபக்தியோடு கூடிய புன்னகை தவழ்ந்த முகத்தினராய், “மன்னிக்கி ஒரு பெரிய ஸந்தோஷ சங்கதி கொண்டு வந்திருக்கேன்” என்று மிக மரியாதையாகக் கூறினார். 

‘மன்னி’.’மாமி’ என்பவை ஸ்மார்த்தப் பிராம்மணர்கள், தமயன் சம்சாரம், மாமன் சம்சாரம், அல்லது, மரியாதைக் குரிய பெரிய இடத்து ஸ்திரீகள் ஆகியோரை அழைப்பதற்கு உபயோகப் படுத்தும் சொற்கள். ‘மன்னி என்பது ‘மன்னன்’ என்னும் சொல்லின் பெண்பால். தலைவி அல்லது இராஜ ஸ்திரீ என்பது அதன் கருத்து. பழைய காலங்களில் பிராம்மணர்களே அரசராகவும் எல்லோர்க்கும் குலகுருவாகவும் இருந்து வந்தனர். அந்தக் காலத்தில் பழக்கத்தில் இருந்த ‘மன்னி’ என்ற மரியாதைச் சொல் ஸ்திரீகளுக்குள் இன்னமும் மாறாமல் இருந்து வருகிறது. ‘மாமி’ என்பதும் அது போன்றதே. ‘ஆம்’ என்பது ‘ஆயம்’ என்ற சொல் லின் சுருக்கம். அதற்கு வீடு, அல்லது, பண்ணை என்பது கருத்து. அதன் பெண்பால் ஆமி, மாமி என்றால் மா, ஆமி, அல்லது, பெரிய வீட்டுக்காரி என்பது அதன் பொருள். பிராம்மணர்கூட அரசராயிருந்ததுண்டா என்று சிலருக்கு சம்சய முதிக்கலாம். சமீபகாலம் வரையில் மகோன்னத தசையில் இருந்து, இப்போது அழிந்து போன விஜயநகரம் என்னும் சமஸ்தானம் ‘ராயர்’ எனப்படும் மாத்வப் பிராம்மண அரசர்களால் ஆளப்பட்டு வந்ததென்பதையும்,நம் தென்னிந்தியா முழுதும் அதற்குக் கீழ்ப்பட்டதாகவே இருந்து வந்த தென்பதையும் நாம் நம் தேச சரித்திரத்தால் அறிகின்றோம். இன்னமும் வடகலை ‘வைஷ்ணவப் பிராம்மணர்களில் பலர் சக்ரவர்த்தி என்ற பரம்பரைப் பட்டப் பெயர் உடையவர்களாயிருக்கிறார்கள். 

அவ்விஷயம் நிற்க, நாம் இனி கதையை கவனிப்போம். கைலாசையர் பெரிய சந்தோஷச்செய்தி கொண்டு வந்திருப்ப தாய்க் கூறியதைக் கேட்ட பண்ணையார் வீட்டு எஜமானி யம்மாள் மடமையாகவும், பெருந்தன்மையோடும் சந்தோஷ முகமலர்ச்சி காட்டி, “ஆ, அப்பிடியா! பெரிய ஸந்தோஷச் சங்கதியா! அது நேக்கு மாத்தரந்தானா! இந்தாத்து எஐ மானருக்கும் அதுலெ பங்குண்டோன்னோ?” என்று ஆவலை அடக்கியும் சொற்பமாய் வெளிப்படுத்தியும் மறுமொழி கூறினாள். 

அந்த அம்மாளுக்கு வயது சுமார் 38 ஆயிருக்கலாம். உடம்பு மிக செழுமையாகவும், மினுமினுப்பாகவும், எலுமிச்சம் பழம்போன்ற நிறமுடையதாகவும் இருந்தது. முகத்தில் லக்ஷ்மீ விலாசம் ஜ்வலித்தது. தேகச் சாயல், நடையுடை பாவனைகள் யாவும் கம்பீரமாகவும் பெரும் போக்காவும் காணப்பட்டன. பரம்பரையான செல்வப் பெருந்தன்மை யும், தயாளம், பக்ஷம்,ஈவிரக்கம், கபடமின்மை, பேதைமை, அச்சம், அடக்கம், மரியாதை ஆகிய சிறந்த ஸ்திரீ லக்ஷணங் களும் அந்த அம்மாளிடம் பூர்த்தியாய் நிறைந்து சான்னித் யம் செய்தன. அவர்களுக்கு ஏராளமான சிப்பந்திகள் இருந்தனரானாலும், போஜனம் செய்த அலுப்பையும் பாராமல் நெற்றியில் வியர்வை முத்து முத்தாய்த் துளிக்கத் துளிக்கத் தனது பொன்போன்ற தேகத்தை ஒடுக்கி சாம்பல் முதலிய வற்றை எடுத்து அந்த இடத்தை சுத்திசெய்ய முயன்றது குடும்ப ஸ்திரீகளுக்குரிய உத்தம லக்ஷணம் அந்த அம்மா ளிடம் சம்பூர்ணமாய் நிறைந்திருந்த தென்பதை நிதரிசன மாய்க் காட்டியது. 

அந்த அம்மாள் கூறிய மறுமொழியைக் கேட்ட கைலாசையர், இந்த ஸந்தோஷத்துலெ மொதல் நேவேத்யம் எஜமானுக்கும் மன்னிக்கும்தான். மத்தப்படி எங்கிளுக்கும் ஆர்த்தியா சந்தோஷந்தான்.” என்றார். 

அந்தக் கூடத்திற் கடுத்தாற்போ லிருந்த ஓர் அறைக்குள் கருங்காலி விசிப்பலகையின்மேல் நாறுமடித் திண்டு தலையணைகளில் சாய்ந்து சிரமபரிகாரம் செய்துகொண்டிருந்த பெரிய பண்ணை ஐயரவாள், அங்கு நடந்த சம்பாஷணையைக் கேட்டு ஆவலும் புன்னகையும் கொண்டவராய், “என்ன,கைலாஸம், பாலுக்குப் போனியோ? வந்துட்டுதா? கடைசிவரைக்கும் வருமோன்னோ?” என்றார். 

அதைக் கேட்ட கைலாசையர் கைகட்டி வாய் பொற்றிய படி வணக்க ஒடுக்கமாய் அந்த அறையண்டை போய் வெளி யிலயே நின்று, “பால் அப்பவே வந்துட்டுதே. இப்ப மூணாம்பந்தி போஜனம் நடக்கறது. நாலாம் பந்திக்கு ஒரு சுமார் நூறு. பிராம்மணா தேறுவான்னு தோண்ட்றது. பாலைப் பத்திக் கவலை இல்லை. ராத்திரிக்குக்கூட மிஞ்சலாம்.” என்றார். 

அதைக் கேட்டுத் திருப்தியடைந்த இராமாமிர்த ஐயர், “நீயும் ஒங்க மன்னியும் இப்ப பங்கு போட்டிண்டியளே. அது என்ன சங்கதியப்பா ?” என்றார். 

கைலாசையர் சந்தோஷம் ததும்பிய முக மலர்ச்சி யோடு, ”இண்ணைய ஸந்தர்ப்பணைக்கி க நான் சாக்ஷாத் நாராயண மூர்த்தியையும், லக்ஷ்மியையும் நேருலெயே அழைச் சிண்டு வந்துட்டேன். ஸ்வாமிகளே அவாளைப் பாத்து பிர மிச்சுப் பேட்டா. அவாளோடெ பொண் குழந்தையெ ய வச்சு நாளையதினம் பூஜெபண்ண சந்நிதானத்துலெ நேமனம் ஆயிப்போச்சு. எஜமானும், மன்னியும் அவாளைப் பாத்து ரொம்ப சந்தோஷப்படப் போறிக” என்றார். 

இராமாமிர்தம் ஐயர் புன்சிரிப்போடு பார்த்து, “என்னப்பா பெரிய ஆச்சிரியத்தைக் களப்பிவிட்றியே! அப்பேர்ப்பட்டவா ஆரப்பா வந்திருக்கா? ஆராவது ஐபங்காரும் ஐயங்காரம்மா ளும் போஜனத்துக்கு வந்திருக்காளோ?” என்று சம்சயமாக வினவினார். 

கைலாசையர், “நம்படவாளாத்துப் போஜனம் ஐயங்கா ராத்துவாளுக்குத் தொண்டேலெ எறங்குமா என்ன. இங்கே போஜனம் பண்ணினா அவாளோடெ தொண்டெ கருத்துப்போ காதா. நல்ல போஜனம் அவாளுக்குக் குடுத்து வச்சான்னா. அதைத் தள்ளுங்கோ. இவா வேறே. எஜமான் எத்தருவா யோஜனை பண்ணாலும், இவா இன்னார்ன்னு சொல்லமுடியாது” என்றார். 

பர்வதலக்ஷ்மி என்னும் பெயருடைய எஜமானியம்மாள் மிகுந்த வியப்பும் ஆவலும் கொண்டு, “அப்பிடிப் பட்டவா வேறெ ஆர் வரப்போறா? இன்னார்ங்கறது புரியல்லியே? நம்ப ஸொந்த மனுஷாளா அன்னியாளா?” என்றாள். 

கைலாசையர் புன்னகையோடு,”நான் பாலுக்காகப் போனேன்னோ; எதுருலெ ஒரு குதுரை வண்டி வந்தது. ரெண்டு பக்கமும் தெரை போட்டு மறைச்சிருந்துது. ஆரோ வாக்குடுமி தீக்ஷதாளோடெ பாய்ஸாப் சவாரிபோராளாக்கும், நாம்ப மொகத்தை அந்தப் பக்கம் திருப்பினா, வாக்குடுமி தீக்ஷதர் கத்தியெ உருவிண்டு அத்திரிமாக்குப் பிலாச் சொளேன்னு நம்பமேலெ பாஞ்சுடுவாரே, கண்ணெ அலம் பும் படி ஆயிடப்போறதே, நம்பபாடு திண்டாட்டத்துலெ வந்துட்டா, அப்பறம் பரமான்னத்துக்குப் பால் இல்லாமெ ஊட்டிப்பேடு மேன்னு எண்ணிண்டு எம்பாட்டுலெ அண்ணண் டெ திரும்பிண்டே போனேன். வண்டிக்காரன் திடீர்ன்னு என் னைக் கூப்ட்டு, வண்டீலெபிராம்மணா இருக்கா, ரொம்ப தூரத் துலே இருந்து வரா, கொழந்தை பசிச்சுப் பறக்கறது. பிராம் மணா ஸத்ரம் பக்கத்துலே இருக்குமோ’ ன்னு கேட்டான். நேக் குத் தூக்கி வாரிப் போட்டுது. அடாடா, நாம்ப தப்பா நெனச் சுட்டமே, ஆரோ என்னமோ, மனுஷ்யாளைப் பாக்கலாம், அவாளெயும் போஜனத்துக்கு அழெச்சிண்டு வரலாம்னு நேக்குள்ளே யோஜனை பண்ணிண்டு, பின்னாலெ போயித் தெரையெ எடுக்கச் சொல்லிப் பாக்கறேன் ! அடாடா ! என்ன போங்கோ! நேக்கு அப்பிடியே பதறிப்போச்சு! ஆரோ கொடீசுவராளாத்துக் கொழந்தையளாட்டமா, ஆம்படை யான், ஸம்ஸாரம், கொழந்தை மூணுபேர் தங்க விக்ரக மாட்டமா ஒக்காண்டிருக்கா. பாக்கப் பதினாயிரம் கண்ணு கூடப் போறாது போலிருக்கு. பசி தாங்காமே கொழந்தை தொவண்டுபே அப்பிடியே பேச்சு மூச்சில்லாமெக் கெடக் கறது. அந்தக் கொழந்தையோடே தாயார் தாமரைப் பூ ஒடிஞ்சுபே வாடித் தொங்கறாப்லே அப்பிடியே பள்ளிகேலெ அமுங்கிக் கெடக்கறா. அந்தப் பொண்ணோடெ புருஷர் ஒக்காண்டிருக்கவும் மாட்டாமெ, சாஞ்சுண்டிருக்கவும் மாட் டாமெ நெருப்புமேலே இருக்காப்லெ கெடந்து தவிக்கறார். அவாளெப் பாத்த ஒடனே நேக்கு உசிரே போய்ட்ட மாதிரி ஆயிப்போச்சு.குபேர பட்டணம் கொள்ளை போகச்சே,ஆருக் கோ, காதறந்த ஊசி ஆப்பிட்டுதாம்னு சுலோகம் சொல்லுவா. அதெப்போலே, போஜனத்துக்கு வாங்கோன்னு கூப்ட்டா, அவா, கொழந்தைக்கு ரவையூண்டு ரஸம் சாதம் குடுத்தாப் போறுங்கறா. நேக்கா சிரிப்பு ஒரு பக்கத்துலெ வரது, துக்கம் ஒரு பக்கத்துலே உண்டாறது, வேதனை ஒரு பக்கத் துலே புடிங்கித் திங்கறது பாலுக்குப் போகணுமேங்கற துடிப்பு காலெப் புடிச்சு அந்தண்டை இழுக்கறது. அப்பறம் நல்லவார்த்தை சொல்லி, அவாளே இஞ்செ அனுப்பிச்சபாடு பிரம்மப் பிரயத்தனமா முடிஞ்சுது. ‘நீங்க போயி ஸ்நானம் பண்ணி, மடி பண்ணிக்கிங்கோ, நான் இதோ வந்துட்டே ன்னு’ சொல்லி அவாளே அனுப்பிச்சுட்டு ரெண்டு எட்டுலெ பட்டிக்கி ஓடி, பாலைக்கொண்டுண்டு ஓடி வந்தேன். அவாளும் மடி பண்ணிண்டு ஹித்தமா இருந்தா, அழைச்சிண்டு வந்து ஸ்வாமி தரிசனம் பண்ணிவச்சேன். ஸ்வாமியளோடெ நேமனமும் ஆச்சு. அம்படத்தான் சேதி” என்றார். 

அந்த வரலாற்றைக் கேட்ட பர்வத லக்ஷ்மியம்மாள் நிரம் யவும் பதறிப்போய், “ஆ,அப்பிடியா, கேக்கக் கண்ட்றாவியா இருக்கே.காதாலெ கேக்கப் போகலியே! அவா இப்ப எங்கே இருக்கா? நீங்க போயி மொதல்லெ அவாளுக்கு போஜனம் பண்ணிவைங்கோ. போங்கொ,போங்கொ, மத்த சங்கதிபெ யெல்லாம் அப்பறம் பேசிக்கலாம்” என்று படபடப்போடு கூறினாள். 

கைலாசையர் சந்தோஷமான முக மலர்ச்சி காட்டி, அவாளுக்கு போஜனம் பண்ணி வச்சுட்டுத்தான் நேரே இங்கே வரேன்.மின்பக்கக் கூடத்துலெதான் அவா ஸாப்ட்டா. கொஞ்சம் சிரம பரிகாரம் பண்ணிக்கச் சொல்லிப்புட்டு வந்தேன். இன்னும் செத்த நாழி பொறுத்து, மன்னியும் எஜமானும் பெரிய மனஸு பண்ணி அவாளோடெ மொகத்தை அவசியம் பாக்கணும், இதுவரையிலே நாம்ப இந்த மாதிரி மொலக்ஷணத்தோடெ இருந்த மனுஷாளெப் பாத்திருக்கவே மாட்டோம். புருஷன், ஸம்ஸாரம், கொழந்தை மூணுபேரு க்கும் அவாளவாளே ஸமமுன்னுதாஞ் சொல்லணும். வேறெ பேச்சுப் பேசப்படாது. அந்தப் பொண்ணெ அசப்புலெ பாத்தா, அப்பிடியே மன்னி சாயலா இருக்குன்னா. அதுன்னா நேக்குப் பெரிய அதிசியமாயிருக்கு. பாக்கப் பாக்க, என்னை அறியாமெ,எம் மனசு பூரிச்சுப் போறதுன்னா.” என்றார். 

பர்வத லக்ஷ்மியம்மாள் மிகுந்த மகிழ்ச்சியும் கிலேசமு மடைந்தவளாய், “என்ன, நீங்க எங்கெங்கெயோ வளைச்சு வளைச்சு அர்த்த ராத்திரியில் அம்பாள் பிரஸன்னம் 57 வளைச்சு சவுக்கங் கட்டிப் பேசி, ஏறாங்கடைசீலே, என்னைப் பரியாஸம் பண்ணாறப்லெ இருக்கே.” என்றாள். 

கைலாசையர் அதிக விநயத்தோடு கைகட்டி வாய் பொற்றி, அந்தக் கரண சுத்தியாய் உண்மையைப் பேசுகிறவர்போலக் காட்டி, அடாடா, நான் கேவலம் பேப் பய ; இருந்திருந்து நான் மன்னியைப் பரியாஸம் பண்ணற தாவது. எஜமானே அவாளெப் பாக்கட்டும்; நான் சொன்னத் துலெ லவலேசம் பெசகிருந்தா என் கண்ணைப் புடுங்கிப் புடட்டும். வேறெ பேச்சில்லெ.” என்றார். 

உடனே இராமாமிர்த ஐயர், “கைலாஸம், ஒங் கண்ணெப் புடுங்கறது இருக்கட்டும். அதுக்கு இப்ப அவசரமில்லெ. அவா எந்த ஊருலெ இருந்து வரா, எங்கெ போறாங்கற சங்கதியெத் தெரிஞ்சுண்டியோ?” என்றார். 

கைலாசையர், ”அதெ யெல்லாம் இன்னமேதான் கேக்கணும். இதுவரைக்கும் ஸமயம் வாய்க்கல்லெ. கொஞ்சம் சிரம பரிகாரம் பண்ணிக்கட்டும். நான் போயி அவாளோடெ வண்டிக்காரனுக்கு போஜனம் பண்ணிவச்சு, அவனுக்கு வண்டித் சத்தத்தெ வாங்கிக் குடுத்து அனுப்பிச்சுட்டு வரேன்” என்றார். 

உடனே ஐயரவாள், சரி; அந்தக் காரியம் மின்னாலே ஆகட்டும்” என்றார். 

அதைக் கேட்டுக்கொண்டு கைலாசையர் வெளியில் நடக்க, அந்த சமயத்தில், “அச்சி,அச்சி” என்று மிகுந்த ஆவலோடும், வியப்போடும், குதூகலத்தோடும் தனது தாயை அழைத்துக்கொண்டு பண்ணை இராமாமிர்த ஐயரு டைய செல்வக் குமாரனான கோபாலரத்னம் உள்ளே ஓடி வந்தான். அவனுக்குப் பின்னால் நம் கிருஷ்ணமூர்த்தி ஐயருடைய பெண் குழந்தையான சுந்தரியும் மிக உல்லாஸ மாய்த் துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடி வந்தாள். 

பண்ணை இராமாமிர்த ஐயருடைய குமாரனுக்கு சுமார் பத்து வய திருக்கலாம். அவன் அவருடைய ஒரே புதல்வன். சிறுவன் சுவர்ண விக்கிரகம் போல ஒரே அழகின் திரளாய் அமைந்திருந்தான். அவனுடைய அங்கங்களெல்லாம் சாமுத் திரிகா லக்ஷணத்தின்படி அச்சில் கடைந்தெடுக்கப்பட்டவை போல் அத்யாச்சரியகரமாயும்,அபூர்வமான வசீகர சக்தி வாய்ந்தவையாயும் அமைந்திருந்தன. பரந்து கம்பீரமா யிருந்த முகத்தில் சுத்த ஸாத்விகக் களை ஜ்வலித்தது. விசால மாயிருந்த சுண்களின் விழிகள் மிகத் துடிப்பாய்ச் சுழன்று அதீதமான மூளை வேகத்தைக் காட்டின. புருவங்கள் விற்கள் போல் வளைந்து கருத்து அடர்ந்து தோன்றி முகத்திற்குப் பிரமாதமான மோகன சக்தியை உண்டாக்கின. செழித்து நெருங்கிப் பெரும் சுமையாய்ப் பொதிர்ந்து முழங்கால்கள் வரையில் நீண்டிருந்த கேசம் அழகாய்ப் பின்னித் தொங்க விடப்பட்டிருந்தது. கைகளில் தங்கக் காப்புச் சங்கிலிகள், விரல்களில் மோதிரங்கள், கால்களில் வெள்ளிக் காப்புச் சங்கிலிகள், செவிகளில் சீமைக்கமலக் கடுக்கன்கள், இடுப்பில் சிவப்புப் பட்டினாலும் ஜரிகையினாலுமான அகன்ற கரைகளை யுடைய வெண்பட்டு வஸ்திரம் ஆகியவை ஒன்றுகூடி அவ னுடைய இயற்கையழகை அபாரமாய்ப் பெருக்கி, அவன் தகத்தகாயமாய் ஜ்வலிக்கும்படி செய்தன, அவனுடைய நெற்றியில் சந்தனத்தினால் சந்திரப்பிறை போல இடப்பட் டிருந்தகுறி ஒன்றே அவனுக்கு ஒரு ரிஷிபுத்திரனுடைய பிரம்ம தேஜஸை உண்டாக்கியது. அத்தகைய விசேஷ சௌந்தரியம் வாய்ந்த செல்வக் குழந்தையான கோபாலரத்னம், தனது அன்னையான பர்வத லக்ஷ்மியை அவளது பெற்றோர் அச்சி அச்சி என்று சுருக்கமாயும் செல்லமாயும் அழைப்பதைக் கண்டு அப்படியே அவனும் அழைத்து வந்தான். 

அவன் திடீரென்று மிகுந்த ஆவலும் பதைப்பும் காட்டித் தன்னை அழைத்துக்கொண்டு உள்ளே ஓடி வர,தாய் அவனது குரலோசையைக் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள். அவனுக்குப் பின்னால் ஓடிவந்த சுந்தரி என்ற சிறுமி பர்வத லக்ஷ்மியம்மாள் நின்றதைக் கண்ட வுடன், முட்டுக்கட்டை போடப்பட்ட தேர்போல, சடக் கென்று சுவரோரமாய் நின்று, நாணித் தனது கண்களைமூடிக்கொண்டு இடது கையின் பின்புறத்தால் நெற்றி முதலிய முகத்தின் மேல்பாகத்தை மறைந்துக்கொண்டாள். 

கோபாலரத்னம் ரப்பர் பந்துபோலத் துள்ளிக் குதித் துக்கொண்டு தனது தாயண்டை ஓடி,”அச்சி, அச்சி, அதோ ஆரு வந்திருக்கான்னு பாரு என்று மழலையாய்க் கூறியபடி அந்த அம்மாளின் கையைப் பிடித்து பலவந்தமாய் இழுக்கத் தொடங்கினான். 

திடீரென்று மின்னற்கொடி தோன்றுவதுபோல் வந்து காட்சி கொடுத்து, அழகுத் திரளாய் நின்ற பெண் குழந்தை யான உயிர்ப் பதுமையைக் கண்ட பர்வத லக்ஷ்மியம்மாள் அபாரமான பூரிப்பும் ஆவேசமும் கொண்டு, அம்பு பாய்வது போல ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்தோடி வந்து, சுந்தரியை வாரி யெடுத்து மார்போ டணைத்துத் தனது ஆசா பாசங்களை யெல்லாம் வெளிப்படுத்தி முகத்தை ஆட்டி ஆட்டி அதன் கன்னங்களில் மாறி மாறி முத்த மழை பொழிந்து, தனக்குள் பொங்கிய அமிர்தரஸத்தை உஸ் அப்பா, உஸ் அப்பா என்று சுவாரஸ்யமாய்ப் பருகியபடி, இராமாமிர்த ஐயர் இருந்த அறையைநோக்கி, “இதோ பாத்தெயளா, இதோ பாத்தெயளா, என்று கூப்பாடு போட்டுக்கொண்டே அம்பு பாய்வதுபோல ஒரே ஓட்டமாய் ஓடி, சுந்தரியோடு இராமாமிர்த ஐயருக் கெதிரில் நிற்க, அவரும் சகிக்க இயலாத பிரமிப்பும், என்று மடையாத ஆநந்தமும் ஆவலும் அடைந்தவராய் சரேலென்று எழுந்து உட்கார்ந்து, சுந்தரியை உற்று உற்றுப் பார்த்து, ‘ஆரு இந்தக் கொழந்தை! கைலாசம் ஆரையோ அழெச்சிண்டு வந்தேன்னானே. அவா கொழந்தைபோ லிருக்கு” என்று கூறி சுந்தரியை வாங்கிக்கொள்ள ஆவல்கொண்டு ஆசையோடு தமது இரண்டு கைகளையும் நீட்டினார். பர்வத லக்ஷ்மியம்மா ளின் மார்பிலிருந்ததே சுந்தரிக்கு மிகுந்த அச்சமும் திகிலுமா யிருந்ததாகையால்,அவள் மெதுவாக நழுவி நழுவிக்கீழே இறங்க முயன்று கொண்டிருந்தாளானாலும், அம்மாள் அவளை விடா மல் இறுகப் பிடித்து இதமாய் மார்போ டணைத்துக் கொண்டி ருந்தா ளாதலால், மிகுந்த மனக் கலக்கத்தோடு மார்பின்மீது தொற்றிக் கொண்டிருந்தாள். அந்த நிலைமையில், புருஷரான இராமாமிர்த ஐயர் தன்னை எடுத்துக்கொள்ள முயன்றதைக் காணவே, அந்தச் சிறுமி பயந்து நடுங்கி பர்வத லக்ஷ்மியம்மாளை விட்டு வராமல் மிகுந்த ஆவலோடு தனது இரு கைகளையும் அந்த அம்மாளின் கழுத்தைச் சுற்றி இறுகக் கட்டிக்கொண்டு முகத்தைக் கழுத்தில் புதைத்துக் கொள்ளலானாள். அவ்வாறு அந்தக் குழந்தை செய்தது, யானைக்குப் பயந்து வள்ளி தம்பிரானைக் கட்டிக்கொண்டதுபோலிருந்தது. 

உடனே பர்வத லக்ஷக்ஷ்மியம்மாள், சுந்தரியின் முதுகில் வாஞ்சையோடு தட்டிக் கொடுத்து, “கொழந்தை பயப் படாதே. நீ எங்கிட்டயே இரு. அவாகிட்டப் போவாண் டாம்.” என்று நயமாய் இதோபதேசம் செய்து, சிறிது தூரத் திற் கப்பால் வைக்கப்பட்டிருந்த பழ தினுசுகளிலிருந்து இரண்டு ஒட்டு மாம்பழங்களை எடுத்து, சுந்தரியின் இரு கைகளிலும் கொடுக்க, அவள் அவைகளை இரண்டு கைகளி லும் வாங்கிக் கொண்டாள். அவளது திகில் சிறிதளவு விலகியது. 

அவளுடைய முகத்தைப் பார்க்கும்போதெல்லாம் பர் வத லக்ஷ்மியம்மாள் ஆநந்த பரவச மடைந்தவளாய், அதன் கன்னங்களைக் குடைந்துவிட முயல்கிறவள்போல முகத்தைக் குலுக்கிக் குலுக்கி ஓயாமல் முத்தம் கொடுத்தபடி கொஞ் சிக் கொஞ்சிப் பேசி,”கொழந்தே,ஒம்பேரென்ன அம்மா? சொல்லு. பயப்படாதே” என்று தட்டிக்கொட்டி உற்சா கப்படுத்த, அது கிலேச மடைந்து இமைகளை மூடிக் கொள்வதும் திறந்து கொள்வதுமாய்ச் சிறிது காலம் தத்தளித்து, “ச்சுந்திரி” என்றது. 

அதைக் கேட்ட பர்வத லக்ஷ்மியம்மாள் சுந்தரி தன் பெய ரைச் சொன்னதற்காக சன்மான மளிக்கிறவள்போல இன் னொரு முறை அவளை ஆசையோடு அணைத்து முத்தமிட்டு, ”சமத்துச் சக்கரைக் கட்டி’ என்று அதற்கு ஒரு பட்டம் வழங்கிவிட்டு, தன் புருஷரை நோக்கி, “கொழந்தை பேசற அழகெப் பாத்தெயளோ! ‘ச்சுந்திரியாம்’ இவ பேரு. அத்தனை யும் தங்கம். ஸ்வாமியள் இவளே வச்சுத்தான் பூஜெ பண்ணப் போறாப்லெ இருக்கு ” என்றாள். 

உடனே ஐயரவாள், “ஸ்வாமியள் ஸரியாத்தான் பாத்துப் பொறுக்கிருக்கா. அவா திரிகாலக்ஞானியோன்னோ. ஆமா, இந்தக் கொழந்தை ஆரெப்போலிருக்குன்னு கவனிச்சியோ! நம்ப குட்டி லக்ஷ்மி படத்தை இப்பிடி எடு’ என்றார். 

அதைக் கேட்ட அம்மாளுடைய முகம் சடக்கென்று மாறுபட்டது. கருமேகம் திடீரென்று தோன்றி சந்திர பிம்பத்தை மறைப்பதுபோல அவளுடைய மலர்ந்த முகம் உடனே சுருங்கிப் போயிற்று. உள்ளார்ந்த பூரிப்பும் அடங் கியது. அவள் சிறிது தூரத்திற்கப்பால் போய் அங்கிருந்த படமொன்றை எடுத்து வந்து, ஐயரவாளுக் கெதிரில் அதைக் காட்டியபடி அதிலிருந்த ஒரு சிறிய பெண் குழந்தையின் வடிவத்தையும்,சுந்தரியின் வடிவத்தையும் மாறி மாறி ஒத்திட் டுப் பார்த்தாள். அது போலவே பண்ணையாரும் செய்து அடுத்த நிமிஷம் வியப்போடு பேசத்தொடங்கி,”என்ன ஆச் சிரியம். ரெண்டும் ஒண்ணுபோலெயே இருக்கே !” என்றார். 

அவருடைய மனையாள், ” ஆமான்னா, அப்ப மொத, இது யாரோ நாம்ப பாத்துப் பழகின சாயலா இருக்கேன்னு நேக்குள்ளே ஒரு சந்தேகம் உண்டாயிண்டே இருந்தது. இந்தப் படத்தெப் பாத்தப்பறந்தான் இன்ன துன்னு புரிஞ்சுது. மூக்கு,முழி,கன்னம், கின்னம்,ஒடம்பு, கிடம்பு எல்லாம் அதே அச்சா யிருக்கே! கொஞ்சங்கூட வித்தியாசம் தெரியல்லியே!” என்றாள். 

ஐயரவாள், “இந்தக் கொழந்தெயோடெ தாயாரும் நீயும் போன ஜென்மத்துலே ஒருவேளை அக்கா தங்கையா யிருந்தியளோ என்னமோ” என்றார். 

மனையாள், “ஆமான்னா. நேக்கு இப்பதான் ஞாபகம் உண்டாறது. இந்தக் கொழந்தெயோடெ அம்மாளெப் பாத்தா, என்னைப்போலே இருக்குன்னு ஸத்ரம் மணியாரர் செத்தெ மின்னெ சொன்னாரே.” என்றாள். 

ஐயரவாள், “எல்லாத்துக்கும் நீ போயி, அந்தம்மா ளெப் பாத்து, அவாளுக்கு சௌகரியமான ஜாகை யெல்லாம் காட்டி, அவா எந்தூருங்கற சங்கதியெல்லாம் விசாரிச்சுண்டு வா. நம்பாத்தைத் தேடிண்டு வந்தவாளெ ஒபசாரம் பண்ணி அழெக்காமெ இருக்கப்படாது. சீக்கிரம் போ. என்றார். 

உடனே அம்மாள் வெளியில் போக முயல, அதுவரையில்  பக்கத்தில் நின்றுகொண்டிருந்த கோபாலரத்னம், “கொழந்தெயெக் கீழே விடு அச்சி. நாங்க வெளையாட ணும். நாங்க வெளையாடினப்பறம் நீ தூக்கிக்கல்லாம்” என்று நயமாய் வேண்ட, உடனே சுந்தரி கீழே விடப்பட் டாள். கோபாலரத்னம் பக்கத்திலிருந்த ஒரு கூடத்திற்கு அவளை அழைத்துக்கொண்டுபோய் அவளுடன் விளையாட ஆரம்பிக்க, சுந்தரியும் அவனுடன் நெடுங்காலம் பழகினவள் போல் தாராளமாய்ப் பழகிக் குதித்து விளையாடத் தொடங்கி விட்டாள். 

சிறிது காலத்திற்கு முன்னர் உள்ளே இருந்து வெளியில் வந்த கைலாசையர் வண்டிக்காரனுக்குக் கூலி கொடுத்து அனுப்பிவிட்டு, சத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளை எடுத்துக்கொண்டு வரும்பொருட்டு கிருஷ்ணமூர்த்தி ஐய ரையும் அழைத்துக்கொண்டு போய்விட்டாராதலால், தனி மையில் விடப்பட்ட ஸ்வர்ணாம்பாள் சுந்தரியைத் தேடுகிற வள்போல அந்த விசாலமான மாளிகையின் அமைப்பைப் பார்த்துக்கொண்டே பண்ணையார் இருந்த இடத்தை நோக்கித் தயங்கித் தயங்கி மான்போல மருண்டபடி வந்துகொண்டிருந் தாள். 

அந்த சந்தர்ப்பத்தில் எதிரில் வந்த பண்ணையாருடைய பத் அவளைச் சந்திக்க சுந்தரியைக் கண்டபோது அந்த அம்மாளுக்கு எவ்வளவு ஆநந்தமும், மனவெழுச்சியும், வியப்பும் பிரமிப்பும் உண்டாயினவோ அதுபோலவே, ஸ்வர் ணாம்பாளைக் கண்டபோதும் உண்டாயினவானாலும் ஸ்வர் ணாம்பாளின் வயதிற்குத் தக்கபடி அவளை மிக உவப்போடு உபசரித்து அழைத்துக்கொண்டு தான் முன்னிருந்த பெரிய கூடத்திற்குள் நுழைந்து, அங்கு போடப்பட்டிருந்த ஒரு கருங்காலி ஊஞ்சற் பலகையின்மேல் அவளை உட்கார வைத்துத் தானும் அருகில் உட்கார்ந்து, அவளிடம் அந்தரங்கமான விநய விசுவாசத்துடன் சம்பாஷித்து, அவளுடைய பிறந்த ஊர் எது, புருஷன் ஊர் எது, அப்போது போக உத்தேசித்து வந்தது எந்த ஊருக்கு என்பன போன்ற வரலாறுகளை விசாரித்தபடி உட்கார்ந்திருந்தாள். அவர்களிருவரும் ஒன்றாயிருந்து பழ கிய அந்த சொற்ப காலத்திற்குள் இருவரும் நெருங்கிய உற வினர்போல் அன்னியோன்னிய உணர்ச்சி பாராட்டத் தலைப் பட்டனர். அவர்கள் இருவருக்கும் சந்திப்பும் சல்லாப மும் நேர்ந்ததுபோல, சிறிது காலத்திற்குப் பிறகு, இராமா மிர்த ஐயருக்கும் கிருஷ்ணமூர்த்தி ஐயருக்கும் நேர, அவர் களும் அபாரமான மகிழ்ச்சியும் குதூகலமு மடைந்து சம்பாஷித்திருந்தனர். 

அன்றைய பகல் கழிய, மாலை வேளை வந்து சேர்ந்தது இரவில் எல்லா ஜனங்களுக்கும் போஜனம் இல்லை யென்பது பகலிலேயே தெரிவிக்கப்பட்டதானாலும், சுமார் ஐந்நூறு ஜனங்கள் வரையில் தங்கி இருந்தனர். பகலில் தாங்கள் போஜனம் செய்ததனால் ஏற்பட்ட வயிற்று பளுவைத் தூக்கிக்கொண்டு தங்கள் தங்கள் ஊருக்குப்போக இயலவில்லை யென்றும், தங்களுக்கு இராப் போஜனம் தேவையில்லை யென்றும், ஸ்வாமிகள் மாலையில் பூஜை செய்தபின் வழக்கமாய் நிகழ்த்தும் உபந்நியாசத்தைக் கேட்க விரும்புவதாகவும் கூறி அந்த ஊரிலேயே தங்கி விட்டனர். 

ஸ்வாமிகள் இரவு எப்போது வருமென்று ஆவலோடு எதிர்பார்த்திருந்ததாக நாம் முதல் அதிகாரத்தின் முடிவில் கூறினோமல்லவா. ஆதி சங்கரர் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தது போல, இவரும் அன்றிரவு அம்பிகையாய் மாறி, ஸ்வர்ணாம் பாளின் மனதைப் பரிசோதிக்க எண்ணியவராதலால்,அதைப் பற்றியே மனனம் செய்தவராய்ப் பொழுதைப் போக்கி, சாயங்காலமானவுடன் நித்ய கர்மாநுஷ்டான ஜப தபங்களை முடித்து, விக்கிரகங்களுக்குப் பூஜை நைவேத்தியங்களை நிறை வேற்ற, பக்தகோடிகள் ஸ்வாமி தரிசனம் செய்து தீர்த்தம் விபூதி குங்குமம் பெற்றுக் கொண்டனர். 

முடிவில், வழக்கப்படி, ஸ்வாமிகள் பகவத் விஷயமாய் உபந்நியாசம் புரியத் தொடங்கினார். 

ஸ்திரீகள் சுமார் ஐம்பதின்மர் தனியாய் ஒரு பக்கத்தில் நாணிக் குனிந்து அடக்க வொடுக்கமாய் நின்றுகொண்டிருந் தனர். ஏராளமான புருஷர்கள் பயபக்தி விநயத்தோடு பத்தி பத்தியாய் முன்னால் உட்கார்ந்திருந்தனர். 

ஸ்வாமிகள் பக்த சிகாமணிகளை கிருபா நோக்கமாய் ஒருமுறை பார்த்தார்; ஸ்திரீ ஜனங்களைக் கடைக்கண்ணால் மாத்திரம் கடாக்ஷித்தாரேயன்றி அவர்களிருந்த பக்கம் தமது முகத்தைத் திருப்பாமலே மிகவும் ஸுமுகமாய் அடியில் வரு மாறு சொற்பொழிவு நடத்தலானார். (அவர் ஸ்மார்த்த பரி பாஷையில் பேசினாரானாலும், அதை வாசகர்கள் சுலபத்தில் தெரிந்துகொள்ளுமாறு நாம் தமிழ் நடையில் மாற்றி எழுதுகிறோம். 

இந்த கிராமத்தின் பெயர் விஷ்ணுபுரம், உங்கள் லலாடங்களில் கோபீசந்தன ஊர்த்வ புண்டரங்கள் ஜ்வலிக் கின்றன. நீங்கள் எல்லோரும் மகரிஷிகளின் புத்ரர்கள் போல் சுத்த ஸாத்விக தேஜஸோடு ஜ்வலிக்கிறீர்கள். மகாபுண்ய பூமியாகிய இந்தப் பரத கண்டத்திற்கு பிரத்யேகமாய் ஏற்பட்டுள்ள பிரம்மதேஜஸோடு கூடிய இப்படிப்பட்ட பார மார்த்திக ஸதஸ்ஸுகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குப் புளகாங்கிதம் ஏற்படுவது வழக்கம். என் மனமும் மெய்யும் பெரு விம்மித மடைந்து பூரித்து ஆநந்த பரவச மடைவது நிச்சயம். அதே நிலைமையில் நான் இப்போது இருக்கிறேன். என் நா தழுதழுக்கிறது; உடம்பு நடுங்குகிறது; வார்த்தைகள் வெளியில் வராமல் தொண்டையிலேயே இருந்து கிலேச மடைகின்றன. ஆனாலும், இந்த ஸ்தானத்தின் கட மையை உத்தேசித்தும், நான் உங்களுக்கு உபயோகமான விஷயங்கள் எதையேனும் சொல்வே னென்று எதிர்பார்த்து நீங்கள் இங்கு கூடியிருப்பதைக் கருதியும், எனக்குத் தெரிந்த சில விஷயங்களை பகவத் ஆக்ஞையாயும், பகவத் பிரீத்யர் த்தமாயும் சொல்லுகிறேன். 

நான் உங்களைப் போலிருக்கும் விஷ்ணு பக்தர்கள் வஸிக் கும் ஊர்களுக்கும் போவதுண்டு; சைவர்கள் வஸிக்கும் ஊர்களுக்கும் போவதுண்டு. போகுமிடத்தில், அவரவர் களுக்கு எந்த தெய்வத்தினிடம் அபிமானமுண்டோ அதைப் பற்றி விசேஷமாய்ப் பேசுவதையே வழக்கமாய் வைத்துக் கொண்டிருக்கிறேன். அது ஏனென்று நீங்கள் கேட்கலாம். புளித்த கூழையே தலைமுறை தலைமுறையாய்க் குடிப்பவருக்கு உயர்ந்த சம்பா அரிசியில் செய்த அபூர்வமான சித்ரான்னங் கள், பாகு சிலேபிகள் முதலியவற்றைக் கொட்டினால், அவர் களுக்கு அவை பிடிக்கா; அவர்களுடையதேக ஆரோக்கியத்தை யும் அவை சீக்கிரத்தில் குலைத்துவிடும். அதுபோல, பரம்பரை யாக சுத்த ஸாத்விக பதார்த்தத்தையே போஜனம் செய்பவர் களுக்கு, மகாராஜாக்களுக்குத் தயாரிக்கப்படும், மாம்ஸாதிகள் கலந்த ‘புலாவ் ‘ முதலிய மதோன்ம ஸ்தான போஜனத்தை நினைக்கும்போதே குமட்டலும் வாந்தியும் உண்டாவது நிச்ச யம். தேள் கொட்டியதனால், அவஸ்தைப்படுவோனுக்கு, தேள் கொட்டு மருந்தை உபயோகிப்பதே பொருத்தமாகு மன்றி, அவனுக்கு பேதி மருந்தோ, ஜுர மருந்தோ கொடுப் பது பொருத்தமாகாது. அவரவர்களுடைய தேகக் கூறை அநுசரித்து, ஆகாரம் மருந்து முதலியவை கொடுப்பது போல, மனதின் பரிபக்குவ நிலைமை, கிரகண சக்தி முதலிய வற்றை யநுசரித்தே பாரமார்த்திக விஷயங்களை போதிக்க வேண்டும். ஆகவே, ஸதஸ்ஸின் அந்தஸ்தைக் கருதி நான் இன்று விஷ்ணுபரமான சில விஷயங்களைத் தெரிவிக்கின்றேன். 

நான் திக் விஜயம் செய்யப் போகும் இடங்களில் சில ருக்கு ஒரு சந்தேகம் உண்டாவது வழக்கம். “ஆதி சங்கரர், ‘மன்மத பீடம்’ என்று ஒரு பீடத்தை ஸ்தாபிக்கவில்லையே, இந்த ஸ்வாமிகள் யார்?” என்று சிலர் சம்சயிப்பதுண்டு. உண் மையில் இந்தப் பீடம் அவரால் ஸ்தாபிக்கப்பட்டதல்ல. தத் காலத்து மிஸ்ரநாகரிகத்திற்கு உகந்த சில புதிய தத்துவங்களை போதிப்பதற்காக, சில விவேகிகளால் இந்தப் பீடம் சமீப காலத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. என் பிரசங்கங்களை நீங்கள் கேட்டுக்கொண்டே வருவீர்களானால், இந்தப் பீடம் ஏற்பட் டதன் நோக்கம் வெளிப்படையாய்த் தெரிந்துபோகும். ஆயி னும், ஒரே ஓர் உதாரணத்தைச் சொல்லி அதை நான் விள க்குகிறேன். விசிஷ்டாத்வைத பாஷ்யத்தை எழுதிய ராமாநுஜ ருடைய ஜீவிய சரித்திரத்தை நாம் எடுத்துக்கொள்வோம். தத் காலத்தில் சகலமான துறைகளிலும் மகா மேதாவிகளாயும், அதிமா நுஷ சக்தி வாய்ந்தவர்களாயும் விளங்கும் வெள்ளையர் களான மயன்மக்கள் ராமாநுஜருடைய பாஷ்யத்தைப்படித்து, மூளையின் வேகம் இவ்வளவு உச்ச நிலைமையை இதுவரையில் எட்டியதுமில்லை; இனி எட்டப்போகிறதுமில்லை”யென்று மன தார மெய்ச்சி மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படுகிறார். கள். இந்த உலகம் முழுதிலும் வெளிப் பார்வைக்குத் தமது பரம்பரை மதங்களை அநுஷ்டிப்பதாகக் காண்பித்துக் கொண் டாலும், பேச்சிலும் எழுத்திலும் வியவகாரங்களிலும் ராமா நுஜருடைய சித்தாந்தங்களையே ஆசிரயிக்கிறார்கள். அத் தகைய அபார ஞானமும் பகுத்தறிவும் வாய்ந்த ராமாநுஜ ரைப்பற்றி பிற்காலத்தில் அவருடைய சரிதங்களை எழுதிய சிலர் பல விகாரமான சம்பவங்களை எழுதி வைத்திருக்கின் றனர். ராமாநுஜர் செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள ஸ்ரீ பெரும் பூதூரில் ஜனித்தவர்; கஞ்சீவரத்தில் வித்யை கற்றுக் கொண்டு அவ்விடத்திலேயே வரதராஜப் பெருமாளுக்குக் கைங்கரியம் செய்து கொண்டிருந்தவர். அப்போது ஸ்ரீரங் கத்தில் வைஷ்ணவ மதத் தலைவராயிருந்த ஆளவந்தார் என்ப வர் தமக்கு அந்திய காலம் நெருங்கி விட்டதைக் கண்டு காஞ்சியிலிருந்த ராமாநுஜரைத் தமது ஸ்தானத்தில் அமர்த் தக் கருதி, அவரை அழைத்து வரும்படி தமது சிஷ்யர் ஒரு வரை அனுப்பினார். அவர் அப்படியே போய் ராமாநுஜரை அழைத்து வந்தார். அவர்கள் ஸ்ரீரங்கத்தை அடைந்த காலத் தில் ஆளவந்தார் இறந்துபோய் விட்டார். ராமாநுஜர் அவ ருடைய பிரேதத்தைப் பார்த்த காலத்தில், அவருடைய கை “ஏன் விரல்களுள் மூன்று மடங்கிப் போயிருந்தன. மூன்று விரல்கள் மடங்கி இருக்கின்றன என்று ராமாநுஜர் மற்றவர்களிடம் கேட்டாராம். மற்றவர்கள், இறந்தவ ருடைய மனதில் மூன்று குறைகள் இருந்தன. அவற்றோடு அவர் இறந்துபோனார். அதனால் மூன்று விரல்கள் மடங்கிப் போயிருக்கின்றன ” என்று கூறி, அம்மூன்று குறைகளும் இன்னின்னவை என்று சொன்னார்களாம். ராமாநுஜர் ஒவ்வொரு குறையையும் விஸ்தரித்து, அதைத் தாம் பூர்த்திசெய்வ தாய்ச் சொல்லச்சொல்ல, ஒவ்வொரு விரலாய் நீண்டுபோயிற் றாம். பிற்காலத்தில் சரித மெழுதியவர்கள் இவ்வாறெல்லாம் நடந்ததாத நம்பி எழுதி வைத்திருக்கிறார்கள். ஒருவர் இறந்துபோனால், அதற்கு இரண்டொரு நாழிகைக்குப் பிறகு உடம்பு முழுதும் ஒரே விரைப்பாய் விரைத்துக் கொள்வதையும், விரல்கள் மடங்கிப் போவதையும், மேலும் சில நாழிகை காலத்தில் எல்லாம் துவண்டு போவ தையும நாம் பிரத்தியட்சமாய்ப் பார்க்கிறோம். அவரவர் செய்யும் தொழிலைப் பொருத்து சில அவயவங்கள் ஆயுட் காலம் முடிய அதிகமாய் உழைக்கின்றன. ஆயுட்காலம் முடிய உபாத்தியாயர் வேலை செய்து கூச்சலிட்டுக் கதறுகிற வர்களுக்கு ஸ்வாசகாச வியாதி வந்துவிடுகிறது. ஓயாமல் படித்தபடியே இருப்பவருக்கும், அவருடைய குழந்தைகளுக் கும் கண்பார்வை துர்ப்பலப்பட்டுப் போகிறது. எப்போதும் கடைகளில் உட்கார்ந் திருப்பவர் பலருக்கு யானைக்கால் ஓத பீஜம் முதலியவை உண்டாய் விடுகின்றன. எப்போதும் எழு திக்கொண்டே இருப்பவருக்கு வலது கையின் விரல்கள் அடிக்கடி மரத்துப் போகின்றன. இந்தப் பிரபஞ்ச மர்மங் களையும், கண்ணிற்கும், மனதிற்கும் எட்டாத பிரபஞ்சத் தின் உள் ரந்தரங்களையும் நேரில் கண்டவர்போல விளக்கி, நமக்கு தேவாமிருத நவநீதம் திரட்டிக் கொடுத்துள்ள அ மாநுஷ சக்தி வாய்ந்த ராமாநுஜர், இறந்துபோன அன்ன மய கோசத்திலடங்கிய விரல்கள் அவருடைய மன ஆக் ஞையை, இறந்த பிறகும் தோற்றுவிப்பது சாத்தியமானதல்ல வென்பதை ராமாநுஜர் உணர்ந்திருக்க மாட்டாராவென் பதை, சரித மெழுதியவர்கள் நினைக்கவில்லை. ஆளவந்தா ருடைய உயிர் நீங்கியதற்கு முன்பே, மூன்று விரல்கள் மற்ற அங்கங்களுக்கு முன்னாகவே பட்டு விரைத்துப்போயின வென் பதை அவர்கள் அறியவில்லையென்றே நாம் சொல்லவேண் டும். பொதுவாகவே, நம் சரிதங்களில் பகுத்தறிவிற்கு ஒவ்வாத இத்தகைய அசம்பாவிதங்கள் இருப்பதே பிற மதஸ்தர்கள் நம் மை இழிவுபடுத்த முகாந்தரங்களாய் இருந்து வருகின்றது. பலாப் பழத்தின் வெளியில் முள்கள் நிறைந்திருந்தாலும், நாம் நிர்த்தாக்ஷண்யமாய் அவற்றை வெட்டி, பகுத்தறிவற்ற மாடுகளுக்கு ஆகாரமாய்ப் போட்டு, சாரமான சுளைகளையே சுவீகரிப்பதுபோல், நாம் நம் மத கிரந்தங்களிலும், ஆசார சீலங்களிலும் செய்தாலன்றி, நமக்குரிய மகோன்னத ஸ்தானம் உள்ளபடி கிடைக்கவே கிடைக்காது. ஆனால் இவ்வித அபூத கற்பனைகள் ராமாநுஜ சரிதத்தில்தான் மிக சொற்பமாய்க் காணப்படுகின்றன. இதர பாகங்களெல்லாம் சர்வ சாதாரண மாய் மனுஷ ஜீவியத்தில் நடக்கக் கூடியவையாகவே இருக்கின்றன. 

நாம் ஆதிசங்கரருடைய ஜீவிய சரித்திரத்தை எடுத்துக் கொண்டாலோ, “கந்தப் புராணத்தின் புளுகு வேறு எந்தப் புராணத்திலும் இல்லை” என்று சிலர் சொல்லும் பழமொழி யைத் தோற்கச் செய்வதாயிருக்கிறது. அவர் இப்போதைக்கு சுமார் 2442 வருஷங்களுக்கு முன்னே மலையாள தேசத்தில் பிறந்த, உச்சிக் குடுமி வைக்கும் நம்பூதிரி பிராம்மணர். இந்தக் காலத்தில்கூட மலையாள தேசத்தின் நாகரிகம் எவ் வளவு முன்னேற்றமடைந்திருக்கிறதென்பது எல்லோர்க்கும் பிரத்தியட்சமாய்த் தெரிந்த விஷயம்; “கேரளம் வானரா சாரம்” என்பது சர்வ சாதாரணமான பழமொழி. அந்த தே சத்திலுள்ள பிராம்மணர்கள் உள்பட எல்லா ஜனங்களுக்கும் நம்மைப்போல உடைகள் உடுத்திக்கொள்வதுகூட இன்னும் தெரியாது. நம்முடைய பிரம்மசாரிகள் வேஷ்டி கட்டுவது போலவே, அவர்களில் பெரிய வேதபாரகர்கள்கூடக் கட்டு கிறார்கள். நம் தேசத்தில் கிரகஸ்தன பஞ்ச கச்ச மில்லாவிட் டால், அவன் எதற்கும் அருகமற்றவன். அவர்கள் ஒரு கற்ப காலம் பகீரதப் பிரயத்தனம் செய்தால்கூட, பஞ்சகச்சம் கட்டத் தெரிந்துகொள்ள மாட்டார்களென்று நாம் துணிந்து கூறலாம். அவர்களுடைய ஸ்திரீகளும் புருஷரைப்போலவே நான்கு முழ வெள்ளை வேஷ்டியை உடுத்தி, மார்பை மூடாமல் அரை நிர்வாணமாயிருந்து வருகிறார்கள். நம் தேசத்து ஸ்திரீகளைப் பார்த்து இப்போதுதான் அவர்கள் ரவிக்கை போட்டு மார்பைமூடக் கற்றுக் கொள்ளுகிறார்கள். அவர்க ளுடைய காதிலுள்ள தங்க ஓலை ஒரு பெரிய சூரிய காந்திப் புஷ்பத்தைவிடப் பெரிதாயிருக்குமென்றால், காதுத் தொளை யின் உள்ளளவு எவ்வளவென்பதை நாம் சொல்ல வேண்டிய தில்லை. அவர்கள் பேச ஆரம்பித்தாலோ, கொடிய ஜெந்துக் கள் நம்மீது விழுந்து கடிக்க வருகின்றனவோவென்று நினைக் கும்படியாயிருக்கும். நம் தேசத்தில் கலகங்கள் ஏற்பட் டால், ஜனங்களை அடித்து நொறுக்கித் தூளாக்குவதற்கு தற்காலத்தில் ‘மலையாளப் போலீசாரே’ தருவிக்கப்படுவதும், அவர்களுடைய மிருகத்தன்மையும் பிரத்தியட்சமானவை. அந்த தேசத்திலுள்ள நாயர் ஸ்திரீகளில் எத்தனைபேரை வேண்டுமானாலும், நம்பூதிரிப் பிராம்மணர்கள் பகிரங்கமாய் வைத்துக் கொள்ளலாம். அவர்கள் பிராம்மணர்களுடைய சமயலறைக்குள் கூடப் போய் எல்லா வேலைகளையும் செய்து கொடுப்பார்கள். அவற்றால் நம்பூதிரிகளின் பிராம்மணீகம் கெடுகிறதில்லை. இந்த தேசத்திலிருந்து ஸ்மார்த்தப் பிராம் மணர்கள் மலையாளத்தில் போய்க் குடியேறி இருந்து வருகின் றனரானாலும், அவர்கள் நம்பூதிரிகளோடு போஜனம் செய் வதுமில்லை; கொள்வனை கொடுப்பனை செய்து கொள்வதுமில்லை. மலையாளம் பரசுராம க்ஷேத்ரமென்பது பிரசித்த மான விஷயம். பரசுராமரென்பவர் அசுர குருவான ப்ருகு என்பவருக்குப் பிறந்தவர். நமது நாதப்ரம்மமான ஸ்ரீ தியாக ராஜஸ்வாமிகள் பல கீர்த்தனங்களில் “ப்ருகு ஸுத மத ஹரண என்று ஸ்ரீராமனை ஸ்த்தோத்திரம் செய்திருக் கிறார். அதாவது, அசுர குருவின் பிள்ளையான பரசுராம் னுடைய திமிரை அடக்கியவனே யென்று மேற்படி ஸ்வாமி கள் பாடி இருக்கிறார்கள். மலையாளத்தார் சந்ததி இரணியன், இரணியாக்ஷன், இராவணன், கும்பகர்ணன் முதலிய அசுரர் சந்ததி. ராவணன் சைவப் பிராம்மணனென்றும், கைலா சத்தையே அடியோடு பெயர்த்துத் தன் வீட்டிற்குக் கொண்டு போய்விட முனைந்தவனென்றும் நாம் படித்திருக்கிறோம். அவ்வசுரர்கள், தாமே தெய்வமென்றும்,தம்மைவிட வேறு தெய்வமில்லையென்றும் கூறி முந்திய யுகங்களில் ஊரை இம் சித்ததாய் நம் புராணங்கள் கூறுகின்றன. அவர்களுடைய சித்தாந்தமே அத்வைத சித்தாந்தம். அதையே கலிபுக ஆரம் பத்தில் ஆதிசங்கரர் உலகத்திற்குப் போதித்தார். 

அவர் தமது பாஷ்யத்தில் தாறுமாறாக எழுதி வைத்தி ருந்தவைகளைத் திருத்தவும், ஆதிமுதல் இருந்துவந்த வேத தத்துவங்களின் உண்மையான கருத்துக்களை எடுத்துக்காட்ட வுமே, ராமாநுஜர், மாத்வர் முதலியோர் சரியான பாஷ்யங் களை எழுதினார்கள். உண்மை அப்படி இருக்க, நாக ரிகத்தில் சிறந்த மலையாள தேசத்தில் இப்போதைக்கு 2442 வருஷங்களுக்கு முன்னர் ஜனித்த ஒரு நம்பூதிரிப் பிராம்மணர் இந்தியா முழுதும் பல தடவைகள் பிர யாணம் செய்ததாகவும், 72 துர்மதங்களை அழித்து, வைஷ்ணவம், சைவம் முதலிய ஆறு மதங்களை நம் நாடு உள்பட இந்தியா முழுதிலும் ஸ்தாபித்ததாகவும், இன்னம் பல அதிமாநுஷ வேடிக்கைகளைச் செய்ததாகவும் தாராள மாய் எழுதி வைத்திருக்கிறார்கள். இப்போதும் மலையாள பகவதி, மலையாள மாந்திரீகம், மலையான யக்ஷணி, குறளி, பில்லி,சூனியம்,ஆடு மாடு பலி முதலிய அக்ஞான இருள் அந்த ஜனங்களிடை ஏராளமாய் இருந்து வருகின்றது. எல்லோரும் அதில் பூர்த்தியான நம்பிக்கை வைத்து வருகிறார் கள். அத்தகைய ஊரில் ஜனித்த நம்பூதிரிப் பிராம்மணர் கூடுவிட்டுக் கூடுபாய்ந்தது,இந்தியா முழுதும் இறகில்லாமல் பல தடவைகள் பறந்தது, மற்ற எல்லா மத வித்வான்களை யும் வாதத்தில் வென்றது, வைஷ்ணவம், சைவம் முதலிய மதங்களை ஸ்தாபித்தது முதலியவற்றை நாம் எவ்வளவு தூரம் நம்பலாமென்பது கூறாமலே விளங்கும். ராமாநுஜர் காலம் வரையில் அதாவது சுமார் 900 வருஷங்களுக்குமுன் வரை யில் கங்கரரே வைஷ்ணவர்கள்,சைவர், மாத்வர் ஆகிய எல் லோர்க்கும் பரம ஆசாரியனாய் இருந்ததாகக்கூட சிலர் காற்று மூட்டைப் புராணம் கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். வைஷ்ணவர்களுடைய குருபரம்பரையில் அவருடைய பெயர் காணப்படவில்லை. சுமார் 2442 வருஷம் முதல் சுமார் 900 வருஷத்திற்குமுன் வரையில் ஆதி சங்கரருடைய பெயர் வைஷ்ண மகா ஜனங்களுடைய பரமாசாரியரின் பரம் பரையில் வந்திருந்தால், அது ராமாநுஜர் காலத்திற்குப்பிறகு எப்படி மறைந்திருக்கும் என்பதைக்கூட யோசியாமல் சிலர், தங்களுடைய ஆசாரிய பக்தியில், தங்கள் பகுத்தறிவை விலக்கிப் பேசுகிறார்கள். 

உண்மையை ஆராயுங்கால், கலி 28-வது வருஷத்தில், அதாவது, 5008-வது வருஷத்தில் தோன்றிய கொல்லத்து அரசர் ஒருவரைப்பற்றி வைஷ்ணவ ஆழ்வார் சரித்திரங்களில் எழுதப்பட்டிருக்கும் சில தகவல்களை நான் உங்களுக்குப் படித்துக் காட்டுகிறேன்:- 

“இப்படி இருக்க, உபய விபூதி நிர்வாஹகனும் ஸர்வ நியந்தாவுமான ஸ்ரீமந் நாராயணன்,தன் நிர்ஹேதுக் பரம் கிருபையாலே, இவருடைய ராஜஸ, தாமஸ குணங்கள் தலை மடிந்து ஸத்வகுணமே தலையெடுக்கும்படி கடாக்ஷித்து, தம் முடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை யெல்லாம் நன்றாகக் காட்டிக் கொடுக்க, இவ்வாழ்வார், அவற்றை யெல்லாம் பக வத் பக்திரூபமான ஜ்ஞானத்தை உடையவராய்க் கண்ட பின்பு, இப்பூமியிலுள்ள ஸம்ஸாரிகள் தேகத்தில் ஆத்மாபி மானத்தைப் பண்ணி, தேகத்துக்கு வசப்பட்டு, தேஹ போகத்தை அநுபவித்து ஸர்வேசுவரனை நினையாமல், ஐம்பு லன்கள் கண்ட இன்பத்தை ஆதரித்துத் திரிவதையும், அவர் களுக்கு நடுவே உயிர்க்கழுவி லிருப்பதுபோல் தாமிருப்ப தையும் கண்டு, யானைக் கழுத்திலிருந்து அரசாண்டு ஸுக ரூபமாக ராஜபோகத்தை அநுபவிக்கிற ராஜத்வமும் இவர்க்கு நெருப்புப் போலத் தோற்ற, ஸஹிக்க மாட்டாதவராய், ஸ்ரீ விபீஷணாழ்வான் எல்லாப் போகங்களையும் அடியோடே விட்டு ஸர்வலோக சரண்யனான பெருமாளை ஆசிரயித்தாற் போல் இவரும், ‘இன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான் வேண்டேன்’ என்று சிற்றின்பங்களில் நசையற்று, திரு வரங்கப் பெருநகரில் அரவணையில் பள்ளிகொள்ளும் திருவரங் கனைக் கண்ணாரக் கண்டு களிக்கும் காதலுடன், கோவிலையும் அங்குள்ள வைஷ்ணவ ஸமூகத்தையும் கண்டு அநுபவிப்ப தெப்போதோ என்று ஸ்ரீரங்க யாத்ரையில் நாடோறும் ஆசையுடையவராய், அங்கே நித்ய வாஸம் பண்ணி, கங்கை தொடக்கமான தீர்த்தங்களுக்கும் மேலான ஸ்வாமி புஷ்கர ணியை உடைத்தாய்,பரமரிஷிகள் முதலான மஹாத்மாக்கள் நித்யவாசம் பண்ணும் திருவேங்கடமலையில் ஸ்தாவர திரியக் ஜந்மங்களைப் பரிக்ரஹித்து வாஸம் பண்ண ஆசைப்பட்டு இப்படி மற்றுமுண்டான திவ்ய தேசங்களெங்கும் எழுந் தருளி, அங்கங்குள்ள எம்பெருமான்களையும் ஸேவித்து அங் கங்கே நித்யவாஸம் பண்ண ஆசையுடையவராய் அஷ்டதச புராண இதிஹாஸாதிகளின் ஸாரபூதமான முகுந்த மாலையை அருளிச் செய்தார்.” 

“மந்திரிகள் நம்முடைய ராஜாவான இவர்க்கு ஸ்ரீ வைஷ்ணவ ஸகவாஸத்தால் இத்தனை கலக்கங்களும் தேற் றங்களும் வந்தன. அவர்களுடைய ஸகவாஸத்தைத் தவிர்க்க வேண்டும்” என்று நினைத்து, இவ்வாழ்வாருடைய க்ரஹார்ச் சனை எம்பெருமானுடைய திருவாபரணப் பெட்டியில் நவ ரத்ந ஸோபிதமாயிருந்ததொரு ஆரத்தை வைத்து மறைத்து, ‘இவருக்கு அந்தரங்கரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் எடுத்தார். கள்’ என்று அவர்கள்மேல் பழி சுமத்த, அதற்கு ஆழ்வாரும் ‘பரனன்பர் கொள்ளார்’ என்று சபதம்பண்ணி, அவர்களுக் காகத் தாம் பாம்பின் குடத்தில் கையிட்டருளி ஜயிக்க, அம் மந்திரிகள் கண்டு தாங்கள் செய்த அக்ருத்யத்தை விண் ணப்பம் செய்து, அந்த ஆரத்தை இவர் திருமுன்பே வைத்து தெண்டன் சமர்ப்பித்தார்கள்:” 

“பின்பு, ஆழ்வார்க்கு, பகவத் வைபவம் சொல்லப் பொறாதார் நடுவில் இருந்த இருப்பு அக்நிஜ்வாலையில் அகப் பட்டாற்போல் அதிதுஸ்ஸஹமா யிருக்கையாலே, தம் குமா ரருக்கு ராஜ்யாபிஷேகம் பண்ணி, ராஜ்ய பாரத்தை அவரி டத்தில் வைத்து, ‘ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ, வானாளும் செல்வமும், மண்ணரசும் யான் வேண்டேன் என்று ஐஷிக ஆமுஷ்மிக திவ்ய மாநுஷ போகங்களில் நசை யற்று, தமக்கு அந்தரங்கரான ஸ்ரீ வைஷ்ணவ ஸஹவாஸத்துடன் திருவரங்கத்துக் கெழுந்தருளி, தகட்டாலழுத்தின மாணிக்கம் போன்ற தேஜஸ்ஸோடே உறங்குவான்போல் யோகு செய்கின்ற அணியரங்கத்தம்மானைக் கண்களாரக் கண்டு வாயார வாழ்த்தி அநுபவித்து, அவ்வநுபவத்தா லுண்டான அதிக ப்ரீதியாலே, பகவத் பாகவத வைபவத்தை எல்லாரும் அறிந்து உஜ்ஜீவிக்கைக்காக ‘பெரு மாள் திருமொழி என்கிற திவ்யப் பிரபந்தத்தை அருளிச் செய்து லோகத்தை வாழ்வித் தருளினார்.’ என்பது 5008 வருஷங்களுக்கு முன்னிருந்த கொல்லத்து அரசருடைய சரித்திரம். அப்போது ஸ்ரீரங்க க்ஷேத்ரம், காஞ்சீக்ஷேத்ரம்,திருப்பதி க்ஷேத்ரம் முதலிய வைஷ்ணவ ஸ்தலங்களும் வைஷ்ணவர்களும் இருந்திருக்கிறார்கள். வைஷ்ணவப் பிராம்மணர்கள் கொல்லம் வரையில் போய் அசுர பரம்பரை அரசருடைய அக்ஞான இருளைப்போக்கி, அவருக்கு என்று மழியாத ஆழ்வார் ஸ்தானத்தை அடையும் யோக்யதையை உண்டாக்கியிருக்கிறார்கள். அப்படி இருக்க, சுமார் 2442 வருஷங்களுக்குமுன் தோன்றிய நம்பூதிரிப் பிராம்மணர் வைஷ்ணவம், சைவம் முதலிய ஆறு மதங்களை நம் நாட்டில் ஸ்தாபித்ததாகவும், அதுவரையில் 72 துர்மதங் களே இருந்ததாகவும், தாம் திக்விஜயம் செய்து அவர்களை வென்றதாகவும் ஏன் கூசாமல் காற்று மூட்டை கட்டுகிறார்கள்? “திக் விஜயம்’ என்றால் ஊரூராய் பிக்ஷை வாங்கி ஜீவித்துக் கொண்டு போவது என்பதே கருத்தன்றி, எல்லோரையும் ஜெயிப்பது என்ற அர்த்தம் எப்படி உண்டாயிற்றோ தெரிய வில்லை. மலையாளத்தார் பேசும் தோரணையைக் கண்டு பயந்து எவரும் கிட்ட நெருங்காமல் போயிருக்கலாம்; தாம் எல் லோரையும் ஜெயித்துவிட்டதாய் அவர் நினைத்துக்கொண்டு போயிருக்கலாம். 

அந்தக் குலசேகராழ்வார் பக்தியினால் உருகிப் போய்ப் பாடி இருக்கும் பாடல்களை நீங்கள் கேட்பீர்க ளானால், அப்படியே பரவச மடைவீர்கள் என்பது நிச்சயம்.  

அவர் திருப்பதியைப்பற்றிப் பாடி இருக்கும் சில பாசு ரங்களை உங்களுக்குச் சொல்லுகிறேன். எப்படி இருக்கிறது பாருங்கள். 

(1) ஊனேறு செல்வத் துடற்பிறவி யான் வேண்டேன் 
ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்துக்
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே. 

(2) ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ 
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில் 
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே. 

(3) பின்னிட்ட சடையானும், பிரமனு மிந்திரனும் 
துன்னிட்டுப் புகலரிய வைகுந்த நீள் வாசல்
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்
பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவேன் ஆவனே. 

(4) ஒண்பவள வேலை உலவுதண் பாற்கடலுள் 
கண்டுயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து
செண்பமாய் நிற்கும் திருவுடையேன் ஆவேனே. 

(5) கம்ப மதயானைக் கழுத்ததின் மேலிருந்து 
இன்ப மரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில்வேங்கட மலைமேல்
தம்பமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே. 

(6) மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும் 
அன்னவர் தம் பாடலொடு ஆடலவை ஆதரியேன்
தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குவடாம் அருந்தவத்தான் ஆவேனே. 

(7) வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கட மலைமேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே. 

(8) பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும்
முறையாய் பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்
வெறியார் தண்சோலைத் திருவேங்கட மலைமேல்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையேன் ஆவனே. 

(9) செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே, 
நெடியானே, வேங்கடவா, நின்கோவிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் நடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே. 

(10) உம்பர் உலகாண் டொருகுடைக் கீழ் உருப்பசிதன் 
அம்பொற் கலையல்குல் பெற்றாலும் ஆதரியேன்,
செம்பவள வாயான் திருவேங்கட மென்னும் 
எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே. 

என்று இந்த மகாராஜா தம் அபாரமான செல்வ போகங் களைத் துறந்து, திருவேங்கட மலைமேல் “பக்தர் மிதித்து டக்கும் படியாய்க் கிடக்க மாட்டே ன, கோவிலில் கம்பமாய் நிற்கமாட்டே சுவாமியின் எச்சில் தம்பலத்தை வாங்கப் பொன் வட்டிலைத் தாங்கி நிற்க மாட்டேனா 

என்று பாடி ஏங்கி உருகுகிறார்; ஊர்வசி, மேனகை, திலோத்தமை வந் தால்கூட, ஏற்கேன் என்கிறார். அவர் காலத்திற்கு இரண்டாயிரத்தைந்நூறு வருஷங்களுக்குப் பின் வந்த ஆதிசங்கரர் சந்திர மௌலீசுவரருடைய அவதாரமாம். அவர் 12-வது வயதில் சந்நியாசம் வாங்கிக்கொண்டு, ஜீவனைத் தவிர மற்ற எல்லாம் மாயை என்று ஸ்தாபிக்கிறார். யாரோ ஒரு ஸ்திரீ அவரைக் கொக்கோக லீலா சாஸ்திரத்தில் பரீட்சிக்கிறாளாம். அவளுக்கு சரியான உத்தரம் சொல்லவேண்டுமென்று கருதி, அவர் கூடுவிட்டுக் கூடு பாய்கிறாராம். அந்த சமயத்தில் அவரை உத்தேசித்து, ஓர் அரசன் இறந்துபோக, அவ ருடைய பிணம் தகனம் செய்யப்படாமல் கிடக்கிறதாம். அதில் ஆதிசங்கரர் புகுந்துகொண்டு, விதவையாய்ப் போன ராஜ ஸ்திரீயின் கற்பை யழித்து, அவளிடம் சிருங்கார லீலை களைக் கற்றுக்கொண்டு, மறுபடி தம்முடைய சரீரத்துக்குத் திரும்பிவந்து தம்மோடு வாதித்த ஸ்திரியை வெல்கிறாராம். என்ன அகம்பாவம் பாருங்கள் சந்நியாசியாய்ப்போன இவ ருக்கு. இவர் பகவானுடைய அவதாரமாம்; உலகத்திற்கு ஞானம் போதிக்க அவதரித்தாராம். கொக்கோகப் புஸ்த கத்தை மாத்திரம் மறந்துபோய்த் தம் சொந்த ஊரிலேயே வைத்துவிட்டு வந்து அவதாரம் எடுத்தார்போ லிருக்கிறது. ஆதிசங்கரருடைய வரலாறு எழுதப்பட்டுள்ள ஒரு நூலி லிருந்து இந்த சம்பவத்தைப்பற்றிய வரலாற்றை உங்களுக் குப் படித்துக் காட்டுகிறேன், கேளுங்கள். 

“பிறகு சங்கரர் ப்ரயாகையிலிருந்து மாஹிஷ்மதி நக ரத்திற்குச் சென்று, அங்கே அரசனுடைய ஸபையில் வெகு செல்வாக்குடன் விளங்கிவரும் ஆஸ்தான பண்டிதரான மண் டன மிச்ரரை சாஸ்த்ர வாதத்திற்கு அழைத்தார். அவர் வேதங்களில் கர்ம காண்டத்தையே முக்ய ப்ரமாணமாய்க் கொண்டவர்; ஆகையால் ஸந்யாசிகளை வெறுப்பவர்; புதி தாய் சங்கரரால் ப்ரசுரம் செய்யப்பட்ட மதத்தை வேரறுப்பதற்கு அதே நல்ல ஸமயமென்று கருதி அவருடன் வாதஞ் செய்ய ஸம்மதித்தார். அவருடைய பார்யை ஸரஸ்வதியின் அவ தாரமென்று சொல்லப்படுகிறது. இவ்விருவரும் அவளையே மத்யஸ்தராய் வைத்து பலநாட்கள் வரையில் வாதஞ் செய் தார்கள். முடிவில் மண்டனமிச்ரர் தோற்றார். வாத நியமத் தின்படி தான் கிருஹஸ்தாச்ரமத்தை விட்டு ஸந்யாசியாய் சங்கரருக்கு சிஷ்யரானார். அப்பொழுது அவருடைய பார்யை குறுக்கிட்டு சங்கரருடன் சாஸ்திரவாதம் செய்ய ஆரம்பித் தாள். லௌகிக வைதிக சாஸ்திரங்களில் அவரை அசைக்க முடியாதென்று கண்டு, அவர் பால்யத்திலேயே ஸந்யாஸம் பெற்றவராதலால் அவருக்குத் தெரியாத சிருங்கார சாஸ்திரத் தில் அவள் அவரைக் கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள். அப் பொழுது சங்கரர் அதை எதிர்பார்க்காதவரானதால் சற்றுத் தயங்கி, தனக்கு ஒருமாஸம் தவணை கொடுக்கும்படி வேண் டிக்கொண்டு, அங்கிருந்த நர்மதா நதிக்கரைக்கு வந்து, ஒரு மரப் பொந்தில் தன் தேஹத்தைவிட்டு, சிஷ்யர்களைக் காவல் வைத்துத் தன் யோக சக்தியால் அதிலிருந்து கிளம்பி அக் காலத்தில் உயிரிழந்த அமருகனென்ற அரசனுடைய தேஹத் தில் ப்ரவேசித்தார். பிறகு ஒரு மாஸம் வரையில் அவ்வரச னுடைய அந்தப்புரத்தில் வஸித்துத் தான் அறிந்துகொள்ள வேண்டியதைக் குறைவறத் தெரிந்து கொண்டார். அவரு டைய நடத்தையால் முன்னிருந்த அரசனல்ல வென்று கண்டுகொண்ட ராஜமஹிஷி, வேறு யாரோ மஹா புருஷன் அந்தத் தேஹத்தில் ப்ரவேசித்தான் என்று சந்தேஹித்து, மறுபடியும் அதை விட்டு அவர் போகாவண்ணம் நாடெங்கும் ஜாக்ரதையாய்த் தேடி, ஸந்யாஸி யோகி ஸித்தன் முதலிய வர்களின் உயிரற்ற தேஹம் எங்கிருந்தாலும் கண்டு பிடித்துத் தஹனம் செய்யும்படி மந்த்ரிகளுக்கு ரஹஸ்யமாய்க் கட்டளையிட்டான். அப்படிச் செய்யப்பட்டபொழுது சங்கராசார்ய ரின் சிஷ்யர்கள் பயந்து, குருவின் தேஹம் எரிக்கப்பட்டால் மறுபடியும் அவர் அதில் வந்து ப்ரவேசிக்க முடியாதென் றறிந்து, தங்களில் சிலரைப் பாம்புப் பிடாரர்களைப்போல் வேஷம் தரிக்கச் செய்து, அமருகனுடைய ஸபைக்குச் சென்று அங்கே பாம்பாட்டுவதுபோல் அபிநயித்து அதற் கேற்ற பாடலைப் பாடினார்கள். அவைகளின் உட்கருத்தை அறிந்த ஆசார்யர் தன் தேஹத்திற்கு நேரும் அபாயத்தை க யறிந்து உடனே அதில் வந்து ப்ரவேசித்தார். பிறகு ஸரஸ் வதி யிடத்திற்குச் சென்று அவள் கேட்ட கேள்விகளுக்குப் பூர்ணமாய்ப் பதில் அளித்து அவளை ஜயித்து அவளுடைய சாப காலம் முடிந்து தன்னுலகத்திற்குப் போக அவள் தயாராயி ருந்ததும் அப்படிச் செய்யக்கூடாதென்றும், தன் அவதார கார்யம் நிறைவேறும் வரையில் பூமியில் இருக்கவேண்டுமென் றும் வேண்டிக்கொண்டார்.” என்று ஒரு வரலாறு சொல்லு கிறது. இது சுருக்கமானது, இன்னொரு வரலாறு மிக விஸ்தாரமானது; அதில் சொல்லப்பட்டிருப்பதாவது; தம் தேகத்திற்கு அபாயம் வந்துவிடப் போகிறதென்று சிஷ்யர் களால் நினைவூட்டப்பட்டவுடன், சங்கரர் அரசனுடைய தேகத்தை விட்டு வந்தாராம். அதற்குள், இராஜ சிப்பந்தி கள் அவருடைய தேகத்தை கட்டைகளில் போட்டுக் கொளுத்த ஆரம்பித்து விட்டார்களாம். ஜ்வாலையும் புகை யும் சூழ்ந்துகொண்டனவாம்; சங்கரர் தம் தேகத்திற்குள் புகமாட்டாமல் ஆகாயத்தில் இருந்தபடி தவித்து, பகவானை ஸ்தோத்திரம் செய்கிறாராம். உடனே மழையும் காற் றும் அடித்து அவருடைய தேகத்தை வெளியில் உருட்டி விடுகின்றனவாம். அவர் உடனே தம் சரிரத்தில் புகுந்து கொள்கிறாராம். இந்த வரலாற்றைப் படிக்கும் போது நமக்கே சிரிப்பு வருகிறதே; நம்முடைய மதாசாரங்களைத் தூஷிக்கத் தயாராய்க் காத்திருக்கும் இதர மதஸ்தர்கள் இதை வைத்துக் கொண்டு இந்தப் பரதகண்டம் முழுதுமே இப்படிப்பட்ட அக்ஞான இருள் நிறைந்ததென்று சொல்லி கரியை வழித்து நம்முகத்தில் பூசத் தடை யென்ன? 

மண்டன மிஸ்ரர் என்பவர் ஸுரேஸ்வராசார்யர்; அதா வது, தேவகுரு. அவர் வேதங்களுக்கு அதிகாரி. சரஸ் வதியே அவருடைய சம்சாரம், சங்கரர் அசுரகுரு. அவ ருடைய தேவதை சரஸ்வதி. தம்முடைய தேவதையின் புருஷராயிருந்தவரை இவர் ஜெயிப்பதெப்படி? ஜெயிப்பதற்கு நிபந்தனை யென்ன ? மண்டனமிஸ்ரர் தோற்றால், அவர் கிர கஸ்தாசிரமத்தை விட்டு, சந்யாசி ஆகி, சங்கரருக்குத் தொண்டு செய்வது.சங்கரர் தோற்றால் என்ன தண்டனை? அவர்தான் ஏற்கனவே சந்நியாசியாயிற்றே. அவர் மண்டனமிஸ்ரருக்கு சிஷ்யராவது மாத்திரம் சரியாகுமா? ஏன், அதைப்போலவே, மண்டனமிஸ்ரர் கிரகஸ்தராயிருந்தபடியே இவருக்கு சிஷ்ய ராகக் கூடாதா? சங்கரர் மண்டன மிஸ்ரரைவிட அதிக மேதாவியா யிருந்ததற்காக, பின்னவருடைய சம்சாரம் தன் குடும்ப வாழ்க்கையை இழக்கிறதா? இன்னும் பாருங்கள். அதற்குமேல் அந்த அம்மாள் சிருங்கார லீலைகள் சம் பந்தமாய் சங்கரருடன் வாதம் செய்கிறாளாம். சரஸ் வதியின் அவதாரமான ஓர் உத்தம ஸ்திரீ அன்னிய புருஷ ரான ஒருவரிடம் அதுவும் உலகைத் துறந்தவரான சந்நி யாசியிடம் சிருங்கார ரகஸியங்களைப்பற்றி வாக்குவாதம் செய்யக் கூசாமல் முன் வருவாளா ? இது ஒருகால் மலையாளத் தில் நடக்கலாம்; அப்படியே அவள் வாக்குவாதம் செய்ததாக வே வைத்துக் கொள்வோம். சங்கராசார்யர் ஸர்வக்ஞனான பகவானுடைய அவதாரமாய் வந்தவர்; 12-வது வயதில் சந்நியாசியானவர். மற்ற சகலமான கலைக்ஞானங்களும் அவருக்குப் பிறவியிலேயே உண்டாயிருக்க, அறிவென்பதே சிறிதும் தேவையில்லாத கேவலம் ஜட சம்பந்தமான, மிருக சேஷ்டையான சிருங்கார லீலா விஷயங்களை மாத்திரம் கற்றுக்கொள்ள வேண்டிய நிலைமையில் அவர் இருந்தாரா? அந்த சாஸ்திரம்கூட மலையாளத்துப் பள்ளிக்கூடங்களில் கற்றுக்கொடுக்கப்படுகிறதா? கேவலம் மிருகங்களுக்குக்கூட இயற்கையிலேயே தெரியக்கூடிய ஜட சம்பந்தமான இந்த அற்ப விஷயத்தை அறியமாட்டாதவர், இந்த பிரம்மாண்டத் தைப் பூர்த்தியாய் நிறைத்துக் கொண்டிருக்கும் ஜடப்பொருள் யாவும் மாயை என்றும், பொய்த்தோற்றமென்றும் ஏற்கனவே எப்படிக் கண்டு பிடித்தார்? அந்த அம்மாள் கேட்ட கேள்வி களுக்கு அவர் மறுமொழி கொடுக்க இயலவில்லையே. அவர் உண்மையில் தோற்றவர்தானே? தோற்றவர் உடனே பெண் வேஷம் பூண்டு, அவளுக்கு சிஷ்யராவதல்லவா நியாயம்.அதை விட்டு, ஒருமாத வாய்தா கேட்பதேன்? பரீட்சையில் கேள் விக் காகிதம் கொடுக்கிறார்கள். ‘எனக்குத் தெரியவில்லை; நான் போய் மறுபடி இன்னொரு வருஷம் பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டு வருகிறே’ னென்று ஒரு மாணவன் சொல்லி விட்டுப் போனால், அதற்கு அர்த்தமென்ன? அந்தப் பரீட்சை யில் அவன் தவறினவன்தானே? அப்படித்தான் அவர் சிருங்கார லீலைகள் கற்றுக்கொள்ளப் போனாரே; அவரு டைய தத்துவப்படி ஆன்மா நிர்க்குணமானது: தேகமே சகல மான உணர்ச்சிகளுக்கும், அநுபவங்களுக்கும் ஸ்தானமானது. அவர் தம்முடைய தேகத்தைப் போட்டுவிட்டுப் போகும் போது, அவருடைய ஆன்மா நிர்க்குணமானது; மறுபடி திரும்பி வந்தபோதும் அது நிர்க்குணமானது. ராஜஸ்திரீ யிடம் கற்றுக்கொண்ட சிருங்கார லீலைகளைப் பற்றிய அநுபவ வாசனை அரசனுடைய தேகத்தோடு போயிருக்குமா, அல் லது, நிர்க்குணமான அவருடைய ஆன்மாவோடு வந்திருக் குமா? அதிருக்கட்டும். அரசனுடைய பிணம் கேவலம் தீட்டிற்கு இலக்கானது. இவர் போய் அதில் புகுந்து கொண்டு, உண்மையிலேயே புருஷனை இழந்து விதவையாய்ப் போன இராஜ ஸ்திரீயின் பதிவிரதைத் தர்மத்தைக் கெடுத்து, உலகரீதிப்படி சுமார் பதினாறு தினங்கள் வரையில் தீட்டை அநுஷ்டித்து உத்தர கிரியைகள் நடத்தவேண்டிய காலத்தில் சிருங்கார லீலைகளை அவளிடம் நடத்த லாமா? அரசனுடைய தேகத்தில் புகுந்த இவருடைய ஆன்மாவிற்கு பழைய நினைவு இருந்ததா இல்லையா? தம் தேகத்திற்கு அபாயம் வரப்போவதை ஏன் அவர் அறிய வில்லை? அல்லது, பழைய நினைவு இல்லை யென்றால், பாம்பாட்டிகளாய் வந்த சிஷ்யர்கள் ஆயிரம்தான் சமிக்ஞை செய்தாலும், நேரிலேயே சொன்னாலும் பழைய நினைவு உண்டாகுமா? அரசனுடைய தேகத்திலிருக்கையில் அவ ருக்குப் பழைய நினைவு போய்விட்டதல்லவா. அதுபோல அவர் மறுபடி தம் தேகத்தை யடைந்தவுடன் தாம் செய்த லீலைகளின் நினைவு எப்படி உண்டாகும்? அவர் அரசனுடைய தேகத்தை விட்டு மறுபடி வந்தாரே; சிதையில் கிடந்த தம் தேகத்தில் புகுந்துகொள்ளத் தடையென்ன? அவருடைய ஜீவன் அரூபமானதாயிற்றே. சேவகர்களைப் பற்றி அது பயப் படுவதேன்? நெருப்பையும் புகையையும் பற்றி நிர்க்குண ஜீவன் அஞ்சுவதேன்? அவரே தெய்வத்தின் அவதாரம்; அவரு டைய ஜீவனும் பரமாத்மாவும் ஒன்று; அவர் என் கடவுளை ஸ் தோத்ரம் செய்யவேண்டும்? ஒரு நிர்க்குணப் பிரம்மம் இன் னொரு நிர்க்குணப்பிரம்மத்தைக் கூப்பிட்டதா ? மேலே இருக்கும் பரமாத்மா எதிலும் சம்பந்தப் படாமல் நிற்கும் நிர்க்குண பிரம்மமல்லவா. அவருடைய வேண்டுகோளைக் கேட்டு, அது மழையை எப்படி உண்டாக்கியது? நம் தேசத்தில் பிணம் இரண்டு மூன்று தினங்களுக்கு மேல் இருந்தால், அது அழுகி ஜலமாய் ஓடிப்போகிறதே. ஒரு மாத காலம் அவ ருடைய சரீரம் கெடாமல் எப்படி இருந்தது? தம்முடைய உடம்பை விட்டு ஜீவனைப் பிரித்துக்கொண்டு போகும் சக்தி அவருக்கு யோகாப்யாசத்தினாலோ, தபோபலத்தினாலோ ஏற்பட்டதல்ல; பிறவியிலேயே ஏற்பட்டது. அப்படி இருக்க, அவர் ஆதியில் ஜனித்தபோது நேராய் ஒரு சரீரத்தில் புகுந்து கொண்டிருக்கலாமே. அதற்காக ஒரு தாயின் ஊற்றைத் துருத்தியிலும் மலப்பாண்டத்திலும் பத்துமாத காலம் கிடந்து உழன்றுவந்து,பன்னிரண்டு வயதுகாலம் ஒரு தாய் தகப்பன் மார்களால் வளர்க்கப்பட்டு, அவ்வளவு காலத்தை வீணாக்க வேண்டிய அவசியமென்ன! குழந்தைக்காகத் தவங்கிடந்து பெற்ற தாய் தகப்பன்மாரிடம் 12-வயது வரையில் வளர்ந்து, அதன் பிறகு அவர்களுடைய இருதயத்தைப் பிளந்து, அவர் களை துக்கசாகரத்தில் வீழ்த்துவதா அவர்களுக்கு தெய்வம் கொடுத்த வாக்கிற்கு அர்த்தம்? இவைகளை யெல்லாம் விட அதிக ஆச்சரியகரமானது இன்னொரு விஷயம், ஸர்வக்ஞரான சங்கரர் ராஜனுடைய பத்நி சந்தேகங் கொள்ளும்படியாய் நட ந்து கொள்வதேன்? அரசனுடைய தேகத்தில் இவருடைய நிர்க்குண ஆத்மா புகுந்தால், தேகத்தின் குணம் தலையெடுக் குமா? ஆன்மாவின் நிர்க்குணம் தலை யெடுக்குமா? யாரோ ஒரு மகானுடைய ஆத்மா வந்து புகுந்து கொண்டிருக்க வேண்டுமென்றும், அந்த மகானுடைய வெற்றுடம்பு ஒளிய வைக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும் ராஜஸ்திரீ சந்தேகங் கொண்டாளென்பது மனித சுபாவத்திற்கு உகந்ததாகுமா? அப்படித்தான் அவள் சம்சயம் கொண்டாலும், உத்தம ஸ்திரீ, தனது வைதவ்ய நிலைமையில் தன் கற்பு அழிபட்டுப் போன தைப் பற்றி வருந்தி, அந்த வேஷதாரியை விலக்க முயலு வாளா? அல்லது, அவரையே சாசுவதமாய் வைத்துக்கொண்டு மேலும் சிற்றின்பம் அனுபவிக்க முயற்சிப்பாளா ? இந்த வரலாற்றை ஆராய ஆராய சர்வாங்கமும் பொத்தலாகவே இருக்கிறதென்பது அற்ப அறிவு படைத்தவர்களுக்கூட எளிதில் விளங்கும். இவையெல்லாம் மலையாள மாந் திரீகம், மலையாள ஸ்திரீ சம்போக தர்மம், மலையாள மாயா ஜாலம், மலையாள நாகரிகம் முதலியவற்றிற்கே யன்றி நம் தென்னாட்டிற்கும் பகுத்தறிவிற்கும் சிறிதும் பொருந்தவில்லை. இவருடைய சரித்திரத்தில் இன்னொரு பெரிய விபரீத விஷயம் இருப்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். ஆதி சங்கரருடைய அத்வைத மதத்தின் மூலாதாரக் கொள்கைகளாவன : இந்த சிருஷ்டியிலுள்ள ஜீவன்கள் எல்லாம் தெய்வமே; நாம் வேறு, தெய்வம் வேறு என்று சொல்வது மூடத்தனம். நாமே அவன்; அவனே நாம். ஜீவனைத் தவிர உள்ள மற்றப் பொருள் கெளெல்லாம் மாயையினால் ஏற்பட்ட பொய்த்தோற்றம் என்று ஆதிசங்கரர் கண்டு பிடித்து ஸ்தாபித்திருக்கிறார். அவருடைய சிஷ்யகோடிகளும், அவரால் நியமிக்கப்பட்டுள்ள பீடா திபதிகளும் என்ன சொல்லிப் பெருமை பாராட்டுகிறார்களே ன்றால், தெய்வமே ஆதிசங்கரராய் அவதரித்து உலகத்திற்கு ஞானத்தை போதித்து, ஆறுமதங்களை ஸ்தாபித்தது என்று ஆதாரங்களோடு மெய்ப்பிக்கிறார்கள். இப்படி மெய்ப்பிப்ப தால், ஆதிசங்கரர் ஒருவருடைய ஜீவனைத்தவிர மற்ற எல்லா ஜீவர்களும் தெய்வாம்சமானவையல்ல என்று அவர்கள் ஸ்தாபிக்கிறார்கள். இது த்வைதமா, அத்வைதமா ? இதையா ஆதிசங்கரர் அவ்வளவு பாடுபட்டுக் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து ஸ்தாபித்தார்? அவர் இப்போது உயிரோடிருந்தால், தம் சிஷ்யகோடிகள் தமக்கு மாத்திரம் உண்டாக்கி வைக்கும் தெய்விக அவதார விசேஷத்தைப் பற்றி சந்தோஷப் படுவாரா, அல்லது, அத்வைதக் கொள்கையில் தாம் ஜெயித்த வித்வான்களுக் கெல்லாம் தாமே சிஷ்யராய்ப் போவாரா? இதில் இன்னொரு விசேஷம் பாருங்கள். இந்தப் பீடாதி பதிகளும், சீஷர்களில் பெரும்பாலோரும் பரப்ரம்ம மாகிய நாராயணனை ஆதி குருவாக வைத்து ஆராதிக்கிறார்கள். நாராயணன் நிர்க்குணப் பிரம்மமல்ல ; சர்வ மங்கள குணங் களும் பொருந்திய கருணாசாகரன்; மற்ற சகலமான ஜீவர் களையும் சேஷனாகக் கொண்ட சேஷி. அதாவது, அவன் ஆண்டான். மற்ற ஜீவர்கள் நிரந்தர அடிமைகள், நாராயணன் மற்ற ஜீவர்கள் தம்மோடு இரண்டறக் கலந்துபோகவிடாத தெய்வம். அதுவா ஆதிசங்கரருடைய கொள்கை? அவர் என்ன போதித்தார்? நாம் வேறல்ல,தெய்வம் வேறல்ல; நாமே பிரம்மமென்ப பதை அறிவதே முக்திக்கிப் போது மானது. தெய்வம் எதனாலும் பாதிக்கப்படாதது, எவ் வித குணமு மற்றது என்று அவர் சொன்னார். ஒரு மூச்சில் அவர் அப்படிச் சொன்னாரா? இன்னொரு மூச்சில் என்ன சொல்லுகிறார்? “பஜகோவிந்தம்,பஜகோவிந்த, பஜகோ விந்தம் மூடமதே” என்று சொல்லி, “ஏ, முட்டாள் மனதே, கோவிந்தனைப் பஜனை பண்ணு” என்கிறாராம்; கோவிந்தன் சேஷ சேஷி பாவமுடையவன்; பஜனை யென் பது பக்திமார்க்கமும், கிரியா மார்க்கமும் நிறைந்தது. ஜீவா த்மா பரமாத்மா வாகாது என்று சொன்னவரை அவர் முத லில் முட்டாளாக்கினார்; பிறகு, பரமாத்மாவைக் குறித்து பஜனை பண்ணாதவன் முட்டாளென்கிறார். அத்வைதக் கொள் கையை ஸ்தாபித்தவர் இதையும் சொன்னாரென்றால், அவரால் உண்டாக்கப்பட்ட அத்வைதம் அவராலேயே கொல்லப்பட்டுப் போனதாக நாம் கொள்ள வேண்டுவதைத் தவிர வேறு மார்க்கமில்லை. நம்மைத்தவிர, இன்னம் நம் நாட்டிலுள்ள சைவர்கள் எந்த சித்தாந்தத்தை அநுஷ்டி க்கிறார்கள் தெரியுமா? அவர்களும் ஆதிசங்கரருடைய மதத் தைக் காலை வாரி விட்டு விட்டார்கள். சங்கரருடையது ஒரே ஒரு பொருள்தான் ; நம் நாட்டு சைவர்கள் பதி, பசு, பாசம் என்று மூன்றாய் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் வைஷ்ணவ விசிஷ்டாத்வைதமே யன்றி வேறல்ல. ‘பதி என்பது பரமாத்மா ‘பசு’ வென்பது ஜீவாத்மா, ‘பாசம்’ என் யது இரண்டிற்கும் பரஸ்பரம் ஏற்பட்டுள்ள ஒன்றை யொன்று கட்டும் தளை. விசிஷ்டாத்வைத மென்ற சொல்லில் விசி இஷ்டம் என்பதன் பொருளென்ன வென்றால், விசி என்பது கட்டும், அல்லது, இணைக்கும், இஷ்டம் என்பது பிரியம், அல் லது, சித்தம். பரமாத்மாவும், ஜீவாத்மாவும் விசி இஷ்டத்தால் ஒன்றோ டொன்று சம்பந்தப் பட்டிருப்பன என்பதே விசிஷ் டாத்வைதம்; அதன் பொருளே பதி பசு பாசம். இதை இன் னொரு சமயத்தில் நான் நன்றாய் விளக்குகிறேன். சுருங்கக் கூறு மிடத்து, சங்கரர் தம்மைத் தாமே கை விட்டு விட் டார். ஸ்மார்த்தர்களும் அவரைக் கை விட்டு விட்டார்கள்; சைவர்களும் கை விட்டு விட்டார்கள். ஆகையால் நீங்கள் எல்லோரும் வைஷ்ணவர்களாய், விசிஷ்டாத் வைதத்தைக் கடைப்பிடிப்பது சரியான காரியமே. நமக்கு சங்கரர் தாலி கட்டின புருஷர்; ராமாநுஜர் ஆசை நாயகர். நாம் உண்மை யில் ராமாநுஜரை வைத்துக் கொண்டு ரமிக்கிறோம்; சங்க ரரை வெறும் மரியாதைக்குப் புருஷரென்கிறோம்; மாடு மலை யேறி மேய்ந்தாலும், குட்டி கோனாருக்குச் சொந்த மல்லவா. ஆதி சங்கரர் ஏற்படுத்திய நிர்க்குணப் பிரம்ம மாயாப்பிர பஞ்சக் கொள்கைக்குத் தக்க சன்மானமே அவருக்குக் கிடைக்கிறது. பிரம்மத்தைத் தவிர மற்ற யாவும் பொய்யென்றும், மித்யை என்றும் அத்வைதிகள் இன்னமும் வாயால் சொல்லு கிறார்கள். இவற்றிற்கு ஆதாரம் வேதமென்றால், அந்த வேதமே பொய்யாகிறது. பொய்யான சிஷ்யனுக்கு உண் டான பொய்யான அக்ஞானத்தை பொய்யான குரு பொய் யான வேத வாக்யங்களால் போக்கி பொய்யான ஞானத்தை போதித்து பொய்யான பந்தத்திலிருந்து விடுவித்து பொய் யான மோக்ஷத்தைக் காட்டுகிறார் என்பதிலேயே அவர்க ளுடைய தத்வம் போய் முடிகிறது. வைஷ்ணவர்கள் ப்ரம் மத்தை நாராயணனுடைய வெளிப்படையான ரூப மென்றும், அதன் பிள்ளையென்றும், நாராயணன் அதன் அந்தராத்மா வென்றும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். அத்வைதிகளின் கொள்கைப்படி நாராயணனைத் தவிர மற்றவை பொய்யென் றால், சிவலிங்கம்,சந்திரமௌலி, காமகோடி, சுப்ரமண்யம், கணேசர், சண்டிகேசர் முதலிய முப்பத்து முக்கோடி தேவர் களை சங்கரருடைய பீடாதிபதிகளும் சிஷ்யர்களும் ஏன் பூஜி க்கிறார்கள்? தேவதைகள் நிர்க்குணப்ரம்மத்திற்குள் மறைந்திருப்பவைகளா? அல்லது, மாயாப்பிரபஞ்சத்தில் இரு ப்பவைகளா? ஒரே தெய்வத்தைத் தவிர வேறொன்று மில்லை யென்று வாக்கு வாதம் செய்கிறவர்கள், மற்ற மதத்தாரை விட அதிகமான தேவதைகளைப் பூஜிப்பதேன்?போதாக்குறை க்கு வைஷ்ணவ தெய்வங்களான கிருஷ்ணன்,கோபாலன், கோ விந்தன் முதலியவர்களை இரவல் வாங்வகுதேன்? நிர்க்குணமா கிய பரப்ரம்மத்தைத் தவிர மற்றதெல்லாம் மாயை என்றவர் காமகோடி, சரஸ்வதி என்ற பெயர்களைக்கொண்ட சுக்ரனான அசுர குருவையும், ஆசாபாசகாமங்களின் வடிவமான பொய் மாயையையும் வணங்கும்படி ஐந்து பீடங்களை ஸ்தாபித்தா ரென்றால், அவருடைய மதத்தின் கௌரதை எவ்வளவென்று நீங்களே யோசியுங்கள். ஆகவே, நாமே தெய்வமென்றால், நமக்குக் கோவிலும் தேவையில்லை, பீடாதிபதிகளும் தேவை யில்லை, பாத பூஜையும் தேவையில்லை. நம்மை நாமே பூஜை செய்து கொள்ள வேண்டுமேயன்றி, இதர தெய்வத்தை நமக்கு மேற்பட்டதாக நினைத்து பூஜை பஜனை முதலிய பொய்ச் சடங்குகளை நடத்த வேண்டுவதில்லை. 

பிராம்மண ச்ரேஷ்டர்களே, உங்களுடைய ஸாத விக முக தேஜஸைப் பார்க்க நான் பாவசமடைகிறேன். இந்த தேஜஸ் நம்முன்னோர்கள் யுகம் யுகமாய்ப் பாடு பட்டு தேகத்தையும் மனத்தையும் ஒடுக்கித் தூய்மைப் படுத்தி நமக்குக் கொடுத்த விலை மதிக்க முடியாத பெருந்தனம். ஆனால், வெளித்தோற்றமான ஸாத்விக குண மாத்திரம் போதாது. உள்ளுக்குள் ஆசா பாசங்களையும்! அடக்கமுடியாத மிருக வேட்கைகளையும் சம்பூர்ணமாக வைத்து வளர்த்துக்கொண்டு, வெளித் தோற்றத்தில் மாத்தி ரம் சுத்த ஸாத்விகத் தன்மையைக் காட்டுவது சங்கரருடைய அவித்யாவாதத்தைவிட அதிக அபாயகரமானது; அதிக வஞ்ச கமானது ; அதிக துரோகமானது. அதுவே ப்ராம்மண சமூ கத்திற்கு என்றும் மாறாத தூஷணையையும், களங்கத்தையும், இளக்கரத்தையும் உண்டாக்குவது. ஆகையால், உள்ளும் புறம்பும் ஒத்த ஸாத்விகத்தை வகியுங்கள். ஸாத்விக முகத் தோற்றமொன்றே உலகை அபாரமாய் வசீகரப்படுத்தும் சக்தி யுடையதென்றால், உள்ளும் புறம்பும் ஒத்த ஸாத்விக குணம், எதற்கும் கட்டுப்படாத ஸர்வ சக்தியும், ஸர்வக்ஞமும் வாய்ந்த சங்கரருடைய நிர்க்குணப் பிரம்மத்தைக்கூடமயக்கி, அது உங்களை அழைத்து, தான் அநுபவிக்கும் நித்யாநந்த ஸுகத்தை நீங்களும் அநுபவிக்கும்படி செய்யத்தக்க மகத்திற் கும் மகத்தான சக்தி வாய்ந்த சாதனமென்பதை உறுதியாய் வைத்துக் கொள்ளுங்கள். நானே தெய்வம் என்னும் அசுரமம தையை விட்டு, ராமலிங்க ஸ்வாமிகள் சொல்லுகிறபடி “நானுனக்கு மகனலனோ, நீ எனக்கு வாய்த்த தந்தை யலவோ என்று கதறி, 

“பின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய் 
விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணிமுப்பில்லாப்
பிறப்பிலியா பிறப்பதற்கே யெண்ணாது, எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதமைந்தாய்ப்
புனலுருவாய் அனலுருவில் திகழும் சோதி
தன்னுருவாய்ப் பொன்னுருவில் நின்ற எந்தை
தளிர்புரையும் திருவடியென் தலைமேலவே ” 

என்று பாடிப்பரவி, சுத்தமான ஆகாரங்களை மிதமாயுண்டு, ஆசாபாசங்களையும் தேவைகளையும் குறைத்து, எங்கிருப் பினும், என்ன செய்யினும், இரவு பகல் இடைவிடாமல் நாராயண நாம ஸ்மரணம் செய்து பழகி, வேத விதிப்படி உங்கள் உங்கள் கடமைகளைக் கூடிய வரையில் விடாமல் செய்து, உண்மை, இரக்கம், தானம் முதலிய கல்யாண குணங்களைக் கைவிடாது, எவ்விதமான கஷ்ட நிஷ்டூரங்கள் நேரினும் அவற்றை பகவத் கிருபையென்று ஸகித்து, தனக்குக் கிடைத்ததோடு பரிபூர்ண திருப்தியடைந்து, பக வான் நமது ஹிருதயத்திற்குள் கோவில் கொண்டிருப்பதாக வும், நமது அந்தராந்தரமான நினைவுகளையும், நமது காரியங் களையும், சாட்சியா யிருந்து, கவனித்திருப்பதாயும் கருதி, அக்கிரம நெறியில் நுழைய அஞ்சி, ஸன்மார்க்கத்தையே பின்பற்றி, நமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் பகவா னுக்கே அர்ப்பணம் செய்து, “கருணாநிதியே, நான் அசக் தன், மஹாபாபி, அக்ஞானி, என்னை ரக்ஷித்துக்கொள்ள மாட்டாதவன், நீயே எனக்கு ரக்ஷகன், உன்னைச் சரணமடை கிறேன், உன்னையன்றி எனக்கு வேறு கதியில்லை’ யென்று அவனிடம் விக்ஞாபனம் செய்து, அவனையே சரணாகதியாய் அடைந்து, 

“சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் 
பொற்றாமரைகளிலே போற்றும் பொருள் கேளாய்,
பெற்ற மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்” 

என்னும் மனனத்தை உங்களுடைய இகபர மூலதனமாக வைத்துக் கொள்ளுங்கள். நான் திகமாய்ப் பேசி உங்க ளுக்கு மிகவும் பிரயாசை கொடுத்து விட்டேன். என் பீடத் தின் கருத்து இன்னதென்பது இப்பொது விளங்கி இருக்கும். நம் மத தத்துவங்களிலும் சாஸ்திரங்களிலும் உள்ள ஊழல் களை நீக்கி உண்மையை தைரியமாய் விளக்குவதே இதன் கொள்கை. இதோடு இன்றைய ஸதஸ்ஸு கலையட்டும். மற்ற விஷயங்களை நாம் இனி நாளைய தினம் மாலையில் கவனிப் போம்- என்று கூறி மன்மத பீடாதிபதி ஸ்வாமிகள் பிரசங் கத்தை முடித்தார்கள். 

உடனே எல்லா ஜனங்களுக்கும் பஞ்சாமிர்தம் முதலிய நியோகங்கள் வழங்கப்பட்டன. அவற்றைப் பெற்றுக்கொ ண்டு ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டு எல்லோரும் சென்றனர். ஸ்வாமிகள் தனிமையில் விடப்பட்டார். அவரைச் சேர்ந்த நிர்வாகஸ்தர், கட்டியக்காரர்கள் முதலியோர் மேன்மாடத் தின் இரண்டாவது கட்டிற்குப் போய்ப் படுத்துக் கொண்டனர். 

மேன்மாடம் மூன்றாவது கட்டில் பண்ணை இராமா மிர்த ஐயர், அவருடைய மனையாள், புத்திரன், கிருஷ்ண மூர்த்தி ஐயர் ஆகியோர் சயனித்துக் கொண்டனர். 

மற்ற பிராம்மணர்களும், சிப்பந்திகளும் கீழ்ப்பாகங்களி லும் தெருத் திண்ணைகளிலும் படுத்து மிக விரைவில் கடுமை யான நித்திரையில் ஆழ்ந்துபோயினர். 

அன்றைய பகலில் ஸ்வர்ணாம்பாள் முக்கிய நிர்வாகஸ், ரோடு ஸ்வாமி தரிசனம் செய்த காலத்தில், இரவில் அவள் தனது குழந்தை சுந்தரியோடு, பரிசுத்தமான ஓரிடத்தில் படுத்துக்கொள்ள வேண்டுமென்றும், ஒருகால் அம்பாள் பிர ஸன்னமானாலும் ஆகலாமென்றும் கூறினாரல்லவா. அதைக் கேட்டதுமுதல், அவளுடைய மனதில், இன்னதென்று விவ ரிக்க இயலாத ஓர் உணர்ச்சி எழுந்து பெருகி மனதை சல னப்படுத்தியபடி இருந்தது. அதன் பிறகு அவள் தன் புருஷ னோடு தனிமையில் இருந்த காலத்தில், தானும் சுந்தரியும் அன்றிரவு தனியான அறையில் படுத்துக்கொள்ள வேண்டு மென்று ஸ்வாமிகளுடைய நியமனம் ஆயிருப்பதாய்க் கூறி னாளேயன்றி, ஒருவேளை அம்பாள் பிரஸன்னமாகலாமென்று ஸ்வாமிகள் தெரிவித்த செய்தியைக் கூறவில்லை. அந்தச் செய்தியைத் தான் வெளியிடலாமோ, கூடாதோ என்ற சம் சயத்தை நிர்ணயிக்க மாட்டாதவளாய், அவள் அதைத் தெரி விக்காமலே இருந்து விட்டாள். 

அதன் பிறகு அவள் பண்ணையாருடைய மனையாளிடம் சம்பாஷித்திருந்த காலத்திலும் ஸ்வர்ணாம்பாள் தன் புருஷ னிடத்தில் சொன்ன அளவே அவளிடத்திலும் தெரிவித்தாள். ஸ்வாமிகளுடைய முக்கிய நிர்வாகஸ்தர் கிருஷ்ணமூர்த்தி ஐயரிடத்திலும், பர்வத லக்ஷ்மியம்மாளிடத்திலும்பேசி, ஸ்வர் ணாம்பாள் சுந்தரியோடு ஸ்வாமிகளின் பூஜை மண்டபத்திற்கு அடுத்தாற்போலிருந்த ஒரு கூடத்தில் சயனித்துக்கொள்ள வேண்டுமென்று ஏற்பாடு செய்தாராதலால், கிருஷ்ணமூர்த்தி ஐயரே நேரில் தமது மனைவியையும், குழந்தையையும் அழைத்து வந்து மேற்படி கூடத்தில் மடியாய்ப் படுக்க வைத்துவிட்டுப் போய் மூன்றாவது கட்டில் படுத்துக் கொண்டார். 

அவருடைய குடும்ப விஷயங்களில் பல கஷ்டங்களும், அபாயங்களும் நேர்ந்திருந்தமையால், அவற்றைக் கருதியே அவர் மனைவி குழந்தையோடு தமது சொந்த ஊரை விட்டு இரகஸியமாய்ப் புறப்பட்டு விரைவாய்த் திருவை யாற்றுப்பக்கம் சென்றவ ராதலால், அவருடைய இடர்கள் சீக்கிரம் விலகிக் போகு மென்று ஸ்வாமிகள் கூறிய வாக்கைக் கேட்டது முதல் கிருஷ்ண மூர்த்தி ஐயருக்கு ஸ்வாமிகளிடத்தில் அபாரமான மதிப்பும், நம்பிக் யும் ஏற்பட்டுப் போனதன்றி, ஸ்வாமிகளின் அருளாலும், சுந்தரியை வைத்து அவர் பூஜை செய்வதால் ஏற்படும் தெய்வ கடாக்ஷத்தாலும்,தமது அபாயங்கள் விலகிப் போகும் என்ற நம்பிக்கையைக் கொண்டு, பெருத்த நன்மையையும் மங்கள கரமான மாறுபாடுகளையும் எதிர்ப்பார்த்து ஸ்வாமிகளுடைய விருப்பத்தின்படி நடந்துகொள்ள முனைந்து நின்றார். அதற் கநுகூலமாக இன்னொரு சம்பவமும் நிகழ்ந்தது. ஸ்வணாம் பாள் பர்வத லக்ஷ்மியம்மாளோடும்,கிருஷ்ண மூர்த்தி ஐயர் பண்ணை ஐயரவாளோடும் சம்பாஷித்துத் தங்கள் குடும்ப வரலாற்றைத் தெரிவித்த காலத்தில், தாங்கள் சில விரோதி களுக்காக பயந்து, மறைந்து கொள்ளும் பொருட்டே திருவையாற்றிற்றிப் பக்கத்திலுள்ள ஒரு பந்துவின் வீட் டிற்குப் போகக் கருதி குதிரை வண்டியில் மறைவாக வந்த தாய்க் கூற, அதைக் கேட்ட பண்ணையாரும், அவருடைய மனையாளும், தங்கள் வீட்டிலேயே அவர்கள் கொஞ்சகாலம் தங்கி மறைந்திருக்கும்படி கேட்டுக் கொண்டனராதலால், கிருஷ்ண மூர்த்தி ஐயர் அந்த ஏற்பாட்டை ஒப்புக்கொ டார். தங்களது நிலைமையில் அவ்வாறு பெரிய மாறுபாடு நேர்ந்தது பற்றி,கிருஷ்ண மூர்த்தி ஐயரும் ஸ்வர்ணாம்பாளும் அபாரமான மன வெழுச்சியும் சந்தோஷகரமான ஆவலும் கொண்டபடி இருந்தனர். 

அவ்வித மனப்பான்மையோடு ஸ்வர்ணாம்பாள் ஸ்வாமி களுடைய பூஜை மண்டபத்திற்குப் பக்கத்திலிருந்த கூடத் தில் சுந்தரியோடு சயனிக்க, சொற்ப காலத்தில் சுந்தரி நித்தி ரையில் ஆழ்ந்துபோய் விட்டாள். 

ஸ்வர்ணாம்பாள் படுத்துக் கண்களை மூடியபடி இரு தாளே யானாலும் அவளுக்கும் தூக்கத்திற்கும் வெகு தூரமா யிருந்தது. தங்களது குடும்ப விஷயங்கள் சம்பந்தமான மனக்கிளர்ச்சியோடு, அம்பாள் ஒரு வேளை தனக்குப் பிர ஸன்னமாவாளோ, அவளுடைய வடிவம் பயங்கரமா யிருக்குமோ, சுமுகமாயிருக்குமோ, அம்பாள் தன்னிடம் என்ன கேட்பாளோ என்பன போன்ற எண்ணங்களால் அபாரமாய் உலப்பப்பட்டவளாய், அவள் புரண்டு புரண்டு படுத்தபடி நலிந்து பொழுதைக் கடத்தினாள். எங்கேனும், அற்ப ஓசை யுண்டானாலும், அவள் திடுக்கிட்டுக் கண்ணிமைகளை விழித் துக் கொண்டு பார்ப்பதும், மறுபடி மூடுவதுமா யிருக்க, மணி சுமார் பத்து ஆயிற்று. எல்லா ஜனங்களும் நித்திரை யில் ஆழ்ந்து குறட்டை விட்டுத் தூங்கிய ஓசை நாலாபக் கங்களிலு மிருந்து உண்டாயிற்று. அந்தக் கூடத்தில் அதிக இருளோ, அதிக வெளிச்சமோ இல்லை யாதலால், மாலை வேளைபோல இருளும், வெளிச்சமும் கலந்திருப்பதாய்த் தோன்றின. 

அப்போது திடீரென்று அந்தக் கூடத்தின் ஒரு பக்கத் துச் சுவரில் பளிச்சென்ற ஒரு பெரிய ஜோதி வந்து தாக்கி யது. அந்த ஜோதி நூற்றுக்கணக்கில் இதழ்களைக் கொண்ட பிரம்மாண்டமான வெண்தாமரைப் புஷ்பத்தின் வடிவ மாயிருந்தது. சூரிய வட்டத்திலிருந்து கிரணங்கள் நாலாபக் கங்களிலும் பரவுவது போல, அந்தப் புஷ்பத்திலிருந்து கிர ணங்கள் வீசின. அந்தப் புஷ்பம் கிருகிரென்று ஒரே விசையாகச் சுழல வாரம்பித்தது. 

அதைக் கண்டவுடனே ஸ்வர்ணாம்பாள் மின்சார விசையால் தாக்கப்பட்டவள்போல திடுக்கிட்டு மான்போல மருண்டு துள்ளிக் குதித்தெழுந்தாள். அபாரமான திகிலும் பிரமிப்பும் கிளம்பி, அவளுடைய கவனத்தை அப்படியே கவர்ந்து கொண்டன. தான் என்ன செய்வதென்ப அறியமாட்டாதவளாய், அதுதான் அம்பிகையோ என்ற சம் சயத்தைக் கொண்டவளாய்த் தனது இரண்டு கைகளையும் குவித்து பயபக்தி விநயத்தோடு மார்பின்மீது வைத்துக் கொண்டு, தன் சிரத்தைக் குனியவைத்து தனக்குள்ளாகவே அம்பாளை தியானிக்கத் தொடங்கினாள். 

சுவரில் ஒரே தேஜோமயமாய்ச் சுழன்ற ஜோதிச் சக்கரத்தின் வெள்ளை நிறம் சடக்கென்று இரத்தச் சிவப்பாய் மாறியது; அந்த நிறம் இரண்டு நிமிஷங்களுக்குப் பிறகு நீலம், ஊதா, கபிலம், மஞ்சள், ஆரஞ்சு முதலிய அபூர்வ வர்ணங்களாய் மாறிக் கடைசியில் வெள்ளைக்குத் திரும்பியது. அதற்கு முன் பார்த்தே அறியாத, அந்த மகா அற்புத ஜெகஜாலக் காட்சியைக் கண்ட ஸ்வர்ணாம்பாள் மெய்ம் மறந்து, மயிர் சிலிர்க்க, பக்தி பரவசையாய் ஓய்ந்து ஸ்தம் பித்து நடுநடுங்கி நிற்க, அப்போதும் சுழன்று கொண்டிருந்த அந்த ஜோதியின் நடுவில் திடீரென்று சரஸ்வதியின் வடிவம் தோன்றியது. அந்தத் தோற்றம், 

“புத்தகம் படிக மாலை குண்டிகை பொருள் சேர் ஞான
வித்தகம் தரித்த செங்கை விமலையை அமலை தன்னை
மொய்த்த கொந்தளகபார முகின்முலைத் தவள மேனி
மைத்தகு கருங்கட் செவ்வா யணங்கினை வணங்கல் செய்வாம் ” 

என்ற வர்ணனைப்படி வீணை, சுவடி, ஸ்படிகமாலை முதலிய அலங்காரங்களுடையதாய் தெய்விக சக்தி வாய்ந்ததாய்க் னப்பட்டது. அதன் முகம் ஆநந்தமயமான புன்முறுவ லுடையதாயிருந்தது. அதன் ஒரு கை ஸ்வர்ணாம்பாளை ஆசீர் வதிப்பதுபோல உயர்ந்தது. வாயிலிருந்து, “மங்களானி பவந்து; தீர்க்க ஸுமங்கலீபவ” என்ற சொற்கள் மாதுரிய மாக த்வனித்தன. 

ஸ்வர்ணாம்பாள் ஆவேசங்கொண்டவள் போல நடுநடுங்கி நெக்கு நெக்குருகி சிறிது துணிவடைந்து அம்பாளுக் கரு கில் நெருங்கிப்போய், “தாயே,பரதேவதே! ஏழையைக் காப் பாத்துடி அம்மா ” என்று தழுதழுத்த குரலில் ஸ்தோத்திரம் செய்தபடி கீழே உட்கார்ந்து மண்டியிட்டுப் பன்முறை நமஸ்காரம் செய்து எழுந்து கன்னங்களில் அடித்துக் கொண்டு மறுபடி அஞ்சலி செய்தபடி பக்தி பரவசையாய்த் தன்னை மறந்து குனிந்து நீன்றாள். 

– தொடரும்…

– ஸதாநந்த போதக சாமியார் (நாவல்), முதற் பதிப்பு: செப்டம்பர் 1933, எம்.எஸ்.ராமுலு கம்பெனி, மதராஸ்.

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் வடுவூர் துரைசாமி ஐயங்கார் (1880-1942) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய வணிகக் கேளிக்கைப் படைப்புகளை எழுதிய முன்னோடிகளில் ஒருவர். திகம்பரச் சாமியார் என்னும் துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கியவர். 1942-ல் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் காலமானார். தமிழில் பிரிட்டிஷாரால் நவீன காவல்துறையும், நீதிமுறையும் உருவாக்கப்பட்டதை ஒட்டி குற்றங்களை காவலர் நவீன முறையில் துப்பறிவதன் மீது வாசகர்களின் ஆர்வம் உருவாகியது. தொடக்ககால தமிழ் பொதுவாசிப்பு எழுத்துக்கள் பெரும்பாலும் துப்பறியும் மர்மக் கதைகளாகவே அமைந்தன.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *