ரிசல்ட் – ஒரு பக்க கதை
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,035
“பரீட்சை நேரத்தில் தேர்தல் வச்சது நல்லதா போச்சுடா.’
ரவி சொன்னதைக் கேட்டு சீனி குழம்பினான்.
இபருவரும் பத்தாம் வகுப்பு படிக்கும் இரட்டையர்கள். சுமாராய் படிப்பவர்கள்.
“அப்படி வச்சதனாலதானே நாம படிக்க முடியாம ஃபெயில் ஆனோம். எப்படி நல்லதுன்னு சொல்ற?’ சீனி புரியாமல் கேட்டான்.
“இப்ப ஏன் ஃபெயில் ஆனீங்கன்னு அப்பா கேக்க முடியாதுல்ல.’
“ஏன் கேக்க முடியாது?’
“அவருக்குத்தான் டெபாஸிட் போச்சே!’
– ரா.சு. லீலாவிஜய், மதுரை (மே 2012)