பிரியாணிப் பிரியன்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 2, 2025
பார்வையிட்டோர்: 7,247 
 
 

(கதைப்பாடல்)

ஞாயிறு தோறும் காலையில்
எழுந்ததுமே  வாசலில்
ஊறும் எச்சி ஒழுகவே
உட்காந்திருக்கும் கடுவனாம்

சிக்கந்தர் வீட்டுச் சமையலில்
கோழி மணக்கும் என்பதால்
குத்த வச்சு ஆவலாய்
குந்தியிருக்கும் கடுவனாம்

பாய் மனைவி அன்றுதான்
பார்க்கவில்லைப் பூனையை
ஓய்வெடுக்கப் படுத்திட
உள்ளே வந்த கடுவனும்

கழுவி வச்ச கோழியை
கவ்விக் கொண்டு பாய்ந்தாம்
அவளும் அம்மிக் குழவியை
அடிக்க எடுத்து வீசினாள்

பூனை தன்னைக் கொல்வது
பாவமென்று அலறிட
கோழி மட்டும் கொல்வது
கொலைப் பாவ மில்லையோ?

பிரியாணியைப் பிரியமாய்
பிரித்துத் தின்னும் நம்மைப்போல்
கடுவன் பூனை கோழியைக்
கவ்விப் போக வந்தது

கொல்லுவது கடுவனோ
குந்தியுண்ணும் மனிதனோ
எல்லையில்லாப்பாவம்தான்
இருவர் செய்த போதிலும்…!

விடுப்பு நாளிலல்லவோ
உருப்படியாய் உண்கிறோம்!
கடுப்புவரும் வண்ணம் நீர்
கவிதை சொல்லல் நியாயமோ?

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *