பார்வை ஒன்றே போதுமே..!






வீட்டுக்குள்ளே வந்த விக்னேஷ்’ என்ன ஒரு மாதிரி சோகமா உக்காதிருக்கீங்க?! எதாவது பிரச்சனையா?! என்னால உதவமுடியும்னா எதாவது செய்யறேன். சொல்லுங்க! நீங்க இப்படி இருந்து பார்த்ததில்லையே?!’ என்றார் ஆதரவாக.
‘இப்படி அடுத்தவனுக்காக அக்கறைகாட்டற ஒரு ஜென்மம் துணைக்கு இருந்தா., இருக்குன்னா ஒராயிரம் ஜென்மம் எடுக்கலாம் இந்த உலகத்துல!’ மனசுக்குள் நினைத்துக் கொண்டார் மாதவன்.
நிமிர்ந்து உட்கார்ந்து விக்னேஷ்வரனையும் எதிரில் அமரச் சொல்லிவிட்டு, ‘ஒண்ணுமில்லை., இந்த மனுஷ வாழ்க்கையை நினைத்தாத்தான் மலைப்பா இருக்கு? என்ன வாழ்ந்திருக்கோம்? என்ன பண்ணப் போறோம்?! என்று ஒரே கவலையாவும் பயமாவும் இருக்கு!’ என்றார்.
‘இவ்வளவுதானே? உங்க கேள்வியிலேயே பதிலும் இருக்கே?!’ என்றார் விக்னேஷ்வரன்.
மாதவன், ‘நீங்க என்ன சொல்றீங்க?!‘ என்றார் வியப்பாக.
‘ஒண்ணுமில்லை வாழ்க்கை கொடுக்கிற பயத்திலிருந்து விடுபடவும் வெளியேறவும் ஒரே வழி… நீங்க நினைப்பது மாதிரி நினைக்கணும்! அவ்வளவுதான்!’ என்றார் விக்னேஷ்!.
‘புரியலையே…?’ என்றார் மாதவன் வியப்பாக.
‘வாழ்ந்த வாழ்க்கையை சாவுகாசமாய் சமயம் கிடைக்கும் போதெல்லாம் சிந்தித்துப் பார்ப்பதும் ஒரு கணம் உன்னிப்பாய் எண்ணிப்பார்ப்பதம், வாழ்க்கை கொடுக்கும் பயத்தை வெல்லவும் வாழ்க்கை மீது பிடிப்பு கொள்ளவும் உதவும்! எதோ வாழ்ந்தோம் போனோம்னு இருக்கக் கூடாது! இந்தப் பார்வை ஒன்றே போதுமே! இன்னல்கள் இல்லாமலிருக்க!’ என்றார்.
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |