பாச்சா அனுப்பிய தாசியை வென்றது
கதையாசிரியர்: இராயர்-அப்பாஜி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 19, 2025
பார்வையிட்டோர்: 115
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

டில்லி பாச்சாவானவன் திரும்பியும் அப்பாச்சி சாமர்த்தியத்தைப் பரீக்ஷிக்கும் பொருட்டாகப் பரத சங்கீதங்களிலே கெட்டிக்காரியாகிய ஒரு தாசியை அழைத்து, அவளுக்கு வேண்டிய பணங்களைக் கொடுத்து “நீ இராச சபைக்குப் போய் இன்னவிதமாக அவனை மானஞ்செய்துவா’ என்று அனுப்பினான்.
அவள் அப்படியே சம்மதித்து இராயர் சபைக்கு வந்து சபையாருக்கும் இராயருக்கும் அனேகவிதமான நாட்டியங்களைச் செய்து அனேகவிதமான கீர்த்தனைகளைப் பாடினாள். ராயருக்கு அவள்மேலே அதிக விசுவாசம் பிறந்தது. ‘உனக்கு வேண்டுவதைக் கேளு, யாதொரு தடையுமில்லாமல் கொடுப்பேன்” என்றார்.
அதைக்கேடடு, “சத்திய சுரூபியாகிய என் ஆண்டவரீர் எனக்கு மற்றொன்றும் வேண்டுவதில்லை. உங்கள் சிங்காசனத்தின் மேலே ஒருதரம் மலபாதை செய்யும்படியாக ஒருவரம் மாத்திரம் அனுக்கிரகம் செய்யவேணும்” என்று கேட்டாள்.
இராயர் அந்தச் சொல்லைக் கேட்டு மிகவும் விசனத்தை அடைந்து, சற்று நேரம் ஆலோசித்து, தான் சொல்லிவிட்ட சொல்லைக் காப்பாற்ற வேணுமென்று தீர்மானித்து, “நீ கேட்ட வரத்தைக் கொடுத்தேன். நாளைக்கு வந்து அப்படியே செய்” என்று அவளை அனுப்பிவிட்டு, அப்பாச்சியை அழைப்பித்து நடந்த சங்கதியைச் சொன்னார்.
அப்பாச்சி, “நீங்கள் இதற்கு அஞ்சவேண்டுவதில்லை. நான் ஒரு உபாயஞ் செய்து அந்தத் தாசியைத் துரத்திவிடுகிறேன்” என்று மறுநாள் உதையத்துக்கு அந்தத் தாசி வந்த உடனே அவளைப் பார்த்து, நீ இந்தச் சிங்காசனத்தின் மேலே இராயரவர்கள் உத்தரவு கொடுத்தபடி மலபாதை மட்டுமே செய்யவேணுமேயல்லாமல் சலபாதை முதலானதுகள் செய்வாயேயானால் அச்சணமே சிரச்சேதம் என்று சொன்னான்.
அப்பாச்சி சொன்னபடி செய்வது முடியாத காரியமாயிருந்த படியாலே அவள் வெட்கி, அவமானப்பட்டுப் போய்விட்டாள். இராயர் அதுகண்டு அளவற்ற சந்தோஷத்தை அடைந்தார்.
– இராயர் அப்பாஜி கதைகள், இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 2006, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
![]() |
பதிப்பாசிரியரின் முகவுரை - செப்டம்பர் 2006 முன்னுரை : மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், இராயர்-அப்பாஜி கதைகள் முதலியன வாய்மொழி இலக்கிய இயல்புகள் நிரம்பப் பெற்றவை. இலக்கிய அழகு மிகுந்த இவை மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழ்பவையாகும். குறிப்பாகச் சிறுவர்களை ஈர்க்கும் திறம்படைத்தவை இவை. இவற்றில் மரியாதைராமன் கதைகள் ஏற்கனவே என்னால் பதிப்பிக்கப் பெற்றுச் சரசுவதி மகால் நூலக வெளியீடாக வெளிவந்துள்ளது. மரியாதைராமன் கதைகள் குறித்த நெடிய ஆய்வுக் கட்டுரையொன்று மகால்…மேலும் படிக்க... |
