கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,166 
 
 

ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட்.

”எப்ப பாரு…! அம்மா வீடு! அம்மா வீடு! கல்யாணம் பண்ணி மூணு மாதம் ஆயிருச்சு! அப்புறம் என்ன அம்மா வீடு! எரிச்சலோடு கத்தினான் அஸ்வின்”நீங்க உங்க வீட்டுலயே இருக்கீங்க! உங்களுக்கு தெரிலைங்க! ஆனா எனக்கு அப்படி இல்லையே!” என்றாள் ஹரிணி.

”எதிர்த்துப் பேசுற! ஒண்ணு இந்த வீடு இல்லை உங்கம்மா வீடு! நீயே முடிவு பண்ணிக்கோ” கோபமாகச் சொன்னான்.

“பார்த்துப்பா! உடைஞ்சிராம! மெதுவா வளைச்சு. மண்ணுக்குள் வை!”

என்ற தாத்தாவின் குரல் கேட்டு தோட்டத்துக்கு வந்தான்.

அவன் வருவதைப் பார்த்து.

”உன் மேலதிகாரி மனைவிக்குப் பிடிக்கும்னு பன்னீர் ரோஜா செடி பதியன் போடச் சொன்னியே! அதுதான் போட்டுக்கிட்டு இருக்கேன்! பதியன் போடும்போது பார்த்து போடணும்! தாய் செடியிலிருந்து மெதுவா வளைச்சு மண்ணுக்குள் வைக்கணும். வேர் விடுற வரைக்கும், தண்டு, தாய் செடியோடதான் இருக்கணும்! இல்லைனா தனி செடியா வராது”

என்று சொல்லிவிட்டு நகர, மனைவி பக்கம் வந்தான் அஸ்வின்.

தன்னை மெல்ல அணைத்து, ”இன்னைக்கே உங்கம்மா வீட்டுக்கு போயிட்டு வா” என்றவனைப் புரியாமல் பார்த்து நின்றாள்.

– ப.உமாமகேஸ்வரி (மே 2012)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *