நுனிப்புல் – ஒரு பக்க கதை





உரத்து ஒலிக்கும் பெண்ணியம் என்ற தலைப்பில் டாக்டர் பட்டம் வாங்கியவர் சாரதா.
சாரதா திருமணமாகி தன் கணவரோட
கிராமத்துக்கு வருகிறாள்.
கிராமத்தில் வீட்டு வாசலின் முன் கார் நிற்க இவர் முதலில் இறங்க கார் ஓட்டிய கணவர் அடுத்து இறங்கினார்.
அம்மா ஆரத்தித் தட்டு எடுக்க உள்ளே சென்ற நேரம் கிராமத்துப் பெண் ஒருத்தியின் பார்வை மன்மதனாக நின்ற ரகுவின் மேல்.
பத்து வினாடிகளுக்கு மேல்
பார்வை பட விடவிடாமல் ரகுவை மறைத்துக்கொண்டு நின்றாள் டாக்டர் சாரதா.
யார் இவள்?
‘கல்யாணம் ஆகாதவளா?’
‘கல்யாணமாகி, கணவனால் கொடுமை அனுபவிப்பவளா?’
‘வாழா வெட்டியா?’
‘டைவர்ஸ் வாங்கியவளா?’
‘கணவனை இழந்த விதவையா?’
‘மறுமணம் செய்துகொண்டவளா?’
‘அதிர்ஷ்டக்கட்டையா?’
‘மேனாமினுக்கியா?’
‘அபலையா?’
‘துக்கிரியா?’
அந்தப் பெண் யார் என அம்மாவிடம் தெரிந்துகொள்ள ஆவல் பட்டாள் சாரதா. பக்கத்து வீட்டு டிவி ‘படித்தவன் பாட்டை கெடுத்தான் எழுதியவன் ஏட்டை கெடுத்தான்…’ என்று அலறிக்கொண்டிருந்தது.
– (கதிர்ஸ் – அக்டோபர் 16-31-2021
![]() |
இயற்பெயர்: வரதராஜன் அ புனைப்பெயர்: ஜூனியர் தேஜ் ரத்த வகை: O Positive பிறந்த தேதி: 04.06.1962 குடும்பம்: மனைவி, மகன், மருமகள் பணி: உதவித் தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு ஓய்வு பெற்று இப்போது பணி நீட்டிப்பில். 31 மே 2023 ல் ஓய்வு) கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல்…மேலும் படிக்க... |