நீயும் நானுமா? கண்ணா நீயும் நானுமா?






தலைப்பைப் பார்த்த உடனேயே நமக்குத் தெரிந்துவிடுகிறது இது ஏதோ வாமன அவதார மகிமை பற்றிச் சொல்லப் போகிற கதை என்று!
ஆனால், உண்மையில் இது பக்திக் கதையோ புராணக் கதையோ அல்ல! அன்றைய ‘கவுரவம்’ படத்தின் மறுவடிவம்.
பாரிஸ்டர் ரஜினிகாந்த்தைப் பிரமிக்க வைத்த விவாத வித்வத்தை விளக்கும் கதைதான் இதுவும்!.
ஐந்து விரல்களுக்குள் ஒருநாள் யார் பெரியவர் என்று சண்டை வந்ததாம்! ‘கட்டை விரல் நான் தான் பலிசாலி என்று சொல்ல, ஆட்காட்டி விரல், ஒருவரை சுட்டிக்காட்ட நான் உதவுவதால் நானே பெரியவன் என்றதாம். நடு விரல் எல்லாரும் நிமிர்ந்து நில்லுங்கள் உயர்ந்தவன் யாரென்று உங்களுக்கே தெரிந்துவிடும் என்றதாம். மோதிர விரலோ தங்கத்தை எல்லாரும் எங்கே அணிகிறார்கள்? தங்கத்தின் இருப்பிடம் நான்! எனவே, நானே உயர்ந்தவன் என்றதாம்.
சுண்டுவிரல் அழுது கொண்டே கடவுளிடம் போய் தன் நிலைக்கு வருந்த, கடவுள் அதன் காதில் ஒன்றைச் சொல்லி அனுப்பினாராம். கடவுளைக் ‘கை கூப்பி வணங்குகையில் கடவுளுக்கு அருகில் நானே முதலில் நிற்கிறேன். கடவுளுக்கு அருகிலிருப்பவரே சிறந்தவர்’ என்று, கடவுள் சொன்னதை சுண்டுவிரல் சொல்லி வாதத்தில் வென்றதாக நமக்குத் தெரிந்த கதை பழைய கதை!.
அது பாரிஸ்டர் ரஜினிகாந்த்தான பெரிய சிவாஜியின் வாதம். ஆனால், பெரியப்பாவை வெல்ல சின்ன சிவாஜி ‘கண்ணன்’ என்ன சொன்னர்?!. அந்த வாமனனின் வாதம் பாரிஸ்டர் ரஜினிகாந்தை வீழ்த்தியது மாதிரி அந்த வாமனக் குழந்தை வாதிட, அதன் தாத்தா தடுமாறி விழுந்தார்..
எப்படியா? அதுதானே நம் கதை?!
எல்லா விரலும் சேர்ந்தால்தான் ‘கை’என்ற உருவமே உருப்பெருகிறது., நம்மில் ஒருவர் இல்லாவிட்டாலும், உலகில், அதாவது நம்முள் ஒற்றுமை இல்லாவிட்டால்.. ‘நாம்’ என்கிற ஒன்றே இல்லை! இதில் யார் பெரியவர் என்பது எதற்கு? எல்லாரும் சேர்ந்திருப்பதே சிறப்பு! என்று வாமன விரலாய் சுண்டுவிரல் வாதிட, பாரிஸ்டர் ரஜினிகாந்தாய் தாத்தா மட்டுமல்ல.. படைத்த கடவுளே நிலைகுலைந்து போய்…
‘நீயும் நானுமா? கண்ணா நீயும் நானுமா?’ என்று வியந்து நின்றனர்.
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |