நட்பு
கதையாசிரியர்: ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 3,829
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
சிநேகம்
அனபாயனுக்கும், அறிவு நிறைந்த பண்புள்ள சேக்கிழார்க்கும் உண்டான நட்பு நாளுக்கு நாள் பழகுந்தோறும் பிறைச் சந்திரன் போல் வளர்ந்து கொண்டே வந்தது. இவ்வரசன் தான் சென்று சுற்றிப் பார்க்கும் இடங்களிலெல்லாம் சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்தைத் திருப்பித் திருப்பி மக்கள் படிப்பதைக் கேட்டான். கேட்டவன் அவர் களிடம் ஐயா! இந் நூலையே திருப்பித் திருப்பி நீங்கள் படிப்பதின் காரணம் என்ன? என்றான். படிப்பவர்கள் அரசே! இந்நூலை நாங்கள், ”ஒவ் வொருதரமும் படிக்கும் போது ஒவ்வொரு விதமான அறிவு இன்பம் எங்களுக்கு உண்டாகிறது. அவ் வித இன்பம் காணவே நாங்கள் இந்நூலைப்படித்து வருகிறோம்” என்றார்கள். அப்போது சோழ அர சன், என்னுடன் அவர் பழகத் தொடங்கியதி லிருந்து அவரோடு பழகாத நாளை வீண் நாளாக எண்ணி அவரிடம் பழகும் இன்பத்தை அடைய ஆசைப்பட்டேன். அதுபோல் நீங்களும் அவர் செய்த நூலை மேலும் மேலும் படித்து அந்நூல் இன்பம் செய்தற்கு மகிழ்வதாகக் கூறுகிறீர்கள். இதிலிருந்து பண்புடைய அவருடைய நூலும் பழக் கத்தைப் போல் இன்பம் தரும் என்று அறிந்தேன். ஆதலால் இனி அந் நூலை எந்நேரமும் படிப்பேன் என்று திருத்தொண்டர் புராணத்தைப் படிக்கலானான். இக்கருத்தைக் குறளும் அறிவிக்கிறது.
நவில்தொறும் நூல் நயம் போலும்: பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு. (61)
பண்பு உடையாளர் = நற்குணமுடைய மக்கள்,
தொடர்பு = (தங்களுக்குள் செய்த) நட்பு
பயில்தொறும் = பழகும் தோறும் (அவர்க்கு இன்பம் செய்தல்)
நூல் = நூற் பொருளை
நவில்தொறும் = படிக்கும் தோறும்
நயம் போலும் = கற்பவர்க்கு இன்பம் செய்தலைப்போலும்.
கருத்து: நூல்கற்பவர்க்குக் கற்குந் தோறும் இன் பம் மிகுதல் போல நற்பண்புடையவரது நட்பு பழதந் தோறும் இன்பம் தரும்.
கேள்வி: நவில் தொறும் நூல் நயத்தைப் போல்வது எது?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.
தொடர்புள்ள சிறுகதைகள்
நல்ல மனம் வாழ்க!
வளர்கவி
June 20, 2026
கருங்கல்லும் கூழாங்கல்லும்!
வளர்கவி
June 17, 2026
அறிவு அற்றங் காக்கும் கருவி!
வளர்கவி
May 31, 2026