கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,597 
 
 

தங்கம் விலை குறைந்த சில தினங்களாகவே பரபரப்பாக காணப்பட்டாள் அக்ஷயா. அன்றும் அப்படித்தான்.

அதிகாலையில் குளித்து முடித்து தயாரானாள்.’இன்றும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பிருக்கிறது’ தொலைக் காட்சியில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

தங்கம் விலைக் குறைவு. அக்ஷயாவை இன்னுன் சுறுசுறுப்பாக இயங்க வைத்தது.

”அம்மா, .டிபன் ரெடியாயிடுச்சாம்மா, கடை திறந்ததும் முதல் ஆளா போய் நிக்கணும். பவுனுக்கு இரண்டாயிரத்து நூறு ரூபாய் குறைஞ்சிருக்குது. கூட்டம் முண்டியடிச்சுக்கிட்டு வரும். அதுக்கு முன்னாடி நாம போயிடணும்’ பட படத்தாள் அக்ஷயா.

”பத்து நிமிஷம் பொறும்மா, இதோ தயாராயிடுச்சு…” சமையலறையில் குரல் ஏட்டது.

”பத்து நிமிஷமெல்லாம் முடியாதும்மா…’கூட்டம் வரும்னு தெரியும்ல. முன்னாடியே வர வேண்டியதுதானே’ன்னு சூப்பர்வைஸர் கத்துவாரும்மா..நான் வரேன்…!”

சொல்லிக் கொண்டே பேருந்து பிடிக்க ஓடினாள்.

பிரபல நகைக்கஃகடையில் சேல்ஸ்வுமனாக வேலை பார்க்கும் அக்ஷயா.

– பட்டவர்த்தி ஆதி.சௌந்தரராஜன் (மே 2013)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *