தங்கக்காப்பு
கதையாசிரியர்: இம்தியாஸ் தாஸிம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: December 14, 2025
பார்வையிட்டோர்: 190

தங்கச்சி, கையைத் தொட்டு சகோதரன் கூறிய வார்த்தை தங்கை சாமிலாவின் உள்ளத்தை குளிரவைத்தது. தங்கையின் மணவாழ்வு நான்கு நாட்களில் மலரவுள்ளது. மணமகன் அண்ணன் சமீலின் பள்ளித்தோழன். இன்று அவருடன் ஒரே பள்ளியில் கற்பிப்பவர். எல்லா இடங்களிலிருந்தும் சமீலிக்குத்தான் திருமண பேச்சுக்கள் முதலில் வந்தன. ஆனால், தங்கையின் வாழ்வுக்கு முதலிடம் கொடுத்ததை அவளும் விரும்பவில்லை. அண்ணனின் வற்புறுத்தல் அவளை பணியவைத்தது. இறுதியாக தங்கைக்கு இரு தங்கக் காப்புகள் வாங்குவதற்காக கொழும்புக்கு புறப்பட்ட போதும் தங்கை சாமிலிடன் நானா, நீங்க எப்ப மணஞ்செய்ய இருக்கிறீங்க, என்ற போது, இன்ஷா அல்லாஹ், இன்னும் ஆறு மாதத்தில் என்ற போது அவளின் உள்ளம் குளிர்ந்தது.
இவர்கள் குடும்பத்தில் ஐவர். சமீல், தங்கை சாமிலா, இளைய தம்பி சஹீல். தந்தை தன் வீட்டோடிருந்த காணியிலேயே மரக்கறி உட்பத்தி மூலம் தன் வியாபாரத்தை முன்னெடுத்தார். தாய் வீட்டுப் பணியிலும் கணவனுக்கு தோட்ட வேலைகளுக்கு உதவியாகவும் இருந்து வந்தாள். தம்பி வகுப்பில் ஐந்தாம் தரத்தில் கற்றுக் கொண்டிருந்தான். சாமிலா ol படிப்போடு நின்றுகொண்டாள். தையல் கலையில் மிக்க தேர்ச்சி பெற்றவள். தொழிலாகவும் செய்து வந்தாள். தந்தை இருவருடத்திற்கு முன்னரே நோயுற்று கட்டிலில் சங்கமமாகிவிட்டார். தந்தை மகளின் மணவாழ்வுக்காக முன் கூட்டியே இருகாப்புகளைத் தவிர எல்லா நகைகளையும் செய்து வைத்திருந்தார். அதன் பொறுப்பைத்தான் இன்று சகோதரன் சுமந்தார்.
தங்கைக்கான காப்புகளை கொழும்பு நகைக் கடையிலிருந்தே போனில் காட்டி அவள் விருப்பத்தை பெற்றதன் பின்னரே வாங்கி மகிழ்வுடன் மாலை பஸ்ஸில் தனது ஊரை நோக்கி பயணித்தார்.
நுவரெலியாவுக்கு அருகாமையிலுள்ள தாழ்வான ஒரு மலை பிரதேசமே வாழும் இருப்பிடம். ஊரை நெருங்கும் போதே ரிட்டா சூராவளி பற்றி போனில் வந்து கொண்டிருந்த செய்திகள் சாமிலை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. யா அல்லாஹ், யாருக்கும் எந்தவித விபரீதமும் நிகழ்ந்துவிடக் கூடாதென்று பிரார்த்தித்துக் கொண்டார்.
தான் இறங்கும் இடத்தை நெருங்கும் போது பெரும் கூட்டமொன்று அங்கேயிருப்பதைக் கண்டு தான் வாழ்ந்த வீட்டுப்பக்கம் நோக்கியோடினார்.அங்கு வாழ்ந்த வீட்டைக் காணவில்லை. மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததால் வீடு மூடப்பட்டிருந்தது. மீட்புக் குழுவுடன் சேர்ந்து தானும் அவசர, அவசரமாக மண்ணை அகற்றிய போதும் நால்வரின் உடல்கள் கிடைத்தன. ஆனால், உயிரிருக்கவில்லை.
கண்கள் நீரை சொரிய, இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன், தங்கக் காப்புகளை கைகள் கன்னத்தில் பதித்த நிலையில் சாமில் போட்ட சத்தம் கூடியிருந்தவர்களின் கண்களிலிருந்தும் கண்ணீரை கசிய விட்டது.
(யாவும் கற்பனை)