ஜோதிடர்!






(2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கதைப் பாடல்
நாட்சிறப்பு நூலிலும்
நாட்கிழிக்கும் தாளிலும் – இந்த
ஆளைப் பற்றி பெருமையாய்
அச்சடித்து உள்ளனர்!

பிறந்த தேதி ஜாதகம்
எதுவும் தேவை இல்லையே!
விந்தை என்ற போதிலும்
விஷயம் பரம ரகசியம்!
காத்துக் கிடக்க வேண்டுமே
காண விரும்பும் யாவரும்!
பேச்சை வைத்து நம்பலன்
புட்டு புட்டு வைக்கிறார்!
சாமி வந்தும் ஆடுவார்!
சறுக்கி நம்மேல் சாடுவார்!
நம்புவோர்கள் பலனையே
வந்து தெரிந்து கொள்ளலாம்!
உயரமான இடத்திலே
உட்காந்திருப்பார் அமைதியாய்!
வயிறு சிறுத்த போதிலும்
வாலு கொஞ்சம் நீளமே!
சொல்லும் வண்ணம் நடப்பதாய்
சொல்கிறார்கள் யாவரும்!
‘பல்லி’ அந்த ஜோதிடர்!
பலனைச் சொல்லும் சாதகர்!
ஆத்திரத்தில் துள்ளியே
சோத்துக்குள்ளே பாயுமுன்
பாத்திரங்கள் யாவையும்
பத்திரமாய் மூடுங்கள்!
பலனைச் சொல்லும் பல்லியார்
பாவம் மிகவும் ஒல்லியாம்!
தவணை முறையில் தகவலைத்
தந்த போதும் ‘கில்லி’ யாம்!
– 27/01/18, தினமணி, சிறுவர்மணி.
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |