சேலை




பிரபல புடவைக் கடையின் மேனேஐர்தான் கேசவன். ஆனால் அவன் மனைவி சித்ராவே சேலைக் கட்டுவதில்லை. என்ன செய்வது? சித்ரா தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கிறாள். பெரும்பாலும், அவள் நடிப்பது மாடர்ன் பெண் கதாபாத்திரங்களில்தான். அதற்காக மாடர்ன் டிரஸ் போட்டுப் போட்டு அப்படியே அதற்கு பழகிவிட்டாள்.
கேசவன் பலமுறை அவளைப் புடவைக் கட்டச் சொல்லி கேட்டிருக்கிறான். ”போங்க, அதெல்லாம் எனக்கு செட் ஆகாது” என சொல்லி விடுவாள்.
அப்படிப்பட்டவள், ஒருநாள் தானே முன்வந்து, கேசவனிடம் கேட்டாள், ”என்னங்க, ஐவுளிக்கடையில ஷோகேஸ் பொம்மைக்கெல்லாம் சேலைக் கட்டிவிடுறீங்களே…. எனக்கும்….நீங்களே சேலைக் கட்டிவிடக் கூடாதா?”
”அட, இதைக் கேட்கவா இத்தனை நாளாத் தயக்கம்” கேசவன் உற்சாகமாகி அவளுக்கு சேலைக்கட்டி விட்டான். அந்த டிசைனர் சேலையில் சித்ரா தேவதையாய்த் தெரிந்தாள். இப்படியே இவள் தினமும் இருந்தால்…. பெருமூச்சுடன் கடைக்குக் கிளம்பியபோது, சித்ரா, செல்போனில் பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தாள்..
“டைரக்டர்; ஸார்! நீங்க சொன்னபடியே ஒரு மணிநேரத்துல “சேலை காஸ்டியூம்ல” நேரா சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துடுறேன்.. அந்த கேரக்டர வேறு யாருக்கும் கொடுத்திடாதீங்க, .பிளீஸ்!..” சொல்லிக் கொண்டே அவசரமாக காரில் ஏறினாள் சித்ரா.
(குங்குமம் 06-06-2016 வார இதழில் வெளியான சிறுகதை)
![]() |
இயற் பெயர்: கே.அசோகன் (அசோகன் குப்புசாமி)தந்தை பெயர்: த.குப்புசாமிபிறந்த நாள்: 13 Decemberதொழில்: தமிழக அரசு பணி (2013 பணி நிறைவு)நிரந்தர இருப்பிடம்: மனை எண்-சி-374 என்.ஜி.ஜி.ஓ நகர், சேலை, திருவள்ளுர் 631 203தற்காலிக முகவரி: சி-20 சம்பக், ஐ.டி.சி குடியிருப்பு, சாரபாக்கா கிராமம், கம்மம் மாவட்டம், தெலுங்கானா மாநிலம் பின் -507 208தொடர்பு எண்: 9047896065மனைவி பெயர்: அ. சகுந்தலை –குடும்ப தலைவிமகன் பெயர்: அ.ராஜ்மோகன் இலக்கிய பணி:தாய்மண்…மேலும் படிக்க... |
”சேலை” கதையினை பதிவிட்டு சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து நல்லாதரவை அனைத்து வளரும்…வளர்ந்த எழுத்தாளர்களுக்கும் அளித்து வரும் தங்களுக்கு மிக்க நன்றி