சின்ன வீட்டுக்காரியின் சினம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 25, 2024
பார்வையிட்டோர்: 1,688 
 
 

கணபதி மருத நில தோட்டக்காரன். விவசாயமும் தன் வயலில் செய்பவன் . திருமணமாணவன். மூன்று வருட இல்லற வாழ்க்கையில் அவனுக்கும் அவனின் மனைவி சுந்தரிக்கும் பிறந்தவன் முகுந்தன் . கணபதியின் தோட்டத்தில் இருந்த குளத்தில் இரு பக்கத்திலும் மாமரங்கள் காய்துக் குலுங்கின. அதோடு . திராட்சை. கொய்யா, பலா, பப்பாசி, அப்பில் போன்ற பழ மரங்களும் அவன் தோட்டத்தில் செழித்து வளர்ந்தன. கணபதி தன் தோட்டத்தில் காய்க்கும் பழங்களை கிராமத்து சந்தைக்கு எடுத்து சென்று விற்பனை செய்வான். அந்த சந்தையில் பழக்கடை வைத்திருக்கும் மதுரா வுடன் ஏற்பட்ட சந்திப்பு காதலாக மாறியது . அவர்களின் நெருங்கிய உறவு பற்றி ஊர் பேசத் தொடங்கியது.

“என்னடி மதுரா என்ன உனக்கு ஒரு புது நட்பு கிடைத்து விட்டது போலத் தெரிகிறதே” மதுராவின் பக்கத்துக் கடைத் தோழி வள்ளியம்மா கேட்டாள்.

“ஆமாம் வள்ளி, எனக்கு தன் தொட்டத்து பழங்கள் கொண்டு வந்து விற்பனைக்கு தரும் கணபதி என்பவர் தான் அவர். நல்ல மனிதர் . என் மனம் புண்படாமல் பேசுவார்“.

“யார் அந்த மீசைவைத்த , சிரிக்க சிரிக்கப் பேசும் ஆளா? ஆள் வாட்ட சாட்டமானவன் தான். மூன்று ஏக்கர் தோட்டத்துக்கு சொந்தக்காரன். வயலும் வைத்திருக்கிறான். போயும் போயும் நல்ல புளியம் கொம்பைத் தான் பார்த்து தான் பிடித்திருக்கிறாய்“

“சுவையுள்ள அவர் தோட்டத்து மாம்பழங்களை பலர் விரும்பி வாங்குகிறார்கள். அவர் ஒரு நாள் சொன்னார் தன் தோட்டத்தில் உள்ள குளத்தில் இருக்கும் வாளை மீன்கள் கூட, தன் தோட்டத்து மாம்பழங்களை விரும்பி உண்ணுமாம், எனக்கு அவர் தோட்டத்து பழங்களால் நல்ல வியாபாரம் . நான் சொல்லும் விலைக்கு அவர் பழங்களை வேறு கடைகளுக்கு கொடுக்காமல் என் கடைக்கு தந்து விடுவார். அதனால் எனக்கு அவரிடம் மதிப்பும், நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அவரிடம் இருக்கும் நேர்மை எனக்கு பிடித்துக் கொன்டது. அதனால் அவரை நான் விரும்புகிறேன் வள்ளி. அவர் ஒரு போதும் எனக்கு அழுகிய பழங்களை விற்றதில்லை“ மதுரா தோழி வள்ளிக்கு சொன்னாள்.

“ஓகோ அவன் விற்கும் சுவையான பழங்களை போல் அவனின் சுவையான பேச்சு உனக்கு அவர் தோட்டத்து மாம்பழத்தை வாளை மீனுக்கு பிடித்துத போல் உனக்கு அவரைப் பிடித்து விட்டதாக்கும்”.

“நீ எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள் வள்ளி. அவரில் எனக்கு காதல் ஏற்பட்டு விட்டது” மதுரா வெட்கத்தை மறந்து சொன்னாள் ,

“அதனால் நீ அவருடன் வாழ ஆரம்பித்து விட்டாயா மதுரா”.

“அதில் என்ன தவறு. எனக்கு வீட்டில் துணைக்கும், பேச்சுக்கும் ஒருவரும் இல்லை “.

“உனக்கு தெரியுமா மதுரா அவனுக்கு ஒரு மனைவியும் மகனும் இருக்கிறார்கள் என்று’’.

“தெரியும். அவர் அதை நான் கேட்காமலே எனக்கு சொன்னவர். எவ்வளவு நேர்மையானவர் பார்த்தாயா?

“அப்ப மதுரா நீ அவருக்கு சின்ன வீடு என்று அறிந்தேன். உண்மையா?”

“எப்படியும் இருந்திட்டுப் போகட்டுமே . முருகனுக்கு இரு மனைவிகள் இருக்கவில்லையா?”

“அவருக்கு என்று ஒரு மனுசி வீட்டில் இருக்க அவர் ஏன் உன்னை நாடி வரவேண்டும் “?

“அதை அவரிடம் கேட்க வேண்டும்”

“நான் நினைக்கிறேன், அவர் தன் மனுசி மேல் ஆசை வைத்திருந்தாலும் அவருக்கு தேவையான அன்பை ஒரு வேளை அவள் கொடுக்க வில்லையாக்கும். அது தான் அவர் உன் மேல் அன்பு வைத்திருக்கிறார் மதுரா“

“நான் அறிந்த மட்டில் அவரின் மகன் பிறக்கும் மட்டும் கணபதி, மனைவி சொன்னபடிநடந்தார் என்றும் காலப் போக்கில் அவர் மனம் மாறி என்னை நாடி வநது விட்டார். எது எப்படி இருந்தாலும் நான் என் மனதை அவரிடம் பரறி கொடுத்து விட்டேன் வள்ளி”


காலங்கள் சென்றபின் ஒரு நாள்.

மதுரா சோகத்துடன் அமர்ந்திருந்தாள். வழக்கம் போல் இல்லாமல் அவள் கடையில் வியாபாரம் குறைவு.

“என்ன மதுரா உன் அவர் கணபதி இப்போ அவர் தொட்டத்து பழங்களை உனக்கு கொண்டு வந்து தருவதில்லையா?” வள்ளி கேட்டாள் .

“இல்லை வள்ளி யாரோ அவர் மனதை மாற்றி விட்டார்கள். அவர் என்னோடு அதிகம் பேசுவதில்லை” மதுரா கவலையோடு சொன்னாள்

“நான் கேள்விபட்டேன் உன் அவரின் மனைவி அவரிடம் உன்னை பற்றி தூற்றி நீ நடத்தை கேட்டவள் என்று பேசியதாக இதோ என் பக்கத்தில் நிற்கிறாளே உன் அவரின் மனைவியின் தோழி பவளம் சொன்னாள். அதுதான் அவளுக்கு பயந்து உன் உறவை அவர் முறித்து விட்டார் என அவள் சொன்னாள்.”

“ஒகோ அதுவா சங்கதி. அவர் தன் மனுசி போடும் தாளத்துக்கு ஏற்ப்ப பயந்து ஆடுபவர். அவர் அவளின் கைப்பொம்மை. எப்படி கைப்போம்மை அதை ஆட்டுவிக்கிறவன் போல் ஆடுகிறதோ அதே போல் அவர் தன மனுசியின் சொல்லுக்கு ஆடுகிறார் என்று போய் அவருக்கு நான் சொன்னதாகச் சொல் பவளம். அவர் உறவும அவர் தோட்டத்துப் பழங்கள் எதுவும் இனி எனக்கு வேண்டாம் என்று போய் அவருக்கு நான் சொன்னதாக சொல்“ என்றாள் கோபத்துடன் மதுரா.

(யாவும் புனைவு)

பொன் குலேந்திரன் பொன் குலேந்திரன் - Pon Kulendran - 12-June-2016 யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடாகக் கொண்டவர். யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்று கொழும்பு பல்கலைகத்தில் பௌதிகத்துறையில சிறப்பு பட்டம் பெற்றவர். இலங்கை தபால் தந்தி திணைக்களத்தில் சிரேஷ்ட அத்தியட்சகராக கடமையாற்றி அதன் பின்னர் துபாய் அபுதாபி சார்ஜா இங்கிலாந்து அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொலை தொடர்பு (Telecommunications) துறையில் சிரேஷ்ட பொறியியலாளராக வேலை செய்தவர். பின்னர் கனடா “டெலஸ்”…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *