ஏகலைவனும் எக்ஸ்கலேட்டரும்





தான் படித்த பள்ளிக்கு உயர் பதவியை எட்டி சாதித்த உற்சாகத்தில் தன் ஆசிரியர்களைப் பார்க்கப்போனான் எத்திராஜ்.
முதலில், நீண்ட இடை என்பதால் பலபேருக்கு அவனை அடையாளம் தெரியவில்லை! தெரிந்து கொண்ட சிலபேர்அவனை பொறாமையிலோ என்னவோ லட்சியப்படுத்தவில்லை!.
ஆரம்பகாலம்முதலே அவனுக்குள் எரியும் அக்கினியை அடையாளம் கண்டு , அதை ஆசுவாசப்படுத்தி அக்கினியை எரியப் பண்ணின அவன் தமிழாசிரியர்மட்டும் அவனை அழைத்து பக்கத்தில் உட்காரச்சொல்ல, அவன் மரியாதை நிமித்தம் அதை மறுத்தான்!

‘உங்களாலதான் இன்று நான் இந்த நிலையிலிருக்கிறேன்!’ என்றவன் பணிவாய்ச் சொன்னபோது, நிஜ ஆசிரியருக்கே உண்டான நிதர்சன கம்பீரத்தில் அவர் இப்படிச்சொன்னார்.
‘நான் வெறும் ஏணிதான்…! ஆனால் நீயோ பன்மடங்கு உயர்ந்து பரிமளிக்கிறாய்! துரோணராய் நான் கற்றுத்தந்நது கொஞ்சம்! ஏகலைவனாய் நீ கற்றுக் கொண்டதோ ஏராளம்.!’ ஏணி ஏற உதவும் தான் ஏறாது! மனதார அவனைப்பாராட்ட அவன் பணிவோடு சொன்னான்…!
துரோணர்மீது கூட ஏகலைவனின் கட்டை விரலைக் காவு வாங்கியதாய் குற்றச்சாட்டு உண்டு! ஆனால் துரோணர் போல ஏகலைவன் ஏற்றத்துக்குக் காரணமான சாதா ஏணி அல்ல நீங்கள்! ‘ எகஸ்கலேட்டர்’ என்று பாராட்ட, அவர் என்ன சொல்கிறாய்? என்று வியந்து பார்த்தார்.
அவன் தொபர்ந்தான் ‘குரு என்று நீங்கள் குறிப்பிடும் ஏணிகள் மாணவர்களை ஏற்றிவிடும் ஆனால் தாங்கள் ஏறாது…! உண்மைதான்!
ஆனால் நீங்களோ இக்கால எகஸ்கலேட்டர் போல, ஏற முடியாதவனுக்காகத்தானே மேலிருந்து கீழே இறங்கி வந்து தோள் கொடுத்து தூக்கிச்சென்று உச்சத்தில் இறக்கிவிடும் உன்னத குரு!’ என்றதும்,
ஆசான் அவனை மனமார ஆசீர்வதித்தார்!!
ஏகலைவனாய் மெய் சிலிர்த்தான் எத்திராஜ்!!!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |