காதல் வென்றது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 3, 2024
பார்வையிட்டோர்: 2,919 
 
 

(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அநுரதபுரத்து வானளாவிய இராசகோபு ரத்தில் நந்திக்கொடி கம்பீரமாகப் பறந்து கொண்டி ருந்தது. எல்லாளமன்னனின் பெருமையை எட்டுத் திக்கும் எடுத்துக்காட்டுவதுபோல! காலைக்கதிரவனின் பொன்னொளிபட்டு, நகர் முழுமையும் கவிந்து கொண் டிருந்த பனிமூட்டம் மெதுவாக மறைந்து கொண் டிருந்தது. படைவீரர்கள் பாயுங் குதிரைகளில் காற்றாகப் பறந்து கொண்டிருந்தனர். புத்தவிகாரைகளிலும், இந்து தேவாலயங்களிலும் வணக்கத்திற்காக மக்கள் மலர்க்கூடைகளை ஏந்தியபடி விரைந்து நடந்து கொண்டிருந்தனர். அநுரதபுரி விழித்துக்கொண்டது. எங்கும் ஒரே ஆரவாரம்! மக்கள்கூட்டம்!! 

எங்கோ, ஒரு புத்தவிகாரையின் பக்கத்துமடத்தில் படுத்துறங்கிய பிக்கு ஆனந்தர் தூக்கங்கலைந்தெழுந் தார். காலைக்கடன்களை முடித்துக்கொண்டு யாசகத்திற்காகப் புறப்பட்டார். அவர் கரங்களில் “பிட்சா பாத்திரம்” இலங்கியது. அவரது இளமையும், அழகும் ததும்பும் உடலினை நீண்ட மஞ்சள் அங்கி அலங்கரித்தது. முகத்திலே அவருக்கே உரித்தான அருட்பொலிவு ஒளிவிட்டு நின்றது. “புத்தம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி” என்று அவர் வாய் முணுமுணுத்தது. அவர் மெல்ல நடந்து கொண்டிருந் தார். அவர் மனதில் கடந்தகாலச் சம்பவங்கள் நிழ லாடிக் கொண்டிருந்தன. 

எல்லாளமன்னனின் ஆட்சிக்காலத்தில் அநுரதபுரி யெனும் அணிநகர் எல்லாச்சிறப்பும் பெற்று விளங் கியது. புத்ததுறவிகளும், இந்துமததுறவிகளும் நகரில் நிறைந்திருந்தனர். மதவேற்றுமை, இனவேற்றுமையில் லாத நீதிமன்னனான, எல்லாளனின் ஆட்சியில் எல்லாத் துறவிகளும் நன்கு மதிக்கப்பட்டனர். அவர்கள் எல் லாளமன்னனை வாயாரவாழ்த்தினர்! அத்தகைய துற விகளின் கூட்டத்தில் பிக்கு ஆனந்தர் முதலிடம் வகித்தார். எல்லாளமன்னனின் அரசவையில் பிக்கு ஆனந்தர் சொல் பெருமதிப்புப்பெறும். அந்த அளவுக் குப் பிக்கு ஆனந்தர் ஆண்டிமுதல் அரசர்வரையில் செல்வாக்குப் பெற்றிருந்தார். இத்தனைக்கும் காரண மாகவிருந்தது அவரது தேசசேவையே! பிக்கு ஆனந் தர் வாழவழியில்லையே என்பதற்காகப் “புத்தனின் புனிதசேவை” க்குப் போகிறேனென்று மஞ்சள் அங் கிக்குள் மறைந்து கொண்டவரல்லர். நாட்டின் நலத் திற்காகத் தம்மையே அர்ப்பணித்துக்கொண்ட வீரத் தமிழ்க்குடும்பத்திற்பிறந்தவர் பிக்கு ஆனந்தர். ஒன்று இரண்டல்ல பத்து ஆண்டுகள் எல்லாள மன்னனின் ஒற்றர் படையில் திறமைமிக்கவராக, சிறந்த வீரராக விளங்கியவர். ஆனால் காலதேவனின் கோரமான தாக் குதல் அவர் குடும்பத்தைச் சிதறடித்துவிட்டது. எல் லாளனின் போர்ப்படையிலேயே வீரர்களாகக் கடமை யாற்றிய அவரது தந்தையும், இரு சகோதரர்களும் பயங்கரக் கொள்ளைக்கூட்டத்தைச் சேர்ந்த குண்டர்களால், அவர்கள் சதிக்கூட்டத்தில் சிக்கியதினால் கோர மாகக் கொலையுண்டனர். வயது சென்ற அவ்ர‘து அன்னை, கணவனையும் தனது மூத்தமைந்தர் இருவ ரையும் நினைத்து அழுது, அழுதே இறந்துபோனாள். பழிக்குப்பழிவாங்கவேண்டுமென்ற வெறி கொண்ட ஆனந்தர் அந்நாள்களில் செய்த அட்டகாசம் சொல்ல முடியாது. பயங்கரக்கொள்ளைக்கூட்டத்தைச் சேர்ந்த எவனாவது அவர் கையில் அகப்பட்டுவிட்டால் உயிரோடு அவன் திரும்பமுடியாது. இப்படி எத்தனையோ தடவை அவர் குண்டர்படையைச் சேர்ந்த பலரைக் கொன்று குவித்திருக்கிறார். ஆனால் ஒருநாள் அந்திப்பொழுது ஒரு புத்தவிகாரையின் பக்கத்திலேயிருந்து அவர் தம் முடைய வாழ்க்கையின் விசித்திரநிலைமைகளைச் சிந்தித்துப்பார்த்தார். 

புத்தனின் அருட்போதனையில் அவர் மனம் ஆறுதல் கண்டது. கொலையையும், வெறியையும் கிளப்பும் ஒற்றர்வாழ்க்கையை அவர் முற்றாக வெறுத்தார். அன் றிலிருந்து மஞ்சள் அங்கி அவர் மாசற்ற உடலினை மறைத்தது. எல்லாளன் தாங்கொணாத்துயருடன் ஒற் றர் படை உறுப்பினரான ஆனந்தர், பிக்கு ஆனந்த ராக மாறிச்செல்வதை ஏற்றுக்கொண்டான். “பிக்கு ஆனந்தரே, வாழ்க்கை நிலையற்றதுதான், ஆனால், சமூகத்திற்கும், நாட்டிற்கும் ஆற்றவேண்டிய சேவை கள் பலவுள. புத்தனின் அருட்கடலில் மூழ்கித் திளைக்கும் நீங்கள் மறுபடியும் ஒரு போர்வீரராக வரநேரிட்டால் என்மனம் எவ்வளவு மகிழ்ச்சியடையும் தெரியுமா?எல்லாள மன்னன் அன்று சொன்ன வார்த்தைகள் இப்பொழுதும் பிக்கு ஆனந்தரின் காதுகளில் வீரஒலி செய்து கொண்டிருந்தன. 

அந்தக் குடிசைக்கு முன்னே வந்ததும், பிக்கு ஆனந்தரின் கால்கள் தாமாகவே நின்றுவிட்டன. குடிசையைக் கூர்ந்து நோக்கினார். அவர் முகத்திலே இனந்தெரியாத, ஒருவிதமான சலனம் தோன்றி மறைந்து கொண்டிருந்தது. “புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி” அவர் வாய் மெதுவாக முணுமுணுத்தது. 

குடிசைக்குள்ளிருந்து அழகே உருவான ஓர் இள நங்கை ‘பிட்சை’யுடன் ஆனந்தர் முன்தோன்றினாள். ‘இன்று ஏன் இவ்வளவு நேரம்? அவள் கேள்வி அவரைத் திகைக்க வைத்துவிட்டதோ, என்னவோ! அவர் வாயே திறக்கவில்லை. அவர் கரங்கள் முன்நீண்டன. அவள் தன் கைகளை நீட்டிப் “பிட்சாபாத்திரத்தை” நிறைத்தாள். சட்டென்று கைகளைப் பின்னுக்கு இழுத் துக்கொண்டாள். ஒரே மின்தாக்கமோ! பிக்கு ஆனந் தரின்கரங்களுடன் அவள், கரங்கள் உரசிக்கொண்டன. அவள் கண்களின் கூர்மையை ஆனந்தரால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. தலையைக்குனிந்து கொண்டார். அதுவரை சிலைபோல நின்ற அவள், நினைவுவரவே பிக்கு ஆனந்தரைப்பணிந்து கொண்டார். அவர் மெதுவாக நடந்துகொண்டிருந்தார். அவர் மனத்திரையில் அந்த அழகி அழியாத சித்திரமாக உருவெடுத்துக் கொண் டிருந்தாள். அவள் அந்த வாலிபப்பிக்கு நடந்து மறையும்வரையில் வைத்தகண் வாங்காது பார்த்துக் கொண்டு நின்றாள். 

இரவின் ஆட்சி சமீபித்துக் கொண்டிருந்தது! ஆனாலும் மக்கள் அதைப்பற்றி அவ்வளவு கவலைப்பட்ட தாகத் தெரியவில்லை. அன்று பூரணைத்தினம். கதிர வன் மறைந்தாலும் இரவைப் பகலாக்கும் பால்நிலவின் உதயத்தை எண்ணி மக்கள் தங்கள் கடமைகளைச் சுறு சுறுப்பாகச் செய்துகொண்டிருந்தனர். பிக்கு ஆனந்தர் அந்த விகாரையின் பக்கத்திலுள்ள நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்தார். அவர் மனதில் ஒரே போராட்டம். 

எல்லாம் அந்த அழகியைப்பற்றித்தான். அவளுடைய ஒருபார்வையே அவருடையதுறவு நிலையைத் தொலைத்து. விடும்போலிருந்தது. “அந்தக்குடிசைப் பக்கம் போகா மலிருக்கலாமென்றாலோ, சரியென்றிருக்கும் மனம். வெளியே புறப்பட்டதும், ‘போ, போ’ என்று உந்தித் தள்ளுகிறதே! என்ன சோதனை பகவானே. அவர் மனதில் பாசமும், பத்தியும் ஒன்றையொன்று மல்லாடிக்கொண்டிருந்தன. குறுக்கும், நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார். 

“சுவாமி…” சத்தம் வந்த திசையை நோக் கித்திரும்பினார்! அவர் கண்களை அவராலேயே நம்ப முடியவில்லை. அந்தக் குடிசைவாசியான எழிலரசிதான் அங்கே நின்றாள். “சே, இங்கேகூட ஆசைப்பேய் அரசாட்சி செலுத்த ஆரம்பித்துவிட்டதா?” அவர் ‘துறவு, மனம் உள்ளுக்குள் இப்படி ஓலமிட்டது. 

”எங்கே இந்த நேரத்தில்….”? 

“மாலைப்பிரார்த்தனைக்காக விகாரைக்கு வந்தேன்.. இங்கே தங்கள் தரிசனம் கிடைக்கிறது” அவள் இப் படிச்சொல்லிவிட்டு மெதுவாகச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் பிக்கு ஆனந்தரின் “துறவுக்கட்டிடமே இடிந்துவிடும் போலிருந்தது. 

“ஏன் சிரிக்கிறாய்..? என்னிடத்தில் என்ன அலுவல்..? அவர் முகம் கடுமையாகிக் கொண்டிருந்தது. 

“மன்னிக்கவேண்டும் சுவாமி. எதைக் கேட்ப தென்றே எனக்குத்தெரியவில்லை. உங்களைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அதுதான் வந்தேன்” 

அவள் எழில்வதனத்தில் இப்போது பயமும், நிரா சையும் நிழலிட்டன. பிக்கு ஆனந்தரின் முகம் அமைதி பெற்றது. குரலும் தாழ்ந்தது. 

பெண்ணே நான் முற்றுந்துறந்தவனானாலும் வாலி பன். நீயோ எழில் மங்கை. அதுவும் கன்னிப்பெண். நமது உள்ளத்தூய்மையை உலகம் தப்பர்த்தம்செய்து கொள்ளக்கூடும். ஏன் வீணாக நமது நிலையைக்கலக்கிக் கொள்ள வேண்டும்?” 

பிக்கு ஆனந்தர் இப்படிக்கூறிவிட்டு, அவளைக் கூர்ந்து நோக்கினார். அவள் முகத்தில் பலவித உணர்ச்சிகள் கொந்தளித்து விகாரப்பட்டுநின்றன. அவள் உடல் நடுங்கியது. கிணற்றுக்குள்ளிருந்து பேசுவதுபோலப் பேசினாள். 

“சுவாமி, நான் உங்களைக் காதலிக்கிறேன்” அப்பால் அவளால் பேசமுடியவில்லை. மாமன்னர் முன் நின்றுகொண்டிருக்கும் குற்றவாளியைப்போலப் பயந்து கொண்டு நின்றாள். 

அதே பழைய தாக்குதல்……! பிக்கு ஆனந்தர் நிலை தடுமாறினார். அவள் பார்வை.-பேச்சு இப்பொழுதைய நிலை ஒவ்வொன்றாக அவர் மனத்திரையிற்றோன்றி அவரை, அவர் திடசித்தத்தைக் கரைக்க ஆரம்பித் தன. உடனடியாக ஒன்றும் பேசமுடியாதவராக நின்று கொண்டிருந்தார். ஒவ்வொருவினாடியும் ஒவ்வொருயுக மாகப்பட்டது அவளுக்கு. ஆனந்தருக்கோ ஒன்றுங் கூறமுடியாதநிலை. சிந்தித்து முடிவுசெய்வதற்குவேண் டிய நேரமில்லை. அதற்குள் யாரோ வரும்சத்தம்கேட்டது. 

“நீ போ, நாளை சந்திப்போம்!” 

எங்கே? 

“இங்கேதான், இதே நேரத்தில்” 

இப்பொழுது அவள் வேகமாக நடந்துகொண்டிருந் தாள் வீடுநோக்கி. மனதிலே ஒருவித அமைதி. என் றாலும் அது தற்காலிகமானதுதானே! நாளைக்கு அவர் என்ன சொல்லப் போகிறாரோ, என்பதில் அவள் மனம் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தது 

விகாரையை அடுத்துள்ள மடத்தில் அகல் விளக்கு சுடர் விட்டுப் பிரகாசித்துக்கொண்டிருந்தது. வெளியே வெண்ணிலவு பால்போலக் காய்ந்து கொண்டிருந்தது காயும் நிலவைக்கூடக் கவனியாது அகல்விளக்கின் ஒளியில் எதையோ யோசித்துக்கொண்டிருந்தது ஒரு உருவம். அந்த உருவம் பிக்கு ஆனந்தரைத் தவிர வேறுயாருமல்ல! நேரம் போய்க்கொண்டிருப்பதே அவ ருக்குத்தெரியவில்லை. நகரவாசற்காவற்காரன் எழுப்பிய மணி ஒலியைக்கேட்டபின்னர்தான் நேரம் நள்ளிரவு பன்னிரண்டுமணியென்பதை அவருணர்ந்தார். பேசா மல் விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக்கொண்டார். 

விடிந்து இவ்வளவு நேரமாகிவிட்டதே என்று ஆச்சரியப்பட்டார், அவர் விழித்துக்கொண்டபோது! அவ சரம் அவசரமாக எல்லாளன் அரசவை நோக்கிப் புறப்பட்டார். “புத்தனின் அருட்கடலில் மூழ்கித் திளைக் கும் நீங்கள் மறுபடியும் ஒருபோர் வீரராகவரநேரிட் டால் என்மனம் எவ்வளவு மகிழ்ச்சியடையும், தெரியுமா” எல்லாளன் அன்று சொல்லிய வார்த்தைகள் இப்பொ ழுது அவர் மனதில் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தன. 

மாலை மலர்ந்தது. பிக்கு ஆனந்தர் இப்போது புதிய தோற்றத்தில் நந்தவனத்தில் உலாவிக்கொண்டி ருந்தார். அவள் வேகமாக வந்து கொண்டிருந்தாள். சமீபத்தில் வந்துவிட்டாள். அவள் நடைதளர்ந்தது. ஆ சரியத்தால் அவள் கண்கள் அகலவிரிந்தன. மஞ்சள் அங்கி போர்த்திருக்கும் பிக்கு ஆனந்தர் அங்கேயில்லை. இளமையும், வலிமையும்ஒளிவிடும் உருவமாகப் போர்வீர னுக்குரிய உடைதரித்த ஆனந்தனை அங்கே கண்டாள். ஏதோ பேச எண்ணி வாயெடுத்தாள். ஆனால்,பேச முடியவில்லை. இருகரங்கள் அவளை இறுக அணைத்தன. அந்த அணைப்பில் அவள் – அவர்……..! “சே, அதற்குள் இவ்வளவு அவசரப்படுகிறீர்களே” அவள் இப்படிச் சொல்லிவிட்டுச் சிரித்தாள். “இல்லை காதல் வென்றது.” அவள் கன்னங்களில் இரு உதடுகள் அன்பு முத்திரையைப் பதித்துக் கொண்டே இந்த வார்த்தைகளை உதிர்த்தன. 

– வாழ்வு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1963, தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம் (இலங்கை).

நாவேந்தன் நாவேந்தன் (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது. நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருநாவுக்கரசு. பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *