காசு மரம் காய்த்தால், கனவு தான் வரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 22, 2025
பார்வையிட்டோர்: 317 
 
 

கதவுக்கு வெளியே, மணியத்தின் குரல் கேட்டது. பிரக்ஞை வந்து, கெளரி விழித்துப் பார்க்கும் போது முற்றத்தில், அவன் முகம் நிறைய சிரிப்போடு, நின்று கொண்டிருப்பது, தெரிந்தது. முற்றம் நிறைய பலாச் சருகுகளாய், குவிந்து கிடந்தன அது இலையுதிர் கால என்பதால் தினமும் கூட்டிப் பெருக்கினாலும் கஞ்சல், அதாவது குப்பை அப்படியே தான் கிடக்கும் இது போல் தான் மனமும் . வாழ்க்கையென்ற, மாய விளையாட்டில் அதுவே பெரும் புதிர் குப்பைக் காடாகி விட்ட மனசில் தீர்க்க முடியாத குழப்பங்கள். நிலை தடுமாற்றங்கள். அப்ப்டியொரு மனிதனையே, அன்று சந்திக்க நேர்ந்தது. சமையல் முடித்து விட்ட, அசாதாரண, களைப்பு அவளுக்கு அதை விட ஆர்ப்பரிக்கிற ஓயாத பிரச்சனைக் கடல் ஒரு புறம் கல்யாணமானதால், கவலை விட்டது என்று அவளுக்கு நினைக்கத் தோன்றவில்லை . அவளின் இருப்பு அத்தகையதே. என்றாலும் தெய்வீக சாந்நித்யமாக, முகம் களை கொண்டு, அவள் இருப்பது போல்படும். அப்பாவுடன் அவர் தரிசனம் கண்டு, அவள் வாழ்ந்த விதம் அப்படி. நெருப்பிலே குளிக்க நேர்ந்தாலும் ஒரு மாசுபடாத நிர்மல தேவதை போல அவள்.

அவளுக்குத் தெரியும் மணியத்தை எதிர் கொள்ள நேர்ந்தால், ஒரு காட்டுமிருகமே வந்து விட்ட மாதிரி, ஓர் உணர்வு தனிச்சையாக வளர்ந்த எதற்கும் அடங்காத வெறி நாய் போல அவன் . எனினும் அவள் ஏதோ ஒரு விதத்தில் அவனை சமாளிக்க மட்டுமல்ல, க்டந்து போகவும் பழகியிருந்தாள். காட்டு யானையாக தொட்டதற்கெல்லாம், அவளோடு முரண்பட்டு, சண்டை போட்டு, அடங்காத் திமிர் கொண்டு அலைகிர சொந்தக் கணவன் முன் கூட அதிர்ந்து பேசத் தெரியாத அன்பு நெறி காட்டியே சுயம் பிரகாசமாகவே, வாழத் தெரிந்த அவளின் இருப்புக்கு முன் இந்த யுத்த பூமியின் அவலச் சுவடுகள் கூட, ஒரு பொருட்டாக எடுபடுவதில்லை இவன் எம் மாத்திரம்? பெற்ற தாயையே தன் வக்கிர குணங்களால், கடலில் விழுந்து சாக வைத்த கொடியோன்.

அவன் கை நிறைய பணம் புரள்வதால். எல்லோர் கண் முன்னும் இன்று அவன் பெரியவன் உலகமே தன் காலடிக்கு வந்து விட்டதாக , கர்வ முனைப்போடு வந்து நிற்கும் அவன் முன் அசாதாரண அமைதி காக்கும் அஹிம்சை நினைப்போடு, அவள் கதவைத் திறந்து வெளியே வரும் போது, முகம் நிறைய சிரிப்போடு அவன் அவளை வரவேற்றது மட்டுமல்ல, கையில் கனமான திறப்பை வேறு சழற்றிக் காட்டுகிறான்.

இதற்கு என்ன அர்த்தம்! அதை அவனே சொல்கிறான்.

அக்கா! உங்கடை மாமி வீடு இப்ப என்ரை கையிலை.

அது எப்படி இவன் கைக்கு வரும்? மாமி வேறு அடங்காத் திமிருடன் பார்த்து பார்த்து கட்டிய வீடு மனித வாடையே படாமல்,கதவை அடித்து சாத்தி விட்டு போகிற அவள் முன் அவள் ஜாடை விட்டுப் போகாமல், இன்னுமொரு உயிர் வெறித்த நிழல்,
அவளூக்கு சிரிப்பு வந்தது. காலம் எல்லோரையும் விழுங்கிக் கொண்டிருக்க இந்த அடங்கா மனிதர், முன் அன்பு காட்டி அரவணைத்து நேசிக்கத் தெரிந்த நான் வந்து நிற்பது கூட சேற்றில், புதைந்து போய் விடுகிற நிலைமை தான். அந்த ஆனானப்பட்ட மாமியையே காலம் விழுங்கிப் போட்டுது எல்லாம் ஒரு கனவு மாதிரித் தோன்றியது. அவன் சொன்னதைக் கேட்டு, விளக்கம் கேட்டு அவள் வினவினாள்.

என்ன மணியம் சொல்லுறியள்?

மீனாவிட்டை இருந்து நான் திறப்பை வாங்கி விட்டன் இது சாதாரண வீடில்லை ஒரு பெரிய மாளிகையல்லோ இது.

அவளுக்குப் புரிந்தது. இந்த மீனாவும் லேசுப்பட்ட ஆளில்லை. மாமியின் பெறா மகள் அவள். அவளுக்கு தான் பிள்ளைச் செல்வம் இல்லாத்தால், சிறுவயதில் இந்த மீனா தூங்குவது மாமி மடியில் தான். ஆனால் கெளரியைக் கண்ணிலேயே காட்ட முடியாது அவளுக்கு.ஏன் இந்த விகார மன புத்தி? வேறொன்று மில்லை மீனா பகட்டிலே ஜொலிக்கும் ஒரு பட்டுப் பாவை அது தான், இந்த தாங்குதல் அரவணைப்பு மேலான அன்பு எல்லாம் . அது மட்டுமல்ல வீட்டையும் எழுதிக் கொடுத்து விட்டு போயிருக்கிறாள் இன்று திசை மாறி, அது மணியன் கையில்.

அவள் கேட்டாள் பன்மையில் அன்பு மேலிட என்ன சொல்லுறியள் மணியன்?ஆவன் இப்போது சாதாரணஆளில்லை ஒரு காட்டு மனிதனாய் திரிந்தவன். பெரிய களவாணி. அவள் தம்பி. அவனை ஒரு முழு மனிதனாக்கி, உலா வரசெய்ததற்கு நன்றி விசுவாசம் கூட ,இல்லாமல் இப்படி பேய்க் குணத்தோடு வந்து நிற்பதைக் கூட ஒரு பொருட்டாக நினைக்காமல் அவள் சகஜமாக குரலை உயர்த்திக் கேட்டாள்.

என்ன இது எப்படி நடந்தது?

எப்படி நடக்கும்? என்ரைகையிலை காசு மரமே முளைச்சிருக்கு. வாங்கி விட்டன்.
அதைக் கேட்டு அவள் யோசனையில் மூழ்கினாள் எல்லாம் தாறுமாறாக நடந்து கொண்டிருக்கு சவூதி காசு மரம் இப்ப இவன் கையிலை, இவன் காலடிக்கே உலகம் வந்திட்டுது. எது நடந்தால் எனக்கென்ன? அப்பா நிறுவி விட்டுப் போன இறைராச்ச்சியத்தின் முன் இன்று அப்படிப்பார்க்கும் போது ? வீடேன்ன காரென்ன இந்தக் கனவு வாழ்க்கை எதுவரை?, அதையும் பாத்து விடுவம் என்று மட்டுமே உளப் பூர்வமாக அவள் நம்பினாள்.

மணியம் வீட்டை மட்டுமென்ன அவர்களிம் முழுக் கிராமமுமே அவன் கைக்குள் வந்து விட்ட நிலைமை தான்.

எப்படி வந்தது என்று கேட்க நினைத்தால், மனிதர்களின் சித்த விகார கோளாறு புத்திமயக்கமே இதற்கெல்லாம், காரணமென்று அவள் கண்டு மனம் வருந்துகிற இந்த நிதர்ஸனமன உண்மையை, வாய் திறந்து சொல்ல நேர்ந்தால், என்ன நடக்கும்? அவள் மீது கல்லெறிகள் தான் விழும். அதற்குப் பதில் இந்தக் காட்சி உலகில் கரைந்து போகாமல், கடவுளாக இருப்பதே மேல் என்று அவள் நம்பினாள். அவளின் முழுக்கிராமுமே வெளிநாட்டு சொர்க்கம் காணப் போய் விட்டதால், எஞ்சியிருக்கிற வீடு வாசல் காணிஎல்லாவறையுமே மணியம் வாங்கி விட்டதாக அவள் அறிய நேர்ந்தது. அவனும் பணக்குவியல் காண எண்ணி சுவிஸ்காரனாக் ஆகித் தான் இப்படி ஒரு கிராமத்தையே விலைக்கு வாங்க நேர்ந்திருக்கிறது. விட்டால், உலகையே வாங்கி விடுவான் போல் தோன்றியது. அதற்குள் அவன் கதையே முடிந்து போனது தான் எவரும் எதிர்பாராத ஒன்றாய் மனதை உலுக்கிற்று.

அவன் உயிருடன் இருக்கும் போதே, மாமியின் வீடு மண்ணுக்குள் புதைந்து போனது. யுத்த காலமானபடியால், இப்படி எத்தனை வீடுகள் தரைமட்டமாகிப் போயின. இதெல்லாம் அறியாமல், தான் இந்த மண்ணாசையும் மாய விளையாட்டும்.

இப்போது அவன் குடும்பமே சுவிஸில் கொடி கட்டிப் பறப்பதாகக் கேள்வி, அதிலும் அவன் மனைவி சாந்தா படு வில்லி. அவள் பேசும் தோரணையிலேயே, மனிதர்கள் மட்டுமென்ன, உலகமே இடிந்து போகும்.

இருந்தாலும் அவர்களின் கதைகந்தலாகிப் போனதாக கெளரி மச்சாள் வேதத்தோடு பேசிக் கொண்டிருந்த போது அறிய நேர்ந்தது. மனியத்துக்கு மூன்று பையன்களாம் மூத்த பையன் ஏதோ பெருங் குற்றத்துக்காக சுவிஸில், சிறைவாசம் அனுபவித்து, பின்னர் அவனை நாடுகடத்தி விட்டார்களாம். அவனை பார்த்துக் கொள்ள சாந்தாவும் இங்கு தான் வந்து, இருக்கிளாம். அவனுக்காக லட்சக் கணக்கில் காசு வேறு செலவாகிக் கொண்டிருக்கிறதாம். இதை விட இன்னுமொரு புதினம் வேதம் வாய் மொழியாகக் கேட்க நேர்ந்தது.

கெளரி! உனக்கு இன்னுமொரு புதினமும் சொல்லுறன் இன்னும் கல்யாணம் கூடக் கட்டேலை.

பேச்சின் நடுவே குறுக்கிட்டுக் கெளரி கேட்டாள்.

சொல்லு மச்சாள் நீதான் ஊர் அறிந்த பாப்பாவாச்சே என்றாள் தார்மீக சினம் மேலோங்கி.

சொல்லுறன். அதுக்கு முன் உன்னட்டை ஒரு கேள்வி. உனக்குத்தான் கோபமே வராதே. இப்ப மட்டும் முகம் சிவந்து கிடக்கே! எதுக்கு?அதோடை மணியத்தின் மகன் கதையும் கந்தலாகிப் போச்சு கல்யாணம், கட்டாமலே, அவனுக்குக் குழந்தை வேறு பிறாந்திருக்காம்.

பேராசை வந்தால் ஒரு கிராமமென்ன நாடே அழிஞ்சு போகுமென்று நினைக்கேக்கை கோபம் வராமல், என்னை சிரிக்கச் சொல்லுறியே. வேதம்? எல்லாம் பத்தி எரியுது கண்முன்னாலை, பத்தி கேட்டு அலைஞ்ச, மணியத்தின் வீழ்ச்சியைப் பாத்த பின்னும் எனக்குச் சிரிப்பு வருகிறதென்டால், நான் கெளரியில்லை. இருள் வெறித்த ஜடமாய்த் தான் நானும் ஆகியிருப்பன்.

அவள் சொன்னதைக் கேட்டு, மறு முனையிலிருந்துவேதம் சொண்டுக்குள் சிரிப்பது தெரிந்தது. இருள் வெறித்த ஜடங்கள் என்னவென்று பிடிபடாமல், அந்த ஊர் மேயும் அற்ப புழு போல இப்போது மன்ணுக்குள் தலையை வைத்துக் கொண்டு புதைந்து போய் விடுவாள் போல அந்த இருளின் கனம் வெறித்த தனிமையில் ஏகாந்தமாக கெளரி மட்டுமே அங்கு நிலைத்திருந்து அதை ஒரு வேடிக்கை போல பார்த்துக் கொண்டிருந்தாள், உலகம் மட்டுமல்ல மணியத்தின் இருப்பே கரைந்து ஒழிந்து போனது. காற்று வெளியில் தேட, மனிதர்கள் கூட இல்லை. வெறும் கனவு தான் மிஞ்சியிருப்பது போல அவளுக்குப்பட்டது.

ஆனந்தி என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *