கனவே கலையாதே
எதிரில் வித்யா நடந்து வந்து கொண்டிருக்கிறாள், அஸ்வின் அவளை பார்த்தபடி நிற்கிறான். அவனின் அருகில் வந்தவள் நான் கலெக்டர் ஆகிட்டேன் என்கிறாள். ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேட்கிறான், சொல்லணும்ன்னு தோணல என்கிறாள். உனக்கு அந்த அளவுக்கு வேண்டாதவனா ஆயிட்டேன் விடு என்கிறான். என்ன பேச வைக்காத அஸ்வின் என்று கூறிக்கொண்டு இருக்கையில் அப்பா என பின்னால் இருந்து அஸ்வினை கட்டிக்கொள்கிறான். அவனை தூக்கி இவன் என் அண்ணன் பையன் ஆதி.
ஹாய் மேம் உங்க ஸ்பீச் சூப்பர் மேம் என்று சொன்னான். சரி ஆதி நீ போய் கார்ல வெயிட் பண்ணு அப்பா வரேன் சரிப்பா என்று ஆதியும் அங்கிருந்து சென்றுவிட்டான். நான் எக்ஸாம் எழுத போற நாளு தான் உன்ன பாக்க முடியும் அதுக்கு அப்பறம் எங்க வீட்டுக்கு போயிருவேன் உன்ன பாக்கணும் வந்துருன்னு சொன்னேன், நீங்க என்ன பண்ணீங்க அஸ்வின் சார்.
தப்புதான் நான் ஏன் வரலன்னு உனக்கு தெரியுமா? தெரிஞ்சுக்கத்தான் முயற்சி பண்ணியா? என கேட்கிறான். என்ன பத்தி எந்த அக்கறையும் இல்லாத ஒரு ஆள பத்தி தெரிஞ்சுக்க நான் ஏன் முயற்சி பண்ணனும்.
உன்ன பாக்க கெளம்பிட்டு இருந்தேன், அண்ணி எப்படி இருக்காங்கன்னு நானும் பாக்கணும்ன்னு என் தம்பி குரு சொன்னான். அவனோட ஆசைய மறுக்கமுடியல சரின்னு அவனும் நானும் பைக்ல உன்ன பாக்க வந்துட்டு இருந்தோம். ஒரு ஆக்சிடெண்ட் அதுல எனக்கும் என் தம்பிக்கும் அடிபட்டுருச்சு அவனுக்கு பெருசா காயம் ஏதும் இல்ல, =எனக்கு பயங்கரமான அடி. ஹாஸ்பிடலில் இருந்து நான் கண் முழிக்கவே ரெண்டு வாரம் ஆயிருச்சு. முழுச்சதும் என் போன் எங்கன்னு கேட்டேன், போன் ஸ்பாட்லேயே நொறுங்கிருச்சுன்னு சொன்னான் குரு.
கம்ப்ளீட்டா சரியாகி வர ஒரு மாசம் ஆயிருச்சு. வந்ததும் உனக்கு போன் பண்ணேன், ரீச் ஆகல, உன் ஹாஸ்டல் போய் அங்கயும் விசாருச்சேன், அவங்களுக்கும் எதுவும் தெரியல. உங்க அம்மா வீட்டுக்கு போறன்னு சொன்ன அங்கேயும் வந்து விசாருச்சேன், உங்க அப்பாக்கு டிரான்ஸ்பர் கிடைச்சு வேற ஊருக்கு போய்ட்டதா சொன்னாங்க. எங்க போன எந்த ஊருல இருக்க எதுமே தெரியல.
நான் என்ன செய்ய பைத்தியம் மாதிரி சுத்திட்டு இருந்தேன். நா அப்ப இருந்து இப்ப வரைக்கும் உன்ன மட்டும் தான் லவ் பண்ணேன், லவ் பண்றேன், என கூறி முடிக்கிறான். மௌனம் அவ்விருவரையும் சூழ வித்யாவின் அருகில் வந்து நிற்கிறான் பிரேம். இது யாரு மா என அவன் கேட்க என் பிரண்ட் என கூற ஹாய் ஐயம் பிரேம் வித்யா ஹஸ்பண்ட். ஹாய் சொல்லி சிரித்துவிட்டு, சரி சார் என் பையன் வெயிட் பண்றான் நான் போறேன் என அங்கிருந்து சென்றான் அஸ்வின்.
பிரேம் என்னமா போலாமா? என கேட்க, ம்… என்கிறாள், நடந்ததை நினைத்துக் கொண்டே செல்கிறாள். அவனுக்கு காத்திருந்து வராததால் அவள் அழுது கொண்டே சென்று விட்டாள். ஒரு வாரம் ஆகியும் போன் வராததால் போனை உடைத்துவிட்டு நம்பரை மாத்திவிட்டாள். அவனின் மீது இருந்த கோவத்தினால் மாப்பிள்ளை பார்க்கவும் சம்மதம் சொல்லி கல்யாணமும் செய்து கொண்டாள். தன் தவறை எண்ணி வரும் கண்ணீரை கூட அவனின் முன் வெளிப்படுத்த முடியாமல் அனைத்தையும் மனதுக்குள் புதைத்துக் கொண்டு அவனுடன் சென்று கொண்டிருக்கிறாள் அவள்….
கோவத்தில் அவள் போனை உடைக்காமல் சற்று நிதானமாக யோசித்து அவனிடம் ஒருமுறை பேசி இருந்தால் இன்று இருவருக்கும் கல்யாணம் ஆகி நல்ல ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்திருப்பார்கள். கோவத்தில் நாமும் உடனடியாக முடிவுகள் எடுக்காமல் நிதானமாக யோசித்து செயல்படுவோம்….