
(தமிழ் தெரிந்த சமையற்காரர்)
தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள நாட்டுச் சாலையில் 2-1-1945ல் பிறந்த பாத்தேறல் இளமாறனின் இயற்பெயர் மெ. ஆண்டியப்பன். 12’ம் வயதில் சிங்கப்பூருக்கு வந்த இவருக்குச் சமையல் கை வந்த கலை. ஆர்ச்சர்ட் சாலையிலுள்ள X ஆன் சிட்டி கடைத் தொகுதி திறக்கப்பட்டபோது அதில் சாப்பாட்டுக் கடை நடத்த உரிமை பெற்ற ஒரே தமிழர் இவர். மணமான இவர் தம் குழந்தைகளுக்கு கண்ணகி, தமிழ்க் கோதை, கலைச் செல்வி, மணிமாற செல்வன் என தமிழ்ப் பெயர்களையே கூட்டியுள்ளார். பாத்தேறலின் கொள்கையும் செயலும் தூய தமிழ் மலரச் செய்வது. இலக்கியப் பணி.

சிறு வயதில் காடு காக்கப் போகும் போது பாட்டுப் புத்தகங்களை எடுத்துச்சென்று உரத்த குரலில் பாடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். பின்னர் சிங்கப்பூர் வந்து தமிழார்வம் மிக்க ஒரு குடும்பத்தில் சமையல் உதவியாளராகச் சேர்ந்த இவருக்கு அங்கு நிறைய புத்தகங்கள் படிக்க வாய்ப்புக் கிடைத்தது.
அதைப் பயன்படுத்திக் கொண்டு யாப்பிலக்கண நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். தொடக்கத்தில் தமிழ் முரசு மாணவர் மணிமன்றத்தில் துணுக்குகள் எழுதி வந்த பாத்தேறலின் முதல் கவிதை 1964ல் தமிழ் மலரில் வெளியானது.
37ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வரும் இவர் ஆயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகளையும் பாடல் களையும் எழுதியுள்ளார். கவிதைகளுடன் கட்டுரைகளும் பத்துக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சிக்கு அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். வெளியிட்டுள்ள நூல்கள்/ஒலிநாடாக்கள்
“காவடிப் பாடல்கள்”, “மழலையர் பாடல்கள்”, “திங்கள்” சிறுவர் பாடல்கள்”, “பாத்தேறல்” “நினைக்க சுவைக்க” ஆகிய ஐந்து கவிதைத் தொகுப்பு நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். அத்துடன் “முருகன் பாடல்கள்”, “மழலையர் பாடல்கள்”, “பட்டுக்கோட்டை பாடல்கள்”, “மகாமாரி மாகாளி”, பாடல்கள் ஆகிய தலைப்புகளில் நான்கு ஒலிநாடாக்களையும் சிறுவர் குறுந்தட்டும் சிறுவர் பாடல்கள் பாத்தேறல் வெளியிட்டுள்ளார். குழந்தைகளுக்கு என குறுந்தட்டுடன் பாடல்கள் எழுதிய நூலும் 2009ல் கோலாலம்பூரிலும் சிங்கையிலும் வெளியிட்டார். பெற்ற பரிசுகள்/விருதுகள்
இவருக்கு “பாத்தேறல்” எனும் பட்டத்தை மலைசியாவின் முன்னாள் பொதுப் பணித்துறை அமைச்சரும், மலேசிய இந்தியர் காங்கிரசின் தலைவருமான டத்தோஸ்ரீ ச. சாமிவேலு அவர்கள் 1989ஆம் ஆண்டு வழங்கிச் சிறப்பித்தார். எக்காலத்திற்கும் பொறுத்தமானது என 15 ஆண்டுகளுக்கு முன் இவர் எழுதிய கவிதைக்கு சிங்கை அரசு நான்கு மொழி கவிதைகளைத் தேர்வு செய்ததில் தமிழ் மொழி கவிதையில் இவரது கவிதை ஆயிரம் பாலர் பரிசு பெற்றது. அதற்காக இவர் கௌரவிக்கப்பட்டார். இது மே 9, 2010ல் சிங்கையில் நடைபெற்றது மேலும் இவர் பாரதிதாசன் விருது. தமிழவோன் விருது மாதவி இலக்கிய மன்ற பொற்கிழி ஆகியவற்றுடன் நிறைய பட்டங்களும் பெற்றுள்ளார்.
– மலேசியாவில் வெளியிடப்பட்ட “எழுத்துச் சித்தர்கள்” எனும் நூலில் ஆசிரியர் பற்றிய சிறுவிளத்தம். ஆண்டு 2010.
புகுமுன்
எனக்குச் சிறுகதைகள் படிப்பதிலும் படைப்பபதிலும் நாட்டம் மிகக் குறைவு, ஐம்பதின் பிற்பகுதியினும் அறுபதுகளிலும் சிறுகதைகள் நிறையப் படித்ததுண்டு.
நான் கவிதைக்கு மாறியதனால், சிறுகதை எழுதுவோரின் பிற மொழிக் கலப்பும், நல்ல தமிழ்ச் சொற்கள்
புறக்கணிப்பும் என்னைக் கதைகள் படிப்பதை வெறுக்க வைத்தது.
1966ல் பேரறிஞர் அண்ணாவின் “காஞ்சி” வார இதழ் பொங்கல் மலரில் ஒரு சிறுகதைப் படித்தேன். அது, தனித்தமிழ்ப்புலவர் தி,ந, அறிவொளியார் தீட்டியது, “தொம்பைக் கூண்டு” என்பது தலைப்பு, அதனை
முற்றிலும் தூயதமிழில் தீட்டியிருத்தார் புலவர், கதையின் இறுதிக்கட்டம் படிக்கும் போது தான் கண்ணீர் உகுக்க வாய்விட்டு அழுதேன். அத்தகைய உருக்கமும் மொழிச் செறிவும் பொதித்தது அக்கதை.
ஒரு ஏழைக்குடியானவனின் ஒரே திருமகள், பதினாறும் திறையாதவள், அவளை அந்நாட்டு மன்னன் கண்டு ஆசைப்பட்டுக் காவலர்களை ஏவி அழைத்துவரச் செய்கிறான், தன்மானம் மிக்க அந்த ஏழைக் குடியானவன் தன்மகளை ஒரு மணமகளைப் போல் ஒப்பனை செய்து, வரகு நிறப்பப்பட்ட தொம்பைக் கூண்டில் ஏற்றி உள்ளிறங்கி வரகை அள்ளித்தருமாறு பணிக்கிறான், அந்தப் பேதைப் பெண் தந்தை ஏன் தன்னைத் தொம்பைக் கூண்டினுள் இறங்கி அள்ளச் சொல்கிறார் என்பதனை எண்ணாமல் வரகினுள் இறங்க சிறிது சிறிதாக உள்ளிறங்கி இறந்து போகிறாள், இதுதான் அக்கதையின் உச்சக் கட்டம், புலவர் அக்காட்சியை தெஞ்சுருகத் தம் தமிழ்த்திறனால் தீட்டிருத்தது இன்றும் எனது நினைவில் உள்ளது,
அதன் பின்னர்தான் எனக்கும் நல்ல தமிழில் சிறுகதைகள் எழுத வேண்டுமென்ற ஆர்வம் முளைத்தது, தமிழ் முரசு, தமிழ்மலர், தமிழ் தேசன் போன்ற ஏடுகளில் எனதுகதைகள் வெளிவந்தன, அவற்றைத் திரட்டி வைத்துக் காவாமையால் இழந்து போயின, இருத்த சிலவற்றின் தொகுப்பே, இந்த “மண்மணச் சிறுகதைகள்”
– மண்மணச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2014, பாத்தேறல் இளமாறன் வெளியீடு, சிங்கப்பூர்.
மாதவி இலக்கிய விருது – 2009
தனித்தமிழார்வமும், மரபுக்கவிதைத் திறமும் கொண்ட சிங்கப்பூரின் மூத்த கவிஞர் பாத்தேறல் திரு. இளமாறன் அவர்களின் ஒப்பற்றக் கவிதைத் திறத்தையும் சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதைத் துறைக்கு அவர் ஆற்றிவரும் நீண்ட காலப் பணியையும் பாராட்டி சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றம் இவ்விருதுடன் ஆயிரம் சிங்கப்பூர் வெள்ளி பொற்கிழியையும் வழங்கிப் பெருமை கொள்கிறது.
தமிழ் நெஞ்சர் என்.ஆர்.கோவிந்தன் BBM.,PBM
தலைவர், மாதவி இலக்கிய மன்றம் மற்றும்
சிங்கப்பூர் சமூக அடித்தளத் தலைவர்
நாள்:18.01.2009
Appreciation Award
Presented To Mr. Paatheral Illamaran Kavingar
GLOBAL ARTS AND TALENTS
For tireless enthusiasm, dedication and hard work, Thank You!
Signature
S Balasingam
Managing Arts and Music Director
Global Arts and Talents
Signature
S Peter
Adviser
Global Arts and Talents
என்றென்றும் மறவா நன்றிக்குரியவர்கள்
திரு. செ.ப. பன்னீர் செல்வம் அவர்கள் முனைவர் இரத்தின வேங்கடேசன் அவர்கள் இப் பொத்தக உருவாக்கத்தில் பல்லாற்றானும் துணைநின்ற ஓவியப் பாவலர் அமுதபாரதி (அமுதோன்) அவர்கள் எனது நண்பர் வி. முருகையா தற்பொழுது இதனைக் கையேந்திப் படித்திருக்கும் நீங்கள்
அன்பன்,
பாத்தேறல் இயமாறன்
இதற்கு முன்…
பாத்தேறல் (பாத்தொகுப்பு)
நினைக்க சுவைக்க (பாத்தொகுப்பு)
குமுறல் (பாத்தொகுப்பு)
சிதறல் (பாத்தொகுப்பு)
திங்கள் – சிறுவர் பாடல்கள்
பனிக்கூழ் – மழலையர் பாடல்கள்
இசைவட்டுகள்:
சிங்கப்பூர் முருகன் காவடிப் பாட்டு
பட்டுக்கோட்டை பாடல்கள்
மாமாரி மாகாளி மங்கலப் பாடல்
மழலையர் பாடல்கள்
பாவலர் பாத்தேறல் இளமாறன் அவர்கள் நீண்ட மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு தனது 80-ஆவது வயதில், 27-மார்ச்-2025 அன்று இயற்கை எய்தினார்.