க.நவசோதி

 

அமரர் நவசோதிகுழந்தை இலக்கி யத்தை வளர்க்கவேண்டும் என்ற இலட்சியமுடைய இவரது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்பன சுதந்திரன், வீரகேசரி, தினகரன், சஞ்சிகை, தமிழோசை, விவேகி, கலாநிதி, கலைமதி, வெண்ணிலா, சிறுவர் சுடர், மாணவ முரசு ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன;

வெண்ணிலா, தமிழோசை, என்பன இவர் நடாத்திய பத்திரிகைகள்;

இலங்கை வானொலியில் இவரது கட்டுரை, கவிதை, நாடகங்கள் இடம்பெற்றுள்ளன;

கொழும்பைச் சேர்ந்த இவரது புனைப்பெயர்-ஆவிகன்.

மொழி உணர்வும் அறிவும் இலக்கியப் பிரக்ஞையும் மிக்க படைப்பாளி, தான் எங்கு வாழ நேரிட்டாலும் தனது பணியை இடை நிறுத்தமாட்டான். அத்தகைய மனிதனுக்கு உள்ளார்ந்த இலக்கிய ஆற்றல் வற்றிப் போகாது என்பதற்கு நவசோதியும் ஒரு உதாரணம்.

1983 அமளியுடன் இலங்கையின் வரலாறு திசை திரும்ப, நவசோதியும் திசைதிரும்பி அவுஸ்திரேலியா வந்து சில காலத்தில் லண்டன் சென்று தமது பணி தொடர்ந்தார்.

லண்டனில் கிறின்ஃபார்டில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் – அனைத்துலகத் தமிழர் கல்வி பண்பாட்டுப் பாரம்பரியப் பேரவையின் பணிப்பாளர் – சிந்து இலக்கிய இதழின் ஆசிரியர். இவ்வாறு பணிகளைத் தொடர்ந்த நவசோதி 04.01.1990 ஆம் திகதி லண்டனில் ஒரு வாகன விபத்தில் இறந்தார்

Odiponavanஓடிப்போனவன்.
க.நவசோதி. கண்டி: கண்டி தமிழ்ச் சங்கம், த.பெ.எண். 32, 1வது பதிப்பு, டிசம்பர் 1968
இலங்கையின் முதலாவது நவீன சிறுவர் நாவல் என்று கருதப்பட்ட இது புத்தொளி வெளியீடாக 1968இல் முதற் பதிப்பைக் கண்டது. வீட்டை விட்டு ஓடிச்செல்லும் வசந்தன் என்ற சிறுவனின் பாத்திரத்தின் வாயிலாக தாய்ப்பாசம், பிறர்க்குதவி செய்தல், செய்த தவறுக்காக மன்னிப்பைக் கோரல் தனக்காக பிறர்படும் துன்பத்தைத் தாங்காமை போன்ற பண்புகளை உணர்த்தி நிற்கும் இந்தநாவல், மாணவர்களுக்கான நல்லொழுக்க போதனைகளைத் தரும் விறுவிறுப்பான கதையம்சம் கொண்டது. பேராதனைப் பல்கலைக்கழக சிறப்புப் பட்டதாரியான அமரர் கணபதிப்பிள்ளை நவசோதி (2.4.1941-4.1.1990) கதைப்பூங்கா என்ற பல்கலைக்கழக சிறுகதைத் தொகுப்பின் தொகுப்பாசிரியராக இருந்ததுடன், வெண்ணிலா, தமிழோசை, சிந்து (லண்டன்) ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் இருந்தவர். விரிவுரையாளராக, மொழிபெயர்ப்பாளராக, சுவடித் திணைக்கள நெறியாளராக, அகழ்வாராய்ச்சியில் நாட்டம் கொண்டவராக, நூலகராக, ஒலிபரப்பாளராகவென்று பல்வேறு பரிமாணங்களில் நின்று தன்னை இனம்காட்டியவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *