ஒளிமயமான எதிர்காலம்….!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 10, 2025
பார்வையிட்டோர்: 56 
 
 

குப்பை எடுத்துக் கொண்டிருந்த லட்சுமியை நெருங்கி வண்டியை நிறுத்தினார் குமார்.

‘லட்சுமி.. என்ன நல்லா இருக்கயா?!’ என்றார்.

‘ஓ நல்லா இருக்கேனுங்க..! நீங்க எப்படி சார் இருக்கீங்க?!’ என்றாள் லட்சுமி.

‘ம்ம்ம்… எதொ இருக்கேன் பாரு!’ ரிட்டயர்டாகிவிட்ட விரக்தி குரலில் தெரிய குமார்! .

‘என்ன சார் இப்படிச் சொல்றீங்க?! இன்னைக்கு நான் நல்லா இருக்கறதுக்கும்.., என் பையன் நல்லா இருக்கறதுக்கும் நீங்கதானே சார் காரணம்?!’ என்றாள் லட்சுமி.

டக்குன்னு நியாபகத்துக்கு வந்தது குமாருக்கு. தான் ஒரு பள்ளியில் பணியாற்றியதும், லட்சுமி மகன் தன் கிட்ட பத்தாவது படிச்சதும்…

நினைவுக்கு வந்தவர் நிமிர்ந்து லட்சுமியைப் பார்த்துக்கேட்டார்.. நல்ல வேளை நியாபகப்படுத்தினே?! உன் பையன் நவீந்தானே? எப்படி இருக்கான்?! இப்ப என்ன பண்றான்?! நல்லா இருக்கானா? என்றார்.

‘ஒரு நிமிஷம் இருங்க சார் செல்லுல அவன் நம்பரை அடிச்சுத்தரேன். பேசுங்க!’ என்றாள்.

குமார் நினைத்தார் ‘குப்பைதான் எடுக்கிறாள். ஆனாலும் பையன் நம்பர் போட்டுத்தந்து போனில் பேச வைக்கிற அளவுக்கு வளர்ந்திருக்காளே? மகன் படிச்ச படிப்புத்தானே காரணம்?!’ நினைக்கையில் பெருமையாக இருந்தது. அதற்குள் அவள் கையிலிருந்த ஸ்மார்ட் போனில் டயல்பண்ணிக் கொடுக்க, அதில் வீடியோ காலில் லட்சுமியின் மகன் வந்தான்

‘என்னப்பா எப்படி இருக்கே? இப்ப என்ன பண்றே?’ கேட்டார் குமர்.

‘ஒரு லேத் கம்பெனி வச்சு ஒர்க் பண்றேன் சார். உங்ககிட்ட ரெண்டாயிரத்துப் பதிமூணுல டெந்த் படிச்சேன் நியாபகம் இருக்கா சார் என்னை? என்றான்.

நல்லா நியாபகம் இருக்கு. ஏன் மேல படிக்கலை?! நெறைய பேர் இன்னைக்கு ஐடில வேலை பார்க்கறாங்களே? கேட்டார் குமார்.

அவன் சொன்ன பதிலால் ஆடிப் போய்விட்டார் குமார்.

“சார்.. அன்னைக்கு நீங்க சொல்லித்தரும்போது சரியா படிக்கலைனா “ஏண்டா படிக்கலை? படிச்சாத்தானே நல்ல வேலைக்குப் போலாம்னு சொல்வீங்க! ஹோம் ஓர்க் பண்ணலைனா திட்டுவீங்க… அடிப்பீங்க! “

“ஆமாம் அதுக்கென்ன இப்போ…?”

“இல்ல… சார்! இப்பல்லாம் யாரும் அக்கறையா அப்படிப் பெருசா அடிச்சுக் கேக்கறாதில்லே..! சொல்லி தந்துட்டுப் படிச்சா படீன்னுட்டு போயிடறாங்க! நீங்க கண்டிச்சதாலா இன்னைக்கு அம்மா வேலைய நானும் பாக்காம, சொந்தமா தொழில் பண்றேன். உங்களோடு அந்த லைப் மலையேறிப் போச்சு சார். அதான் நான் மேல படிக்கலை!. தோசை மாவைத் தோசைக் கல்லில் வார்க்கலாம் சார், ஆனால் சட்டுவம் இருந்தாத்தான் அதைத் திருப்ப முடியும். டிருப்பினாத்தான் பக்குவமா வேகும்! கண்டிப்பு இருந்தாத்தான் மேல படிக்கணும்னு ஆசையே வரும். இல்லேன்னா பிடிப்பும் வராது.. படிப்பும் வராது சார்.” என்றான்.

தன் கண்டிப்பும் கருணையும் ஒரு ஒளிமயமான வாழ்வை உண்டாக்கி இருக்கேன்னு மகிழ்ச்சியில்…. ‘சரி கிளம்பறேன்னு போனைக் கட் பண்ணி, இப்போ லட்சுமி இடம் பெருமையோடு போனைக் கொடுத்தான் குமார்.

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *