ஒரு கதை கந்தலாகிறது!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 27, 2024
பார்வையிட்டோர்: 18,475 
 
 

அந்த வீட்டில் முப்பது வருடத்துக்கும் மேலாக சமையல் செய்துவரும் ஐம்பது வயது அம்மாவுக்கு, குடும்ப வாசிகளுக்கு யாருக்கு என்ன சாப்பிடப்பிடிக்கும் என்பதிலிருந்து யாருக்கு எவ்வளவு காரம் உப்பு தேவைப்படும் என்பதுவரை தெரியும்.

எனவே, வைத்தியருக்கு அந்த வீட்டில் அவசியமில்லாமலிருந்தது. இத்தனைக்கும் அந்த அம்மா சமயல் பற்றி வெங்கடேஷ் பட்டிடமோ ஃசெப் தாமுவிடமோ சமையல் கற்கவில்லை. ஆனால், நள பாகத்தில் கைதேர்ந்தவாயிருந்தார். சமைப்பது எப்படி புத்தகம் கையில் இருக்காது. ஆனாலும், என்ன டிஷ் சமைக்கச் சொன்னாலும் சூப்பராய் செய்து அசதிவிடுவார். கையில் செல்போனிருக்கும் ஆனால் யூ டியூப் பார்த்தெல்லாம் சமைக்கமாட்டார்.

வருடப் பிறப்பு அன்றுதான் அவருக்குப் பிறந்தநாள் வருடப் பிறப்பன்று எதாவது பரிசு கொடுத்து அசத்த நினைத்தார் அவர் வீட்டு உறவுக்கு வந்திருந்த எழுத்தாளர். ஒருவர் புதிதாகப் போட்ட கதைப் புத்தகம் ஒன்றை ஃகிப்ட் ரேப்பரில் சுற்றி எடுத்துப் போய் கொடுத்து கொஞ்சம் பணமும் வைத்துக் கொடுத்துவிட்டு அவர் வீட்டுக் காரருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அந்த அம்மையாருக்கு ஒரு பேத்தி… அதற்குப் பாவம் ஜூரமும் சளியும் போலிருக்கிறது வருடப் பிறப்பு சமயம் என்பதால், தை மாதம் பனி தரையைத் துளைக்கும்தானே?! அது அந்த அம்மா பேத்தியின் தலையைத் துளைத்திருக்கிறது போல!.

ஹச்சு, ஹச்சுன்னு அடுக்குத் தும்மல் போட, மூக்கு ஒழுகியது!! அதிர்ந்து போன அந்த சமையல் காரப் பாட்டி, இவர் கொடுத்த புதுப் புத்தகத்தின் நடு பக்கதை ஹிரண்ய வதம் செய்து குழந்தையயின் ஒழுகும் சளியைத் துடைத்துத் தூக்கிப் போட்டது. நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்தான்!

இவர் அதிர்ந்து போய் அந்த அம்மாவின் செல் நம்பருக்குத் தன் வருத்தத்தை மெசேஜாய் அனுப்ப…

அதைப் பார்த்தவர் சொன்னார்…

அய்யே…. அந்த அம்மாவுக்கு எழுதப் படிக்கவே தெரியாதே? தெரிந்திருந்தால் அவரே பலருக்கும் சமைப்பது எப்படின்னு புத்தகம் எழுதி பிரபலமாகி இருப்பாரே…?!

பலர் கதைகள் இப்படித்தான் கந்தலாகின்றன..!

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *