ஒன்று இரண்டு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ராணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 8, 2025
பார்வையிட்டோர்: 4,148 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாசல் படியேறிய போது உள்ளே சிரிப்பொலி கிளர்ந்தது. ‘கணீர்’ என்றும், ‘கலகல’வென்றும் கலந்து உருண்டு வந்தது பெண்களின் தகைப்பு, தன்னிச்சையாய் எல் உதடுகளிலும் புன்னகை. ஆனால், சித்தித்த உடனேயே மலர்த்த சிரிப்பு கருங்கிக் கொண்டது. 

முதல் மலர்ச்சியில் நினைவிற்கு வந்தது சாத்தாதான் – என் மனைவி ஆனால், மனக் கசப்பினால் உள்ளூரிலியே இருந்த பிறந்த வீட்டிற்குப் போயிருந்த சாந்தா, இங்கு வந்தால், மாமியும் மருமகளுமாய் இப்படிச் சிரித்துக் குதாகலிப்பார்களா என்ன? 

வந்திருப்பது தங்கை ப்ரீதியாகத்தான் இருக்க வேண்டும். அவள் தன் கணவனை நச்சரித்து இங்கேயே மாற்றல் வாங்கி வந்தாயிற்று. வந்த கையோடு தனக்கும் ஒரு வேலை தேடிக் கொண்டாள். 

‘பிடிச்சிருக்குள்ளா தொடர்ந்து வேலை பாரும்மா ப்ரீதி உன் கைக்குன்னு தனியே பணம் வந்தா அந்தத் தெம்பு தனிதான். ஒத்தாசைக்குத்தான் நாங்கள் இருக்கோமே.’ என்று தாய், மகளை ஊக்குவித்திருந்தாள். 

”வாடா, ப்ரீதி முதல் மாசச் சம்பளத்தோட நேர இங்க வந்துட்டா. எனக்கு ‘பெர்ல் பெட் டப்பா சகவாரியா வாங்கியிருக்காப் பாரேன். எனக்குப் பிடிச்ச பச்சை நிறம்” அம்மா பூரித்தாள். 

“சொல்லும்மா, அண்ணாவுக்கும் உபேவரிட் கலர் என்னன்னு தெரியட்டும்.” 

பெருஞ்சிரிப்பு கிளம்பியது. நாள் அசடுபோல நின்றேன். 

நான் அசடு போல நின்றேன். 

இதேபோவ சாந்தா மாதத்திற்கு ஓரிருமுறை அவள் பெற்றோரைக் காண ஆவலாய்க் கிளம்பினால்…. 

“என்னவாம்” என்று நந்தியாய் எழுவாள் மாமியார். அந்நேசம் அவள் முழுக்க என் மனைவியின் மாமியார். இன்றோ வாஞ்சையாய் மகளது தலை நீவி, “உனக்குன்னு ஏதேனும் வாங்கிட்டியாடா?” என்று விசாரித்தால். 

“அயர்ன் பாக்ஸ்,சிந்தடிக் சாரியைக்கூட ஒரு தேய் தேய்ச்சுக் கட்டினா நேர்த்தியாயிருக்கும்மா. தவிரகாட்டன் ரவிக்கையை இஸ்திரி பண்ணாமப் போடச் சகிக்கலை….” 

சனிக்கிழமைகளில் சாந்தா வீட்டார் துணி முழுக்க அள்ளி எவத்து இஸ்திரி இட்டாலும் அம்மாவின் நாக்கு சொடக்கும். ‘ஆபிசில் என்ன அழகிப் போட்டியா நடக்குது?”. 

”போன மாசம் செய்து தந்த பருப்புப் பொடி, தொக்கு காலியானதும் சொல்லுடா பிரீதி, வேற தர்றேன். வேலைக்கும் ஓடி சமையலிலேயும் அல்லாடாதே.” 

அம்மா பேச்சோடு நில்லாமல் மகளுக்காய் இரவுச் சாப்பாட்டைசமைத்து முடித்திருந்தாள். தக்காளிக் குழம்பு, பீன்ஸ் பொரியலை டிபன் கேரியரில் அழுந்த நிரப்பிய மணத்தில் என் தாவு சுரந்து… மனம் வரண்டது. 

இதே அம்மா ஆபீசிலும் பஸ்சிலுமாய் அலுத்து வீடு வந்து விழும் சாந்தாவிற்கு ஒரு வாய் தண்ணீர் எடுத்து நீட்டியதில்லை. தனக்கு மட்டுமாய் இரண்டாவது டோஸ் காபி கலந்து குடித்துவிட்டு, வம்பு செட்டோடு ஆலயம் கிளம்பிப் போவாள்- சாலவும் நன்று. ஆனால், இன்று ஏனோ, வேலையிலிருந்து வந்த அலுப்போடு அரிசி களைய உட்கார்ந்த இளம் மனைவியின் நினைப்பு மனதுக்குள் அறுந்தது. 

“அக்கா… எனக்கு ஷூ? போன வாரம் பார்த்து வச்சிட்டு வந்தோமே?”கடைசித் தம்பி இழுத்தாள். 

“அது நானூறு ரூபாடா. அடுத்த மாசம் வாங்கிரலாம். நூறு இரு நூறுன்னா வாங்கிட்டே வந்திருப்பேன்.” 

“வாங்கித் தருவா!” – பெருமையாய் இன்றி அலுக்கும் அம்மா. சாந்தா தன் தங்கைக்கு ஒரு ஜாமென்ட்ரிபாக்ஸ் வாங்கித் தந்ததும் ‘வேலைக்குப் போறது இப்படி வாரி விடறதுக்குத்தாள்’ என்று இரைந்தவள்! 

“அம்மா, உன்பவளக்கம்மலைத் தாறியா? யற்ற வியாழன்றங்க காஷியர்தங்கைக்குக் கல்யாணம் – தீபாவலியப்பஎடுத்த ஆரஞ்சுப் பட்டைக் கட்டணும்…” 

“கொண்டு போ. அப்படியே களகாம்பரம் குடிக்கோ.. எடுப்பாயிருக்கும்.” இதே அம்மா மாமியாராய் நிற்கையில் வேறு வர்ற வாரம் எங்கூட வேலை பார்க்கற வாமனியோட் கல்யாணம்மா போயிட்டு வரலா?’ – மருமகள் தயங்க…. 

“ஆபிஸ்காரங்கள அங்கியே நிறுத்திக்கணும். உறவு விசேஷங்களுக்கே போக யோசிக்கிற காலம்” என்று துணைப் பார்த்தபடி பேசியவள். 

ஆனால், “பொண்ணுங்க வேலைக்குப் போய்த்தாளா வீடு நிறையணும் ? என்றபடியே மருமகள் போனஸுக்கான பட்டிலும் போடுவாள். அறையின் குதவு மறைவில் லுங்கிக்கு மாறிய போதும் சிரிப்பு தொடர்ந்து வந்து பிடித்தது. என் ஏமாளித்தனத்தைக் கண்டு எள்ளுகிறார்களோ… ஏமாற்றம், கசப்பு உணர்ந்து பின் ஞானமும் கண்டேன். 

‘அம்மா ஒரு சுண்ணில் வெண்ணெய்யையும் மற்றதில் சுண்ணாம்பும் வைத்திருக்கலாம் ஆனால் நான்…? நான் ஏன் என் உயிரானவளிடம், என்னுள் உயிராய் இழைந்தவளிடம் அன்பின் அனுசரணை காட்டவில்லை?” உள்ளத்துக் கசப்போடு, கண்ணீரும் சேர்ந்து ஊறி வழிந்தது. 

”வந்து நீ காபியே கேட்கலியேடா?” – உடை மாற்றிக் கிளம்பிய என்னை, அம்மா ஆச்சரியமாய்க் கேட்டாள். 

“நீயா தருவேன்னு பாத்தேம்மா” படியிறங்கினேன்.

“கேக்கணும். கேட்டு வாங்கிட்டாக் குறைஞ்சிடுவையா?”

சாந்தாவைக் கையோடு கூட்டிவரணும். இங்கே அவளுக்கு வேண்டிய பொருளோ புரிதலோ என்னிடமிருந்து ராஜோபசாரமாய் கிடைக்கும். அதைப் பார்க்கும் அம்மாவும் மாறுவாள். 

கேட்டே வாங்கிக் கொள்கிறேனே குறையில்வை! 

-ராணி, அக்டோபர் 1999.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *